Posts Tagged ‘ஊடகம்’

சிவசங்கர் பாபா, எபிதாஸ், ஹபீப் மொஹம்மது, பால் சந்திரமோகன்: இவர்களுக்குள் என்ன வேறுபாடு? ஊடகங்கள், சட்டங்கள், நீதிகள், காவல்துறை பாரபட்சம் காட்டுகின்றனவா? சிவசங்கர் பாபா புராணம் (4)

ஜூலை 13, 2021

சிவசங்கர் பாபா, எபிதாஸ், ஹபீப் மொஹம்மது, பால் சந்திரமோகன்: இவர்களுக்குள் என்ன வேறுபாடு? ஊடகங்கள், சட்டங்கள், நீதிகள், காவல்துறை பாரபட்சம் காட்டுகின்றனவா? சிவசங்கர் பாபா புராணம் (4)

05-07-2021 அன்றைக்கு வழக்கு ஒத்தி வைத்தது: ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்துக் கொண்டே, இவ்வழக்கு வளர்க்கப் படுகிறது போலத் தெரிகிறது. பெண்களுக்கு உரிய  ஆவணங்களும் கொடுக்கப் படவில்லை என்று தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யுள்ளதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோரிக்கை வைத்தார்[1]. இதையடுத்து மூன்று வழக்குகளின் முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி ஒத்திவைத்தார்[2].

05-07-2021 – ஐந்து பேருக்கு ஜாமீன்: விவரங்களைப் பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை எனக் கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்[3]. அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்[4]. “சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை,” என்று நீதிபதி காணும் போது, ஏன், எதற்காக, எவ்வாறு அந்த பெண்களின் மீது வழக்குப் பதிவு செய்யப் படவேண்டும், அதன் பின்னணி என்ன என்பதும் நோக்கத் தக்கது. பொதுவாக பள்ளிகளில் வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கு வேலை சரியாக இருக்கும். அந்நிலையில், இவ்வாறு சம்பந்தப் படுத்தி வழக்கில் தங்களது பெயர்களை சேர்த்த நிலையிலேயே அவர்கள் நொந்து போயிருப்பார்கள். இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்[5]. இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் 11—07-2021 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்[6]

சிவசங்கர் பாபாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பாஜாக ஆதரவு என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டு நக்கீரன் செய்திகள் வெளியிடுவது: “அந்த பள்ளியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இரவும், பகலும் ஷிப்ட் முறையில் கண்காணித்து வருகிறார்கள்[7]. அவர் மத்திய பாஜாகவையும் மாநில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சமூக பிரபலங்கள் என அனைவரையும் கைக்குள் போட்டு லீலைகளை நடத்தியவ்ர். ………அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க பாஜக முயல்கிறது என்பதே கேளம்பாக்கம் ஸ்பாட் விசிட்டில் நாம் கண்ட உண்மை,” என்று நக்கீரன் முடிக்கிறது[8]. மண்ணடியில் லாரி ஷெட் வைத்திருக்கும் போதே, ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தாராம், அதனால், அந்த தாக்கத்தை வைத்து சாதித்தார் என்றும் நக்கீரன் கூறுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பாஜாகவினர் இதையெல்லாம் கண்டு கொண்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆமாம், நிச்சயமாக, நக்கீரன் போன்ற “மஞ்சள் தன” சஞ்சிகைகளை விசயம் தெரிந்தவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றாலும், விஷமத் தனமான பிரச்சாரம், தொடர்ந்து வெளியிடும் செய்திகள், படங்கள், அவற்றில் உபயோகப் படுத்தப் படும் வார்த்தைகள்-சொற்றொடர்கள் முதலியவற்றை கவனிக்க வேண்டும்.

பால் சந்திரமோகன் – 1997-2011 மூன்று அல்லது நான்கு முறை சஸ்பெட் ஆனது, பதிவுக்கு மறுபடி வந்தது, திரும்ப செக்ஸ் குற்றங்கள் செய்தது:

  1. குமுதம் ரிப்போர்டர், “1997ல் ஹாஸ்டல் மாணவிகளுக்கு இப்படி சில தொல்லைகளைக் கொடுத்ததாக புகார் ஆகி, சஸ்பெண்ட் செய்யப் பட்டவர் தான் சந்திரமோகன். அதன் பின்னர் அவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சியதால் அப்போதைய முதல்வர் சுவாமிராஜ் மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார்.
  2. பால் சந்திரமோகன், அதற்குப் பிறகும் தனது சேட்டையை நிறுத்தவில்லை. உதவி பேராசிரியை நளினியைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்து கவிதை எழுதி பிரசினையாகி, அப்போதும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்,” என்று வெளியிட்டுள்ளது.
  3. குமுதம் ரிப்போர்டர், “2015ல் துறைத் தலைவராக வந்திருக்க வேண்டியவர், அதற்கு சில நாட்களுக்கு முன்னர் பால் சந்திரமோகன், ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப் பட்டு அப்போதைய பிஷப் கவனத்திற்கு கொண்டு போகப் பட்டதால், அந்த வாய்ப்பை இழந்தார்,” என்று குறிப்பிடுகிறது.
  4. இப்பொழுது 2021ல் மறுபடியும் சஸ்பென்ட் செய்யப் பட்டிருப்பது, விசித்திரமாக உள்ளது.

ஜூனியர் விகடன், நக்கீரன், வினவு இவற்றைப் பற்றி தலைப்புகள் இட்டு, அட்டைப் பட செய்திகளை ஏன் வெளியிடுவது இல்லை?: சிவசங்கர் பாபா புராணம் பாடும் ஊடகங்கள், மற்றவர்களின் புராணங்களை ஏன் பாடுவதில்லை?

  • பால் சந்திரமோகன், ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோ,
  • நளினியைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதிய கவிதை
  • 1997ல் ஹாஸ்டல் மாணவிகளுக்கு தொல்லைகளைக் கொடுத்தது எப்படி?
  • எபி ராஜ் மாணவிகளுடன் சரசமாடியது எப்படி?
  • எபி ராஜால் பாதிக்கப் பட்ட மாணவிகளை சரிகட்டியது எப்படி?
  • மாணவியை “தனியாக வீட்டுக்கு வா” என்ற கூப்பிட்ட ஹபீப் மொஹம்மது!

இப்படியெல்லாம் தலைப்பிட்டு, அட்டைகளில் புகைப்படம் போட்டு, செய்திகளை ஏன் வெளியிடுவது இல்லை?

யாராவது, அவர்களை அவ்வாறு செய்யாதே, செய்யக் கூடாது, செய்தால்……எனெல்லாம் கூறினார்களா, ஆணையிட்டார்களா, மிரட்டினார்களா?

இது அரசியல் கட்டுப்பாடா, சித்தாந்த விதிமுறையா, கட்சிமாறிய ஆட்சி-அதிகார இணக்கமா, பணிவா-விசுவாசமா என்றெல்லாம் போன்றிருக்கும் காணிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

குற்றம் புரிந்தவன் தண்டனை பெறப் போகிறான், ஆனால், இவ்வாறான பாரபட்சம், ஒரு சமூகத்தினரை, மதத்தை எதிர்க்கிறது, அல்லது மைனரிட்டி போர்வையில், கிருத்துவ-துலுக்க பாலியல் சதாய்ப்பாளர்களுக்கு ஆதரவு காட்டப் படுகின்ற தோன்றத்தையும் உண்டாக்குகிறது.

மே-ஜூன்-ஜூலை ஊடகப் போக்கு இத்தகைய பாரபட்சங்களை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.

ஊடக ஆராய்ச்சியாளர்கள், இதில் பிஎச்.டியே செய்யலாம்!

© வேதபிரகாஷ்

13-07-2021


[1] தமிழ்.இந்து, சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல், Published : 01 Jul 2021 05:16 PM; Last Updated : 01 Jul 2021 05:16 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/688228-confession-of-victims-by-sivashankar-baba-government-filed-in-the-high-court.html

[3] நக்கீரன், சிவசங்கர் பாபா விவகாரம்; ஐந்து பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அதிஜேதா, Published on 05/07/2021 (19:07) | Edited on 05/07/2021 (19:39).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/they-have-no-direct-connection-allegations-against-sivashankar-baba-judge

[5] நக்கீரன், சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லைசிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு வழக்கு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/07/2021 (08:34) | Edited on 11/07/2021 (08:55).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/another-case-against-sivasankar-baba

[7] நக்கீரன், EXCLUSIVE ஆடம்பரம்ஆபாசம்அமானுஷ்யம்! சிவசங்கர் பாபா சாம்ராஜ்ஜியம்! –நக்கீரன் ஸ்பாட் ரிப்போர்ட்!, தாமோதரன் பிரகாஷ் ஸ்டாலின், Published on 07/07/2021 (06:13) | Edited on 07/07/2021 (07:31).

[8] https://www.nakkheeran.in/nakkheeran/exclusive-luxury-occult-sivashankar-baba-empire-nakkiran-spot-report/exclusive-luxury

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டு-பலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

ஜனவரி 10, 2021

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டுபலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

வீட்டிற்குச் சென்று மிரட்டியவர்கள் வேறு என்றால், அவர்கள் யார்?: அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார்.  “அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,” என்கிறது தினத்தந்தி[1]. அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்[2]. இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “அக்கா வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த தங்கை, பல இடங்களில் தேடினார். அதிகாலை வீட்டிற்கு வந்த அக்கா, நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,” என்று தினமலர் விவரித்துள்ளது[3]. ஆக பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனரா அல்லது சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று(?) அங்கு கோவில் முன்பு(?) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனரா?

சிசிடிவி காட்சிகள் / காணோலி மூலம் அடையாளம் காணப் பட்டு, இருவர் கைதானது: “அந்த பெண் தற்போது நலமாக உள்ளார் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த காணொளி, இந்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அவரது வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,” என்று பிபிசி.தமிழ் விவரிக்கிறது. ஆனால், கைதான பிறகும், அவர்களின் பெயர்களை முதலில் குறிப்பிடாதது திகைப்பாக இருக்கிறது. இங்கு கற்பழித்தார்கள் இருவர் என்றால், வீட்டிற்குச் சென்று மிரட்டியது யார் என்று தெரியவில்லை.

இருவர் மீது வழக்குப் பதிவு, கைது: விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் கூட்டு பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் / ஐ.பி.சி. 376 (பலாத்காரம்), 506 பிரிவு 2 (கொலை மிரட்டல்), 294 (பி) (அசிங்கமாக பேசுதல்) உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[4]. இது குறித்து சந்திரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார்[5]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கற்பழித்தலில் ஒருவன் துலுக்கன் என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏன்?: தேவநாதன் கோவிலுக்குள் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்கு ஊடகங்கள் பொங்கின, வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. இப்பொழுது, அருண்ராஜ்-ஆனந்த் ஒரு பெண்ணை கோவிலுக்குத் தூக்கிச் சென்று கற்பழித்தாலும், எவனும் பொங்கவில்லை. காமுகன், மன்மத குருக்கள், என்றெல்லாம் வர்ணித்தனர், ஆனால், இங்கு கற்பழிப்பிலும் ஒன்றையும் காணோம். ஆனால், கோவிலுக்குள் பலாத்காரம் என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். அதாவது, மறுபடியும், கோவிலிக்குள் அத்தகைய நிகழ்வு நடந்துள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறத். உபியைக் குறிப்பிட்டாலும், இங்கு கற்பழித்தவன் ஒரு துலுக்கன் என்பதைக் குறிப்பிடாமல் “அப்பாஸ் என்கிற அருண்ராஜ்” என்று நிறுத்துக் கொண்டுள்ளது. எப்படி நிர்பயா வழக்கில் துலுக்கன் ஒருவன் கற்பழித்தானோ, அதேபோல, இங்கும், கூட்டுக் கற்பழிப்பில், ஒரு துலுக்கன் இருக்கிறான். ஆகவே அதனை மறைக்க ஊடகங்கள் முயல்கின்றன என்று தெரிகிறது. துலுக்கன் ஏன் மசூத்திக்கு அல்லது சர்ச்சுக்குத் டூக்கிச் சென்று பலாதகாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. கோயில், கோவில் வளாகம் என்று குறிப்பிட்டு பேசும் அளவுக்கு, கற்பழிப்பாளர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் கற்பழிப்பார்களா?

ஊடகங்களின் பாரபட்ச செய்திகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை: ஊடகங்களின் செய்தி வெளியீட்டு முறையில், விசயங்களை ஒழுங்காக வெளியிடாமல் இருப்பதால், பல கேள்விகள் எழுகின்றன:

  1. கோவிலுக்கு முன்பா, கோவிலுக்குள்ளா?
  2. கோவிலா, கோவில் வளாகமா?
  3. பிள்ளையா கோயிலா, மினாட்சி கோயிலா?
  4. பணம் கொடுக்க முன்வந்தும் கற்பழித்தனரா, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கற்பழித்தனரா,
  5. மது போதையா, கஞ்சா போதையா?
  6. கற்பழித்ததும், வீட்டுக்குச் சென்று மிரட்டியதும், அதே இருவரா, வேறு இருவரா?
  7. கற்பழிக்கப் பட்ட பெண் – அலறல் கேட்டு மற்றவர் வந்து ஆஸ்பத்தரிக்கு எடுத்துச் சென்றனரா, தங்கை-தங்கை கணவர் வந்து, பார்த்து, அறிந்து அனுப்பி வைத்தனரா?
  8. அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் என்று அடையாளம், துலுக்கனைக் காட்டவில்லையா?
  9. பிறகு ஆனந்த், கு.ஆனந்த் யார்?
  10. இருவர்களுக்கும் என்ன கூட்டு?

இப்படி, “இது-அது-எது,” பாணியில், செய்திகள் இருப்பதைக் கவனிக்கலாம். இத்தகைய கேள்விகளுக்கு, பதில் சொல்லியாக வேண்டும். ஊடகங்கள் மற்ற விசயங்களில் புலிகள், ஜாம்பவான்கள் போன்று, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தது போல, விவரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், இதில், நிச்சயமாக எதையோ மறைக்கிறார்கள்.

செக்யூலரிஸ செய்தி வெளியீடு அவசியம் தேவை, போலி-பொய்யான, சார்புடைய செய்திக்ச்ள் கூடாது:

  1. செக்யூலரிஸ ரீதியில் எல்லாமே இருக்க வேண்டும் என்றால், ஊடகக் கொள்கைகளும் அவ்வாறே இருக்க வேண்டும்.
  2. நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற போர்வைகளில் இவ்வாறு குழப்பக் கூடாது. இனி மேல், “செக்யூலரிஸ ஜார்னலிஸம்” (Secular Journalism) என்று பாடத்தை (subject), ஊடகவியலில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறது.
  3. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Cuncil of India) ஏற்கெனவே, சில வரைமுறைகள் கொடுத்துள்ளன.
  4. பெண்ணிய ஆணையங்கள், பல நேரங்களில் தூங்கி, சில சமயங்களில் விழித்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்கள்.
  5. கற்பழிப்பு விசயங்களில், செய்திகள் வெளியிடும் விவரங்களில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் இருக்கக் கூடாது என்றுள்ளது. ஆனால், குற்றத்தைப் புரிந்தவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்றில்லை.
  6. கைதாகி, வழக்குப் போட்டு, அவர்களது புகைப் படங்கள் போட்டப் பிறகு, அவர்களின் பின்னணியைக் குறிப்பிடாமல் இருப்பது, பத்திரிகா தர்மம் அல்ல (Journalistic ethics), செக்யூலரிஸ பண்டிதத் தனமும்(Journalistic expertise)  இல்லை.
  7. “ஊடக சித்தாந்தம், இந்துவிரோதமானது,” (Journalistic ideology has been anti-Hindu) என்ற கருத்து உருவாகி விட்டது. ஆனால், அதற்காக, இந்துக்கள் அல்லாத குற்றவாளிகளின் அடையாளங்களை மறைப்பதும் குற்றமாகும்.
  8. எல்லோரும் இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று மனோதத்துவம், அரசியல் சார்பு, ஊடகக் காரர்களின் பின்னணி, முதலியவற்றை விசார்க்கும் போது, உண்மை வெளிப்படும்.
  9. இதே நிலை தொடர்வதால், அவையெல்லாம் வெளிப்படும் போது, செய்திகளின் தரம் குறையும். ஏற்கெனவே, “பேக் நியூஸ்,” (Fake news), போலியான-பொய்யான செய்தி (false and falsified news), காசு வாங்கி செய்தி போடுவது (Paid ews), என்றெல்லாம் வெளி வந்தாகி விட்டது.
  10. ஆக, இனி, தமிழகத்தில், திராவிட நாத்திக, நாத்திக சித்தாந்த, சித்தாஎத பகுத்தறிவு, பகுத்தறிவு பெரியாரிஸ, பெரியாரிஸ இந்துத்துவ விரோதிகள், இந்துமத தூஷண கம்யூனிஸ்டுகள் என்றும் எல்லோரும் அடையாளம் காணப் படுவர்.

© வேதபிரகாஷ்

09-01-2021


[1] தினத்தந்தி, கோயிலுக்கு அழைத்துச் சென்று பெண் பலாத்காரம்அத்துமீறிய 2 இளைஞர்கள் அதிரடி கைது, பதிவு : ஜனவரி 08, 2021, 04:31 PM.

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/08163112/2022258/Nagai-Rape-Case.vpf.vpf

[3] தினமலர், கோவிலுக்குள் பலாத்காரம்: நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 19:41. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686650

[4] தினகரன், வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது, 2021-01-09@ 04:21:09.

[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645573

“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி-எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

ஒக்ரோபர் 26, 2017

ஜோசப் விஜய்புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபிஎதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

Joseph Vijay- with cross-Devil

மெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது.  தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:

  1. 7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை?
  2. மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.
  3. இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.
  4. ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்!”
  5. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.
  6. அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா? என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.
  7. கோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.
  8. “நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

Vijay versus Modi- not required

பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்?: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.

Joseph Vijay- got wrong about Singapore

பொய்யான ஜி.எஸ்.டிசிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

S A Chandrasekar clarificaton given about their religion

மகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.

© வேதபிரகாஷ்

26-10-2017

Joseph Vijay- Rahul-Sarkar- Madhur Bhandarkar

[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.

[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.

[3] http://www.bbc.com/tamil/india-41752132

[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,
23 அக்., 2017.

[5] https://www.youtube.com/watch?v=iONiCGIGKm4

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?

ஜனவரி 24, 2017

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியனசுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?

samy-twitter-comments-on-jallikattu-rioters

பாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’  இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

சுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்?: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.

ant-sami-tamil-media-news7

ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.

kamal-hassans-double-game-in-the-case-of-jallikattu

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
how-jallikattu-legalized-dinamalar

தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9].  ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்!

© வேதபிரகாஷ்

24-01-2017

girl-who-abused-modi-etc-at-marina

[1] http://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/threatening-violence-on-twitter-nia-inspection-says-subramanian-swamy-272037.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி. கேள்வி , By: Sutha, Published: Sunday, January 22, 2017, 18:08 [IST]

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vck-questions-hiphop-tamizha-aadhi-s-sudden-poser-272383.html

[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017

https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE

[5] https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE

[6] செய்தி.காம், ஆமா நான் பொறுக்கிதான்ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.

[7]http://www.seithy.com/breifNews.php?newsID=174645&category=EntertainmentNews&language=tamil

[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1662531

 

நாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)!

ஜூலை 20, 2015

நாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)!

Shri Trikal Bhavanta Maharaj

Shri Trikal Bhavanta Maharaj

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நாசிக்கில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் அடந்தது. பொதுவாக, கும்பமேளா நன்றாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், ஒரு பெண்-துறவியினால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சில ஊடகங்கள் சர்ச்சையை உண்டாக்க முயன்றுள்ளன. இதே நேரத்தில்  ஆந்திரபிரதேசத்தில் புஷ்கர விழா நடந்த போது, நெரிசலில் சிக்கி பேர் இறந்துள்ளனர்[1]. இதனால், மஹாராஷ்ட்ர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் ஊடகங்கள் குளிக்கும் இடம் சுத்தமாக இல்லை, நதி நீர் அசுத்தமாக உள்ளது, போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று செய்திகளை வெளியிட்டன.

Sadhvi.1

Sadhvi.1

மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு: நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் அந்த மாநில சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது[2]: “நாசிக்கில் தொடங்கியுள்ள கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பக்தர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டம்ஒழுங்கு பிரச்னைகள் குறித்த எந்த அச்சமுமின்றி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மடாதிபதிகள் தங்குவதற்காக தனியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன, என்றார் கிரீஷ் மகாஜன்.

Sadhvi.2

Sadhvi.2

புஷ்கரம் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: கும்பமேளாவில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 13, 18, 25 ஆகிய நாள்களில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 14-ஆம் தேதி நாசிக் கும்பமேளா, கொடியேற்றத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதே நாளில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியின் கோதாவரி நதியில் நடைபெற்ற புஷ்கரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அதைக் கருத்தில்கொண்டே, நாசிக் கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது[3]. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசிடம், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசி, கும்பமேளாவில், வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டால், நெரிசல் ஏற்பட்டு, சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, வி.ஐ.பி.,களை அனுமதிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டதை அடுத்துஇந்த முடிவுக்கு, மகாராஷ்டிர அரசு வந்துள்ளது[4].

Sadhvi.3 registration

Sadhvi.3 registration

போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ் குறை; மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கும்ப மேளா விழாவில், போதிய குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை என விழாவுக்கு வந்திருந்த ஆன்மிகத் தலைவர்கள் கூறினர்.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிரத்தின் நாசிக், திரையம்பகேஷ்வர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்கள் நாசிக்கிலும், திரையம்பகேஷ்வரிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குறை கூறினர். இதுகுறித்து திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ், புதன்கிழமை கூறியதாவது:  “இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு மின்சாரம், குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கண்ணம்வார் பாலத்தில் இருந்து லக்ஷ்மிநாராயண் கணவாய் வரை, 1.5 கி.மீ தொலைவுக்கு பாதைத் திறக்கப்படவில்லை.  சாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் முள்மரங்கள் நிறைந்திருப்பதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்”, என்று தசரத தாஸ் கூறினார்[5]. இந்நிலையில், கும்ப மேளாவுக்கான சிறப்பு அதிகாரியும், சாதுக்களின் கிராமப் பொறுப்பாளருமான யோகேஷ் பகாரே கூறியதாவது: சாதுக்களுக்கு குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், குடிநீர், மின்சார விநியோகப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும். விழாவின் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார் யோகேஷ் பகாரே[6]. ஆனால், விடுதலையில் மட்டும் வித்தியாசமான செய்தி வந்துள்ளது.

நாசிக் விடுதலை பொய்யான செய்தி

நாசிக் விடுதலை பொய்யான செய்தி

கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்! பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்![7]: இப்படி தலைப்பிட்டு, முதல் பக்கத்தில் விடுதலை வெளிடயிட்டுள்ளது. நாசிக், ஜூலை 18_   நாசிக் நகரில் நடந்துவரும் கும்பமேளாவில் பெண் துறவித்தலைவரான திரிகால் பவந்தாவிற்கும் அவரது பெண் சீடர்களுக்கும் ஆண் துறவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தத்துறவிகள் மீது விழாக்குழுவினர் நட வடிக்கை எடுக்க மறுப்ப தாகவும் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.  நாசிக் நகரில் ஜூலை 14-முதல் கும்பமேளா என்னும் கூட்டுக் குளியல் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அம்மணச் சாமியார்கள் தான் முதன் முதலாக முழுக்குப் போடுவார்களாம் அவர்கள் குளித்த பிறகுதான் மற்ற வர்கள் குளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இந்த நிலையில் பெண் துறவிகளுக்கு முதலில் குளிக்கவும் அல்லது அவர்களுக்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கித்தரவும் பெண் துறவித் தலைவர் திரிகால் பவந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் பேசும் போது  அயோத்தியில் உள்ள சாமியார் மடத் தலைவன் சாமியார் ஞான தாஸ் மீது புகார் கூறியுள்ளார். புதனன்று காலை அவர் நாசிக்கில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நான் இந்தியாவில் முதன் முதலாக பெண் துறவிகளுக்கான அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறேன். எனது அமைப்பு இந்துமத விதிகளின் படியும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படியும் இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே என்னையும் எனது பெண் சீடர் களையும், சாமியார்களின் தலைமை அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஞானதாஸ்  கேலியும் கிண்டலும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நான் நாசிக் கும்பமேளாவில் பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தேன். இதற்காக கடந்த நவம்பர் முதல் அனைத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்று பரப்புரை செய்து வந்திருக்கிறோம். நானும் எனது பெண் சீடர்களும் செல்லும் இடமெல்லாம் சாமியார்கள் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டு தொந்தரவு கொடுப்பது அசிங்கமான செய்கைகள் செய்வது வாடிக்கையாக கொண்டு எங்களை துன்புறுத்தி வந்தனர்[8].

Nasik falsified news - Viduthalai

Nasik falsified news – Viduthalai

பெண்கள் கூடாரத்துக்குள் நுழைந்த தடியர்கள்![9]: இந்த நிலையில் நாங்கள் கடந்த 10 ஆம் தேதி நாசிக் வந்து எங்களுக்கு என்று தனிக்கூடாரம் அமைத்து புண்ணியக்குளியலுக்காக தயாராகி வந்துள்ளோம். நான் நகர நிர்வாகத்திடம் பெண் துறவிகளுக்கு ஆண் சாமியார்களால் தொந் தரவு வர வாய்ப்புள்ளது ஆகையால் எங்களுக்கு தனியாக குளிக்க இடம் வேண்டும் என்றும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கூறியிருந் தோம் இந்த நிலையில் சில சாமியார்கள் கும்பமேளா விற்கு முதல்நாள் பெண்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்துள்ளனர்.  நான் பாதுகாப்பு காரணங்களுகாக சிலரைச் சந்திக்க சென்று இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் நான் நாசிக் கும்பமேளா விழாக் கமிட்டியிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது வழிமறித்த சாமியார் மடத்தலைவன் ஞானதாஸ் என்பவன் என்னையும் எனது பெண் சீடர்களையும் வழிமறித்து தவறாக நடக்க முயன்றான். இந்தச் சம்பவத்தின் போது சாமியார்கள் அனைவரும் பெருங் கூட்டமாக எங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும் நான் மக்களிடையே இந்த கொடுமையைக் கூற ஒலி வாங்கியை எடுத்த போது தேவையற்ற இடங்களில் சாமியார் ஞானதாஸூம் அவரது சீடரும் தொட் டுத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.  ஒரு மதரீதியான விழா நடந்து கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே இந்தச் சாமி யார்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வளவு நடந்தும் விழா நிர்வாகம் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறினார். பெண் சாமியார் திரிகால் பவாந்தா 2008-ஆம் ஆண்டு பெண் துறவி களுக்கான அமைப்பு (அகாடா) ஒன்றை உருவாக்கினார். இவர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவரது அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. (குறிப்பு: கடந்த ஆண்டு உண்மை இதழிலும் கட்டு ரையாக வெளி வந்திருந்தது).

© வேதபிரகாஷ்

20-07-2015

[1] http://www.hindustantimes.com/india-news/stampede-at-godavari-pushkaram-in-andhra-pradesh-s-rajahmundry/article1-1368999.aspx

[2] http://www.dinamani.com/india/2015/07/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2926175.ece

[3] தினமணி, நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு, First Published : 18 July 2015 01:01 AM IST.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1298424

[5] http://www.dinamani.com/india/2015/07/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/article2923058.ece

[6]  தினமணி, நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி, First Published : 16 July 2015 03:56 AM IST

[7] http://www.viduthalai.in/e-paper/105346.html

[8] விடுதலை, கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்!, சனி, 18 ஜூலை 2015 15:35

[9] http://www.viduthalai.in/e-paper/105346.html