Posts Tagged ‘பல்லக்கு’

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது- பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்! (2)

மே 4, 2022

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு கவனிக்க வேண்டியதுபட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்! (2)

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம்:தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும்[1]. சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன்[2]. அரசியல் வேறு ஆன்மிகம் வேறு. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்[3]. உயிரே போனாலும் பரவாயில்லை[4]. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்[5]. சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்[6]. மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை[7], இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம்[8]. திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது,” என்றார். ஆனால், 03-05-2022, விடுதலையில், “திராவிடக்கழக முயற்ச்சிக்கு வெற்றி,” என்று பெருமையாக செய்தி வெளியிட்டது. முதல்வர் வருவாரா என்பதெல்லாம் சந்தேகம் தான்.

திராவிடக் கட்சிகள் சேர்ந்து திட்டம் போட்டு வேலை செய்தது: வலுக்கட்டாயமாக வேலை செய்ய வற்புருத்துவது, கொத்தடிமை போன்று வேலை வாங்குவதை, பல்லக்குத் தூக்குவதுடன் ஒப்பிட முடியாது. இது வேண்டுமென்றே திரிபு விளக்கம் கொடுத்து, திகவினர் புகார் கொடுத்து, அதனை போலீஸார் முடிவெடுத்து “சட்டம் ஒழுங்கு பிரச்சினை” நிலை உண்டாகும் என்று தீர்மானித்தது, பிறகு கோட்டாட்சியர் ஆணையிட்டது எல்லாமே சாதாரண நிகழ்வுகள் அல்ல. நிச்சயமாக அரசு ஆதரவுடன், வேறெந்த உள்நோக்கத்துடன், செயல்பட்டு, இப்பிரச்சினை மூலம் பலன் தேட அல்லது அரசியல் அதயம் தேட முயலும் திட்டம் என்றே தெரிகிறது. தொடர்ந்து திராவிடர் கழக உதிரிகள், வகையறாக்கள், கம்யூனிஸ்டுகள், இந்துவிரோதிகள் தான், இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கருப்புக் கொடி போராட்டம் போர்வையில் கழிகள், கொம்புகள், கட்டைகள், பேனர்கள் எல்லாம் எடுத்து வந்து, கூட்டமாக வருகின்றனர். அவர்களைச் சுற்றி தான் பொலீஸார் நிற்கின்றனர். அவர்களை அனுமதித்து, பிறகு அவர்கள் சட்டமீறல்களில் ஈடுபடும் போது, தடுக்கின்றனர், கைது செய்கின்றனர். ஆனால், ஏற்கெனவே அவர்களது பின்புலங்கள் அறிந்த நிலையில், முன்னரே கைது செய்யப் பட்டால், ஒன்றுமே நடக்காது. கவர்னர் விசயத்தில்கூட ஒன்றும் நடந்திருக்காது. 04-05-2022ல் முரசொலியில், 03-05-2022ல் விடுதலையில் வந்ததை அப்படியே போட்டிருக்கிறது. அதாவது, இந்த நாடகத்திற்கான, கதை, வசனம் எல்லாம் முன்னமே தயாரிக்கப் பட்டு விட்டது. பிறகு, அரசியல், அதிகாரம் என்ற ரீதியில் அமூல் படுத்தப் பட்டுள்ளது.

டோலி, மலையேறும் வசதி தமிழகத்திலேயே உள்ளது: டோலி (doli) என்பது பல்லக்கைப் போன்ற மனிதர்களின் துணையோடு பயணிக்கும் ஓர் இருக்கை அமைப்பு ஆகும். சாலைப் போக்குவரத்து வசதியற்ற மலைப்பாங்கான பகுதிகளில் நடக்க இயலாதவர்களும், வயதானவர்களும் பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த டோலியானது இரு மூங்கில் கழிகளை முதன்மையாக கொண்டு குறைந்த எடையில் அமைக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர் அமர இதில் இருக்கைவசதி இருக்கும். என்றாலும் இதில் சிவிகை போன்று மேற்கூரையோடு வசதியாக இருக்காது. இதில் பயணிப்பவர் மேட்டில் செல்லும்போது முன்புறம் சாய்த்தும், இறக்கத்தில் இறங்கும்போது பின்பக்கம் சாய்ந்தும் சுமப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பர். இதை நான்குபேர் சுமந்து செல்வர். இந்த டோலி பயணமானது சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல பலர் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது, சதுரகிரி கோவிலுக்குச் செல்லவும் இவ்வசதி செய்யப் பட்டுள்ளது.

04-05-2022 அன்று சட்டசபையில் தடையை நீக்குமாறு எதிர்கட்சித் தலைவர் பேசியது: சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரமில்லா நேரத்தில் பேசியபோது கூறியதாவது[9]: “அரசின் தடையை அறிந்த, ஆண்டாண்டு காலமாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தில் வசித்து வரும் பல்லக்கு தூக்கும் 72 பேரும் நாங்கள் எங்கள் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குகிறோம். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை அனைவரும் பார்க்கிறோம். எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்தாண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வு பெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல்பணி அதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி யாகத்தான் கருதுகிறோம்……..இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதீனம் என்பதை இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-05-2022


[1] தினமலர், உயிரே போனாலும் தருமபுர ஆதீனம் பல்லக்கை நான் சுமப்பேன்: மதுரை ஆதீனம் ஆவேசம்,  Updated : மே 03, 2022  13:15 |  Added : மே 03, 2022  12:12.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3021459

[3] தினத்தந்தி, உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” – மதுரை ஆதீனம் பேட்டி, பதிவு: மே 03,  2022 12:02 PM.

[4] https://www.dailythanthi.com/News/State/2022/05/03120252/Giving-life-we-will-hold-the-entrance–Madurai-Aadeenam.vpf

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!, Raghupati R, Tamilnadu, First Published May 3, 2022, 4:28 PM IST; Last Updated May 3, 2022, 4:28 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/madurai-adheenam-has-warning-to-tamilnadu-cm-mk-stalin-in-mayiladuthurai-dharmapuram-festival-ban-rbaztc

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், உயிரே போனாலும் பிரவேசத்தை நடத்துவோம்தடைக்கு ஆளுனரே காரணம்மதுரை ஆதீனம், Written by WebDesk, May 3, 2022 1:59:39 pm.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/dharmapuram-aadheenam-issue-madurai-aadheenam-press-meet-449283/

[9] மாலைமலர், தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல், பதிவு: மே 04, 2022 14:05 IST.

https://www.maalaimalar.com/news/district/2022/05/04140525/3739578/Tamil-News-Dharmapuram-adheenam-Pattina-Pravesam-issue.vpf

[10] https://www.maalaimalar.com/news/district/2022/05/04140525/3739578/Tamil-News-Dharmapuram-adheenam-Pattina-Pravesam-issue.vpf

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது (1)

மே 4, 2022

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு கவனிக்க வேண்டியது (1)

மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு: மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், முதன் முதலாக, சைவ மடாதிபதியிடமிருந்து, மிக்க ஆழமான, செருமை மிக்க, ஆன்மீகத் தன்மை, மதப் பொறுப்பு, சமய உணர்வு என்றெல்லம் கொண்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவரது பேச்சில், ஒவ்வொரு வாத்தையில், வரியில், இப்பொழுதுள்ள அரசின் போக்கை எடுத்துக் காட்டி, கண்டித்துள்ளார். மடாதிபதிகள் முதலமைச்சருடன் பேசிய சில நாட்களில் இத்தகைய தடை அறிவித்திருப்பது, எத்தகைய மடமை என்பதனையும் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த இந்துவிரோத அரசைத் தட்டிக் கேட்டுள்ள தொணியும் மறைமுகமாக வெளிப்படுகிறது. ஒரு மடாதிபதியே, இந்த அளவுக்கு எடுத்துக் காட்டியுள்ளது, பெரியாரிஸம் பேசிக் கொண்டு, ஆன்மீகப் போர்வையில், திராவிடியன் ஸ்டாக், மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இந்துக்களை பாதித்து வருவதும் தெளிவாக வெளிப்படுகிறது.

தமிழக இந்துக்களின் பாதிக்கப் படும் நிலைகள்: உண்மையில், தமிழகத்தில், இந்துக்கள், “இந்துக்களாக” இருந்து கொண்டு, அமைதி, சத்தியம் மற்றும் அஹிம்சை போன்ற கொள்கைகளைப் பேணி வருகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு நாள், வார, மாத, பருவ மற்றும் ஆண்டு விரதம், பண்டிகை, சடங்கு, கிரியை முதலியவற்றை பெருமான்மையான மக்கள் விடாமல் எய்து வருவதால் தான் சமூகம் நிலைத்து நிற்கின்றது. மேலே-மேலே மக்களின் மீது கெட்டது, தீயது, ஒவ்வாதது, எதிர்மறையானது என்று பல மக்களின் மீது கடந்த 60 ஆண்டுகளாகத் திணிக்கப் பட்டு வருவதால், இன்றைய 2022 சமூகம், பெருமளவில் சமூக சீரழிவுகள், குடும்பப் பிரச்சினைகள், தனிமனித ஒழுங்கீனம் முதலியவை அதிகமாகி, குற்றங்கள், வன்மம், வன்முறை முதலியவை தினம்-தினம் நடக்கும் செயல்களாக மாறி விட்டன. இவற்றை முதலமைச்சர் மறந்து, விளம்பர அரசியல் மூலம் தட்டிக் கழிக்க முடியாது. திட்டங்கள் அறிவிப்பு, கல்வெட்டுகள் வைத்து ஆரம்ப / திறப்பு விழாக்கள் என்றெல்லாம் நடத்துவது 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்து வருகின்றனர். அவற்றில் பாதிக்கு மேல் கல்வெட்டுகளாகவே இருந்து மறைந்து விடுகின்றன. மற்ற திட்டங்கள் மாறி-மாறி ஆட்சிக்கு எற்றமுறை உருமாறி வருகின்றன.

மத்திய அரசு மோதல் கவனர் மோதல் முதலியவை அரசியலாக்கப் பட்டு இணைக்கப் படுகிறதா?: இனி இப்பிரச்சினை எப்படி எழுந்ததது என்பதனை பார்ப்போம். திராவிடர் கழகம் சார்பில் இந்த “பல்லக்கு ஊர்வலம்” நடத்தப் படக் கூடாது என்று புகார் கொடுத்தது. உடனே, அதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப் பட்டு, போலீஸார் மற்றும் கோட்டாட்சி அதிகாரிகள் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

  • வாராந்திர கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கோட்டாட்சியர் முதலியோர் இப்பிரச்சினைப் பற்றி பேசி 06-4-2022 அன்று துணை கண்காணிப்பாளர் அறிக்கைக் கொடுத்துள்ளார் (The Report of Mayilathurai Sub-Inspector – C.No.222/SDO-M/V/2022 dated 06-04-2022).
  • இதன் ஆதாரமகக் கொண்டு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் “பட்டின பிரவேசம்” நிக்ழ்வை தடை செய்து, ஆணை பிறப்பித்தார்.
  • 27-04-2022 அன்று ஸ்டாலின் மடாதிபதிகளை சென்னையில் சந்திக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆன்மிக அரசு என ஆதீனங்கள் புகழாரம் சூட்டினர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
  • மயிலாடுதுறை கோட்டாட்சியரின் ஆணை தேதி 27-04-2022 என்றுள்ளது (Mayilathurai Administrative and Revenue Division order ந.க.1210/2022/ஆ.1 நாள்: 27-04-2022).
  • ஆனால், இந்த அறிக்கை ஆதீன மடத்திற்கு 02-05-2022 அன்று தெரிவித்தார் / அனுப்பப் பட்டது என்றுள்ளது (The Order communicated to the Adheenam by J. Balaji on 02-05-2022).
  • 27-04-2022 அன்று ஆதீனங்கள்-ஸ்டாலின் சந்திப்பு மற்றும் போலீஸாரின் பல்லாக்கு-தடை தீர்மானம், நடந்துள்ளதை கவனிக்கலாம்.
  • இதற்குள் கவர்னர் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை நகரங்களுக்கு வந்து விழாக்களில் கலந்து கொண்டுள்ளார்: இதற்கே, திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கவர்னர் கூட்டம் – TN Governor at the Annamalai University –Review – 17-04-2022
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு – TN Governor at the Annamalai University convocation – 18-04-2022. இவற்றையெல்லாம் யாரும் தடுக்க முடியாது.
  • கவர்னர் மயிலாடுதுறைக்கு வருகிறார், கருப்புக் கொடிகள் காட்டப் பட்டு, கொம்புகள் வீசப் படுகின்றன – TN Governor’s visit to Mayiladthurai 19-04-2022
  • கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதுகிறார் – Governor’s security officer letter dated 19-04-2022 to the IG Police, TN.
  • கவர்னர் துணைவேந்தர்கள் கருத்தரங்கத்தில் ஊட்டியில் கலந்து கொள்கிறார் – TN Governor at Ooty – two day Education seminar – 23-04-2022

இவ்விவரங்கள், ராஜ்பவன் அறிக்கைகளில் காணக்கிடைக்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது யார்?: இவையெல்லாம் தற்செயலாக நடந்த செயல்களாகத் தெரியவில்லை. கவர்னர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றால், ஸ்டாலின் அரசு அதற்கு மேல் கில்லாடியாக விசயங்களை அறிந்து வேலை செய்துள்ளது. அதாவது, திமுக விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளார்கள் என்று தெரிகிறது. சன் – குழுமம் மற்றும் கட்டுக்குள் உள்ள மீடியாக்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 2022ல் ஒரு திட்டத்துடன் கவர்னரை எதிர்ப்பது, பிரச்சினை உண்டாக்குவது என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வந்தது அப்பட்டமாகவே தெரிந்தது. இங்கு, மயிலாடுதுறைக்கு கவர்னர் வருவது தெரிந்து, திராவிட கட்சியினர், சார்புடைய அரசு அதிகாரிகள் செயல்பட்டது போல தோன்றுகிறது. அரசியல் ரீதியில் கட்சிகள் மற்ற லாபங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், ஆனால், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், மடங்கள், கோவில்கள் முதலியவற்றில் தலையிட்டு, அரசியலாக்கக் கூடாது. மேலும், கடந்த 60 ஆண்டுகளில் இவற்றில் அரசியல் தலையீடுகளால், ஊழல் தான் மலிந்து அதிகமாகியுள்ளது. ஆனால், ஊழலை எதிர்த்து இக்கும்பல்கள், கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்துவதில்லை.

திராவிடர் கழகத்தின் புகார் பெயரில், போலீஸார் ஆணையின் படி, கோட்டாட்சியர் 27-04-2022 அன்று தடை விதித்தது: இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் புகார் அளித்தால், எவ்வாறு மடத்தின் சம்பிரதாய நிகழ்வுகளை தடுப்பது முதலியன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார்.

03-05-2022 அன்று மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: அப்போது அவர், “நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும். தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்[1]. முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன்[2].

© வேதபிரகாஷ்

04-05-2022


[1] விகடன், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம், சாலினி சுப்ரமணியம், Published:Today at 2 PM; Updated:Today at 3 PM.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/madurai-adheenam-press-meet-about-dharmapuram-aadeenam-issue

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது – முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் – 2022 தொடரும் அவலம்!

மே 3, 2022

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் 2022 தொடரும் அவலம்!

பல்லாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியத்தை எதிர்ப்பது: மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது[1]. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்[2]. 500 ஆண்டுகளாக நடந்து வருவதாக ஆதீனங்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் காலம்-காலமாக நடந்து வரும் நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாத, இந்துவிரோதிகளாக இருக்கும் திராவிடக் கழக வகையறாக்கள் எதிர்த்து வருவது தமாஷாக இருக்கிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது[3], என்று செய்திகள் வெளியிடப் படுகின்றன. அதாவது, ஏதோ அடிமைகள் எஜமானனை, ஜமீந்தாரை, தலைவரைத் தூக்கிச் செல்வது போல குறிப்பிடுகிறார்கள் போலும். திராவிட அரசியலில் யார், யாரைத் தூக்கி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான்.

மனிதனை மனிதன் தூக்குகிறான்: மனிதனை மனிதன் தூக்குகிறான் என்பதே விசித்திரமான எதிப்பு தான், ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு. எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் விசயம். “டோலி” உபயோகம் மலைக் கோவில்களில் உள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றோர் அதை உபயோகித்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு அல்லது புதிர் இருக்கிறது என்று தெரியவில்லை. தேர்தலில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவனை, தலைவனை, கேப்டனைத் தூக்கிச் செல்வது பாராட்டுவது என்பதெலாம் சகஜமான சமாச்சாரங்கள். திரைப்படங்களில் காதலியை காதலன் தூக்குகிறான். மலைப்பிரதேசங்களில் குறிப்பாக படிகட்டுகள் மூலம் ஏற முடியாதவர்கள் நாற்காலிகளை பல்லக்குப் போன்று அமைத்துத் தூக்கிச் செல்கிறார்கள். அதற்கு பணமும் வசூலிக்கப் படுகிறது. அந்நிலையில், பல்லக்கில் மடாதிபதியை வைத்து, பக்தர்கள் தூக்குவது எப்படி வித்தியாசமாக பார்க்கப் படுகிறது என்று தெரியவில்லை.

2021ல் பட்டின பிரவேசம் நடந்தது: கடந்த ஆண்டு 2021 திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது[4]. ஆனால், எந்த பிரச்சினையும் நடகவில்லை, நடந்ததாக செய்தி இல்லை. அதாவது, வெறும் மிரட்டலில் ஈடுபட்டு, விளம்பரம் தேடியுள்ளனர் என்றாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் 22-05-2022 அன்று நடைபெறவுள்ளது[5]. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து[6] மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார்[7]. “ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது,” எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்[8].

சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:  “சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால்,” எனும்போழுது, யாரால் ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம். 500 ஆண்டுகளில் நடக்காதது, அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா-ஓபிஎஸ்-இபிஎஸ் ஆட்சிகளில் நடக்காதது, இப்பொழுது ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் என்றால், பிரச்சினை பக்தர்களிடம் இல்லை. அதை எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், முதலிய வகையறாக்களில் தான் உள்ளது. அத்தகைய தைரியம், போக்கு எங்கிருந்து வந்தது என்பதனை கவனிக்க வேண்டும். கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி, கொம்புகளை எரிந்தது போல, இங்கும் தாக்குதல் நடத்தினால், அதனை இந்த நாத்திகர்கள் தான் செய்வார்க்கள். அப்படியென்றால், முதலில் அவர்களை கைது செய்து, “சட்டம் ஒழுங்குப் பிரச்னை..,” யை சரிசெய்து, நிலை நிறுத்த வேண்டும். அதை விடுத்து, சம்பந்தமே இல்லாமல், ரிவர்ஸ் கியரில் சென்று பக்தர்களை இம்சிக்கக் கூடாது. பாரம்ப்ரிய சம்பிரதாயங்களைத் தடுக்கக் கூடாது. அதுவே சட்டமீறல் ஆகும்.

திராவிட பாரம்பரையத்தின் பல்லக்குத் தூக்கல்: பல்லாக்கு, பல்லாக்குத் தூக்கி, பல்லாக்கு புராணங்கள் திராவிடத்தில் அதிகமாகவே உள்ளன…….மேடைப் பேச்சுகள், திரைப்பட வசனங்களில் அவை அதிகமாகவே இருந்தன. இப்பொழுதும், ஆதரவு கொடுப்பது போன்ற ரீதியில், “பல்லக்குத் தூக்குதல்” சொல்லாடல் உள்ளது. அண்ணாதுரை பல்லக்கில் சென்றது எல்லாம் இருக்கிறது. இப்பொழுது புகைப்படங்கள், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிறகு, சாரட்டு வண்டிகளில் தொண்டர்கள் சூழ கருணாநிதி, வீரமணி போன்றோர் உலா, ராஜ பவனி வந்துள்ளனர். அதுவும் அரசியல் என்று வந்து விட்டால் கேட்க வேண்டாம்…..இன்றைக்கு அமைச்சராக இருக்கும் பொய்யாமொழி, கூட 2020ல் சாமி பல்லக்குத் தூக்கி இருக்கிறார்! அப்பொழுது பகுத்தறிவுகள் யாரும் விமர்சிக்கவில்லை………பெரியார் பிஞ்சுகள், பெரியாரிஸ குஞ்சுகள் துடிக்கவில்லை…….சாமி பல்லாக்குத் தூக்குவது ஒரு பாக்கியமாகக் கருதப் பட்டு வருகிற்து. அப்படி பல அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள். ஆக, இப்பொழுது, இப்பிரச்சினையைக் கிளப்புவது, அரசியல் ரீதீல் தான், மற்றும் தடை விதிப்பது போன்றதும்,  உள்நோக்கம் கொண்டது தான்.

திராவிட அரசியலில், பல்லக்கு வார்த்தை பிரயோகம் சாதாரணமானது!

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994)  பல்லக்கில் சென்றது முதலியன: பழைய காஞ்சி சங்கராச்சாரியாரை நடக்க வைத்தோம் என்று திராவிடக் கட்சிகள், ஆதரவாளர்கள், சித்தாந்திகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அது மிகவும் தவறு. அவருக்கு 1914, 1924, 1934, 1954, 1964, ஆண்டுகளில் முறையே 20, 30, 40, 50, 60 வயதுகளில் இருந்த போது, துடிப்பாக, வேக-வேகமாக நடப்பார். இன்னும் சொல்லப் போனால், கூட வருபவர்கள் ஓடி வரவேண்டும் அந்த அளவுக்கு வேகமாக நடப்பார். வயதாகியபோது, பல்லக்கு நான்கு சக்கர சைக்கிள் வண்டியாகியது. பிறகு தான் கார் ஆகியது. அப்பொழுது அவர் நடந்து சென்றதை எல்லாம் அறிந்தவர்கள் உண்டு. காரில் சென்றால் சரி, பல்லக்கில் சென்றால் தவறு என்பது காலம் மாறி வரும் நிலையைக் காட்டுகிறது. 1964ல் 70 மற்றும் 1974ல் 80 வயதில் இருந்தார். ஆகவே உண்மை அறியாமல், ஏதோ ஒருவர் ஆதாரம் இல்லாமல் எழுதுவது, அதனை இன்னொருவர் எழுதுவது என்று பரப்புவது பொய்யாகும். ஏனெனில், இந்த தேதிகளே எடுத்து காட்டுகின்றன. இப்பொழுது, கார் / வேன் இருப்பதால் அதன் மூலம் மடாதிபதிகள் சென்று வருகின்றனர். எனவே சங்கராச்சாரியாரே செய்யாததை, இந்த சைவ மடாதிபதிகள் செய்கிறார்களே போன்ற பேச்சுகள் தேவையில்லை. வேண்டுமென்றால், திராவிடத் தலைவர்களை நடந்து போக சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

03-05-2022


[1] புதியதலைமுறை, தருமபுரம் ஆதீனம்: பல்லக்கு தூக்கி செல்ல அனுமதி மறுத்து கோட்டாட்சியர் உத்தரவு, தமிழ்நாடு,    Veeramani Published :02,May 2022 03:12 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/136508/RDO-order-denying-permission-to-lift-the-pallakku-festival-in-Dharmapuram-Aadeenam

[3] தமிழ்.இந்து, தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 03 May 2022 07:08 AM; Last Updated : 03 May 2022 07:08 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/795014-devotees-are-not-allowed-to-carry-pallakku-1.html

[5] தந்தி.டிவி, தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை, பதிவு : மே 02, 2022, 02:09 PM.

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2022/05/02140958/3319374/Dharmapuram-Adinath-Brkg.vpf

[7] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதால்..! – தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை, மு.இராகவன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/govt-banned-palanquin-in-dharumapuram-aadheenam-function

திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

DK prevented Dharpura adhinam riht-Vikatan Feb.2020

இதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சைதிராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,

EVK sampath carrying Anna

கோவில்மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட  மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.

Viduthalau 13-02-2020 about Tirupanathal

நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –

  • கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;
  • உண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..
  • சூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,
  • தாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….
  • குங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,
  • பூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]
  • பன்றிக்கு பூணூல் போடுவது

என்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம்.  பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும்? தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு! அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு?

A rare picture of MGR riding a cycle rikshaw with M Krishnan Nair and R M Veera

ஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம்! பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்!

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/539287-dravidar-kazhagam-protest-2.html

[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சைதிராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, பிப்ரவரி 10, 2020.

[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/d-k-protest-in-tirupananthal-succeed-120021300013_1.html

[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்!, செல்வகுமார், Published on 12/02/2020 (14:39) | Edited on 12/02/2020 (14:52)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dharumapuram-aadhinam

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

The palanquin row - DK Veeramani letter, feb.2020

பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரைபட்டினப்பிரவேசம்எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

DK gave petition directly to Adhinam, dinamani, Feb.2020

12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4]மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்றுஅதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                       தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.

DK Veeramani riding chariot

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.

EVR riding chariot

 பட்டினப்பிரவேசம்பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

Karu riding chariot

ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லைஎன்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM

[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition

[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38

 https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html

[4]  இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.

[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html