Posts Tagged ‘கோட்டூர்புரம்’

இந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா?

மே 18, 2010
இந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா?
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7564

Front page news and headlines today

சென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் நேற்று துவங்கிய, மூன்று நாட்கள் கோடை கால அறிவியல் முகாமில், இந்து மத உணர்வுகளையும், இந்து மத தலைவர்களையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இம்முயற்சிக்கு, பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று நாட்கள் அறிவியல் முகாமை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கோடை கால முகாமில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் மத ரீதியான அதிசயங்கள் உண்மையில்லை என்றும், அவற்றைப் பகுத்தறிய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தனர்.

ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத்தொகுப்பை திரையிட்டு காட்டினர். பின், செய்முறை செய்து காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.ப்இந்த முகாமின் போதே, இதில் கலந்து கொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், மதத் தலைவர்களை பழிக்கும் விதமாகவும் பேசினர். மத ரீதியான உணர்வுகளை புண்படுத்திப் பேசியது, அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி முடித்து வீடு திரும்பியவர்கள், இது போன்று பேச, வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்து மதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை பாழ்படுத்தும் வகையில், இந்த பயிற்சி முகாம் மாறியதை கண்டு, பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

அறிவியல் முடிவுகளே தினம் தினம், புதிய கண்டுபிடிப்புகளால் மாறும்போது, காலம் காலமாக நிலைத்த சில உணர்வுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட தைரியம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோட்டூர்பரம் பிர்லா கோளரங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கில் இவ்வாறு நடந்ததன் பிண்ணனி என்ன? இதன் பிண்ணனியில் யார் உள்ளனர்? இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே. வீரமணி, விடுதலையில் இதற்கு குறிப்பாக பதில் அளித்துள்ளார்.

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டியா? மதவெறியாளர் மீது நடவடிக்கை தேவை

http://viduthalai.periyar.org.in/20100519/news01.html

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்து மத ரீதியான அதிசயங்களாம்! “அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.

அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை: இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.

இந்து மத பெருமைக்காகவா முகாம்? மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?

அதே செய்தியில், கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’

திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு: ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்: இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன? இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில், ‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே! அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட! அறிவியல் மனப்பான்மை முக்கியம். இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.

என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா? இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா? அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு: இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்! உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?

குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!

அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?

கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?

இன்னமும் கதை விடுவதா?

மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.

இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்!

தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!

அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு
விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?

பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை,
19.5.2010

நரேந்திர நாயக், வீரமணி, திமுக கூட்டு: கடந்த டிசம்பரில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு பெரியார் திடலில் நடந்தபோது, நரேந்திர நாயக் முதலியோர் கலந்து கொண்டனர். அதனுடைய தொடர்ச்சிதான் இது என்று நன்றாகத் தெரிகிறது. வீரமணியுடன், கருணாநிதியையும் நாயக் சந்தித்துள்ளார். அதன்படியே, இந்த நிகழ்ச்சிற்கு நாயக் வரவழைக்கப் பட்டு தன்னுடைய “விஞ்ஞான பூர்வமான” விளக்கங்களை அளித்துள்ளார்.

இந்து-விரோத பகுத்தறிவு, நாத்திகம் முதலியன உண்மையான அறிவடைவதற்கு உதவாது, அது இந்து விரோதிகளைத்தான் உருவாக்கும். அதுவும் சமூகத் தீவிரவாதச் செயலே ஆகும்.