Posts Tagged ‘ஸ்வீட்’

செப்டம்பர்-அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (2)

ஒக்ரோபர் 28, 2021

செப்டம்பர்அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (2)

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்: பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[1]. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது[2]: “சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயந்தவை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்துப் பேசுவதென்றால், தமிழக சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்.

பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.

பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் அறிவிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும்,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்: அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[3]. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 03) முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது[4]: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாச பண்டிதர். 1891-ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1891-ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை ஆகும். 1907-ம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி அதையே ‘தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர்.

பூர்வீக சாதி, பேதமற்றவர்கள் திராவிடர்கள் என அழைத்தவர் அவர். அதனால்தான், தமிழன், திராவிடம் என இரு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தினார் எனக் குறிப்பிட்டேன். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றலைக் கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர்.

அவரது தாத்தா கந்தப்பன், தன்னிடமிருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை எல்லீஸிடம் கொடுத்து திருக்குறளை அச்சுப் பதிப்பாகக் கொண்டுவந்ததை நினைக்கும்போது, குறளுக்கு அவர் குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

பெரியாரே, என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அவர் சொன்னதைத் தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதி, மதமே தடை எனச் சொன்னவர் அவர். மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175-ம் ஆண்டின் நினைவாக, அவரது அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது. புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என்று சொன்ன அயோதித்தாசரின் சிந்தனையும் இரவு பகலற்ற ஒளியாக இந்தச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தங்கம், பட்டாசு, சாராயம் வியாபாரங்களை செய்வது யார்?: செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் தங்கம் அதிகமாக விற்கும் என்பதனால், துலுக்கர் தங்கக் கடத்தலில் அதிகம் ஈடுபடுவர், தங்கம் அதிகம் இந்தியாவில் உள்ளே நுழையும், வியாபாரம் நடக்கும்.  திருமணங்களும் நடக்கும். இதிலும் துலுக்கரின் பங்கு அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டுகளில் தீபாவளியை வைத்து அரசியல் செய்து, அதே நேரத்தில், “கார்டலைஷேசன்” மூலம், பட்டாசு வியாபாரத்தைப் பெருக்கி, கோடிகளை அள்ளி வருகின்றனர். இதிலும் பெரும்பாலோர் துலுக்கர் என்பதை கண்டு கொள்ளலாம். “ஹோல்-சேல் / கொள்முதல் / டிஸ்ட்ரிபூஸன்” வணிகத்தை அவர்கள் தான் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். பிறகு துணி-ஸ்வீட் வியாபாரங்கள் பற்றி சொல்ல வேண்டாம். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் ஆவின் ஸ்வீட்டை வைத்து தமாஷா செய்கின்றனர். விற்றாலும் பணம் அவர்களுக்குத் தான் சேரும். டாஸ்மார்க் சாராயம்-சரக்கு வியாபாரம் 300-400 கோடிகள் என்று விற்கப்படும். இப்படி எல்லா விதங்களிலும் பொருட்களை வாங்குவது இந்துக்களே, ஆனால், கொள்ளை லாபம் அடிப்பது, இந்துவிரோத சக்திகளே – ஆன்–லைன் -அயல்நாட்டு கிருத்துவ வியாபாரிகள், உள்ளூர் துலுக்க வணிகர்கள், சாராய – சரக்கு உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள்…..  தயாராக இருக்கின்றனர்.

எச்சரிக்கைநாத்திகத்தை, இந்து தூஷணத்தை, இந்துவிரோதத்துவத்தை இப்படியெல்லாம் கூட செய்து வியாபாரப் பொருளாக்கலாம்!:

  1. தீபாவளி பட்டாசுகளுக்கு வக்காலத்து வாங்கி, இந்திகாரர்களுக்கு கடிதம் எழுதத் தெரிந்த ஸ்டாலினுக்கு, இந்து தூஷணத்தைத் தடுக்கத் தெரியாதா?
  2. ஊழலில் நாறும் ஆவின் திராவிடத்துவத்தின் செயல்பாடு தானே, அது தீபாவளிக்கு ஒவ்வாததே ஆகும்! திராவிடத்தின் தீயவலியை எதிர்ப்போம்!
  3. காஜு கத்லி, போத்தி பாக், காஜு பிஸ்தா எல்லாம் இந்தி இல்லாமல், தமிழா? இந்துவே ஏமாறாதே, அத்தகைய தீயதை வாங்காதே!
  4. ரூ 6 கோடிகளுக்கு தீபாவளிக்கு வியாபாரம் செய்து கொழிக்கும் திராவிடத்துவ முதலாளிகளே, பிறகு இந்துவிரோத வாந்தி எடுப்பது ஏன்?
  5. அதே போல, பட்டாசு கொள்முதல் வியாபாரத்தையும் திராவிடத்துவ இந்துவிரோதிகள், துலுக்கர்கள் தான் செய்கிறனர், அதை வாங்கலாமா?
  6. திராவிடரைக் கொன்றதற்கு விழா எடுக்கலாமா என்றால், நீ எப்படி ஆவின் ஸ்வீட்டுகளை விற்கிறாய், அதை தடை செய் பார்ப்போம்!
  7. அசுரன் என்றால் குடியை வெறுக்கும் திராவிடன் என்கிறாயே, பிறகு டாஸ்மார்க் கடைகளை மூடி விடுவாயா, உற்பத்தியை நிறுத்துவாயா?
  8. பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா, தீபாவளிக் கதை அறிவுக்குப் பொருந்துமா என்று கேட்கிறாய், பிறகு என்ன வெங்காயம், பட்டாசு விற்பனை?
  9. இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்பியிருப்பதால், திராவிடத்துவ இந்து விரோதம் வெளிப்படுகிறது!
  10. இதனால், இத்தகைய தூஷணக்காரர்களிடமிருந்து எதையும் வாங்க வேண்டாம், ஏனெனில், அதிலும் ஊழல் இருக்கிறது! அவர்களுக்கும் தீபாவளி இனாம் கொடுக்க வேண்டாம்
  11. இந்துக்கள் விசயத்தில் இரட்டை வேடம் போடும் திராவிடத்துவ பூசாரிகள், பண்டாரங்கள், பரதேசிகள் நிச்சயமாக ஆபத்தானவர்கள் தான்!

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] தமிழ்.இந்து, பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2021 11:07 AM; Last Updated : 06 Sep 2021 11:07 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/713351-cm-mk-stalin-on-periyar-birthday.html

[3] தமிழ்.இந்து, அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 03 Sep 2021 12:18 PM; Last Updated : 03 Sep 2021 12:18 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/712071-manimandapam-for-iyothee-thass.html