Posts Tagged ‘பயங்கரம்’

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது?

ஜூலை 20, 2013

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது?

BJP functionary murdered 2013அரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத் தூண்டும் காரணிகள் யாவை?: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.

BJP protest  Ramesh murder - Photo E. Lakshmi Narayananஆடிட்டர் ரமேஷ் கொலை  (19-07-2013): சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52) வெள்ளிக்கிழமை 19-07-2013 அன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[1]. சேலம் மரவனேரியில் வசித்து வந்த ரமேஷ், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்[2]. அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 10 மணி அளவில்[3] அவரைக் வெட்டிக் கொலை செய்தனர்[4]. மிகவும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப் பாட்டிருந்ததால் உயிர் உடனே பிரிந்தது என்று போலீஸார் கூறுகின்றனர்[5]. Blood soaked body of Ramesh 2013ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். PTI கொடுத்த செய்தியை மற்ற நாளிதழ்கள், டிவி ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[6] / அறிவித்துள்ளன[7]. என்.டி.டிவி மட்டும் ரமேஷின் புகைப்படத்தைப் போட்டுள்ளது[8].

Auditor Ramesh murdered 2013பிஜேபி போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கப் படவில்லை: தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். “கட்சி தொண்டர்களை சந்திக்க சென்று, 10 மணி அளவில் திரும்பி வரும் போது, அவரது வீட்டின் மதிர் சுவர்களுக்கு பின்னால் மறைந்திருதவர்கள் தாக்கியிருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் ஆழமான வெட்டுகள் வீழ்ந்ததால் இறந்திருக்கிறார்”, என்று ஆர். பி. கோபிநாத் என்ற சேலத்தின் பிஜேபி பொதுச் செயலாளர் கூறுகிறார்[9]. இரு வருடங்களுக்கு முன்னர், இவர் தாக்கப்பட்டு கார் எரிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ தப்பி விட்டார். “இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, பிஜேபி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால், கொடுக்கப்படவில்லை”, என்றும் சொன்னார்[10]. மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூரும் போழுது, “இவ்வழக்குகளில் பொலீஸார் வேண்டுமென்றே யாரையோப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்விக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல”, என்று எடுத்துக் காட்டுகிறார்[11].

Murder of Hindu leaders - functionaries4பாஜக புகார்,  போலீஸாரின் நடவடிக்கை: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர். சேலம் இதையடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Murder of Hindu leaders - functionaries2சேலம் பஸ் ஸ்டாண்ட் சிறைபிடிப்பால் பதட்டம்[12]: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Murder of Hindu leaders - functionaries3உறவினர்கள் அதிர்ச்சி[13]: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும் பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.

Vellaiyan murder 2013ஜூலையில்இரண்டாவதுகொலை: கடந்த அக்டோபர் 2012ல், வேலூரில், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த, டாக்டர் வி. அரவிந்த தனது கிளினிக்கின் முன்பாகவே கொலை செய்யப் பாட்டார். ஆக, பிஜேபி தலைவர்களில் கொல்லப்படுவது, ஒன்பது மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்[14]. இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுவது என்று பார்க்கும் பொழுது, ஜூலையில் நடக்கும் இரண்டாவது கொலையாகும். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50), ஜூலை 1 அன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே உள்ளராமகிருஷ்ணா மடத்திற்கு மதியம் 3.20 மணியளவில் செல்லும்போது, அவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்[15].

ஜூலை 2013ல் நடக்கும் நிகழ்சிகள் சொல்லிவைத்தல் போல இருக்கிறது, என்று முன்னமே சுட்டிக் காட்டியுள்ளேன்[16].

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[17].

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[18].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[19].

Contradicting reports - media - propagandaகேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன. இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.

Why this anti-Hindu attitude in TNவேதபிரகாஷ்

© 20-07-2013


[2] தினமணி, சேலத்தில்பாஜகமாநிலநிர்வாகிவெட்டிக்கொலை, 20-07-2013, சென்னை பதிப்பு.

[5] BJP Tamil Nadu unit General Secretary V Ramesh was hacked to death by unidentified assailants near his house in Salem on Friday night, police said. The 52-year-old Ramesh alias Auditor Ramesh was attacked with sharp-edged weapons and he died on the spot, they said.

http://ibnlive.in.com/news/tamil-nadu-bjp-state-general-secretary-v-ramesh-hacked-to-death-by-unidentified-assailants-in-salem/407998-62-128.html

[11] BJP state president Pon Radhakrishnan said Hindu leaders are being targeted and the government is not taking these murders seriously. The men produced in court by police in these cases are not the real assailants, Radhakrishnan said.  http://timesofindia.indiatimes.com/india/Senior-BJP-leader-hacked-to-death-in-Salem/articleshow/21178446.cms

[13] தினமலர், சேலம்பஸ்ஸ்டாண்ட்சிறைபிடிப்பால்பதட்டம், 20-07-2013, சென்னை பதிப்பு.

[17] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் – ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

[18] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece