Posts Tagged ‘அமித்’

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

Modi advice to cadre-08-04-2018

மோடி தெளிவாக பா... எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா... அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா... எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா... எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா... அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா... எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா... செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா... எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா... எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா... மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.

Modi not happy with Amit Shah - SC issue
மோடி தெளிவாக சதியைபிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:

  1. ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
  2. பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
  3. ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
  4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
  5. பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
  6. இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.
  7. காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
  8. பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].

மோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Rahul, anti-Modi pitch, communal tourism

காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.

Owasi talking about dalit-mukt Bharat Jan.2018

ஆக பிஜேபிகாரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.

  1. எஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
  2. மோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.
  3. உபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.
  4. எதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].
  5. லிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.
  6. ஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.
  7. “தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது! ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].
  8. மேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
  9. பிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்!
  10. மோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.

© வேதபிரகாஷ்

09-04-2018

Ragul talks like Owasi about dalit-mukt Bharat April.2018

[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20

[2] https://www.maalaimalar.com/News/National/2018/04/07162004/1155690/Narendra-Modi-asks-BJP-MPs-to-spend-two-nights-in.vpf

[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .

[4]http://www.dinamani.com/india/2018/apr/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2894948.html

[5] Bahraich MP Savitri Bai Phule, Robertsganj MP Chhote Lal Kharwar and Etawah MP Ashok Kumar Dohre.  Nagina constituency, Yashwant Singh

[6] Pioneer, Modi working to make India Dalit-mukt: Cong, Monday, 09 April 2018 | PNS | New Delhi

[7] http://www.dailypioneer.com/nation/modi-working-to-make-india-dalit-mukt-cong.html

[8] News.18, BJP Wants a Muslim-mukt, Dalit-mukt Bharat: Asaduddin Owaisi, Sakshi Khanna | CNN-News18Updated:January 23, 2018, 12:11 PM IST

https://www.news18.com/news/politics/bjp-wants-a-muslim-mukt-dalit-mukt-bharat-asaduddin-owaisi-1639413.html

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

VCK - Udaykumar , anti-Modi

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

Siddha ask Amit to clarify whether he is jain or Hindu

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல்ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர் என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்?…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.

Udit Raj clarifies his position with BJP

எஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].

Cong protest for Dali cause The Hindu-08-04-2018

ராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].

Ideology differs, slogan varies, but, anti-modit unites

பிஜேபி தலித்விரோத அரசு, கட்சிகாங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

© வேதபிரகாஷ்

09-04-2018

Karataka Cong stooping down to compare Modi with Hitler

[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017

http://www.bbc.com/tamil/india-40105698

[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.

[3] News.18, Siddaramaiah Asks Amit Shah to Clarify if He’s a Hindu or Jain, PTI, Updated:March 30, 2018, 7:32 AM IST

[4] https://www.news18.com/news/india/siddaramaiah-asks-amit-shah-to-clarify-if-hes-a-hindu-or-jain-1703477.html

[5] NDTV, “I Am A Hindu Vaishnav, Not Jain”: Amit Shah, All India | Press Trust of India | Updated: April 06, 2018 22:48 IST.

[6] https://www.ndtv.com/india-news/i-am-a-hindu-vaishnav-not-jain-amit-shah-1833945

[7] Hindustan Times, BJP to convince Dalits to remain with party, says Udit Raj after ‘torture’ claim, Updated: Apr 08, 2018 18:26 IST.

[8] “My tweets r (are) misconstrued that its harming BJP rather it strengthens that at least there r people like me in BJP who r concerned with Dalit atrocities after 2 April agitation. It will convince Dalits & they will remain with party. Govt will check anti-dalit officer/ people (sic),” Udit Raj said on Twitter.

https://www.hindustantimes.com/india-news/bjp-to-convince-dalits-to-remain-with-party-says-udit-raj-after-torture-claim/story-4mH32TO02jTaz2qO2uRBIL.html

[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=391696

[11] Financial Express, Akhilesh Yadav on pact with Mayawati: SP-BSP alliance will knock the daylight off BJP in 2019, By: FE Online | Published: April 8, 2018 2:22 PM.

[12] http://www.financialexpress.com/india-news/akhilesh-yadav-on-pact-with-mayawati-sp-bsp-alliance-will-knock-the-daylight-off-bjp-in-2019/1125566/

[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.

[14] http://tamil.thehindu.com/india/article23430610.ece