Posts Tagged ‘அசிங்க ஆட்டம்’

கூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்!

நவம்பர் 27, 2016

கூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்!

omalur-nude-dance-villagers-enjoy-with-family

போலீஸாரைக் கண்டதும் துண்டை காணோம் – துணியைக் காணோம் என்று ஓடியது: போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்[1]. நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்[2].   இதைத்தான், ஒரு வேளை, “துண்டைக் காணோம், துணியைக்காணோம்,” என்று ஓடுவது என்கிறார்களோ? அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா? அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருட்டாக இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

omalur-nude-dance-villagers-pelt-stones-on-police

போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை: “ஆடல்-பாடல்” நிகழ்ச்சி போர்வையில் தான் ஆபாச நடனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடை குறைப்பு என்ற போர்வையில் மறைப்பில்லாமல் இரவில் நேரம் போக-போக அது நடக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம்.  இதையும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீரங்கனைகள், சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டும்.

obscene-and-vulgar-dances-at-temples-denied-permission

சேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆபாச நடனம் நடைபெறுவது: சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு வருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் இழுக்கிறது, தவறான வழிக்கு அழைக்கிறது. இவர்களிடமிருந்து வசூலும் நடத்தப்படுகிறது. ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் பார்ப்பது மட்டுமல்ல தொடவும் முயல்கின்றனர். அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் கவர்கின்றனர்.

obscene-and-vulgar-dances-at-temples-ramanathapuram-tv-18

சட்டத்தை மீறி நடத்தப்படும் நள்ளிரவு ஆபாச நடனங்கள்: பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை மீறி நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி’ படுத்தினார்கள். போலீசாரின் கண் எதிரிலேயே இவையெல்லாம் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் போலீஸாரும் கவனிக்கப்படுகின்றனர். ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி பார்க்காமல் இருப்பார்கள். கோவில் திருவிழா என்ற போர்வையில் தான் திராவிடக் கட்சிகாரர்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

obscene-and-vulgar-dances-at-temples

குத்தாட்டஅழகிகள் மீது போலீஸ் நடவடிக்கைநடனகலைஞர்கள் சங்கம் பாராட்டு (பிரவரி 2011): சேலம், கொண்டலாம்பட்டியில் பிப்ரவரி 2011ல் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது[3]. குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்[4]. இந்நிலையில், சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது[5]. கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள் சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது[6].

© வேதபிரகாஷ்

27-11-2016

temple-dance-acceotable-form

[1] தமிழ்.வெப்துனியா, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST).

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sex-dancing-in-festival-116061400056_1.html

[3] தினமலர், அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி 04,2011 22:58; மாற்றம் செய்த நாள். பிப்ரவரி 04,2011, 00:44.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=180926

[5] தினமலர், குத்தாட்டஅழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை, பதிவு செய்த நாள். பிப்ரவரி 2011. 01:04.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=182586&Print=1