எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா?
பிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.
எஸ்.வி. சேகர் வரவு, மூலதனமா, செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.
அதிமுக வெளியே அனுப்பியது (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.
திமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான்! “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார்! இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ?
காங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.
மற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
11-10-2013
[1]http://dinamani.com/edition_chennai/chennai/2013/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF.-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article1826185.ece
[2]http://socialsubstratum.wordpress.com/2010/05/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
[3] http://rationalisterrorism.wordpress.com/2011/05/16/kushboo-curses-tn-people-for-voting-out-dmk/
[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/actorpolitician-s-ve-shekher-joins-congress/article1161900.ece
[6] http://thomasmyth.wordpress.com/2010/05/03/what-sebastian-seman-has-to-do-with-kapaleswarar-temple/