Posts Tagged ‘ராஜா’

“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி-எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (2)

ஒக்ரோபர் 26, 2017

ஜோசப் விஜய்புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபிஎதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (2)

Joseph Vijay letter dated 25-10-2017

விஜய், ஜோசப் விஜய் ஆகி, “ஜீசஸ் சேவ்ஸ்என்ற கடிதத்துடன் நன்றி சொன்னது: விசயம் முற்றி திசைமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பாராட்டு கடிதத்தை வெளியிட்டுள்ளதும் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. நடிகர் விஜய் வெளியிட்டு உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது[1]: “மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று  மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில்  என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான  நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள்திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்க, ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி கலந்த வணக்கத்துடன்  உங்கள் விஜய்”, என குறிப்பிட்டு உள்ளார்[2].

Joseph Vijay getting baptized-2

லெட்டர்பேடும், ஊடகங்களும்: ஜோசப் விஜய் லெட்டர்பேட் கடிதத் தாளை உபயோகித்ததை,  தன் முழுப் பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே இந்த அறிக்கையைத் தந்துள்ளார்[3]என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. அந்த லெட்டர் பேடில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது[4] என்று ஏதோ கண்டுபிடித்தால் போன்றும் குறிப்பிடுகின்றன[5]. ஜோசப் விஜய் என்ற பெயரை முன்வைத்து சர்ச்சைகள் உருவான நிலையில் இந்த அறிக்கையை தன் லெட்டர்பேடிலேயே வெளியிட்டுள்ளார் விஜய் என்கிறது தினமணி[6]. இதுவரை அவ்வாறு தனது பெயரை அவ்வாறு வெளியிடாமல், இப்பொழுது வெளியிட்டிருப்பது போன்று செய்தி வெளியிட்டிருப்பது, வியப்பாக இருக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிடுவதே பொய்யானது.

Ajith Kumar vs Joseph Vijay comparison

ஜோசப் விஜய்,  “ஜீசஸ் சேவ்ஸ்முன்னர் இல்லமலா இருந்தது?: ஜோசப் விஜய் என்ற பெயர் ஒன்றும் ரகசியமானதல்ல. அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒப்பீடுகளில், விஜயை, ஜோசப் விஜய் என்று தான் போட்டுள்ளனர். விஜயே தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பலருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிகிறது. அதிலும் ஜீசஸ் சேவ்ஸ் என்றுள்ளது. 17-06-2014தேதியிட்ட, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதமும் அத்தகைய லெட்டர் பேடில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது[7]. எனவே, இதெல்லாம் பிஜேபிகாரர்களுக்கு தெரியாது என்பது போல, ஊடகங்கள் சித்தரிப்பது அபத்தமானது. ஆகவே, எச். ராஜா இன்று சொல்லிவிட்டார் என்று எல்லோரும் குதிக்க வேண்டிய அவசியமோ, அதை வைத்து ராஜாவை விமர்சனம் செய்வது முதலியானவை தேவையற்றதாகும். உண்மையில், ஊடகங்கள் தாம், விஜயை, பிஜேபிக்கு எதிரானவர் என்பது போல சித்தரிக்கின்றன. அவ்வலையில், விஜயும் அவர் தந்தை சந்திரசேகரும் விழுந்து விட்டனர் என்றாகிறது. ஆக, ஊடகங்களின் எச். ராஜா எதிர்ப்பு மற்றும் பிஜேபி எதிர்ப்பு ஏன் என்றுதான் அலச வேண்டியுள்ளது.

Joseph Vijay met Modi- April 2014

தமிழ்.ஒன்.இந்தியாவின் சகிப்புத்தன்மையற்றவிரோத வெளிப்பாடு[8]: தமிழ்.ஒன்.இந்தியா என்ற இணைதளம் வெளியிட்டுள்ளது, “மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். இதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என நஞ்சை கக்கினார் பாஜக தேசிய செயலர் எச். ராஜா. அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனாலும் அடங்காத எச். ராஜா, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரில்தான் உள்ளது. நடிகர் விஜய் ஒருபோதும் தம்முடைய சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டவர் அல்ல; ஆனால் ஓட்டு அரசியல்வாதிகள்தான் அவரை மத முத்திரைக்குள் திணிக்கின்றன. அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தாம் எப்போதும் பயன்படுத்தும் அதே லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். சமூக வலைதளங்களிலும் விஜய், ஜோசப் விஜய் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எச். ராஜா வகையறாக்களுக்கு இப்படித்தான் பதில் தர வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்”.

Joseph Vijay with cross chain letter dated 25-10-2017.

ஊடகத்தின் பாரபட்சம் மிக்க துவேச வெளியீடு[9]: இதில், “அநாகரிகத்தை தொடர்ந்தார்”, “அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்”…போன்றவை வக்கிரம், வெறுப்பு, துவேசம் முதலியவற்றைத் தான் காட்டுகிறது. ஊடகங்கள் செய்திகளைத் தான் வெளியிட வேண்டுமே தவிடர, இத்தகைய துவேச மனப்பாங்குடன் தங்களது வெறுப்பை செய்தியாக, செய்தியில் நுழைத்து வெளியிடுவது தான், பத்திரிகா தர்மத்திற்கு விரோதமானது. முரசொலி, தீக்கதிர், விடுதலை…. போன்ற அரசியல் கட்சி பத்திரிக்கைகள் அவ்வாறு செய்யலாம், ஆனால், “தமிழ்.ஒன்.இந்தியா” போன்றவை செய்வது, ஏதோ, ஜோசப் விஜய்க்கு ஆதரவாக செய்ல்படுவது போலவும், பிஜேபி, ராஜா ; போன்றவர்களுக்கு எதிராக செயல்படுவது என்றும் வெளிப்படுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. காழ்ப்பு, குரோதம், கோபம் போன்ற குணாதிசயங்கள் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளன.

 

சினிமாகாரர்களின் உபதேசம், பொறுப்பு, மற்றும் பதில் சொல்ல வேண்டிய நிலை: சினிமாகாரர்களால் தான் இப்பொழுதைய சமூகம் அதிகமாகப்வே கெடுகிறது. எனவே, அவர்களுக்கு சமூக பிரஞை போர்வையில் பொய்களை வசனங்களில் அள்ளி வீசமுடியாது. அவ்வாறு செய்வதையும் அனுமதிக்கலாகாது. சினிமாகாரர்களால் எத்தனை பெண்கள் கற்பிழந்தார்கள், குடும்பங்கள் சீரழிந்தன, வாழ்க்கை கெட்டது, தற்கொலை செய்து கொண்டனர், எத்தனை பேர் வரியேய்ப்பு செய்தனர், கருப்புப் பணம் உருவாக எவ்வாறு உதவினர், …என்று ஆராய்ச்சி செய்தால், அவர்களது உண்மை நிலை வெளிப்படும். இன்றைக்கு நடிகைகள் பலர், தான் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். பிறகு, அவர்களுக்கு எந்த தார்மீக பொறுப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

26-10-2017

Joseph Vijay- it - 3 CRORES EVASION

[1] தினத்தந்தி, மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிநடிகர் விஜய், அக்டோபர் 25, 2017, 04:21 PM

[2] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/25162149/Mersal-movie-great-successThanks-to-everyone-Actor.vpf

[3] பிளிமி.பீட்.தமிழ், மெர்சல் பிரச்சினையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! – ‘ஜோசப்விஜய், Posted By: Shankar, Updated: Wednesday, October 25, 2017, 16:40 [IST].</P>

[4] https://tamil.filmibeat.com/news/vijay-thanked-for-supporting-mersal-issue-049375.html

[5] தினமணி, மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி, அக்டோபர் 25, 2017. 04:14 PM.

[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/25/vijay-thanks-everyone-for-making-mersal-a-huge-success-2795708.html

[7] http://www.moviecrow.com/News/18328/joseph-vijay-thanks-everyone-for-mersals-success

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே நன்றி சொல்லி எச். ராஜாவுக்கு நச் பதிலடி தந்த விஜய்!, Posted By: Mathi, Published: Wednesday, October 25, 2017, 16:31 [IST].

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vijay-thanks-fans-support-mersal-299544.html

Advertisements

“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி-எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

ஒக்ரோபர் 26, 2017

ஜோசப் விஜய்புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபிஎதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

Joseph Vijay- with cross-Devil

மெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது.  தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:

  1. 7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை?
  2. மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.
  3. இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.
  4. ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்!”
  5. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.
  6. அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா? என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.
  7. கோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.
  8. “நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

Vijay versus Modi- not required

பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்?: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.

Joseph Vijay- got wrong about Singapore

பொய்யான ஜி.எஸ்.டிசிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

S A Chandrasekar clarificaton given about their religion

மகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.

© வேதபிரகாஷ்

26-10-2017

Joseph Vijay- Rahul-Sarkar- Madhur Bhandarkar

[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.

[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.

[3] http://www.bbc.com/tamil/india-41752132

[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,
23 அக்., 2017.

[5] https://www.youtube.com/watch?v=iONiCGIGKm4

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது?

ஜூலை 20, 2013

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது?

BJP functionary murdered 2013அரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத் தூண்டும் காரணிகள் யாவை?: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.

BJP protest  Ramesh murder - Photo E. Lakshmi Narayananஆடிட்டர் ரமேஷ் கொலை  (19-07-2013): சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52) வெள்ளிக்கிழமை 19-07-2013 அன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[1]. சேலம் மரவனேரியில் வசித்து வந்த ரமேஷ், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்[2]. அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 10 மணி அளவில்[3] அவரைக் வெட்டிக் கொலை செய்தனர்[4]. மிகவும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப் பாட்டிருந்ததால் உயிர் உடனே பிரிந்தது என்று போலீஸார் கூறுகின்றனர்[5]. Blood soaked body of Ramesh 2013ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். PTI கொடுத்த செய்தியை மற்ற நாளிதழ்கள், டிவி ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[6] / அறிவித்துள்ளன[7]. என்.டி.டிவி மட்டும் ரமேஷின் புகைப்படத்தைப் போட்டுள்ளது[8].

Auditor Ramesh murdered 2013பிஜேபி போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கப் படவில்லை: தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். “கட்சி தொண்டர்களை சந்திக்க சென்று, 10 மணி அளவில் திரும்பி வரும் போது, அவரது வீட்டின் மதிர் சுவர்களுக்கு பின்னால் மறைந்திருதவர்கள் தாக்கியிருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் ஆழமான வெட்டுகள் வீழ்ந்ததால் இறந்திருக்கிறார்”, என்று ஆர். பி. கோபிநாத் என்ற சேலத்தின் பிஜேபி பொதுச் செயலாளர் கூறுகிறார்[9]. இரு வருடங்களுக்கு முன்னர், இவர் தாக்கப்பட்டு கார் எரிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ தப்பி விட்டார். “இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, பிஜேபி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால், கொடுக்கப்படவில்லை”, என்றும் சொன்னார்[10]. மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூரும் போழுது, “இவ்வழக்குகளில் பொலீஸார் வேண்டுமென்றே யாரையோப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்விக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல”, என்று எடுத்துக் காட்டுகிறார்[11].

Murder of Hindu leaders - functionaries4பாஜக புகார்,  போலீஸாரின் நடவடிக்கை: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர். சேலம் இதையடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Murder of Hindu leaders - functionaries2சேலம் பஸ் ஸ்டாண்ட் சிறைபிடிப்பால் பதட்டம்[12]: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Murder of Hindu leaders - functionaries3உறவினர்கள் அதிர்ச்சி[13]: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும் பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.

Vellaiyan murder 2013ஜூலையில்இரண்டாவதுகொலை: கடந்த அக்டோபர் 2012ல், வேலூரில், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த, டாக்டர் வி. அரவிந்த தனது கிளினிக்கின் முன்பாகவே கொலை செய்யப் பாட்டார். ஆக, பிஜேபி தலைவர்களில் கொல்லப்படுவது, ஒன்பது மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்[14]. இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுவது என்று பார்க்கும் பொழுது, ஜூலையில் நடக்கும் இரண்டாவது கொலையாகும். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50), ஜூலை 1 அன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே உள்ளராமகிருஷ்ணா மடத்திற்கு மதியம் 3.20 மணியளவில் செல்லும்போது, அவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்[15].

ஜூலை 2013ல் நடக்கும் நிகழ்சிகள் சொல்லிவைத்தல் போல இருக்கிறது, என்று முன்னமே சுட்டிக் காட்டியுள்ளேன்[16].

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[17].

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[18].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[19].

Contradicting reports - media - propagandaகேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன. இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.

Why this anti-Hindu attitude in TNவேதபிரகாஷ்

© 20-07-2013


[2] தினமணி, சேலத்தில்பாஜகமாநிலநிர்வாகிவெட்டிக்கொலை, 20-07-2013, சென்னை பதிப்பு.

[5] BJP Tamil Nadu unit General Secretary V Ramesh was hacked to death by unidentified assailants near his house in Salem on Friday night, police said. The 52-year-old Ramesh alias Auditor Ramesh was attacked with sharp-edged weapons and he died on the spot, they said.

http://ibnlive.in.com/news/tamil-nadu-bjp-state-general-secretary-v-ramesh-hacked-to-death-by-unidentified-assailants-in-salem/407998-62-128.html

[11] BJP state president Pon Radhakrishnan said Hindu leaders are being targeted and the government is not taking these murders seriously. The men produced in court by police in these cases are not the real assailants, Radhakrishnan said.  http://timesofindia.indiatimes.com/india/Senior-BJP-leader-hacked-to-death-in-Salem/articleshow/21178446.cms

[13] தினமலர், சேலம்பஸ்ஸ்டாண்ட்சிறைபிடிப்பால்பதட்டம், 20-07-2013, சென்னை பதிப்பு.

[17] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் – ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

[18] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece