ஆர்.எஸ்.எஸ்-திக, பிஜேபி-ஈவேரா, முருகன்–பெரியார்: சித்தாந்தப் பிணக்குகள், அரசியல் கணக்குகள், இந்துத்துவக் குழப்பங்கள்

ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி அரசியல் கூட்டு வைக்கலாம், ஆனால், சித்தாந்தங்க்கள் மோதிக் கொண்டே இருக்கும்: தமிழக அரசியலைப் பற்றி தவறாக, மேலிடத்திற்கு யாரோ, எந்த குழுவோ, கோஷ்டியோ தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்று, பிஜேபி மற்றும் பிஜேபி தலைவர்களின் பேச்சுகள் முதலியவற்றிலிருந்து தெரிய வருகின்றன. முக்கியமாக கீழ்கண்டவை அடையாளம் காணப் படுகின்றன:
- அம்பேத்கர் இந்து, அவர் சமஸ்கிருதத்தை ஆதரித்தார்…..போன்ற வாதங்கள் [மூலங்களை ஒழுங்காகப் படிக்காமல், அரைகுறையாக எழுதி பிரசுரிப்பது].
- தருண் விஜயின் திருவள்ளுவர் சிலை குழப்பம், சிலை மாறியது முதலியன [இதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்].
- அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா, “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது,” என்று பேசி விளக்கம் அளித்தது [பிளாக்கைப் பார்க்கவும்].
- மோடியின், தமிழ் தான் உலகத்தின் மூத்த / தொன்மையான மொழி என்ற பேச்சு [இதற்கு விளக்கம் தேவையில்லை].
எழுபது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் திராவிடத்துவத்தை உடனடியாக மாற்றி விடுவேன் என்பது, பகல் கனவு தான்.

17-09-2020 பாலிமர் செய்தி, எல். முருகனின் வாழ்த்து: 17-09-2020 பாலிமர் டிவியில் வெளிவந்த செய்தியிலிருந்து, பிஜேபி தலைவர் எல். முருகன் பெரியாருக்கு வாழ்த்து சொன்னது, அனைவரையும் திகைக்க வைத்துள்ளது[1]. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபிகாரர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்[2]. சமூக ஊடகங்களில் மாற்பட்ட கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி யின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது[3]. முன்னதாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நடைமேடையில் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொலியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்[4]. இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில மகளிர் அணி சார்பில் 70 செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக்கொண்டாடினர். அதனை தொடர்ந்து தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜகவின் minority morcha என்ற டிவி சானலுக்கான லோகோவை எல்.முருகன் அறிமுகம் செய்து வைத்தார்.

“சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை”, எல். முருகன்: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது[5], “இன்று பலதரபட்ட மக்களும் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன, அதற்கு முழு காரணம் மோடிதான். அவருடைய தூய்மையான ஆட்சிதான் காரணம்,” என்று கூறினார்[6]. மேலும் நீட் தேர்வு மூலம் 13 பேரின் உயிரில் விளையாடியது திமுக தான் எனவும், மாணவர்களின் உயிர் இழப்பிற்கு முழு காரணம் திமுக மட்டும்தான் என குற்றம் சாட்டினார். “இன்று பெரியரின் பிறந்தநாளுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை,” என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று தெரிவித்தார்[7]. திராவிடத்தை அழிக்க புதிய கலாச்சாரம் தோன்றி இருக்கிறது,” என்ற துரைமுருகன் கருத்துக்கு பதிலளித்த அவர், “யாருடைய கலாச்சாரத்தையும் நாங்கள் மறைக்கவில்லை எனவும் எங்கள் கலாச்சாரத்தை முன் நிறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. முன்னதாக ராமநாதபுரம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்[9]. இதையே மற்ற ஊடகங்களும் “பி.டி.ஐ” பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன[10].

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது–மே 2018: சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது[11]. பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்[12]. அப்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் நரசிம்மன் உடன் இருந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு[13]: “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்”.
பிஜேபி கவனிக்க வேண்டிய விசயங்கள்:
- பிஜேபி ஏற்கெனவே திமுக-அதிமுக என்று மாற்றி-மாற்றி பாராளுமன்ற தேர்தல்களுக்கு கூட்டணி வைத்துள்ளது. வாஜ்பாயி-கருணாநிதி நட்பு, சித்தாந்தங்களில் மோதத்தான் செய்தது.
- ஆகவே, இப்பொழுதைய பிஜேபியின் இந்துத்துவ சித்தாந்தம் நீர்க்கப் படும் அல்லது அமுக்கி வாசிக்கப் படும். மேடைகளில் முரண்பாடுகள் வெளிப்படும்.
- மாறாக திராவிடத்துவ சிததாந்தத்தை பலவழிகளில் போற்ற வேண்டியிருக்கும் ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலிதா, கருணாநிதி சிலைகளுக்கு மாலைகள் போட வேண்டியிருக்கும். ஆனால், திராவிட சித்தாந்திகள் மாற மாட்டார்கள்.
- அதனால், தமிழ் தான் உலகத்தின் மூத்த / தொன்மையான மொழி, திருவள்ளுவர், கம்பர் முதலியன போன்றவை இன்னும் தொடரும்.
- கருணாநிதி இந்தியில் பாட்டுப் பாடியது போல, மோடியும் திருக்குறள்களை சொல்லிக் கொண்டிருப்பார். முருகனைப் போன்று பெரியாரைப் போற்றவும் செய்வர்.
- ஆனால், தமிழ் மக்கள், திராவிட கட்சிகளின் வலைகளில் தான் கட்டுண்டுள்ளன. திமுக-அதிமுக விசுவாசிகள், அபிமானிகள் அதிலிருந்து மீண்டு, பிஜேபியை ஆதரிக்க மாட்டார்கள்.
- இந்துவாக இருக்கும் தமிழர் எல்லாம் பிஜேபிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்.
- திமுக-அதிமுக நிலையை அடைய 5-10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம் போன்றது உருவாகலாம்.
- மத்தியில் 3 மந்திரி கொடுத்தால், இங்கு 10 எம்.எல்.ஏக்கு சீட் கிடைக்கலாம். வெல்வது பிஜேபியின் திறமையாக இருக்கும்.
- ஐந்து வருடங்கள் எல்லோரும் நன்றாக அனுபவிக்கலாம்.
© வேதபிரகாஷ்
18-09-2020
[1] பாலிமர் செய்தி, சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்… வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை – பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், செப்யம்பர் 17, 2020, 02.46:40 PM.
[2] https://www.polimernews.com/dnews/121040/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88–%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
[3] மின்னம்பலம், சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்: எல்.முருகன் வாழ்த்து!, செப்டம்பர் 18, 2020.
[4] https://www.minnambalam.com/politics/2020/09/17/28/thanthai-periyar-birthday-wishes-to-l-murugan-bjp
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன், By Mathivanan Maran
| Updated: Thursday, September 17, 2020, 16:58 [IST].
[6] https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-leader-l-murugan-justifies-birthday-wishes-to-thanthai-periyar-397901.html
[7] TV NEWS18, சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்… வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை – பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், VELMURUGAN,
LAST UPDATED: SEPTEMBER 17, 2020, 2:45 PM IST.
[8] https://tamil.news18.com/news/tamil-nadu/periyar-was-a-fighter-for-social-justice-bjp-l-murugan-said-he-had-no-hesitation-in-congratulating-him-vin-vel-347651.html
[9] ஏசியா.நெட்.நியூஸ், பொரியார் சமூக நீதிக்காக போராடியவர் என வாழ்த்து கூறி..!! பாஜகவினரை அதிரவைத்த எல்.முருகன்..!!, By Ezhilarasan Babu., Chennai, First Published 17, Sep 2020, 2:54 PM.
[10] https://tamil.asianetnews.com/politics/congratulations-to-periyar-who-fought-for-social-justice-l-murugan-gave-shock-to-bjp-party-members–qgsq47
[11] The Hindu, RSS leader to attend camp in Chennai, STAFF REPORTER, CHENNAI, MAY 18, 2018 00:00 IST; UPDATED: MAY 18, 2018 03:40 IST.
[12] தினத்தந்தி, ‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்’ அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி, மே 19, 2018, 03:59 AM
[13] https://www.dailythanthi.com/News/State/2018/05/19035944/In-TamilNadu-RSS-Become-a-dynamic-movement-All-India.vpf
