இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]
பொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.
ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.
கேள்வி–பதில்கள் எழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.
பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?
அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.
அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
செக்ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.
இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?
இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.
இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?
கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?
சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.
ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?
இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது. சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,
- கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),
- கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),
- சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),
- நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது. இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன. அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.
வேதபிரகாஷ்
08-08-2018
[1] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம், Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).
DT.Next, HR and CE officials claim religious outfits backing IG Pon Manickavel, Published: Aug 07,201804:54 AM.
The Hindu, We are being targeted, allege HR&CE staff, STAFF REPORTER, CHENNAI, AUGUST 07, 2018 01:50 IST; UPDATED: AUGUST 07, 2018 01:50 IST
[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.
[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/ig-ponmanikkavel-not-identify-the-black-sheep-the-department-endowment-employees/articlecontent-pf318885-326698.html
[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையரிடம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.
[5] http://tamil.eenaduindia.com/State/Central/Trichy/TrichyCity/2018/07/31192203/Murugan-temple-statue-Navapashan-issue-Investigation.vpf
[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.