Posts Tagged ‘பொள்ளாச்சி’

கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்! [1]

ஏப்ரல் 6, 2019

கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்! [1]

DK - Krishna issue-Stalin
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் மற்றும் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது[1].  “ஈவ்டீசிங் கேசுல முதலில் புக் பண்ணவேண்டிய ஒரு ஆள்னா அது இந்த கிருஷ்ணனைத் தவிர, கிருஷ்ண அவதாரத்தைத்தவிர வேறு யாருயா? பொள்ளாச்சிகாரனுக்கே அவன்தான்யா முன்னோடி. பொள்ளாச்சிகாரன் ஃபோட்டோ எடுத்தான்னு சொல்றாங்க. ஒருவேளை வீடியோ கிருஷ்ணன் கையில கிடைச்சிருந்தா அதை அவன் வீடியோ எடுத்து எல்லா தேவர்களுக்கும் போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள் மன்னிக்கணும், இந்த புராணம் பற்றிய விஷயங்களை பேசும்போது எனக்கே சங்கடமாக இருக்கு. அறுவை சிகிச்சைக்கு சென்றபிறகு உடையை கலட்டாமல் அறுவை சிகிச்சை செய்யுங்கள் எனக்கூறினால் எப்படி பண்ணமுடியும். அதுபோல் உண்மையை அதன் நிர்வாணத்தன்மை என சொல்லக்கூடிய அளவில் ஆராயவேண்டும்” நக்கீரன் இவ்வாறு வெளியிட்டுள்ளது[2].

DK and HM clash in Veeramani meeting-Tamil news cutting

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர்  கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது[3]. தமிழ் ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டாலும், அத்தகைய நிகழ்வு எப்படி, ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதனை விசாரித்து எழுதி இருக்க வேண்டும். யாரும், அத்தகைய காரியங்களில் இறங்க மாட்டார் என்பது  தெரிந்த விசயம்.

DK Veeramani hate speech 23-03-2019-1

திக-திமுகவினரின் நாத்திகம் செக்யூலரிஸமாக இல்லை, ஆனால், கம்யூனலாக இருந்து வருகின்றது: திக-திமுக தலைவர்களே கடந்த 70 ஆண்டுகளாக, இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றையும் விமர்சித்து வருவதோடு, ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தூஷ்ணமாகவும் பேசி-எழுதி வருகின்றனர். முன்பு, ஏதோ பிட் நோட்டீஸ், குறும்புத்தகம் என்று வந்த போது, பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், இப்பொழுது அச்சு மற்றும் மின்னணு  ஊடகங்ளில் வரும் போது, லட்சக்கணக்கில், உலகம் முழுவதும் கவனிக்கும் வகையில், இத்தகைய செய்திகள் பரவுகின்றன. அப்பொழுது, இவர்களது பாரபட்சம் மிக்க, ஒருதலைப்பட்சமான, சார்புடைய சித்தாந்தம், மனப்பாங்கு, முதலியவை வெளிப்படுகின்றன. செக்யூலரிஸம்-சமதர்மம் என்று இருந்தாலும், அவர்களின் போலித் தனம், நடுநிலைமை அற்ற குணாதிசயம், முதலியவையும் வெளிப்படுகின்றன. இந்து அல்லாத மதங்களைப் பற்றி விமர்சிப்பதே கிடையாது, மாறாக, அவர்களது பண்டிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும். விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டியும் செய்து வருகின்றன. அத்துடன் நில்லாமல், அதே நிகழ்ச்ச்களில் இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் முதலியவற்றை கிண்டலடித்து தூஷித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் இன்றைக்கு கவனித்து வருகின்றனர்.

DK veeramani canvassed for Tiruavukkarasu, Congress

திருநாவுக்கரசரை ஆதரித்து திக மேடை பேச்சு: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க 04-04-2019 அன்று இரவு 8 மணியளவில் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்[4]. அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர்[5]. கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்[6].

DK - HM clash DM

திருநாவுகரசு, திருநாவுகரசன், பதிலாக திருநாவுக்கரசர் ஏன்?: திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்துக் கொண்டதிலிருந்தே, திருநாவுகரசு, திருநாவுகரசன், என்று வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. அதாவது மனிதனுக்கே அந்த அளவுக்கு மரியாதை எத்ர்பார்க்கு, மமதை, ஆணவம் எல்லாம் இருக்கிறது. மேலும், முன்னர், இவர் பிஜேபியில் இருந்தவர். அந்த அழகில், வீரமணி, இவருக்கு ஆதரவு தெரிவித்து, பேச வேண்டிய அவசியம் என்ன என்ன தெரியவில்லை. பிறகு, இவரும், அத்தகைய, இந்துவிரோத நாத்திகத்திற்கு ஒத்துப் போகிறார் என்றாகிறது. இல்லையென்றால், தனிப்பட்ட முறையில், “என்ன வீரமணி, இப்படி எல்லாம் பேசவது, எழுதுவது எல்லாம் தேவையா, இது செக்யூலரிஸம் ஆகாதே என்று கேட்டிருக்கலாம்,” ஆனால், கேட்கவில்லை என்றே ஆகிறது.

DK and Hidu Munnani clash in Veeramani meeting-DM

இந்துமுன்னணி, திகவினர் மோதல்: அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர்[7]. அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன[8]. இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்பட்டது[9]. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது[10]. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்[11].

veeramani remarks - news today

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[12]: “திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே 04.04.2019 அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி..தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திடீரென்று புகுந்த இந்து முன்னணி அமைப்பினர், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தி..வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு திரு.கி.வீரமணி அவர்கள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் உள்ள .பி ரோட்டில் வேனை மறித்து இந்து முன்னணியினர் கலகம் செய்துள்ளனர். ஏற்கனவே, “தினமலர்நாளிதழில் அவரை தாக்க வேண்டும் என, கேள்விபதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பிறகும் அவருக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததால், வேனில் திரும்பும் போதும் தாக்க முற்பட்டுள்ளனர். தி..தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர்மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது. மேலும் திரு.கி.வீரமணி அவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகும், போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வன்மையாக கண்டிக்கின்றது. தமிழக அரசு உடனடியாக தி..தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில்தமிழக அரசே பொறுப்புஎன இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

06-04-2019

DK meeting 23-03-2019-2

[1] தினமலர், திருச்சி: தி.., கட்சியினர் மீது தாக்குதல், Added : ஏப் 04, 2019 22:28

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/k-veeramani-about-krishna-dmk-president-stalin-reply

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2248617

[4] நியூஸ்.7.டிவி, இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்!, April 05, 2019, Posted By : Shanmugapriya

[5] http://ns7.tv/ta/955j75

[6] நியூ.ஏசியா.நியூஸ், வீரமணியை ஓட ஓட விரட்டிய இந்து முன்னணியினர் ! காலணி வீசி கலவரம் ! 2 பேர் மண்டை உடைப்பு !!, By Selvanayagam P, First Published 4, Apr 2019, 10:35 PM IST

[7] https://tamil.asianetnews.com/politics/veeramani-meeting-stone-belt-ppg4sm

[8] தமிழ்.ஒன்.இந்தியா, வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி..வினர் 2 பேரின் மண்டை உடைப்பு, By Velmurugan P | Published: Thursday, April 4, 2019, 21:32 [IST]

[9] https://tamil.oneindia.com/news/trichirappalli/dravidar-kazhagam-members-attacked-by-hindu-munnani-in-trichy-345948.html

[10] விகடன், திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல்இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!, சி.ய.ஆனந்தகுமார் சி.ய.ஆனந்தகுமார், வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019) கடைசி தொடர்பு:10:45 (05/04/2019)

[11] https://www.vikatan.com/news/tamilnadu/154207-hindu-munnani-movement-leaders-attacked-on-dmk-election-campaign-meeting-at-trichy.html

[12] தினமணி, கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், By DIN | Published on : 05th April 2019 03:04 PM

[13] https://www.dinamani.com/tamilnadu/2019/apr/05/cpi-condemns-attack-over-kveeramani-meting-held-in-trichy-3127748.html

Advertisements