Posts Tagged ‘பிராமின்’

நெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது!

மே 16, 2019

நெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது!

kasi-viswanatha-temple-and-sri-sadasiva-brimendra-adhistana-entrance

நெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.

Manamadurai Sadasiva function 14-05-2019

தினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5].  இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.

nerur-2017-agraharam-ardhana-started-picture-taken-to-adhistana

 மானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].

nerur-2017-close-to-sadasiva-adhistana

குறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந்து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது

nerur-2017-kasi-viswanathar-temple-garba-gruha-near

நெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிடம், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற  நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

தலித் பாண்டியன், கரூர்

மே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].

© வேதபிரகாஷ்

14-05-2019

Sadasiva book- Vedaprakash

[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.

வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.

[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07

[3] https://www.dinamalar.com/district_detail.asp?id=2267906

[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=933252

[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2276021

[8] தினமணி, கரூரில் தலித் விடுதலை இயக்கம் போராட்டம், By dn | Published on : 29th December 2012 12:19 PM.

https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2012/dec/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-608517.html

[9] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html

[10] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …

[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!, மே.26, 2016.

[12] https://antihidnu.wordpress.com/2016/05/26/nerur-rolling-on-leaves-ceremony-not-held-as-ban-imposed-last-year-appeal-not-filed/

Advertisements

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

நவம்பர் 7, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

Pothys Kamal Hassan ad

Pothys Kamal Hassan ad

கமலும், தீபாவளியும், போத்தீஸ் விளம்பரமும் (அக்டோபர்-நவம்பர்.2015): “என்னத்தான் வருசா வருசம் வயசு ஏறிக்கிட்டே போனாலும், தீபாவளி அன்னிக்கு எனக்கு வயசு பத்து தாங்க. புது ரிலீஸ் படம் காட்டிலும் டமால் டுமீல்னு பட்டாசு எல்லாம் வெடிக்கிறாங்க. ஜாலியாக டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கலாம், ஆனா, ஸ்வீட் சாப்பிடனும். உம்என்னத்தா வருசம் முழுவதும் நினச்சப்ப எல்லாம் புது டிரஸ் எடுத்தாலும், இந்த தீபாவளி டிரஸை யாரும் மறக்க முடியுமா சொல்லுங்க. அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய எங்கு எடுப்போம்? நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே?”, என்று சொல்லிக் கொண்டே ராக்கெட் விடுகிறார் கமல். “திபூஸ் போதிஸ், இது மக்கள் போத்தீஸ்”, என்று பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதாங்க கமலின் தீபாவளி புரமோஷன் அட் பிளிம்[1], அதாவது தீபாவளி வியாபாரத்தைப் பெருக்க எடுத்த ஒரு விளம்பரப்படம். இது எப்படி எடுத்தனர் என்பதை விளக்கும் விடியோவும் உள்ளது[2]. இப்பொழுது பட்டாசு வெடிக்காதே என்று பிரச்சாரம் நடக்கும் நிலையில், இந்த விளம்பரப்படமே தமாஷாகத்தான் இருக்கிறது. இருப்பினும், உலக மகா நாயகன் நடித்தது என்று கவனித்தில் கொள்ளவேண்டும். இதனால், தீபாவளியை அந்த நாத்திகன் ஏற்றுக் கொண்டதாக ஆகாது. இதனை விளம்பர விபச்சாரம், வர்த்த வேசித்தனம், வியாபாரப் பரத்தைத்தனம் என்பதா என்று நுகர்வோர் தான் தீர்மானிக்க வேண்டும்[3].

Pothys Kamal Hassan AD.2

Pothys Kamal Hassan AD.2

வாங்கிய பணத்தை நல்ல காரியத்திற்குக் கொடுத்தார்: இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[4]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்.

No crackers campaign for Deepavali

No crackers campaign for Deepavali

தீபாவளியை வெறுக்கும் கமல் செய்யும் பரித்துரை மூலம் நுகர்வோர் பயன் பெறுவார்களா?: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா? தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா? “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா? சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா? கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள்? எதை வாங்கினாலும், அதன் தரத்தை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா? எதிர்விளைவுகளினால், பின் விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பதை பகுத்தறிவா தீர்மானிக்கும்.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

படபிடிப்பு எடுக்க அனுமதி கேட்க மடத்துள் நுழைந்த நாத்திகன் கமல் (செப்டம்பர். 2014): கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6] என்றது தினமலர். மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[7]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[8]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்க விஜயம்: நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ? என்று பலர் கேள்வி எழுப்பினர். கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார். உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும் என்றார்[9]. இப்படியெல்லாம் மழுப்பினாலும், வியாபார ரீதியில் ஒப்புக்கொண்டார்கள் என்றாகிறது அவ்வளவுதான். சூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதெல்லாம் போலித்தனமானது.

I want beef, but no crackers

I want beef, but no crackers

கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!: இதை விமர்சித்து, ஒரு பதிவு உள்ளது, “அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது[10]. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சரிஅது இருக்கட்டும்இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன. ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்”, என்ற அப்பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.[11]. இவ்வாறான உள்ளூர் பழக்க-வழக்கக்கள் இருக்கின்றன என்றால், அவை பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மீறி இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்றால், அது இந்துக்களின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

07-11-2015

[1] https://www.youtube.com/watch?v=Wg4u0xcqQBU

[2] https://www.youtube.com/watch?v=jDdUDDY4lC8

[3] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.

[4] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/holy-books-say-brahmins-ate-beef-says-kamal-hassan-225248.html

[6] தினமலர், நெற்றியில் விபூதி பட்டையுடன் மடாதிபதியை சந்தித்தார் கமல்!, செப்டம்பர்.4, 2014.08.17. PM IST.

[7] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[8] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[9] http://cinema.maalaimalar.com/2014/09/03125909/kamal-change-to-aanmeegam.html

[10] தமிழ்.நியூௐ.டிவி, கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!, On 9/05/2014 10:05:00 AM by Abdul Farook in Break, Tirunelveli.   

[11] http://tamilnadunewstv.blogspot.in/2014/09/blog-post_377.html