அப்பாஸ் என்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஒரு பெண்ணை கோயிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டு–பலாத்காரம் செய்தது ஏன்? (1)

IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டாலும், கற்பழிப்பு என்று குறிப்பிடாமல், கூட்டு பலாத்காரம் என்ற செய்தி: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீரில் கோவிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோவில் முன்பு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இப்படியெல்லாம், பீடிகையுடன் செய்தியை ஆரம்பித்தாலும், வழக்கம் போல, ஊடகங்கள், நிகழ்வுகளை, முன்னுக்கு முரணாக, மாற்றி-மாற்றி, வெவ்வேறு விதமாக வெளியிட்டுள்ளன. கற்பழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை, ஆனால், கூட்டு பலாத்காரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்கின்றன, அதாவது, கற்பழிப்பு குற்றத்திற்காகத் தான் கைது, வழக்குப் பதிவு எல்லாம். பிறகு, அவ்வாறு செய்தி வெளியிடுவதற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் கூட்டு பலாத்காரம் செய்தது: நாகை கூட்டு பலாத்காரம் பற்றிய விபரம் வருமாறு என்று ஊடகங்கள் கொடுத்துள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கப் படுகிறன: நாகை மாவட்டம் நாகை தோப்பு அருகே சந்திரா (வயது 40). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. இதையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்[2]. இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். வியாழக்கிழமை (07-01-2021) / 06-01-2021 அன்று இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்போது நாகை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ் (25), நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆனந்த் (26) ஆகிய மது போதையில் இருந்த, 2 வாலிபர்களின் மனதில் சபல புத்தி ஏற்பட்டு சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர்[4]. ஆனால், பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது[5]. மது போதையில் இருந்தனர், கஞ்சா போதையில் இருந்தனர் போன்ற விவரங்களும் இருக்கின்றன. அப்பாஸ் என்கிற அருண்ராஜ் என்று குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது. அதாவது, கற்பழித்தவர்களில் ஒருவன் துலுக்கன் என்றாகிறது.

கோயிலில், கோவில் வளாகத்தில், கோயிலுக்கு முன்பு பலாத்காரம் என்றெல்லாம் குறிப்பிட்டது: சிறிது நேரத்தில் சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[6]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[7]. அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்[8]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அவரை விடுவித்தனர். ஏசிய.நெட்.நியூஸ், “எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா….. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்,” என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[9]. “தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார். ஆனால் இருவரும் கடுமையாக தாக்கி அதிகாலை 2:00 மணி வரை பலாத்காரம் செய்துள்ளதோடு வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்வதாகவும் மிரட்டி சென்றனர்,” என்கிறது தினமலர்[10].

காமாட்சி கோவிலா, பிள்ளையார் கோயிலா?: தமிழ்.இந்து, “அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்”, என்கிறது[11]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. அந்த அளவுக்கு, அனுபவம் மிக்க நிருபர்களுக்குத் தெரியாமல் போனது தமாஷாக இருக்கிறது. கற்பழித்தவர்கள் யாரென்று தெரியாதது போல, “பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது.[12]” ஆக, அந்த ஆட்களின் அடையாளம் தெரியவில்லை, கோயிலின் அடையாளமும் “பிள்ளையார் கோவிலா அல்லது மீனாட்சி கோவிலா” தெரியவில்லை போலும்.
- அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[13].
- அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.
- ‘…..விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்;
- “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி.
- அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இவ்வாறு கோயிலுக்கு முன்பு, கோயிலுக்குள், கோயில் வளாகத்தில் என்றெல்லாம் மாற்றி-மாற்றிக் குறிப்பிடுவது ஏன்?

பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறி உண்மையா அல்லது அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டது உண்மையா?: பல விசயங்களில் எல்லாம் தெரிந்தது போல செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், இத்தகைய கொடுமையான, விபரீதமான கற்பழிப்பு குற்றங்களில், மாறுபட்ட நிலைகளில் செய்திகளை வெளியிடுவது, திகைப்பாக இருக்கிறது.
- “……….தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார்……..,:என்கிறது தினமலர்[14].
- சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[15]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[16] என்கிறது தமிழ்.பிபிசி.
இவ்வாறு, ஊடகங்கள் மாற்பட்டு, செய்திகளை வெளியிடுவது ஏன்? விசாரணையில் கூடவா, உண்மை தெரியவில்லை. இவ்வாறு பல விசயங்களில், ஏன் செய்திகளை பலவாறு வெளியிட வேண்டும்?
© வேதபிரகாஷ்
09-01-2021

[1] தினகரன், நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது , 2021-01-08@ 10:17:35. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423
[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423
[3] மாலைமலர், கோவிலுக்குள் பெண் பாலியல் வன்கொடுமை– 2 பேர் கைது, பதிவு: ஜனவரி 08, 2021 11:15 ISTமாற்றம்: ஜனவரி 08, 2021 12:09 IST.
[4] https://www.maalaimalar.com/news/district/2021/01/08111535/2234746/Tamil-News-woman-molested-in-Nagai-two-arrested.vpf
[5] பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள் – நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021
[6] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.
[7] https://www.bbc.com/tamil/india-55588703
[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html
[9] ஏசியா.நெட்.நியூஸ், எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா.. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம், By Vinoth Kumar, Nagapattinam, First Published Jan 9, 2021, 1:59 PM IST.
https://tamil.asianetnews.com/crime/nagai-woman-gang-rape-2-people-arrest-qmnrkt
[10] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404
[11] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html
[12] பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள் – நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021
[13] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.
[14] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404
[15] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.