Posts Tagged ‘பாபர்’

வாவர், வாபர், பாபர் யாரிது – இஸ்லாமிய சுன்னிமார்கள் மற்றும் ஐயப்ப கன்னிமார்கள் சொல்வது என்ன?

திசெம்பர் 9, 2015

வாவர், வாபர், பாபர் யாரிதுஇஸ்லாமிய சுன்னிமார்கள் மற்றும் ஐயப்ப கன்னிமார்கள் சொல்வது என்ன?

avar Mosque - Masjid, Erumeli, Kerala

ஐயப்ப பக்தர்களின் வாவர் மீதான பக்திநம்பிக்கை: 1980களில் எனது நண்பர்களில் பலர் ஐய்யப்பன் பக்திமார்களாக இருந்து, தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வருவார்கள். அவர்களது பூஜைகள், பஜனைகளில் கலந்து கொள்ளும் வழக்கம் உண்டு. அவர்களுடன் சேர்ந்து கொண்டு “சபரிமலை ஐயப்பன்” போன்ற திரைப்படங்களையும் பார்த்துள்ளேன். அப்பொழுது, “வாவர்சாமி” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அதைப்பற்றி விசாரித்தேன். வாவர்சாமி, ஒரு முஸ்லிம்சாமி, ஐயப்பனின் தளபதி, ஐயப்பன் போருக்குச் சென்றபோது, அவர்தான் உதவினார் என்றெல்லாம் சொல்வார்கள். மோஹினி அவதாரம் காலத்தில் ஐயப்பன் பிறந்தார் என்றால், அப்பொழுது இஸ்லாமே இல்லையே[1], பிறகு எப்படி முகமதியரான வாவர் ஐய்யப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும் என்ற கேட்டபோது, “என்ன, இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே?………………உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் சும்மா இருங்கள்….” என்று கோபத்துடன் கூட சொல்லியிருக்கிறார்கள். இதனால், அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அதிகமானது. ஆனால், ஒரு பெரியவர் மட்டும், இதெல்லாம் முன்னர் இல்லை, சமீபத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்றார்.

ErumeliVavarSwamyDarga

சமீபத்தில் ஆரம்பித்தது தான்வாவர்கதை, சம்பிரதாயம் முதலியன: அப்பொழுது தான், நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்ககளில் சமர்ப்பிக்க ஆரம்பித்தேன். அந்நிலையில், இதைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், சபரிமலைக்கு தவறாமல் சென்றுவருவார். அவரிடமும் இதைப்பற்றி கேட்டுப் பார்த்தேன். மற்றவர்களைப் போல தெரிந்த கதையை சொல்லி, “இவ்வளவுதான் தெரியும், வேண்டுமானால், இந்த வருடம் செல்லும்போது, மேலும் விவரங்களை விசாரித்து வருகிறேன்”, என்றார்.  சென்று திரும்பி வந்தபோது, “அதே கதையைத்தான் சொல்கிறார்கள், ஆனால், “அந்த மசூதியின் தொன்மை 200 வருடங்கள் தாம் இருக்கும், என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்”, என்றார். போட்டோ எல்லாம் எடுக்க முடியவில்லை என்றார். அதனால், இந்த சம்பிரதாயமும் பிறகு தான் தோன்றியிருக்க வேண்டும். மேலும் இது மென்மையான, உணர்ச்சிப்பூர்வமான, நம்பிக்கையின் மீது ஆதாரமான விசயம் என்பதினால் அதனை விட்டுவிட்டேன்.

வாவர் சாமி, எருமேலி

இந்துமுஸ்லிம் ஒற்றுமை இத்தகைய சரித்திர ஆதாரமில்லாத விசயங்களால் உண்டாக்க முடியாது: சென்ற ஆண்டு 2014ல் பேஸ்புக்கில், திடீரென்று இதைப்பற்றிய விவாதம் வந்தது. அப்பொழுது, “வாவர்சாமி” எனப்படுகின்ற அந்த புகைப்படத்தைப் போட்டு, “வாவர் ஒரு சரித்திர மனிதன் என்றால், அவன் ஏன் மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட வேண்டும்?”, என்று ஒரு படம் போட்டு கேட்டதற்கு, சில அறிவுஜீவுகளுக்கு[2] கோபம் வந்துவிட்டது. “சமூக நல்லிணக்கத்திற்கு, அது உதவுவதால், அதனை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை”, என்பதுதான், எதிராக செய்த வாதத்தின் சுருக்கம்.  செக்யூலரிஸ மாயையில், இக்காலத்தவர் கண்டுண்டு கிடப்பதால், உண்மையான இந்து-முஸ்லிம் ஒற்றுமை எப்படி ஏற்படும் என்பது பற்றி சாதாரண இந்துக்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கு, சமூக நல்லிணக்கத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. சரித்திர ஆதாரம் என்ன இருக்கிறது என்பது தான் கேள்வி. வெறும் பக்தியை வைத்துக் கொண்டே இந்துக்கள் காலத்தைத் தள்ளிவிட முடியாது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இருந்துவிட முடியாது. கிருத்துவர்களைப் போல “மதங்களுக்கிடையே உரையாடல்” போன்றவற்றிலும் இந்துக்கள் திறமைசாலிகள் அல்லர். ஏனெனில், அவர்கள், தங்களது மதத்தினைப் பற்றியே சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டிருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லை, தங்களது மதகொள்கைகளில் பிடிவாதமாக இருப்பர். இது வாவர் மற்றும் வாவர் மசூதி-தர்கா விசயங்களில் வெளிப்படுகிறது.

வாவர் ஒரு சரித்திர மனிதன் என்றால், அவன் ஏன் மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட வேண்டும்

முஸ்லிம்களின் வாவர் ஆதரவும், எதிர்ப்பும்: இது மசூதியா-தர்காவா என்று முஸ்லிம்களே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு, ஐயப்பனை தூஷிக்கும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்[3], சூபித்துவத்தை வைத்துக் கொண்டு ஆதரிக்கும் முசல்மான்களும் உள்ளார்கள்[4]. முன்னதில், கக்கப்படும் தூஷணம் திகவின் துவேசத்தையும் மிஞ்சுகிறது, எடுத்துக் காட்டுவதாக இருந்தால், திகவின் இந்து-விரோத நாத்திகத்தை அதிகமாகவே எடுத்தாளப்பட்டுள்ளது. பின்னதில், சூபித்துவத்தை வைத்துக் கொண்டு, வாவர் தான் ஐயப்பனுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார் என்ற ரீதியில் வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், இங்கு முஸ்லிம்கள் தங்களது அந்தஸ்தை, அடிப்படைவாதத்தை மற்றும் இறையியல் கொள்கையினை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதனை, அவர்களது தூஷிப்பிலும், சூபி-ஆதரவிலும் காணலாம்.  அதிலும் சுன்னி முகமதியர் சூபித்துவத்தையும் வெறுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். மாறாக, இந்துக்கள் இத்தகைய உண்மைகளை அறியாது, அகங்காரத்துடனே செயல்படுவதால், எல்லாவிதங்களிலும் பிரிந்து கிடக்கிறார்கள். இந்துக்கள் என்று பறைச்சாற்றிக் கொண்டே, தங்களது நிலைக்கு பலவீனத்தை உண்டாக்குகிறார்கள், முறைக்கு களங்கத்தை விளைவிக்கிறார்கள்[5].

வாவர் வேடமிட்டு, ஐயப்பன் கோவில் மாதிரி முன்பு நிற்கும் ஒரு நபர்

வாவர், வாபர், பாபர் யாரிது?: வாவர் மசூதி எருமேலியில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் உள்ளது. வாவர், வாவ்-விண்டவர் = வாவு – விண்டவர் = சந்திரனைப் பிளந்தவர் என்ற பொருள் படும் எனப்படுகிறது, என்ற விகிபிடியாவின் விளக்கம்[6]. இவ்விளக்கம் இஸ்லாமிய தாக்கத்தில் உள்ளது. மொஹம்மது நபி, ஒருமுறை நிலாவை நோக்கி கையைக் காட்டியபோது, நிலா உடைந்ததாம்/ பிளவுபட்டதாம்[7]. ஆக, அந்த கதையினை வைத்துக் கொண்டு, இந்த வாவருக்கு “சந்திரனைப் பிளந்தவர்” என்ற அந்தஸ்த்தைக் கொடுக்கிறார்கள் போலும்! அதாவது மொஹம்மது நபி போன்றவர் என்று சொல்ல வருகிறார்கள் போலும். இதுவரையிலும் இந்து விகிபீடியாவின் விளக்கத்தை அவர்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இணை வைக்கக் கூடாது, என்று சுன்னிமார்கள் கிளம்பிவிடுவார்களே? ஆகவே, கன்னிமார்கள் இக்கதையை ஏற்றுக் கொண்டாலும், சுன்னிமார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் வாவர் ஸ்வாமிக்கு சபரிமலையிலும் ஒரு கோவில் உள்ளது. ஐயப்பன் வழிபாட்டில், சபரிமலை யாத்திரிலையில், இது ஒரு அங்கம் வகிப்பதால், இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது என்று விகிபீடியா தொடர்கிறது. வாவர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் பலவிதக் கட்டுக்கதைகள் தாம். அவற்றைப் பற்றியெல்லாம் படித்துப் பார்த்தால், குறிப்பாக ஒரு நபரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] மொஹம்மது நபியின் காலம் (c. 570 – 632 CE ) என்பதால், அதற்குப் பிறகு 712 வாக்கில் சிந்து பகுதிக்கு அரேபியர் படையெடுத்து, 12ம் நூற்றாண்டுகளில் தான் வடமேற்குப் பகுதிகள் வழியாக முகமதியர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அரேபியர்களுக்கும் முகமதியர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. 12ம் நூற்றாண்டுகள் வரையில் அரேபியர்களில் முகமதியர் அல்லாதர்கள் நிறைய பேர் இருந்தனர். பிறகு, அவர்கள் முகமதியர்கள் ஆகினர்.

[2] இதில் “இந்துத்துவவாதிகள்”, “மோடி முகமூடிகள்”, “செக்யூலரிஸவாதிகள்” முதலியோர் அடக்கம்! அதாவது, அவர்களில் சிலரின் அடையாளங்கள் தெரியும், சிலரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் முஸ்லிம்களாகக் கூட இருக்கலாம்.

[3]https://islamicparadise.wordpress.com/2010/05/15/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/

[4] http://www.vkalathur.in/2014/11/blog-post_662.html

சபரிமலைக்கு போகும் வழியில் எருமேலியில் உள்ள ” வாவர் அவுலியாவின் ” பெயரில் அமைந்துள்ள பள்ளிவாசல் இது . வாவரை கொள்ளைக்காரன் என்று ” அவர்கள் ” சொல்லி வைத்து ஐயப்பனை உயர்வாக்கி வைத்தார்கள். ” என்னைக் காண்பதற்கு முன்னால் வாவரைக் கண்டுவிட்டுத்தான் வரணும் ” என்று ஐயப்பனே சொல்லி விட்டதால் வாவரை தரிசித்துவிட்டுத்தான் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். இப்போது வாவர் பள்ளியையும் பெரிதாகக் கட்டி இருக்கிறார்கள். உண்மையில் … நான் அறிந்த வரலாறு… ஐயப்பனை ஒழித்துக்கட்ட அவனிடம் புலிப்பால் கொண்டுவரச் சொல்லி காட்டுக்கு அனுப்புகிறார்கள். சின்னைப்பிள்ளை ஐயப்பனால் புலிப்பால் கொண்டு வர முடியுமா? ஐயப்பன் காட்டுக்கு வருகிறார். அங்கே வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் அருளை நாடி அந்தக் காட்டுக்குள்ளே தனிமையில் இறையைத் தொழுது தனியே வாழ்ந்து வருகிறார் வாவர். அவரது வழி … இப்ராஹீம் பின் அத்ஹமின் வழி. சூபியாக்களின் வழி. அப்போதுதான் ஐயப்பன் அங்கே வருகிறார். யானைகளும் சிங்கமும் புலியும் நிறைந்து வாழும் அந்த கொடும் காட்டில் திகைத்து நிற்கிறார். வாவர் ஐயப்பனை பார்த்து விசயங்களை விளங்கிக் கொண்டு.. அவருக்கு உதவுகிறார். ஒரு புலியை அழைத்து , அதனிடம் பாலைப் பெற்று , அதை ஐயப்பனிடம் கொடுத்து அனுப்புகிறார். புலிப்பாலோடு அரண்மனைக்குச் சென்ற ஐயப்பனைப் பார்த்து எல்லோரும் திகைக்கிறார்கள். அவரது ஆற்றலை எண்ணி அஞ்சி அவருக்கு அரசராக முடி சூட்ட முன் வருகிறார்கள். ஆனால் வாவரால் கவரப்பட்ட ஐயப்பன் அரச பதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டு வாவரைத் தேடி காட்டுக்கே வந்து விடுகிறார். அதன் பிறகு ஆன்மீக பாடங்களை வாவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். கொடிய விலங்குகள் வாழும் கட்டில் ஒரு மனிதர் தனித்து வாழ முடியுமா? வாவர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தால் நாட்டில் சந்தோசமாக வாழ்வதை விட்டு விட்டு ஞானியாக காட்டில் வாழ்வாரா? இதையெல்லாம் மறைத்து விட்டு அவரை வில்லனைப்போல் சித்தரித்து விட்டார்கள். ஆனால் ஐயப்பன் வாவரை மதித்ததை மட்டும் மறக்காமல் சொல்கிறார்கள். வாவர் மற்ற முச்லிம்களைப்போல் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று சிறப்பாக வாழ்ந்து……ஒரு காலகட்டத்தில் இறை அன்பை நாடி காட்டுக்குள் வந்து தனித்து வாழ்ந்தவர். அவரது வழிவந்தவர்கள் இன்றும் “வாவர் குடும்பத்தினர்” என்று அழைக்கப்படுகிறார்கள்.

[5] இதை எழுதும் போதே, பெண்களை ஏன் சபரிமலைக் கோவிலுக்குள் அனுப்பக் கூடாது என்பதைப் பற்றி, சில பெண்கள் (இந்து பெயர்கள் கொண்ட) பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்!

[6] Vavar (pronounced Vaa-var= “vav-vindavar”) meaning vavu = “moon” vindavar= “who splits”, also known asVavaraswamihttps://en.wikipedia.org/wiki/Vavar

[7] https://en.wikipedia.org/wiki/Splitting_of_the_moon

Advertisements