Posts Tagged ‘பாண்டியன்’

வாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா?

திசெம்பர் 9, 2015

வாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா?

வாவர் பள்ளி சுற்றியிருக்கும் கடைகளில் அமோக வியாபாரம்

வாவர் எத்தனை வாவரடி?: வாய்வழியாக சமீபத்தில் 100-200 வருடங்களில் புழக்கத்தில் உள்ள கதைகளைத் திரட்டி ஆராயும் போது, “வாவர்” பற்றி காணப்படும் விவரங்கள் இவ்வாறு அறியப்படுகின்றன: இருக்கின்ற கதைகளில் காணப்படும் விவரங்களைத் தொகுத்து, பிரித்து வாவர்கள் யார் என்று பரிசீலிக்கப்படுகிறது:

  1. வாவர் என்பவர் ஒரு முஸ்லிம் பக்கிரி, சந்நியாசி – ஹஜரத் வாவர் பாபா – அரேபியாவிலிருந்து, இந்தியாவுக்கு மதம் பரப்பவந்தார்.
  1. தென்னிந்திய மேற்குக் கடற்கரையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் – வாவர் / வாபர் என்ற கடற்கொள்ளைக்காரன்.
  1. வாவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஐயப்பனுடன் சண்டையிட்டு, சமாதானம் செய்து கொண்டவன்.
  1. வாவர் என்ற பெயர் “பரமி” என்றதிலிருந்து வந்திருக்கலாம், ஏனெனில், பரமி என்ற வியாபாரிகள் இடைக்காலத்தில் அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வேணாடு பகுதியில், அப்பெயர் வாவர் மற்றும் பாபர் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, அந்த வியாபாரிகளில் ஒருவன் வாவர் ஆகியியிருக்கலாம்[1].
  1. வாவர் என்பவன் ஒரு பௌத்த மதத்தைச் சேந்ர்தவன், அவன் “துவாபரா” என்றழைக்கப்பட்டான். ஆக துவாபர் > தாபர் > வாவர் என்றாகியிருக்கிறது.
  1. வாவர் பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். திருமலைநாயக்கன் தாக்கியபோது, வாவர் குடும்பம் திருவாங்கூருக்கு இடம் பெயர்ந்தது. சிதறிய 1174 CE ல் பாண்டியர்கள் ஒன்று கூடினர். அப்பொழுது, பண்டல ராஜ்யம் உருவானது[2]. ஐயப்பன் 12 வருட காலங்கள் தான் பூமியில் இருந்தார் என்பதினால், 1162-1174 CE காலம் தான், ஐயப்பன் காலம் என்றாகிறது. அப்படியென்றால், வாவர் அப்பொழுது தான் இருதிருக்க வேண்டும்.
  1. இன்னொரு கதையின் படி, வாவர் தகரிட்டன் தோட்டம் அதாவது சிரியா அல்லது துருக்கியில் அல்லிக்குட்டி மற்றும் பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தவனாம். பிறக்கும் போதே கால்கள் வளைந்திருந்ததால், அவனுக்கு வாவர் என்ற பெயர் வந்ததாம். அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதினால், கப்பலேறி அலைந்தபோது, கேரளாவுக்கு வந்து சேர்ந்தானாம்[3].
  1. ஐயப்பனுடன் போரிட்டுத் தோற்ற ஒரு கொள்ளைக்காரன், முகமதியன். அந்த இளைஞனின் வீரம் கண்டு, ஐயப்பன் தனது கூட்டாளியாக வைத்துக் கொண்டாராம். மலைப்பகுதியில் நடந்த சண்டைகளில், வாவர் ஐயப்பனுக்கு உதவி அளித்திருக்கிறான். நாளடைவில், காடுத்தஸ்வாமி போல, இவனும் ஐயப்பனின் பக்தன் ஆனான்.
  1. ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14-15ம் நூற்றாண்டுகளில்  வாழ்ந்தவர் வாவர். இவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள். 

 

  1. வாவர் பிரம்மச்சாரி என்றும், திருமணமானவர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக இவ்விதமாக உள்ள வாவர்களிடமிருந்து ஐயப்பக்கால வாவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.

Ayyappa baktas entering Vavar mosque.5

சரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம்: கேரளாவைப் பற்றி சரித்திரம் எழுதியுள்ள எவரும் இத்தகைய நபரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக சரித்திரம், சரித்திர வரைவியல் எனும் போது, மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், கேரளவில் இருக்கும் எம். ஜி. எஸ். நாராயணன், ராஜன் குருக்கள், கேசவன் வேலுதட் முதலியோர் தமது கருத்துகளை வெளியிடலாம். அந்த பாபருக்கு குதித்தவர்கள், இந்த பாபருக்கு மௌனமாகத்தான் இருக்கிறார்கள். இவற்றில் எந்த கதைக்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை, மற்றும் அத்தகைய நபர் வாழ்ந்ததாகவும் இல்லை. இப்படி இக்கதைகளில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லாமல், இருக்கின்ற மாயையை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.  போதாகுறைக்கு, பண்டள தேசத்து அரசனை, வாவருக்கு ஒரு மசூதியைக் கட்டச் சொன்னதாக, ஐயப்பன் சொன்னார் என்று இன்னொரு கதையும் உள்ளது.  பண்டலம் அரசு மதுரையிலிருந்து வந்த பாண்டிய அரசர்களால் 903 CE வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது[4]. 12ம் நூற்றாண்டு வாக்கில் கேரளாவுக்கு வந்து தங்கினார்கள். ஆகவே, சரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை அதற்குப் பிறகு 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம், என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு உத்தேசங்களை / யேஷ்சங்களை வெளியிட்டாலும், அதற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது, கட்டுக்கதைகளின் தன்மையைக் காட்டுகிறது.

ErumeliVavarSwamyDarga

வாவருக்கு மூன்று இடங்களில் மசூதி / தர்கா: வாரருக்கு மூன்று இடங்களில் மசூதி, தர்கா, சமாதி அல்லது நினைவிடம் உள்ளதாகத் தெரிகிறது[5]:

  1. எருமேலியில் உள்ள வாவர் மசூதி அல்லது தர்கா.
  2. சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி.
  3. எலவள்ளியில் உள்ள செலும்குன்னம் க்ஷேத்ரம் (திரிசூர் மாவட்டம்).

ஆக, இப்படி ஒரே ஆளுக்கு மூன்று இடங்களில் சமாதி உள்ளது என்பது, அந்த கட்டுக்கதையை வளர்ப்பதற்காகத்தான் என்று தெரிகிறது. ஒரு ஆளுக்கு மூன்று உடல்கள் இருக்க முடியாது. மேலும் வாவர் எப்பொழுது, எங்கு, எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லையாம். இந்த வாவர் சமாதி, தர்கா எனும் இடத்தில் வாவரின் உடலோ, அவரது எலும்புகளோ புதைத்தாகவோ, இருப்பதாகவோ செய்தி இல்லை. அதாவது, உண்மையாகவே ஆளிருந்து இறந்தால் தானே, எலும்பு, எலும்புக்கூடு என்றெல்லாம் கிடைக்கும்! ஐயப்பனுக்கு தோழர், ஐயப்பனின் பாதுகாவலன் என்றெல்லாம் விவரிக்கப்பட்டாலும், முஸ்லிம் அடையாளங்களை மறக்காமல் சேர்க்கிறார்கள். இருப்பினும், இந்த முஸ்லிமிடம் அனுமதி பெற்றுதான், சபரிமலை மீது ஏறவேண்டும் என்ற நம்பிக்கை-சரத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்[6]. எதிரே சாஸ்தா கோவில் உள்ளது, அங்கு அனுமதி பெற்று செல்லலாம் என்று ஏன் சேர்த்து இருக்கக் கூடாது?

© வேதபிரகாஷ்

09-12-2015

Vavar temple-1

[1] Some say that the name Vavar evolved from the Barami name babar. As you may recall bahrami traders were active in the ocean trade. This name came to be pronounced in the Venad region as Vavar.

http://maddy06.blogspot.in/2008/12/legend-of-vavar.html

Yet another claim is that this Vavar is said to have been a Buddhist saint called Dwapara, which became Dawapr – Babar.

http://maddy06.blogspot.in/2008/12/legend-of-vavar.html

[2] According to the Travancore State Manual, the Rajas of Pandalam ” were always friendly to the Kings of Travancore.” By the time, all members of the family reached Pandalam and a full-fledged kingdom was established, it was 370 ME (1194AD).

http://www.ayyappa.com/RoyalFamilyOfPandalam.htm

[3] http://maddy06.blogspot.in/2008/12/legend-of-vavar.html

[4] http://www.ayyappa.com/RoyalFamilyOfPandalam.htm

[5]  Eliza F. Kent and Tazim R. Kassam (Eds), Lines in water – Religious Boundaries in South Asia, Syracuse University Press, New York, 2013. See, Chapter.3, Vavar Swami: A Hindu-Muslim Saint of Kerala, by Dominique-Sila Khan, pp.78-100.

[6] Dominique-Sila Khan, Vavar Swami: A Hindu-Muslim Saint of Kerala,  Chapter.3, p.85.

Advertisements

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (3)

மே 8, 2015

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை“தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (3)

எச்சில் இலையில் உருளும் மக்கள்-vituthalai

எச்சில் இலையில் உருளும் மக்கள்-vituthalai

வீரமணியின் விடுதலையின் திரிக்கப்பட்ட செய்தி விமர்சனம்[1]: விடுதலையில் “வீரமணி பொய்களையும் சேர்த்து இவ்விதமாக செய்தியை வெளியிட்டார்[2]. வேண்டுதலுக்காக பிறர் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது உருளும் அநாகரிகமான காட்டு விலங்காண்டித் தனத்துக்கு மதுரை நீதிமன்றம் தடைவிதித்ததுகரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் உள்ள சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் சதாசிவ பிமேந்திரா[3] என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம்[4]. அவர் இங்குள்ள பார்ப்பனர் வீட்டில் சாப்பிட்டு விட்டுச் சென்றாராம் அன்றுமுதல் இங்குள்ள கோவிலில் அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலையில் ஊர்க்காரர்கள் உருள வேண்டும் என்ற ஒரு முட்டாள் தனமான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. இதனை ஆரம்பத்தில் சிலர் மட்டுமே செய்துவந்த இந்த அசிங்கத்தனமான செயல் பிறகு பலவித பொய்க் கதைகளுடன் அந்த ஊர்க்காரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்குப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பத்திரிகை இணைப்பில் வரும் ஆன்மீக இதழில் இந்த எச்சில் இலை உருளும் விழாவில் கலந்துகொண்டால் அய்ஸ்வர்யம் (செல்வம்) பெருகும் என்று புளுகித்தள்ள விரைவிலேயே இந்த விழா முக்கியமாக கரூர் திருச்சி போன்ற ஊர்களில் பிரபலமானது.  ”

Madey Snana- at Kukke gets Karnataka HC nod

Madey Snana- at Kukke gets Karnataka HC nod

தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர் என்று புளுகிய விடுதலை: விடுதலை தொடர்கிறது, “100 ஆண்டுகளாக தொடந்து நடந்து வந்த இந்த விழா இந்த ஆண்டு 101- ஆவது விழாவாக விளம்பரம் செய்யப்பட்டு உள்ளூர் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என விழாக்குழுவினர் கூறியிருந்தனர். இந்த மனிதத்தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப் படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி. தலித்பாண்டியன் என்பவர் மதுரை நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மணிக் குமார், வி.எம்.வேலுமணி எச்சில் இலையில் உருளும் விழாவிற்கு உடனடியாக தடைவிதித்தனர்.  எப்போதும் மதிய உணவிற்குபிறகு நடை பெறும் இந்த விழா நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர். தாலி அறுப்பு விழாவிற்கு தடை விதிப்பு முன்னமே தெரிந்ததால், முன்னமே நடத்தியதை வைத்து வீரமணி எழுதியிருப்ப்து தெரிகிறது. இந்த நீதிமன்றத் தடை குறித்த செய்தி முடியாது என்று கூறி தடைசெய்தது இந்த செய்தி விடுதலை நாளிதழில் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.”

நெரூர் - 2015 - புதியவர்- எல்லோரும்

நெரூர் – 2015 – புதியவர்- எல்லோரும்

தலித்போர்வையில் இந்துக்களைப் பிரிக்கும் முயற்சி: நெரூரில் வருடாவருடம், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் நினைவு நாள் கொண்டாடப்படும் தேதியில், தெருவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சாப்பாடுப் போடப்படுகிறது. இதில் எல்லா சமுதாய மக்களும் கலந்து கொண்டு உணவு உண்டு வருகிறார்கள். உணவு உண்ட பிறகு, வேண்டிக் கொண்டவர்கள், சாப்பிட்டப் பின் உள்ள அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறுதான் 28-04-2015 அன்று நெரூரில் வழக்கமாக நடந்து முடிந்தது. ஆனால், போலீஸார் அங்கு வந்திருந்தது, சிலரின் கவனத்தில் பட்டது. விசாரித்தபோது, யாரோ அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கத்தை / சடங்கை தடுக்க நீதி மன்றத்தில் தடை விதிக்க மனுதாக்குதல் செய்துள்ளதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று பாதுகாப்பிற்கு வந்துள்ளதாக அறிவித்தனர். பிறகு தான், சில நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் படி, தலித் பாண்டியன் என்பவர், பிராமணர் சாப்பிட்ட இலைகளில் பிராமணர்-அல்லாதவர் இலைகளில் உருள வைப்பது / அங்கப்பிரக்ஷணம் செய்ய வைப்பது நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் ஏனெனில், அதில் இலைகளில் மிச்சம் வைத்த எச்சில் சாதத்தை உண்ணவைக்கிறார்கள் என்று மனுவில் அறிவித்திருந்ததால், தடை விதிக்கப்பட்டது. ஆனால், உண்மைக்குப் புறம்பாக, அத்தகைய வாதத்தை மனுவில் இருந்தது மற்றும் விவரங்கள் சரிபார்க்காமல் தடைவிதித்திருப்பது தெரிகிறது. இனி அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

நெரூர் - 2015 - மூன்று வரிசை பந்தி - கூட்டம்  வித்தியாசம் இல்லை- 28-04-2015

நெரூர் – 2015 – மூன்று வரிசை பந்தி – கூட்டம் வித்தியாசம் இல்லை- 28-04-2015

© வேதபிரகாஷ்

08-05-2015

[1] http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html

[2] விடுதலை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!எச்சில் இலையில் உருளும் மக்கள்தடைவிதித்தது மதுரை நீதிமன்றம், புதன், 29 ஏப்ரல் 2015 15:38; Read more: http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html#ixzz3ZV63S2sK,

[3] கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் என்பது பொய்யானதாகும். சிவராமகிருஷ்ணனன் என்ற பெயரைக் கொண்டவர் தெலுங்கு பிராமணர் ஆவர்.

[4] சதாசிவ பிமேந்திரா என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம். என்று குறிப்பிடுவதிலிருந்து, எந்த அளவிற்கு துவேசம் வெளிப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இதே முறையில் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்த நாத்திகர்கள் குறிப்பிடாததைக் கவனிக்க வேண்டும்.