Posts Tagged ‘நாத்திகம்’
ஓகஸ்ட் 1, 2020
கோவில்கள்–அவற்றின் நிலை, கொள்ளை–சிலைகடத்தல்: அந்நிலைகளில் அர்ச்சகர் வேலை–பெரியாருக்கு மாலை, வேலை கேட்கும் உரிமை–இந்துமதத்தின் நிலை!

2006-2015 – அரசியலாக்கப் பட்ட அர்ச்சகர் பயிற்சி, நியமனம் முதலியன: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது[1]. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன[2]. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது[3]. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை[4]. திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத கட்சிகள், அமைப்புகள் முதலியவை, இப்பிரச்சினையில் நுழைந்து, அரசியலாக்கின. கம்யூனிஸ, முஸ்லிம், கிருத்துவ அமைப்புகளும் இதில் மூக்கை நுழைத்துக் குழப்பின. போதாகுறைக்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், பெரியார் சிலைக்கு மாலை போடுதல் போன்ற காரியங்களையும் செய்தனர்.

ஜூலை 2018ல் முதல் அர்ச்சகர் நியமனம்: 2018ல் இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் -மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்[5]. அழகர்கோவிலின் உப-கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது[6]. அதாவது, எந்த மந்திரங்கள், மொழி எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் இத்தகைய நடைமுறை பிரச்சினைகள் எழும் என்று தெரிகிறது. பயிற்சி எனும் போது, படிப்பதால் மட்டும் எல்லா கிரியைகள், முறைகள் எல்லாம் அத்துப்படியாக வந்துவிடுமா என்று தெரியவில்லை. மேலும் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சினை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. சிவாச்சாரியார்கள் எல்லொரும் பிராமணர்களா என்று சொல்ல முடியாது[7]. ஆகவே, இவ்விசயங்களில் ஊடகங்கள் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது[8].

ஜூலை 2020ல் இரண்டாவது அர்ச்சகர் நியமனம்: இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்[9]. இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது[10]. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன[11]. “தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்”, என்ற தலைப்பில் செய்திகள்[12]. உண்மையில் அவ்வாறில்லை. ஏற்கெனவே பல கோவில்களில் பிராமணர் அல்லாதவர் பூஜாரியாக இருந்து வருகின்றனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய நியமனங்கள் நடப்பது போலிருக்கிறது. கருணாநிதியே, இப்பிரச்சினையை தேர்தலுக்காக ஆரம்பித்தார். 2018, 2020 ஜூலை-ஆகஸ்ட் தேர்தல் காலங்களுக்கு நெருங்கியுள்ளதை கவனிக்கலாம்.



அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்: இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது: “பயிற்சி பெற்ற மாணவர் தியாகராஜன் உரிய கல்வித் தகுதி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்ற இளைஞருக்குப் பணி வழங்கப்பட்டது. இப்படி இதுவரையில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தமே 2 பேருக்குத்தான் பணி கிடைத்திருக்கிறது. இவர்களைப் போன்றே திறன்படைத்த மற்ற மாணவர்களுக்கு இதுவரையில் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மயிலை கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பணி நியமன முறை ரகசியமாகவே இருக்கிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செல்லாத இடமாக நம்முடைய ஆகமக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தில் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதையும் மீறிக் கோயில் கருவறையில் நுழைவதற்குத் தடை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட, பிராமணர் அல்லாத இளைஞர்களைப் பணியமர்த்த அரசு தயங்குகிறது”.
இது வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை: “பயிற்சி முடித்த 206 பேரில் வெறும் 2 பேரை மட்டும், அய்யப்பன், பிள்ளையார் போன்ற சிறு கோயில்களுக்கு அர்ச்சகர்களாக அரசு நியமித்திருக்கிறது. இது வெறுமனே வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இது அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள, குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை. எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும் அரசு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர். இத்தகைய பேச்சு, தோரணை எல்லாம், ஏதோ, இவர்கள் எல்லோரும், இந்துமதத்திற்கு தொண்டு செய்ததது போலவும், கோவில்களைக் காத்தது போலவும், கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகளைத் தடுதத்து போலவும், இருக்கிறது. திராவிடத்துவ வாதிகள், அத்தனை அக்கரையுடன் செயல் பட்டிருந்தால், இத்தனை கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகள், வழக்குகள் முதலியவை ஏற்பட்டிருக்காதே? நாளைக்கு, நாத்திகன், இந்துவிரோதி, ஏன் இந்து-அல்லாதவன் பயிற்சி பெற்று, பரீட்சை பாஸாகி, சான்றிதழ் பெற்றால், வேலை என்று வந்துவிட முடியுமா? இப்பொழுது, பிஜேபியினால், இந்துத்துவ அரசியலுக்கும் திராவிடக் கட்சிகள் தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி மாதிரி, ஸ்டாலின் குங்குமம் வைத்துக் கொண்டால் கதை முடிந்தது. ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதையெல்லாம் செய்தவர் தான். இப்பொழுது மறைத்து விட்டார்கள். துர்காவை வைத்து பிரச்சாரமும் செய்யலாம்!
© வேதபிரகாஷ்
01-08-2020

[1] விகடன், பயிற்சி முடித்து 14 ஆண்டுகள்… 2 பேருக்கு மட்டுமே பணி! – கொந்தளிக்கும் அர்ச்சகர்கள் , செ.சல்மான் பாரிஸ், ஜெ.முருகன், என்.ஜி.மணிகண்டன், Published:Today at 8 AM; Updated:Today at 8 AM.
[2] https://www.vikatan.com/news/general-news/priest-course-completed-people-not-appointment-in-temple
[3] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், தமிழகத்தில் 2வது பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம் , By: WebDesk, Published: July 15, 2020, 7:30:10 PM
[4] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-second-non-brahmin-priest-appointed-at-hr-nc-temple-in-madurai-nagalamalai-pudukkottai-207480/
[5] தினத்தந்தி, தமிழகத்தில் முதல் முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்…, பதிவு : ஜூலை 31, 2018, 07:38 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31193853/1004951/First-NonBrahmin-Appointed-as-Priest-in-Tamil-Nadu.vpf
[7] தினமலர், பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், Added : ஜூலை 31, 2018 00:53.
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2071925
[9] தமிழ்.இந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு அர்ச்சகருக்குப் பணி நியமனம், கே.கே.மகேஷ், Published : 14 Jul 2020 19:21 pm, Updated : 14 Jul 2020 19:26 pm.
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/564441-everyone-can-become-priest.html
[11] NEWS18 TAMIL, தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், LAST UPDATED: JULY 15, 2020, 12:51 PM IST.
[12] https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-another-non-brahmin-appointed-as-priest-in-madurai-riz-316901.html

குறிச்சொற்கள்:அர்ச்சகர், அர்ச்சகர் வேலை, அறநிலையத் துறை, இந்து அறநிலையத் துறை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், நியமனம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட்
அதிமுக, அம்பேத்கர், அரசியல், அர்ச்சகர், அர்ச்சகர் பயிற்சி, அர்ச்சகர் வேலை, அர்ச்சனை, அறநிலையத் துறை, ஆகம விதி, இந்து அறநிலையத் துறை, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கருணாநிதி, திமுக, திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 31, 2020
1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

1960களிலிருந்து தலைவர்களைப் போற்றும் திராவிடத்துவ பக்தர்களின் நிலை: 1960களிலிருந்து, சுவரொட்டிகளுக்கே மாலை போடுவது, பூசூடுவது, துணி/துண்டு அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்றவை சாதாரணமான விசயங்களாக இருந்தது. குடித்து கலாட்டா செய்பவர்கள் அவ்வாறு செய்வர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தமாஷாகப் பார்ப்பர், ரசிப்பர், சென்றுவிடுவர். பூ விற்பவர்கள், விற்காமல் மீந்து போன, வாடிப்போன, கட்டியப் பூக்களை, வால்போஸ்டர்களுக்கு அணிவித்து செல்வர். பெரும் பாலும் ரிக்சாகாரர்களும் அவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதெல்லாம், படங்களுக்கு மாலை போடுவது, பூசூடுவது, சொரிவது என்றால், இறந்தவர்களுக்குத் தான் செய்வது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஈவேரா, அண்ணா என்றால் கடவுள் போன்றது தான். அந்த அளவுக்கு பக்தி, கும்பிடவும் செய்தார்கள். கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்ததும் உண்டு. அதனால், உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யாதே என்று கூட சொல்வது உண்டு. ஆனால் குடிகாரர்கள், ரிக்சாகாரர்களிடம் அந்த அறிவுரை செல்லாது. “டேய், சோமாறி, என் தலவனுக்கு போடுறேன், கஸ்மாலம், நீ யாரு என்ன கேட்க……..”, என்று, அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்! இப்பொழுது, 2020களில் சிலைக்களுக்கு அவ்வாறு மரியாதை செய்வதில், திராவிடத்துவ ரீதியில், எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை,

29-07-2020 – அண்ணாசிலைக்கு அவமதிப்பு செய்தது: “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தின் மீது நள்ளிரவில் யாரோ காவித் துணியைப் போட்டுச் சென்றுள்ளனர்[1]. மேலும், அருகே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தன[2]. மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்”, என்று எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்து விட்டன. ஆனால், யாரும் காரணம் என்ன என்று அலசிப் பார்க்கவில்லை. காவி என்றதும் குதிக்கின்றனர் என்பது தான் தெரிகிறது. அதாவது, இவர்களே, அந்நிறத்தைக் கண்டு திகைக்கின்றனர் அல்லது முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெரிகிறது. இதுவரை பார்த்ததில், குடித்தவன், மனநிலை சரியில்லாதவன் போன்றோர் தான் அவ்வாறு செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் திமுகக்காரனே செய்துள்ளான். இப்பொழுது கூட, பிரச்சினை செய்ய, வேண்டுமென்றே, அத்தகைய ஆட்களைத் தூண்டி விட்டு செய்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், உண்மையான இந்து, இந்துத்துவவாதி அவ்வாறு எல்லாம் செய்து இழிவு படுத்த மாட்டான்.

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது[4];-“…… சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[5].……மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்[6]. இப்படி அறிக்கை விடுவதற்கு என்றே தயாராக இருப்பது போல, அரசியல் தலைவர்கள் அதிரடியாக அறிக்கைகள் விட்டுள்ளனர்[7]. “சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனும்போது[8], அந்த அளவுக்கு என்னவாகி விட்டது என்று தெரியவில்லை. இந்துக்களை, இந்து கடவுளர்களை தினம்-தினம் திகவினர், திராவிடத்துவப் போர்வையில் பலர் சமூக ஊடகங்களில் செய்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. வீரமணி, “விடுதலையில்” செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது, கடந்த 70 ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அத்த்கைய குற்றங்கள், சட்டமீறல்கள் மறுமடி-மறுபடி நடந்து கொண்டிருக்கின்றன.

திமுக போராட்டம், போலீஸார் சமரசம்: தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது[9]. உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்[10]. சிசிடிவி மூலம் அவ்வாறு செய்தவர் யார் என்று கண்டறிந்தனர், விசாரித்ததில், அவர் ஒரு மனநோயாளி என்று தெரிய வந்தது[11]. கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்[12].

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இப்பொழுது, மனநிலை சரியில்லாதவர்கள், கிருக்குகள், பைத்தியங்கள் முதலிவர்களின் மீது என்ன கடும் நடவடிக்கை எடுக்க முடியும்? குண்டர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து, சிறைகளில் அடைப்பார்களா? செக்யூலரிஸத் தனமாக, ஒரு சித்தாந்தவாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால், மாற்று சித்தாந்தவாதி ஒருவனை கைது செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. “அடுத்தவர்களின் மனம் புண்படுவது,” என்றால், திராவிடத்துவவாதிகளுக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு எந்த ஆர்பாட்டம் எல்லாம்? திராவிட நாத்திகம், திராவிடத்துவ இந்துவிரோதத் தனம், செக்யூலரிஸ இந்து தூஷணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது.

கருப்பா, சிவப்பா, காவியா, என்ற அலர்ஜி ஏன் வந்தது?: இதுவரை 60-40 ஆண்டுகளாப் பார்க்கும் பொழுது, ஈவேரா-அண்ணா சிலைகளுக்கு அமோகமாக மாலைகள் போட்டு, மலர் தூவி, படங்களை அலங்கரித்து, பூஜை நடத்துவது போன்றே பெரிய-அரசியல்வாதிகள், பகுத்தறிவு பகலவர்கள், நத்திக சிரோமணிகள், திராவிடத்துவ வித்தகர்கள் செய்து வந்துள்ளனர். அம்மாலைகளில் லபலவித நிறங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன. அங்கு, “கருப்பு தான் எனக்குப் பிடித்த கலர்”, என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரஞ்சு / காவி நிற சாமந்தி பூமாலைகள் எல்லாம் போட்டு பூஜித்துள்ளனர். மக்களும் நேரிலும், டிவியிலும், இப்பொழுது மொபைல் போனிலும் நன்றாகவே பார்த்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ அடிபொடிகள், பெரியாரிஸ பக்தர்கள், அவரவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, என்ன கிடைக்கிறதோ, அவற்றை வைத்துக் கொண்டு, பக்தியுடன், சிரத்தையுடன், மாலையாகக் கட்டி, மாலை போடுகிறார்கள் போலும். இதில், இப்பொழுதுள்ள நான்காம்-ஐந்தாம் சந்ததியினர் கோபித்துக் கொளவது வேடிக்கையாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
29-07-2020

[1] தமிழ்.இந்து, அண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்; தலைவர்கள் கண்டனம் , Published : 30 Jul 2020 02:50 PM, Last Updated : 30 Jul 2020 02:51 PM.
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/567261-leaders-condemns-on-anna-staute-issue-5.html
[3] தினத்தந்தி, அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம், பதிவு: ஜூலை 30, 2020 15:03 PM.
[4] https://www.dailythanthi.com/News/State/2020/07/30150349/Deputy-Chief-Minister-O-Panneerselvam-condemned-the.vpf
[5] மாலை மலர், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை– ஓ.பன்னீர்செல்வம், பதிவு: ஜூலை 30, 2020 15:18 IST
[6] https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30151837/1747152/OPS-condemned-tying-of-saffron-flag-to-Anna-statue.vpf
[7] தினமணி, கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம், By DIN | Published on : 30th July 2020 04:38 PM |
[8] https://www.dinamani.com/tamilnadu/2020/jul/30/saffron-flag-on-anna-statue-in-kanyakumari-3443381.html
[9] தினத்தந்தி, உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு; அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு: தி.மு.க.வினர் போராட்டம், பதிவு: ஜூலை 31, 2020 01:48 AM
[10] https://www.dailythanthi.com/News/State/2020/07/31014814/Insult-by-wearing-broken-bulbs-Saffron-flag-hoisted.vpf
[11] தமிழ்.ஒன்.இந்தியா, கன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி– காவல்துறை, By Mathivanan Maran | Updated: Thursday, July 30, 2020, 16:50 [IST].
[12] https://tamil.oneindia.com/news/kanyakumari/anna-statue-dishonoured-with-saffron-flag-in-kanyakumari-392841.html
குறிச்சொற்கள்:அண்ணா, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், எம்ஜிஆர், கருணாநிதி, காவி, காவி நிறம், காவியுடை, திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார்
அர்ச்சனை, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், எம்ஜிஆர், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, காவி, காவி உடை, காவி கலர், காவி நிறம், காவியுடை, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, செக்யூலரிஸம், திமுக, திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், பெரியாருக்கு மாலை, பெரியார் சிலை, பெரியார் விக்கிரகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 5, 2020
இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா? [2]

ஸ்டாலின்–ராமதாஸ் அறிக்கைகள் வேடமா, போலியா, அரசியலா?: ஸ்டாலின் சொன்னது, “மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி – மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை – கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் – அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்[1]. பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், கடும் வார்த்தைகளால் மத்திய அரசை கண்டிக்க தவறவில்லை[2]. இவ்விருவரும் ஒரே மாதிரி அறிக்கை விடுத்துள்ளதை, சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளன[3]. இருப்பினும், பாமக இந்து விரோத கட்சியோ, நாத்திகக் கட்சியோ இல்லை[4]. மேலும், திராவிடத்தை ஒழிப்போம் என்று ராமதாஸ் குரல் கொடுத்துள்ளதை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, இவையெல்லாம் அரசியலுக்காக என்று தான் எடுத்துக் கொள்ளலாம்.

இந்துவிரோதி ஸ்டாலின் அறிக்கையைத் தொடர்ந்து இந்து–துவேஷி வீரமணியின் அறிக்கை: தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை (Hindu Religious Endowment Board Department) சார்ந்ததாகும். நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்[7]. கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்‘ ‘பூனை‘களாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம்[8]. அதனுடைய கடமை – பக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா? என்பதற்குத்தான்! மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினை‘ என்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது”.

இந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது. அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று [02-03-2020], தொல்பொருள்துறை கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழக கோவில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இருக்கிறது என்று மத்திய மந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையை பறிக்கும் விபரீத யோசனை. இதன்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வரும். இதனை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசர கடமையாகும்”.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!
இந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி தொடர்கிறது: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “கிஷிமி என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முத லியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில் களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும். நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம் – கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு! இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும்? என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்–நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம்!,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி, இந்த ஒப்பாரியில் துவேச வரிகளை நீக்கி, சிறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலையில் முழுமையாக உள்ளது.

இந்துவிரோத திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்: கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தான், பகுத்தறிவு என்ற பெயரில் பலவற்றை செய்துள்ளது. ஈவேரா, அண்ணா, கருணாநிதி…..என்று எல்லோருமே தங்களது இந்துவிரோதத்தை பரப்பி, கோவில்-எதிர்ப்பு, கடவுள் மறுப்பு கொள்கைகளை திணித்து, மக்களைக் கெடுத்து, கோவில்கள், கோவில் சொத்துகளை கொள்ளை அடித்து, சிலைகளை கடத்தி விற்க உதவியுள்ளார்கள். இன்று வரை கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி, வீரமணி மற்ற வகையறாக்கள் இந்து மதம், கடவுள், சடங்கு, நம்பிக்கைகள் முதலியவற்றைப் பற்றி ஆபாசமாக, அசிங்கமாக, நாகரிகமற்ற முறைகளில் பேசி வருகிறாற்கள். ஊடகங்களில் அவை ஆதாரமாக பதிவாகி உள்ளன. அந்நிலையில், இவர்கள் திடீரென்று தாங்கள் கோவில்கள் மீது அக்கரை உள்ளது போன்று காட்டிக் கொள்ள அறிக்கைகள் விடுப்பது, அரசியல் என்றே வெளிக் காட்டியுள்ளது. உண்மையில் அவர்களுக்கு, எந்த அக்கரையும் இல்லை.

- தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை பற்றி ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? இதுவரை சிதைத்தது தெரியாதா என்ன?
- துரோகம் என்றெல்லாம் பேசும் இந்த ஆளுக்கு, என்ன யோக்கியதை இருக்கிறது? கோவிலுக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமே இல்லையே?
- அமாவாசை-அப்துல் காதர் என்றால் கூட பரவில்லை, இந்த ஸ்டாலின் – கோவில் ஒட்டவே ஒட்டவில்லையே, கழகக் கண்மணிகளே?
- ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிள என்ற நன்னாளை பார்த்த அப்பன், வைத்த ஶ்ரீரங்க சந்தனத்தை அழித்த மகன், பிறகு என்ன வெங்காயம்?
- இதில் மாபெரும் இந்து விரோதி வீரமணி நுழைவது தான், அதை விடக் கொடுமை! ஏதாவது இருக்க வேண்டாமா? கொஞ்சம் கூட இல்லையே?
- நொண்டியின் 100 கிமீ ஓட்டம், கசாப்புக் காரனின் அஹிம்சை, விபச்சாரியின் கற்பு, சிலையுடைப்பு ஈவேரா, இவற்றைவிட அசிங்கமாக இருக்கிறதே?
- தாலியறுப்பு கேசுகள், அமங்கல மூஞ்சிகள், துவேஷ-விஷம் கக்கும் வாய்கள், குரூரமான மங்கள், இவைகளா கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது?
- தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றால், அந்த மக்கள் எல்லோரும் இந்துவிரோதிகளா?
- திராவிட கட்சிகளே, இது பிஜேபி எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா; இல்லை கோவில் ஆதரவா சனாதன ஆதரவா? வெளிப்படையாக சொல்வாயா?
- திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்ற பாமக இப்பொழுது கூட்டு சேர்வது, இந்துவிரோதமா, பிஜேபிஎதிர்ப்பா, கூட்டணி ஒத்திகையா?
- நாளைக்கு பீஜேபி, திமுகவுடன் கூட்டணி வைத்தால், எல்லா பிஜேபிகாரர்களும் தூக்கில் தொங்கவேண்டும், செய்வார்களா? செய்வார்களா? செய்வார்களா?
© வேதபிரகாஷ்
04-03-2020

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்–ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம், By Veerakumar, Updated: Tuesday, March 3, 2020, 19:57 [IST].
[2] https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-condemns-union-government-for-taking-control-of-tamilnadu-temples-378690.html
[3] ஏசியா.நெட்.நியூஸ், ஒரே புள்ளியில் இணைந்த மு.க.ஸ்டாலின்–ராமதாஸ்… மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு..!, By Vinoth Kumar..KumarTamil Nadu, First Published 4, Mar 2020, 12:20 PM IST …
[4] https://tamil.asianetnews.com/politics/mk-stalin-ramadoss-joining-the-same-point-q6npov
[5] தினத்தந்தி, தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? – மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம், பதிவு: மார்ச் 04, 2020 02:15 AM
[6] https://www.dailythanthi.com/News/State/2020/03/04014956/Trying-to-take-control-of-temples-in-Tamil-Nadu–K.vpf
[7] விடுதலை, தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா, செவ்வாய், 03 மார்ச் 2020 14:38
[8] http://www.viduthalai.in/headline/196556-2020-03-03-09-29-14.html
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கருணாநிதி, திராவிடம், துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திகம், மு.க.ஸ்டாலின், ஸ்டாலின்
ஆத்திகம், ஆன்மீகம்., ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சமஸ்கிருதம், துர்கா, துர்கா ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 6, 2019
சுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து–தூஷணம்!

அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா... [1]: சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகி சிவம் அத்தி வரதரின் திடீர் பிரபலம் குறித்துப் பேசியபோது, “இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத ‘பவர்’ 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்… இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா… இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள்.நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார். இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.நீங்கள் இருக்கிறபடி இருந்தால் கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார்’என்று பேசினார்[2].

04-08-2019 அன்று மதுரையில் நடந்த கூட்டம், ஆர்பாட்டம்: இதையடுத்து மதுரை முத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. இதில் சொற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்றார். அங்கு செல்ல முயன்ற அவரை ஹிந்து கடவுளை அவமதித்து பேசியதாக கூறி ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுகு சிவத்தை அவர்கள் மிகவும் மட்டமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர்.அத்து மீறியவர்களில் பத்து பேரை தல்லாகுளம் போலீசார் போலீசார் கைது செய்தனர். ஆக, சுகியின் கூட்டம் இனிதே நடந்தது. ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்கள், கேட்டு ரசித்தவர்கள் தைப் பற்றிக் கவலைப்ப்டவில்லை போலும்! இல்லை, கொடுத்த காசுக்கு, சினிமா பார்ப்பது போல, சுகியின் பேச்சை ரசித்தனர் போலும்!

அத்தி வரதர் தரிசனம் பற்றி நக்கலடித்தது: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும்போது, அவரது பாணியில் அத்தி வரதர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், “அத்திவரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளை காண வேண்டும்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால்தான் என்ன,” என்று பேசியிருந்தார்[3]. இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது[4]. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் அத்தி வரதர் மீதோ இந்து மதத்தின் மீதோ எதிர் கருத்துக்களை வீச வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மக்கள் படும் கஷ்டங்களை பார்த்த பின்பு இந்த கருத்தை தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை கடவுளை வெளியில் தேடுவதை விட நமக்குள் தேட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். சுகியின் 05-08-2019 தேதியிட்ட கடிதம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பதை விட, அகம்பாவம், குசும்புத் தனம் மற்றும் தூண்டிவிடும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது!
எங்கள் நம்பிக்கையை இந்து மத உணர்வை வழிபாட்டுநெறியை இந்த வாடகை வியாபாரிகள் விமர்சிக்க வேண்டாம்[5]: இந்து தமிழர் கட்சி இரவிக்குமார் கூறியது, “இவர் உண்மையிலேயே தத்துவார்த்த பொருளை பேசக்கூடிய ஒரு நபராக இருந்தால் “கன்னி மரியாளுக்கு எப்படியடா இயேசு பிறந்தார்?என்று ஒரு கூட்டத்தில் இவர் கேட்பாரா? அப்படி அவர் கேட்பாரேயானால் அவருக்கானமேடை இந்து தமிழர் கட்சி அமைத்துக் கொடுக்கும். ( பிற மதத்தை விமர்சிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல கருத்து சுதந்திரம்) பிற மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க திராணியற்ற, இந்த பேடி இந்துமத தெய்வங்களை நிந்தனை செய்து இருக்கிறார். கங்கை போல் வரும் பேச்சில் கூவத்தை கலக்க வேண்டாம். படைப்புக் கடவுள் பிரம்மனே அடுத்த பிறவியில் சுகி.சிவத்தை ஊமையாக படைத்திடு! இதற்கு இந்த சுகிசிவம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் பேசுகின்ற பொழுது இந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்,”. இராம. இரவிக்குமார்[6] இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் 86430-81430, 96553-65696.
நாத்திகன் வைரமுத்துவை கேள்வி கேட்ட ஆத்திகன்[7]: ஆண்டாள் விசயத்தில், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- வைர முத்துவை சுகி சிவம் கேட்ட 11 கேள்விகள்! அவற்றை இங்கே படிக்கலாம். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன[8]:
- ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?
- நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர். அப்படி இருக்க, காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?
- அத்துமீறலில் இத்தனை அத்துமீறலா? நாத்திகர்களை திருப்திசெய்ய, ஆத்திகர்களை வலிக்கச்செய்வது விவேகமா கவிஞரே?
ஆனால், சுகி அதே குற்றத்தைத் தான் செய்திருப்பது புலனாகிறது. பிறகு இவர்களிடம் என்ன தகுதி இருக்கிறது, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு.
ஒரு தடவை ரெயிலில் பிரயாணம் செய்தபோது, யாரோ இருவர் எப்படி டீ.ஏ பில் போடும் போது, அதிகமாக பணம் பெற என்ன செய்ய வேண்டும் என்று பேசியதை ஒட்டுக் கேட்டு வந்தாராம்! அவர்கள் அவ்விசயத்தில் பி.எச்டி செய்த நிலையில் துணுக்கங்களை விவரித்தனராம்! சரி, போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா? இதயத்தின் மீது, கைவைத்து, மனசாட்சியுடன் கட்டுகிறேன் என்பாரா? தவறு, குற்றம் என்றால், யார் செய்தாகும் ஒன்றுதான்.

சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு: பக்தி இலக்கியங்கள், புராணக் கதைகளை அங்கும்-இங்குமாக, உதாரணம் காட்டி, ஏளனப் படுத்துவது, இவரது பழக்கமாக உள்ளது. பக்தி இலக்கியம், இடைக்காலத்தில், துலுக்கர், ஜைனர், பௌத்தர் மற்ற நாத்திகள் இவர்களை மறுத்து, மக்களிடம் சிரத்தை உண்டாக்குவதற்குத் தான் உருவாக்கப் பட்டவை. நாவிதன் தன் வேலையை செய்யாமல், விட்டல-விட்டல பாடினால், விட்டல் வந்து சிறைத்து விட்டு போவாவானா என்று கேட்டது, அகம்பாவமும், சரித்திர சூன்யமும் தான்! பெரிய அறிவிஜீவித்தனம் அல்ல. போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா?

- பேச்சு வியாபாரி / வியாபாரம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது, அப்படியென்றால், நுகர்வோர் விருப்ப-வெறுப்புகளும் வரும்.
- காசு, புகழ் , மேடை கிடைத்தால் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பேசுவேன் என்பது, பேச்சு தர்மம் கிடையாது.
- இந்துக்களின் முன்னால், அத்தி வரதரைப் பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்கலாம், அல்லாவை விமர்சித்து துலுக்கன்கள் முன்னால் பேச முடியுமா?
- புத்தன், ஏசு, மேரி பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்க முடியுமா? உதை தான் கிடைக்கும் என்று தெரியுமே?
- திராவிடத்துவ வாதிகள் அத்தகைய பேச்சுக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள், கேட்டுக் கொண்டே நாகரிகம், முதலியவற்றை மறந்தார்கள்!
- ராமசாமி நாயக்கர், அண்ணா, கருணாநிதி, போன்றோரும், அணுகுண்டு, குத்தூசி, முதலிய வகையறாக்களும் இலக்கணம் ஆனார்கள்!
- பட்டி மன்றம் வைத்து, வெட்டிக்கி பேசி, கொட்டமடித்து, அதனையே பொழுது போக்காக்ககினர். அதனால், பேச்சாளர்கள் உருவானார்கள்!
- பொருளைப் பற்றியோ, சரித்திர உண்மை, நியாயம்-தர்மம், ஒழுங்குமுறை முதலியவற்றைப் பற்றியோ கவலைப்படவில்லை.
- குத்தாட்ட குலுக்கல்களில் ஆடைப்பற்றி கவலை படாததது போல அடுக்கு மொழி பேசவேண்டும் என்றால், எல்லைகளையும் கடக்கலாம்!
- சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு, பயனற்ற பேச்சாயாகும்.
© வேதபிரகாஷ்
06-08-2019

[1] ஏசியா.நெட்.நியூஸ், ’காஞ்சிபுரம் அத்திவரதரை வைத்து பெரிய சூதாட்டமே நடக்கிறது’…சுகி சிவம் சுளீர்…., By Muthurama Lingam, Chennai, Tamil Nadu, India, First Published 5, Aug 2019, 9:21 AM IST; Last Updated 5, Aug 2019, 9:21 AM IST
[2] https://tamil.asianetnews.com/cinema/popular-sugi-sivam-speaks-against-the-lord-athivarathar-pvqw1g
[3] நக்கீரன், ‘அத்திவரதர் குறித்து விமர்சனம்‘ சுகிசிவம் விளக்கம்..!, Published on 06/08/2019 (17:26) | Edited on 06/08/2019 (17:37).
[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/suki-sivam-explain-athivarathar-issue
[5] magaram.in, “வாடகை வாய் வியாபாரி” சுகிசிவம் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!, August 4, 2019
[6] https://magaram.in/tamilnadu-government-should-be-take-action-to-suki-sivam/
[7] நக்கீரன், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!, Wednesday, 17 Jan, 3.27 am.
[8]https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/vairamuthuvin+varthaikalil+vanmam+kurooram+melliya+vanjchakam+suki+sivam+kattam-newsid-80048222
குறிச்சொற்கள்:ஆத்திகம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, சிவம், சுகி, சுகி சிவம், சுகிசிவம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக வாதம், நாத்திகம், பட்டி மன்றம், பேச்சு, வெட்டிப் பேச்சு
அல்லா, ஆத்திகம், ஆன்மீகம்., இடம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கருத்து, சிவம், சுகி, சுகி சிவம், சைவம், பட்டி மன்றம், பேச்சாளர், பேச்சு, வெட்டிப் பேச்சு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability
[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA
குறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [1]

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019
[2] https://www.viduthalai.in/page1/178638.html
[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html
[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814
[7] தினமலர், அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 27, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]

மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாதியும் சம்பந்திகள் ஆனது: ந.பூ. ராமஜெயம் “தி இந்து” நாளிதழ் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார். 1956லிருந்து அங்கு வேலை பார்த்தவர். 1975ல் இந்து யூனியனின் தலைவர் ஆனார். 1996-2001 காலத்தில் மைலாபூர் தொகுதியின் திமுக எம்.எல்,ஏவாக இருந்தார். செப்டம்பர் 2007ல் இறந்தபோது, என்.முரளி, ராமஜெயம் என்றுமே அரசியலை உள்ளே எடுத்து வந்ததில்லை என்றது வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், எப்படி “தி.இந்து” குடும்பமுன், கருணாநிதி குடும்பமும் சம்பந்திகள் ஆகி விட்டன என்று எல்லோருக்குமே தெரியும். கருணாநிதி, “தி.இந்து”வை, எகத்தாளமாக “மவுண்ரோடு மஹாவிஷ்ணு” என்று நக்கல்-கிண்டல் அடிப்பதுண்டு. ஆனால், “இந்து-ராமின்” மச்சினியை, தயாநிதி கட்டிக் கொண்டவுடன், நக்கல் குறைந்து விட்டது. போதாகுறைக்கு, கனிமொழிக்கு விவாக ரத்தினால் “மனவழுத்தம்’ உண்டான போது, ராம், இந்து “எடிடோரியலில்” உட்கார வைத்து அமைதி படுத்தினாராம். ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா [26-08-1994 அன்று திருமணம் நடந்தது], ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். கலாநிதியின் மனைவி காவேரியும் பிரரமணர்.. இப்படி பாப்பாத்திகளை கட்டிக் கொண்டு, அரை பாப்பான்களாகி விட்டோம் என்று கூட பெருமை பேசிக் கொள்ளலாம். ஒருவேளை, அந்த ஐயங்கார் தொடர்பினால் தான், ராமானுஜரை எடுத்துக் கோண்டு, இரட்டை வேடம் போட்டு, கருணாநிதி, ஒரே கல்லால், இரண்டு காய்களை அடித்தார் போலும்.

திக / ஈவேரா செய்த இந்துவிரோத அட்டூழியங்களை அண்ணா, கரு, ஸ்டாலின் யாரும் தடுக்கவில்லை: “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” மற்றும் “நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன்” அண்ணாதுரை சொன்னர் என்று பீழ்த்திக் கொண்டாலும், பிராமணர்களின் மீது நடந்த தாக்குதல்கள், பூணூல் அறுக்கப் பட்டது, குடுமி வைத்து தெருக்களில் நடந்தவர்களைப் பார்த்து ஆபாசமாக பேசியது [மாமா ஆத்துலே மாமி சௌக்கியமா?] இதையெல்லாம், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று பேசிய அதே அண்ணாதுரை தட்டிக் கேட்கவில்லை, முதல்வராக சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே அண்ணாவின் நாற்காலியைப் பறித்த தம்பி கருணாநிதியும் ஒன்றும் செய்யவில்லை. மாறாக, சேலத்தில், ஜனவரி 23 மற்றும் 24 1971 தேதிகளில் ராமர்-லக்ஷ்மணர்-சீதை படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். அதனை படம் போட்டு, எடுத்துக் காட்டிய “துக்ளக்” இதழை தடை செய்தனர், பிடுங்கி எரித்தழித்தனர். அரசு, அப்படம் போட்ட போஸ்டர்களையும் பறிமுதல் செய்தது. ஊர்வலத்தைத் தடுக்காமல், ஆப்ப்டம் போட்ட போஸ்டர்கள் மதநம்பிக்கையை பாதிக்கும் என்று அரசாணை மூலம் தடுத்து நடவடிக்கை எடுத்தது. திக, திக [ராமகிருஷ்ணன்], பெரியார் திராவிடர் கழகம் போன்ற கருப்புப் பரிவாரங்களின் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தைத் தடுக்கவிலை.மாறாக, “முரசொலி” மூலம் ஆதரிக்கப் பட்டு, முடுக்கிவிடப்பட்டது.

“இந்து திருடன்” என்ற கருணாநிதி: கருணாநிதியும் ராமரை, ராமாயணத்தை தூஷித்ததில் எந்த அளவிலும் குறையவில்லை. “இந்து திருடன்” என்று சொல்லி, அவதூறு செய்து, வழக்கு போட்டாலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவ்வழக்கை மூடிவிட்டது தெரிந்த விசயமே. பிறகு, ராமஜன்ம பூமி, ராமர் பாலம் விவகாரங்களிலும் அவரது அடாவடி, அயோக்கியத் தனமான, இந்துவிரோத பேச்சுகள் தெரிந்த விசயமே. இப்பொழுதும், ராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் சென்றுள்ளனர். பூணூலை அறுத்தவர்கள் தாலிகளை அறுக்கின்றனர். இதில் திருடு மற்றும் விழா நடத்துவது என்று இரண்டு வகை உள்ளது. பூணூலை இப்பொழுது அறுக்கவும் செய்து, பன்றிகளுக்கும் போட்டு விடுகின்றனர். அதாவது, “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்று திராவிட ஆட்சியாளர்கள் கொள்கைக் கடைபிடித்து வருவதால், அதே தூஷண குற்றங்கள் மறுபடி-மறுபடி செய்யப் படுகின்றன. குற்றவாளிக்கும் பயம் இல்லாமல் போய்விட்டது. எப்படி கொலைகாரர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுகிறாதோ, அதுபோல, இவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுவதால், அதே தூஷண குற்றங்கள் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப் படுகின்றன.

செக்யூலரிஸ நாட்டில், எல்லா மதங்களும் ஒரே மாதிரியாக நடத்தப் பட வேண்டும்: செக்யூலரிஸம் என்பது மதத்திற்கு எதிரானது என்றால், அத்தகைய செக்யூலரிஸம் எல்லா மதங்களுக்கும் எதிராக இருக்க வேண்டும். நாத்திகம் கடவுளை மறுக்கும் கொள்கை என்றால் எல்லா மத-கடவுளர்களையும் மறுக்க வேண்டும். நாத்திகத்தை மெய்ப்பிக்க கோவில் முன்னால், ஈவேரா சிலை வைப்பேன் என்றால், அதேபோல, சர்ச், மசூதி, குருத்வாரா என்று எல்லாவற்றின் முன்பாகவும் வைக்க வேண்டும். இப்படி பற்பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால், திராவிட கட்சிகள், கட்சி தலைவர்கள், சித்தாந்திகள், அவ்வாறு செய்யவில்லை. ஒருதலைப் பட்சமாக, இந்து விரோதிகளாகத் தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆகவே, வெறும் வார்த்தைகாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.

இந்துக்களை மட்டும் குறி வைப்பது செக்யூலரிஸம் அல்லது நாத்திகம் ஆகாது: எங்களைப் போன்ற ௬௦-௭௦ ஆட்களுக்கு விநாயகர் சிலையுடைத்து, ராமருக்கு செருப்பு மாலை போட்டது, தாலியறுத்தது, குல்லா போட்டு ஏகாதசி உண்ணா நோன்பை பழித்தது, துலுக்கன் கஞ்சியை நக்கிக் குடித்து அம்மனை பழித்தது, குங்குமத்தை ரத்தம் என்றது-துடைத்தழித்தது எல்லாமே இந்து விரோதம் தான். பூணூல் அறுத்தவன், குல்லாவை கழட்டி எரியவில்லை, கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போடவில்லை.உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு,திக-திமுக-பெரியாரிஸ இந்துவிரோதம், இந்துதூஷணம் -இந்துவேசம் வேறு.. மக்கள் அறிவார்கள்….திராவிடத்துவவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நாத்திக ஆரசியல்வாதிகள், கடவுள் மறுப்பு என்று இந்து கடவுளர்களைத் தான் மறுத்துள்ளனர், தோஷித்துள்ளனர். அதை மறக்கவோ- மறைக்கவோ முடியாது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதன் முதலாக பொதுக் குழுவில், இப்பிரச்சினை பேசப்பட்டது என்றால், தங்களது நிலை வெளிப்பட்டுவிட்டது. ஜனநாயக, தேர்தல் முறைப் போட்டிகளில் இந்துக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன, நசுக்கப் படுகின்ன்றன அன்று அறியப்படுகிறது. இதனால், கூட்டணி கணக்கில் காங்கிரஸ் போல, திமுகவும் இந்துத்துவ வேசத்தைப் போடலாம். தமிழக மக்கள் டேற்றுக் கொள்வார்களா என்று பார்க்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக, இம்முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது:

Karu temple – later removed
- திக, திமுக, விநாயகர் சிலையுடைத்தவன், ராமருக்கு செருப்பு மாலை போட்டவன், … எல்லோரும்இந்து விரோதிகள் தான், சந்தேகமே இல்லை!
- தாலி வேண்டாம் என்றவன், தாலியறுத்தவன், குங்குமத்தை ரத்தம் என்றவன், அழித்தவன் எல்லோருமே இந்து விரோதிகள் தாம்!
- குல்லா போட்டு ஏகாதசி உண்ணா நோன்பை பழித்தவன், துலுக்கன் கஞ்சியை நக்கிக் குடித்து அம்மனை பழித்தவன் எல்லோருமே இந்துவிரோதிகள் தான்.
- ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்றறிவித்து, நான் பிள்ளையாரை, தேங்காயை உடைக்கவும் மாட்டேன், என்றதும் இந்துவிரோதம் தான்.
- ஒன்றே கடவுள், ஒருவளே தேவதை என்று நீ ஏசுவை ஏசினாயா,கிருஸ்து-மேரி சிலைகளை உடைத்தாயா, சிலுவையை எந்த பகுத்தறிவும் அறுத்து மெய்பிக்கவில்லை
- அல்லாவைத் தவிர கடவுளும் இல்லை, மொஹம்மது தான் தூதன் என்று தினம்-தினம் கத்தும் துலுக்கனுக்குப் போட்டியாக எந்த திக-திமுக-காரனும் கூவவில்லை.
- ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்றால்,ஏசு, கிருஸ்து, மேரி, ஜேகோவா, அல்லா, அல்-லத்.., முதலியவை எங்கிருந்து வந்தன என்று கேட்கவில்லை.
- விநாயகரை உடைத்தேன், குளம் தூர் வாரினேன், சிலைகளை கொள்ளையடித்தேன், வேலை திருடினேன் என்பதெல்லாம்,இந்து விரோதம் இல்லையா?
- பூணூல் அறுத்த நீ, குல்லாவை கழட்டி எரிந்தாயா,கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போட்டாயா, பகுத்தறிவே, அண்ணாவே, தம்பியே? என்று கேள்விகள் கேட்டால் என்னாகும்? திருமூலர் பதில் சொல்வாரா?
- உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு, உன்னுடையது இந்துவிரோதமே, இந்துதூஷணமே-துவேசமே…
© வேதபிரகாஷ்
26-09-2018

குறிச்சொற்கள்:இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, கருணாநிதி, சினிமா, சுடாலின், திராவிட நாத்திகம், திராவிடன், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், சுடாலின், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திருடன், துர்கா, துவேசம், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறிவு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

“தி.இந்து” ஸ்டாலினிடம் எடுத்த பிரத்யேக பேட்டி[1] செப்டம்பர் 2018): இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2]. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்தார்[3]. வேறெந்த நாளிதழும் போடாத வேளையில், “தி.இந்து” மட்டும் போட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[4]. பி. கோலப்பன் என்பவர், அப்போது அவரிடம், “கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது”, அதாவது கேட்டாராம். இந்த கேள்வியே சொல்லி வைத்து கேட்டது போலத்தான் உள்ளது. அதற்கு முக ஸ்டாலின் அளித்ததாக, “தி.இந்து” செய்தி போட்டுள்ளது. “தி.இந்து” இதே செய்தியை, ஆங்கிலத்தில் இரண்டு முறை, இரண்டு இணைத்தள லிங்குகளில் வெளியிட்டுள்ளது[5]. அதே கோலப்பன் பெயர் தான் அதிலும் காணப்படுகிறது[6].

இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? ஸ்டாலினின் விரிவான பதில்: அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்: ”இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார். கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்”.

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார். இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது. கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை”.

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் பிரச்சாரம்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும். பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தூஷித்துக் கொண்டே இப்படி சொல்லிக் கொண்டால், இந்துக்கள் நம்புவார்களா?: 2015ல், கும்பகோணத்தில் கோவில் பூஜாரிகளுடன் சந்திப்பை வைத்துக் கொண்ட ஸ்டாலின் அதே “தி.இந்து”வுடன் பேசும் போதும், இதே போன்ற கருத்தை சொன்னது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திமுகவில் உள்ளவர் 90% இந்துக்கள். தனது குடும்பத்தினருக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது. எனது மனைவியும் கோவில்களுக்க்கு எல்லாம் சென்று வருகிறாள். அதன் குறுக்கே நான் நிற்பதில்லை. தனது பயணத்தில் முதலில் திருகோஷ்டியூர் கோவிலுக்கு சென்றாராம், ஏனெனில், அங்கு தான் ராமானுஜர் தனது குரு சொன்னதையும் கேட்காமல், கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தனக்குச் சொல்லிக் கொடுத்ததை உரக்க எல்லோருக்கும் தெரியும் படி சொன்னாராம்[7]. “நாங்கள் எல்லோரும் அண்ணாவைப் பின்பற்றுபவர்கள், அதன் படி திருமூலர் சொன்னபடி “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்” என்பதை ஏற்றவர்கள். எங்கள் தலைவர், ராமானுஜர் டெலி–சீரியலுக்கு டயலாக் எழுதினார். ஏனெனில், அவர் எல்லோரும் கோவிலில் நுழைவதற்ற்கு வழி வகுத்தார். தேர்தல் வருவதால் கோவில்களுக்கு செல்கிறேன் என்ற வாதத்தை மறுத்து, நான் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், முன்னர் கூட கோவில்களுக்கு சென்றுள்ளேன், எனக்கு பூர்ண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது” கூறிக் கொண்டார்[8]. மேலும் தொடர்ந்து சொன்னது[9], “கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்,” என்றார்[10].

ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன?: இப்படியெல்லாம் திடீரென்று செய்திகள் வரவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்க வேண்டியுள்ளது. 2019-தேர்தல் நேரத்தில் இவ்வாறு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்று தான், மக்கள் நினைப்பார்கள். நிச்சயமாக பொது மக்கள், திராவிட கட்சியினர் குறிப்பாக, திக-திமுக வகையறாக்களை இந்துக்களுக்கு சாதகமானவர்கள் என்று நினைக்கவே மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டாலினே நெற்றியில் வைத்த குங்குமத்தைத் துடைத்துப் போட்டது, மூன்று மாதங்களுல்லு முன்னர் ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்துக் கொண்டது போன்ற வேலைகளை ஸ்டாலின் செய்தது அனைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. அந்நிலையில், ஒருவேளை பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன், ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். வாஜ்பாயி காலத்தில் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. அத்தகைய கூட்டை 2019ல் வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கலாம். ஆனால், மக்கள் நம்புவார்களா? பிஜேபி இத்தகைய இந்துவிரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
15-09-2019

[1] தமிழ்.இந்து, இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி, பி.கோலப்பன், Published : 24 Sep 2018 15:32 IST; Updated : 24 Sep 2018 15:32 IST
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article25027406.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
[3] The Hindu, Stalin sees a bid to portray DMK as anti-God, anti-Hindu; terms it mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-interview/article25022253.ece
[5] The Hindu, Bid to portray DMK as anti-Hindu mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/bid-to-portray-dmk-as-anti-hindu-mischievous/article25025286.ece
[7] Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.
The Hindu, DMK – not anti-Hindu, B. Kolappan, October 17, 2015 00:00 IST; UPDATED: October 17, 2015 10:30 IST
[8] “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum Ontrey Kulam Oruvaney Devan (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said. Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the poorna kumbam .
https://www.thehindu.com/news/cities/chennai/dmk-is-not-antihindu-stalin/article7772219.ece
[9] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின், By Mayura Akilan Updated: Saturday, October 17, 2015, 13:20 [IST].
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-not-anti-hidhu-says-stalin-237922.html
குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துத்துவம், இந்துவிரோதி, கனிமொழி, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சிலை உடைத்தல், திராவிட நாத்திகம், துர்கா, நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், நாயக்கர், பெரியார், ராஜாத்தி, ஸ்டாலின்
அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1] அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஓகஸ்ட் 11, 2018
இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

பொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.

ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.

கேள்வி–பதில்கள் எழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.
பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?
அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.
அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
செக்ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.
இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?
இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.
இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?
கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?
சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.
ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?
இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது. சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,
- கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),
- கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),
- சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),
- நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது. இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன. அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.
வேதபிரகாஷ்
08-08-2018

[1] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம், Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).
DT.Next, HR and CE officials claim religious outfits backing IG Pon Manickavel, Published: Aug 07,201804:54 AM.
https://www.dtnext.in/News/TamilNadu/2018/08/07045432/1083250/HR-and-CE-officials-claim-religious-outfits-backing-.vpf
The Hindu, We are being targeted, allege HR&CE staff, STAFF REPORTER, CHENNAI, AUGUST 07, 2018 01:50 IST; UPDATED: AUGUST 07, 2018 01:50 IST
https://www.thehindu.com/news/national/tamil-nadu/we-are-being-targeted-allege-hrce-staff/article24618548.ece
[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.
[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/ig-ponmanikkavel-not-identify-the-black-sheep-the-department-endowment-employees/articlecontent-pf318885-326698.html
[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையரிடம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.
[5] http://tamil.eenaduindia.com/State/Central/Trichy/TrichyCity/2018/07/31192203/Murugan-temple-statue-Navapashan-issue-Investigation.vpf
[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.
[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=418088
குறிச்சொற்கள்:அரசியல், இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், ஐம்பொன், கவிதா, காதர் பாட்சா, கோவில் இடிப்பு, சிலை, சிலை திருட்டு, தங்கம், திராவிட நாத்திகம், திருமகள், நவபாஷாணம், நாத்திகம், பொன் மாணிக்கவேல், மாணிக்கவேல், முத்தையா, முத்தையா ஸ்தபதி, விக்கிரகம், ஸ்தபதி
ஆர்.எஸ்.எஸ், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கவிதா, குற்றம், கூட்டமைப்பு, சோமஸ்கந்தர், தனபால், திருமகள், துறை மோதல், நன்கொடை, நாத்திகம், பிணை, பெயில், மோசடி, ஶ்ரீதரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 9, 2015
வாவர், வாபர், பாபர் யாரிது – இஸ்லாமிய சுன்னிமார்கள் மற்றும் ஐயப்ப கன்னிமார்கள் சொல்வது என்ன?

ஐயப்ப பக்தர்களின் வாவர் மீதான பக்தி – நம்பிக்கை: 1980களில் எனது நண்பர்களில் பலர் ஐய்யப்பன் பக்திமார்களாக இருந்து, தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வருவார்கள். அவர்களது பூஜைகள், பஜனைகளில் கலந்து கொள்ளும் வழக்கம் உண்டு. அவர்களுடன் சேர்ந்து கொண்டு “சபரிமலை ஐயப்பன்” போன்ற திரைப்படங்களையும் பார்த்துள்ளேன். அப்பொழுது, “வாவர்சாமி” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அதைப்பற்றி விசாரித்தேன். வாவர்சாமி, ஒரு முஸ்லிம்சாமி, ஐயப்பனின் தளபதி, ஐயப்பன் போருக்குச் சென்றபோது, அவர்தான் உதவினார் என்றெல்லாம் சொல்வார்கள். மோஹினி அவதாரம் காலத்தில் ஐயப்பன் பிறந்தார் என்றால், அப்பொழுது இஸ்லாமே இல்லையே[1], பிறகு எப்படி முகமதியரான வாவர் ஐய்யப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும் என்ற கேட்டபோது, “என்ன, இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே?………………உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் சும்மா இருங்கள்….” என்று கோபத்துடன் கூட சொல்லியிருக்கிறார்கள். இதனால், அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அதிகமானது. ஆனால், ஒரு பெரியவர் மட்டும், இதெல்லாம் முன்னர் இல்லை, சமீபத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்றார்.

சமீபத்தில் ஆரம்பித்தது தான் “வாவர்” கதை, சம்பிரதாயம் முதலியன: அப்பொழுது தான், நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்ககளில் சமர்ப்பிக்க ஆரம்பித்தேன். அந்நிலையில், இதைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், சபரிமலைக்கு தவறாமல் சென்றுவருவார். அவரிடமும் இதைப்பற்றி கேட்டுப் பார்த்தேன். மற்றவர்களைப் போல தெரிந்த கதையை சொல்லி, “இவ்வளவுதான் தெரியும், வேண்டுமானால், இந்த வருடம் செல்லும்போது, மேலும் விவரங்களை விசாரித்து வருகிறேன்”, என்றார். சென்று திரும்பி வந்தபோது, “அதே கதையைத்தான் சொல்கிறார்கள், ஆனால், “அந்த மசூதியின் தொன்மை 200 வருடங்கள் தாம் இருக்கும், என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்”, என்றார். போட்டோ எல்லாம் எடுக்க முடியவில்லை என்றார். அதனால், இந்த சம்பிரதாயமும் பிறகு தான் தோன்றியிருக்க வேண்டும். மேலும் இது மென்மையான, உணர்ச்சிப்பூர்வமான, நம்பிக்கையின் மீது ஆதாரமான விசயம் என்பதினால் அதனை விட்டுவிட்டேன்.

இந்து–முஸ்லிம் ஒற்றுமை இத்தகைய சரித்திர ஆதாரமில்லாத விசயங்களால் உண்டாக்க முடியாது: சென்ற ஆண்டு 2014ல் பேஸ்புக்கில், திடீரென்று இதைப்பற்றிய விவாதம் வந்தது. அப்பொழுது, “வாவர்சாமி” எனப்படுகின்ற அந்த புகைப்படத்தைப் போட்டு, “வாவர் ஒரு சரித்திர மனிதன் என்றால், அவன் ஏன் மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட வேண்டும்?”, என்று ஒரு படம் போட்டு கேட்டதற்கு, சில அறிவுஜீவுகளுக்கு[2] கோபம் வந்துவிட்டது. “சமூக நல்லிணக்கத்திற்கு, அது உதவுவதால், அதனை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை”, என்பதுதான், எதிராக செய்த வாதத்தின் சுருக்கம். செக்யூலரிஸ மாயையில், இக்காலத்தவர் கண்டுண்டு கிடப்பதால், உண்மையான இந்து-முஸ்லிம் ஒற்றுமை எப்படி ஏற்படும் என்பது பற்றி சாதாரண இந்துக்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கு, சமூக நல்லிணக்கத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. சரித்திர ஆதாரம் என்ன இருக்கிறது என்பது தான் கேள்வி. வெறும் பக்தியை வைத்துக் கொண்டே இந்துக்கள் காலத்தைத் தள்ளிவிட முடியாது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இருந்துவிட முடியாது. கிருத்துவர்களைப் போல “மதங்களுக்கிடையே உரையாடல்” போன்றவற்றிலும் இந்துக்கள் திறமைசாலிகள் அல்லர். ஏனெனில், அவர்கள், தங்களது மதத்தினைப் பற்றியே சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டிருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லை, தங்களது மதகொள்கைகளில் பிடிவாதமாக இருப்பர். இது வாவர் மற்றும் வாவர் மசூதி-தர்கா விசயங்களில் வெளிப்படுகிறது.

முஸ்லிம்களின் வாவர் ஆதரவும், எதிர்ப்பும்: இது மசூதியா-தர்காவா என்று முஸ்லிம்களே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு, ஐயப்பனை தூஷிக்கும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்[3], சூபித்துவத்தை வைத்துக் கொண்டு ஆதரிக்கும் முசல்மான்களும் உள்ளார்கள்[4]. முன்னதில், கக்கப்படும் தூஷணம் திகவின் துவேசத்தையும் மிஞ்சுகிறது, எடுத்துக் காட்டுவதாக இருந்தால், திகவின் இந்து-விரோத நாத்திகத்தை அதிகமாகவே எடுத்தாளப்பட்டுள்ளது. பின்னதில், சூபித்துவத்தை வைத்துக் கொண்டு, வாவர் தான் ஐயப்பனுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார் என்ற ரீதியில் வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், இங்கு முஸ்லிம்கள் தங்களது அந்தஸ்தை, அடிப்படைவாதத்தை மற்றும் இறையியல் கொள்கையினை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதனை, அவர்களது தூஷிப்பிலும், சூபி-ஆதரவிலும் காணலாம். அதிலும் சுன்னி முகமதியர் சூபித்துவத்தையும் வெறுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். மாறாக, இந்துக்கள் இத்தகைய உண்மைகளை அறியாது, அகங்காரத்துடனே செயல்படுவதால், எல்லாவிதங்களிலும் பிரிந்து கிடக்கிறார்கள். இந்துக்கள் என்று பறைச்சாற்றிக் கொண்டே, தங்களது நிலைக்கு பலவீனத்தை உண்டாக்குகிறார்கள், முறைக்கு களங்கத்தை விளைவிக்கிறார்கள்[5].

வாவர், வாபர், பாபர் யாரிது?: வாவர் மசூதி எருமேலியில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் உள்ளது. வாவர், வாவ்-விண்டவர் = வாவு – விண்டவர் = சந்திரனைப் பிளந்தவர் என்ற பொருள் படும் எனப்படுகிறது, என்ற விகிபிடியாவின் விளக்கம்[6]. இவ்விளக்கம் இஸ்லாமிய தாக்கத்தில் உள்ளது. மொஹம்மது நபி, ஒருமுறை நிலாவை நோக்கி கையைக் காட்டியபோது, நிலா உடைந்ததாம்/ பிளவுபட்டதாம்[7]. ஆக, அந்த கதையினை வைத்துக் கொண்டு, இந்த வாவருக்கு “சந்திரனைப் பிளந்தவர்” என்ற அந்தஸ்த்தைக் கொடுக்கிறார்கள் போலும்! அதாவது மொஹம்மது நபி போன்றவர் என்று சொல்ல வருகிறார்கள் போலும். இதுவரையிலும் இந்து விகிபீடியாவின் விளக்கத்தை அவர்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இணை வைக்கக் கூடாது, என்று சுன்னிமார்கள் கிளம்பிவிடுவார்களே? ஆகவே, கன்னிமார்கள் இக்கதையை ஏற்றுக் கொண்டாலும், சுன்னிமார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் வாவர் ஸ்வாமிக்கு சபரிமலையிலும் ஒரு கோவில் உள்ளது. ஐயப்பன் வழிபாட்டில், சபரிமலை யாத்திரிலையில், இது ஒரு அங்கம் வகிப்பதால், இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது என்று விகிபீடியா தொடர்கிறது. வாவர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் பலவிதக் கட்டுக்கதைகள் தாம். அவற்றைப் பற்றியெல்லாம் படித்துப் பார்த்தால், குறிப்பாக ஒரு நபரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று தெரிகிறது.
© வேதபிரகாஷ்
09-12-2015
[1] மொஹம்மது நபியின் காலம் (c. 570 – 632 CE ) என்பதால், அதற்குப் பிறகு 712 வாக்கில் சிந்து பகுதிக்கு அரேபியர் படையெடுத்து, 12ம் நூற்றாண்டுகளில் தான் வடமேற்குப் பகுதிகள் வழியாக முகமதியர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அரேபியர்களுக்கும் முகமதியர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. 12ம் நூற்றாண்டுகள் வரையில் அரேபியர்களில் முகமதியர் அல்லாதர்கள் நிறைய பேர் இருந்தனர். பிறகு, அவர்கள் முகமதியர்கள் ஆகினர்.
[2] இதில் “இந்துத்துவவாதிகள்”, “மோடி முகமூடிகள்”, “செக்யூலரிஸவாதிகள்” முதலியோர் அடக்கம்! அதாவது, அவர்களில் சிலரின் அடையாளங்கள் தெரியும், சிலரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் முஸ்லிம்களாகக் கூட இருக்கலாம்.
[3]https://islamicparadise.wordpress.com/2010/05/15/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/
[4] http://www.vkalathur.in/2014/11/blog-post_662.html
சபரிமலைக்கு போகும் வழியில் எருமேலியில் உள்ள ” வாவர் அவுலியாவின் ” பெயரில் அமைந்துள்ள பள்ளிவாசல் இது . வாவரை கொள்ளைக்காரன் என்று ” அவர்கள் ” சொல்லி வைத்து ஐயப்பனை உயர்வாக்கி வைத்தார்கள். ” என்னைக் காண்பதற்கு முன்னால் வாவரைக் கண்டுவிட்டுத்தான் வரணும் ” என்று ஐயப்பனே சொல்லி விட்டதால் வாவரை தரிசித்துவிட்டுத்தான் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். இப்போது வாவர் பள்ளியையும் பெரிதாகக் கட்டி இருக்கிறார்கள். உண்மையில் … நான் அறிந்த வரலாறு… ஐயப்பனை ஒழித்துக்கட்ட அவனிடம் புலிப்பால் கொண்டுவரச் சொல்லி காட்டுக்கு அனுப்புகிறார்கள். சின்னைப்பிள்ளை ஐயப்பனால் புலிப்பால் கொண்டு வர முடியுமா? ஐயப்பன் காட்டுக்கு வருகிறார். அங்கே வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் அருளை நாடி அந்தக் காட்டுக்குள்ளே தனிமையில் இறையைத் தொழுது தனியே வாழ்ந்து வருகிறார் வாவர். அவரது வழி … இப்ராஹீம் பின் அத்ஹமின் வழி. சூபியாக்களின் வழி. அப்போதுதான் ஐயப்பன் அங்கே வருகிறார். யானைகளும் சிங்கமும் புலியும் நிறைந்து வாழும் அந்த கொடும் காட்டில் திகைத்து நிற்கிறார். வாவர் ஐயப்பனை பார்த்து விசயங்களை விளங்கிக் கொண்டு.. அவருக்கு உதவுகிறார். ஒரு புலியை அழைத்து , அதனிடம் பாலைப் பெற்று , அதை ஐயப்பனிடம் கொடுத்து அனுப்புகிறார். புலிப்பாலோடு அரண்மனைக்குச் சென்ற ஐயப்பனைப் பார்த்து எல்லோரும் திகைக்கிறார்கள். அவரது ஆற்றலை எண்ணி அஞ்சி அவருக்கு அரசராக முடி சூட்ட முன் வருகிறார்கள். ஆனால் வாவரால் கவரப்பட்ட ஐயப்பன் அரச பதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டு வாவரைத் தேடி காட்டுக்கே வந்து விடுகிறார். அதன் பிறகு ஆன்மீக பாடங்களை வாவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். கொடிய விலங்குகள் வாழும் கட்டில் ஒரு மனிதர் தனித்து வாழ முடியுமா? வாவர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தால் நாட்டில் சந்தோசமாக வாழ்வதை விட்டு விட்டு ஞானியாக காட்டில் வாழ்வாரா? இதையெல்லாம் மறைத்து விட்டு அவரை வில்லனைப்போல் சித்தரித்து விட்டார்கள். ஆனால் ஐயப்பன் வாவரை மதித்ததை மட்டும் மறக்காமல் சொல்கிறார்கள். வாவர் மற்ற முச்லிம்களைப்போல் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று சிறப்பாக வாழ்ந்து……ஒரு காலகட்டத்தில் இறை அன்பை நாடி காட்டுக்குள் வந்து தனித்து வாழ்ந்தவர். அவரது வழிவந்தவர்கள் இன்றும் “வாவர் குடும்பத்தினர்” என்று அழைக்கப்படுகிறார்கள்.
[5] இதை எழுதும் போதே, பெண்களை ஏன் சபரிமலைக் கோவிலுக்குள் அனுப்பக் கூடாது என்பதைப் பற்றி, சில பெண்கள் (இந்து பெயர்கள் கொண்ட) பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்!
[6] Vavar (pronounced Vaa-var= “vav-vindavar”) meaning vavu = “moon” vindavar= “who splits”, also known asVavaraswami. https://en.wikipedia.org/wiki/Vavar
[7] https://en.wikipedia.org/wiki/Splitting_of_the_moon
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், எரிமேலி, திராவிட நாத்திகம், நாத்திகம், பாபர், பேட்ட துள்ளல், பேட்டை துள்ளல், வாபர், வாவர், வாவர் பள்ளி, வாவர் மசூதி
அல்லா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, வாவர், வாவர் பள்ளி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »