அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [2]
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ்வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].
உபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019: சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது!,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங்பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்!
தென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல்! ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம்! உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார்! இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.
13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].
மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்பை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்பார்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.
வேதபிரகாஷ்
14-04-2019
[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவதி பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.
[2] http://www.thinaboomi.com/2019/04/12/107923.html
[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.
[4] https://tamil.news18.com/news/national/ec-issues-show-cause-notice-to-yogi-adityanath-and-mayawati-for-violating-model-code-of-conduct-va-139065.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .
[6] https://tamil.oneindia.com/news/thanjavur/elder-man-murdered-for-asking-vote-for-bjp-in-tanjore-346864.html
[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை! – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).
[8] மாலைமலர், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.
[9] https://www.maalaimalar.com/News/District/2019/04/14103609/1237084/BJP-support-campaign-social-activist-murder-police.vpf
[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).
[11] https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/killing-a-voter-wearing-modis-image-119041400025_1.html
[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்!, பகத்சிங், Published on 14/04/2019 (23:23) | Edited on 14/04/2019 (23:32)
[13] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanjavur-district-orathanadu