“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (2)
விஜய், ஜோசப் விஜய் ஆகி, “ஜீசஸ் சேவ்ஸ்” என்ற கடிதத்துடன் நன்றி சொன்னது: விசயம் முற்றி திசைமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பாராட்டு கடிதத்தை வெளியிட்டுள்ளதும் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. நடிகர் விஜய் வெளியிட்டு உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது[1]: “மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்க, ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய்”, என குறிப்பிட்டு உள்ளார்[2].
லெட்டர்பேடும், ஊடகங்களும்: ஜோசப் விஜய் லெட்டர்பேட் கடிதத் தாளை உபயோகித்ததை, தன் முழுப் பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே இந்த அறிக்கையைத் தந்துள்ளார்[3]என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. அந்த லெட்டர் பேடில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது[4] என்று ஏதோ கண்டுபிடித்தால் போன்றும் குறிப்பிடுகின்றன[5]. ஜோசப் விஜய் என்ற பெயரை முன்வைத்து சர்ச்சைகள் உருவான நிலையில் இந்த அறிக்கையை தன் லெட்டர்பேடிலேயே வெளியிட்டுள்ளார் விஜய் என்கிறது தினமணி[6]. இதுவரை அவ்வாறு தனது பெயரை அவ்வாறு வெளியிடாமல், இப்பொழுது வெளியிட்டிருப்பது போன்று செய்தி வெளியிட்டிருப்பது, வியப்பாக இருக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிடுவதே பொய்யானது.
ஜோசப் விஜய், “ஜீசஸ் சேவ்ஸ்” முன்னர் இல்லமலா இருந்தது?: ஜோசப் விஜய் என்ற பெயர் ஒன்றும் ரகசியமானதல்ல. அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒப்பீடுகளில், விஜயை, ஜோசப் விஜய் என்று தான் போட்டுள்ளனர். விஜயே தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பலருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிகிறது. அதிலும் ஜீசஸ் சேவ்ஸ் என்றுள்ளது. 17-06-2014தேதியிட்ட, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதமும் அத்தகைய லெட்டர் பேடில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது[7]. எனவே, இதெல்லாம் பிஜேபிகாரர்களுக்கு தெரியாது என்பது போல, ஊடகங்கள் சித்தரிப்பது அபத்தமானது. ஆகவே, எச். ராஜா இன்று சொல்லிவிட்டார் என்று எல்லோரும் குதிக்க வேண்டிய அவசியமோ, அதை வைத்து ராஜாவை விமர்சனம் செய்வது முதலியானவை தேவையற்றதாகும். உண்மையில், ஊடகங்கள் தாம், விஜயை, பிஜேபிக்கு எதிரானவர் என்பது போல சித்தரிக்கின்றன. அவ்வலையில், விஜயும் அவர் தந்தை சந்திரசேகரும் விழுந்து விட்டனர் என்றாகிறது. ஆக, ஊடகங்களின் எச். ராஜா எதிர்ப்பு மற்றும் பிஜேபி எதிர்ப்பு ஏன் என்றுதான் அலச வேண்டியுள்ளது.
தமிழ்.ஒன்.இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற–விரோத வெளிப்பாடு[8]: தமிழ்.ஒன்.இந்தியா என்ற இணைதளம் வெளியிட்டுள்ளது, “மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். இதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என நஞ்சை கக்கினார் பாஜக தேசிய செயலர் எச். ராஜா. அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனாலும் அடங்காத எச். ராஜா, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரில்தான் உள்ளது. நடிகர் விஜய் ஒருபோதும் தம்முடைய சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டவர் அல்ல; ஆனால் ஓட்டு அரசியல்வாதிகள்தான் அவரை மத முத்திரைக்குள் திணிக்கின்றன. அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தாம் எப்போதும் பயன்படுத்தும் அதே லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். சமூக வலைதளங்களிலும் விஜய், ஜோசப் விஜய் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எச். ராஜா வகையறாக்களுக்கு இப்படித்தான் பதில் தர வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்”.
ஊடகத்தின் பாரபட்சம் மிக்க துவேச வெளியீடு[9]: இதில், “அநாகரிகத்தை தொடர்ந்தார்”, “அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்”…போன்றவை வக்கிரம், வெறுப்பு, துவேசம் முதலியவற்றைத் தான் காட்டுகிறது. ஊடகங்கள் செய்திகளைத் தான் வெளியிட வேண்டுமே தவிடர, இத்தகைய துவேச மனப்பாங்குடன் தங்களது வெறுப்பை செய்தியாக, செய்தியில் நுழைத்து வெளியிடுவது தான், பத்திரிகா தர்மத்திற்கு விரோதமானது. முரசொலி, தீக்கதிர், விடுதலை…. போன்ற அரசியல் கட்சி பத்திரிக்கைகள் அவ்வாறு செய்யலாம், ஆனால், “தமிழ்.ஒன்.இந்தியா” போன்றவை செய்வது, ஏதோ, ஜோசப் விஜய்க்கு ஆதரவாக செய்ல்படுவது போலவும், பிஜேபி, ராஜா ; போன்றவர்களுக்கு எதிராக செயல்படுவது என்றும் வெளிப்படுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. காழ்ப்பு, குரோதம், கோபம் போன்ற குணாதிசயங்கள் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளன.
சினிமாகாரர்களின் உபதேசம், பொறுப்பு, மற்றும் பதில் சொல்ல வேண்டிய நிலை: சினிமாகாரர்களால் தான் இப்பொழுதைய சமூகம் அதிகமாகப்வே கெடுகிறது. எனவே, அவர்களுக்கு சமூக பிரஞை போர்வையில் பொய்களை வசனங்களில் அள்ளி வீசமுடியாது. அவ்வாறு செய்வதையும் அனுமதிக்கலாகாது. சினிமாகாரர்களால் எத்தனை பெண்கள் கற்பிழந்தார்கள், குடும்பங்கள் சீரழிந்தன, வாழ்க்கை கெட்டது, தற்கொலை செய்து கொண்டனர், எத்தனை பேர் வரியேய்ப்பு செய்தனர், கருப்புப் பணம் உருவாக எவ்வாறு உதவினர், …என்று ஆராய்ச்சி செய்தால், அவர்களது உண்மை நிலை வெளிப்படும். இன்றைக்கு நடிகைகள் பலர், தான் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். பிறகு, அவர்களுக்கு எந்த தார்மீக பொறுப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
© வேதபிரகாஷ்
26-10-2017
[1] தினத்தந்தி, மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி – நடிகர் விஜய், அக்டோபர் 25, 2017, 04:21 PM
[2] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/25162149/Mersal-movie-great-successThanks-to-everyone-Actor.vpf
[3] பிளிமி.பீட்.தமிழ், மெர்சல் பிரச்சினையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! – ‘ஜோசப்‘ விஜய், Posted By: Shankar, Updated: Wednesday, October 25, 2017, 16:40 [IST].</P>
[4] https://tamil.filmibeat.com/news/vijay-thanked-for-supporting-mersal-issue-049375.html
[5] தினமணி, மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி, அக்டோபர் 25, 2017. 04:14 PM.
[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/25/vijay-thanks-everyone-for-making-mersal-a-huge-success-2795708.html
[7] http://www.moviecrow.com/News/18328/joseph-vijay-thanks-everyone-for-mersals-success
[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே நன்றி சொல்லி எச். ராஜாவுக்கு நச் பதிலடி தந்த விஜய்!, Posted By: Mathi, Published: Wednesday, October 25, 2017, 16:31 [IST].
[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vijay-thanks-fans-support-mersal-299544.html