Posts Tagged ‘சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி’

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

Puri Sankarachariyar, Vedic mathematics

Puri Sankarachariyar, Vedic mathematics

பூரி சங்கராச்சாரியாரின்வேத கணிதம்இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?:  பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், பாரத் கிருஷ்ண தீர்த்தர், “வேத கணிதம்” என்ற புத்தகத்தை எழுதியது உலகத்திற்கே தெரியும். அவர் வழி வந்த பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், நிஸ்சலானந்த சரஸ்வதி ஆவர். ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் -2 [Chandrayaan-2] ராக்கெட் செல்லுத்திய போது வாழ்த்தினார்[1]. புராணங்களில் உள்ள விமானங்கள் பற்றிக் கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம் என்றார்[2]. 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்[3]. வழக்கம் போல, இக்கருத்திற்கு ஊடகங்கள் விமர்சனம் செய்தன[4]. சில திரித்து வெளியிட்டன[5]. சில அவை பொய் என்றன. ஆனால், 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றயதை மறுக்கவில்லை. ஆகவே, ஊடகங்கள் எப்படி வேண்டுமென்றே, அவதூறு செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் வேலை செய்கிறார்களோ, அதேபோல, இந்துத்துவ வாதிகளும், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகிற்ஸ்ர்கள். ஆக, “பூரி சங்கராச்சாரியாரின் “வேத கணிதம்” இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?”, என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே பதில் சொல்வீரா? சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே யோசிப்பீரா?

Puri Sankarcharya imparted Vedic mathematics to ISRO

பூரி சங்கராச்சாரியார், ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்.

Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali with John Dayal

கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, சில இந்து சந்நியாசிகள், இந்துமதத்தை விமர்சிப்பது: ஜான் தயாள் என்ற கிருத்துவப் பாதிரியை வைத்து, இந்து மடாதிபதிகளை தாக்கிய வேலைகளில் இந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளார்கள்! ஒரிஸாவில் ஶ்ரீலக்ஷ்மணானந்தரை மிரட்டிய ஆள் இந்த பாதிரி தான்! பிறகு, அவர்கள், கிருத்துவர்களால் கொலை செய்யப் பட்டார். கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று பெரிய நாடகம் போட்டதில், முக்கிய பங்காற்றியவர் ஜான் தயாள். பிறகு கிருத்துவர்களே கற்பழித்தனர் என்று தெரிந்தவுடன் அமைதியாகி விட்டார். 2018ல் சிறுபான்மையினர்- கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப் படுகின்றனர் என்று, சுஷில் கோஸ்வாமி என்ற இந்து சாமியாரை வைத்து, மாநாடு நடத்தி, அறிக்கையும் விட்டார்[6]. போபால் டையோசிஸ் சார்பில், அத்தகைய கூத்து நடந்தது[7]. பிறகு எப்படி அந்த இந்து சாமியார் கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சாமியாரை, இந்துத்துவாதிகள் விமர்சில்லவில்லை.

Acharya sushil with John Dayal

ஜோதிர் மட விவகாரம்: ஜோதிர் மடம், இப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. 57 ஆண்டுகளாக வழக்கில் இருந்ததால், சங்கரச்சாரியார் இல்லை. பிறகு, இரண்டு சந்நியாசிகள் உரிமை கொண்டாடி தாங்க்கள் தான் சங்கராச்சாரியார் என்று அறிவித்துக் கொண்டனர். ஆனால் இருவருமே, காங்கிரஸ்-பிஜேபி ஆதரவு பெற்றவர்கள். பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இருவருக்கும் அந்த உரிமை இல்லை என்று அறிவித்து, 2017ல் மூன்று மாதங்களில் ஆச்சாரியார் நியமிக்கப் படவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை நியமனம் செய்யப் படவில்லை. ஆனால், அவ்வப்போது, பிரச்சினையை வைத்துக் கொண்டு, செய்திகளில் இழுத்து விடுகிறார்கள்.

Sankaracharya arrrest manipulated to tarnis the image of the mutt

காஞ்சி மடம் மற்று ம் ஆச்சாரியார்கள் எவ்வாறு தாக்கப் பட்டனர், இன்றும் தாக்கப் பட்டு வருகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை!: காஞ்சிப் பெரியவர் மூக்குக் கண்ணாடி போட்ட போது, அவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை[8]. 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந்தேதி திடீரென மடத்திலிருந்து ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி காணாமல் போனபோது, ஊடகங்கள் மறுபடியும் அவதூறுகளை அள்ளி வீசி ஊளையிட்டன. 2004ல் கைது, 2013ல் விடுவிப்பு, 2018ல் சமாதி என்று சென்றது. ஆனால், இன்றும் குளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆக இதெல்லாம், தனிப்பட்ட மனிதர், சந்நியாசி, மடாதிபட, மடம் இவற்றையும் தாண்டி, வேறெதையோ குறி வைப்பது தெரிகிறது.

Jeyalalita with Kanchi mutt acharyas

காஞ்சி மடத்திற்கு எதிராகத் தொடர்ந்த விமர்சனங்கள்: ஒரு இணைதளம்[9], “பின்னாளில் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்  ராமன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட போதும் அகில இந்திய அளவில் மீண்டும் சர்ச்சை நாயகனாக பேசப்பட்டார். ஆனால் ஒரு கொலை வழக்கை, புலனாய்வு அதிகாரிகளை கொண்டு எவ்வளவு பரபரப்பாக்க முடியுமோ அந்த அளவுக்கு, கிரைம், கிளாமர், பாலியல் புகார் என சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் விஷயங்களை நுழைத்து திசை மாற்றப்பட்ட போதே வழக்கு தொடரப்பட்டதின் உண்மையான நோக்கம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய அவருக்கு என்ன நேரும் என்று சிக்கவைத்தவர்களுக்கு தெரியும்..மற்றவர்களுக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே நீதிமன்றத்தால் நிரபராதி என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர். பரபரப்பு சம்பவங்களின் அடிப்படையில் இப்படி சர்ச்சையின் நாயகனாக பேசப்பட்ட மடாதிபதிதான், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவ மனைகள், சேவை மையங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் மடத்தின் பணிகளை விரிவு படுத்தியவர். கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கென்றே ஜெயேந்திரர் நிறுவிய சந்திரசேகரர் கிராம வளர்ச்சி அறக்கட்டளை யால் பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள் ஏராளம். காஞ்சியில் உள்ள வேதபாடசாலைகள், பாலாற்றங்கரையில் கலை நயத்தோடு மிளிரும் மகா பெரியவருக்கான மணி மண்டபம், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தற்போது மிளிரும் விதம் போன்றவையெல்லாம் ஜெயேந்திரரின் பெயரை என்றென்றைக்கும் சொல்லக்கூடியவை,” என்கிறது[10].

Sringeri acharya with Rahul Gandhi

சிருங்கேரி மடத்தின் நிலை: சிருங்கேரி மடம் ஆச்சாரியாரும், காங்கிரசுடன் நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறது. ராஜிவ் காந்தி முன்னர் சிருங்கேரி மடாதிபதியுடன் இருந்த புகைப்படத்தை, ஆச்சாரியார், ராகுல் காந்திக்குக் கொடுக்கிறார்! ஏன் ஒரு சாமி படத்தைக் கொடுத்திருக்கலாமே? ஆனால், துவாராகா பீட சங்கராச்சாரியை வசை பாடுகின்றனர், இந்துத்துவ வாதிகள் அதனை விமர்சித்தது இல்லை.  காஞ்சியிலிருந்து கும்பகோணம் சென்று, திரும்பி காஞ்சிக்கு வந்ததை விமர்சிக்கின்றனர். அதேபோல, சிருங்கேரியும் இடம்பெயர்ந்து திரும்பி வந்து சேர்ந்துள்ளது. பொதுவாக, சிருங்கேரி மடத்தவர்களுக்கு, காஞ்சி மடம் மீது வெறுபுள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. இதனை 1950-60களிலிருந்து வெளிப்படுவது தெரிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் அதனை வெளிப்படுத்துகின்றது[11]. உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் படுகிறது[12]. இங்கு மடாதிபதிகளே, கோர்ட்டூகுச் சென்றார்களா அல்லது வேறு எவராவது தூண்டி விட்டு சென்றார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சங்கராச்சாரியார் அளவில் இருப்பவர்கள், அவ்வாறு, “தென்னிந்தியா முழுவதும் என்னுடைய ஆதிக்கத்தில் வரும்,” என்று கேட்டுப் பெறுவதா ஆன்மீக அதிகாரம் என்று புரியவில்லை. வழக்குத் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நீதிமன்றம் சிருங்கேரி சார்பில் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், அத்தகைய விவரங்கள், விமர்சனங்களைத் தான், இந்துவிரோதிகள் எடுத்து உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.

© வேதபிரகாஷ்

27-07-2020

Sringeri politics with Congress

[1] The Pioneer, ‘Puranas can be reference for space scientists’, Friday, 02 August 2019 | PNS | PURI.

[2] https://www.dailypioneer.com/2019/state-editions/—puranas-can-be-reference-for-space-scientists—.html

[3] He [The ISRO membe] further clarified that the Shankaracharya had paid a visit to ISRO Ahmedabad in 2016, when he had delivered a speech about the importance of Vedic Mathematics and how ISRO scientists can benefit by having some knowledge of the same. He had also spoken about how Vedic mathematics can help scientific inventions.

https://www.thequint.com/news/webqoof/media-houses-wrongly-quote-vedic-math-expert-to-claim-isros-reliance-on-him-for-chandrayaan-2

[4] Asian Age, Seer helped with Vedic maths in moon mission, AKSHAYA KUMAR SAHOO, Published : Aug 3, 2019, 1:43 am IST, Updated : Aug 3, 2019, 1:43 am IST

[5] https://www.asianage.com/india/all-india/030819/seer-helped-with-vedic-maths-in-moon-mission.html – :~:text=Puri%20Shankaracharya%20is%20a%20Vedic%20maths%20expert.&text=Sources%20said%20that%20Indian%20Space,launch%20of%20the%20Chandrayaan-2.

[6] AICU, Hindu Savant Acharya Sushil Goswami aharaj, Indore Shahr Qazi join Bishops in Memo to State Governor, CM, Press statement, Bhopal, February 20, 2018.

[7] press statement was issued at a press conference in the Bhopal, Madhya Pradesh, by Mr. Lancy D Cunha, the National President of the All India Catholic Union, and Dr. John Dayal, Official Spokesman and former President. Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali led a galaxy of religious leaders of Madhya Pradesh who spoke out against communal and extremist forces targeting the Christian and other minority groups.

http://www.bhopalarchdiocese.in/detail.php?str=readnews&nid=109

[8] பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

[9] பத்திரிக்கை.காம், சாமான்யர்களின் சங்கராச்சாரியார்…. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன், 2 years ago-2018, A.T.S Pandian.

[10] https://www.patrikai.com/common-peoples-wish-sankarachariyar-special-article-by-elumalai-venkatesan/

[11] Madras High Court, K. Rajendran vs Government Of Tamil Nadu And Ors. on 27 June, 1984; Equivalent citations: AIR 1985 Mad 44; Bench: R Pandian.

[12] https://indiankanoon.org/doc/1060441/

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts-LR

காங்கிரஸ்பிஜேபி மடாதிபதிகள் மீது ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தது: தேர்தல் நேரங்களில் சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோர் அரசியல் தலைவர்களுக்கு ஆசி கூறுதல், வாழ்த்துப் பெறுதல், ஏன் சிலர் பிரச்சாரம் செய்தல் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன[1]. 1990களில் இவை அதிகமாகின. காங்கிரஸ், பிஜேபி, சமஜ்வாடி என்று எல்லா கட்சிகளும் இந்த யுக்தியைக் கையாண்டன[2]. காங்கிரஸ் தலைவர்கள் சங்கராச்சாரியார்களிடமே சென்று ஆசி பெறுவதும் நடந்தது. காங்கிரஸ் குறிப்பாக வடவிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த மஹந்துகள், மடாதிபதிகளை, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக “சார் தாம் யாத்திரை[3],” வைஷ்ணவதேவி, மானசரோவர்-கைலாஷ் போன்ற யாத்திரைகளுக்கு, அரசு, போலீஸ், பாதுகாப்புப் படை, ஏன் ராணுவம் முதலிவற்றின் உதவி தேவை. இங்கும், “சார் தாம் யாத்திரை” என்பது ஆதிசங்கரர் எவ்வாறு பாரதம் முழுவதும் சென்று வந்தாரோ [பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத்] அதைப் போன்றது. ஆனால், இப்பொழுது, வடநாட்டிலேயே, உத்தரக்காண்ட் மாநிலத்திலேயெ [யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்] சுருங்கி விட்டது. இவற்றை வைத்தும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி அரசியல் ஆதிக்கம் பெற்றும், மத்திய மாநிலங்களில் ஆட்சி ஏற்ற நிலையில், அந்த அதிகார-தாக்கம், முதலியவை இருகட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஆகியது. இதனால், மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோரிடம் வெறுபாடு தோன்றும் நிலை உருவாகியது.

Sankaracharaya, Mutts, not-clear photo

சங்கராச்சாரியார்கள் விமர்சிக்கப்பட்டது: குறிப்பிட்டவர்கள் காங்கிரஸுக்கு, பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. அதற்கேற்றார் போல மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் சம்பந்தப் பட்ட தீர்ப்புகளில் அத்தகைய தாக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அந்நிலையில் தான், துவாரகா மடாதிபதி ஶ்ரீ ஸ்வரூபானந்தர் காங்கிரஸுக்கு வேண்டியவர், பூரி சங்கராச்சாரியார் பழமைவாதி, சிருங்கேரி மடாதிபதி காங்கிரஸுக்கு மிக-மிக நெருக்கமானவர், காஞ்சி மடம் பிஜேபிக்கு சார்புடையது, போன்ற பிம்பங்கள், மாயைகள் உருவாக்கப் பட்டன. காங்கிரஸின் ஊடக பீரங்கி, “நேரஷனல் ஹெரால்ட்,” எப்பொழுதும், இந்துக்களுக்கு எதிரான கட்டுரைகளை பிரசுரித்து வருகின்றது. அவ்வப்போது மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. இதனால், அது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது. 2013ல் பெருவெள்ளம் உண்டானபோது, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதியும் பாதிப்புக்கு உள்ளானது[4]. அதனால், அதனை, மறுபடியும் புனர்-நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[5]. அப்பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. அப்பொழுதும், ஊடகங்கள் பிரிவினை உண்டாக்கும் முறையில் செய்திகளை (கேதார்நாத் பூஜாரி மற்றும் ஸ்வரூபானந்தர் சாஸ்திர ரீதியிலான கருத்துக்களை) வெளியிட்டன[6]. ஸ்வரூபானந்தர் முறையாக (பூஜாரிக்கு என்ன தகுதிகள் வேண்டும், வேதங்கள் முதலியவை படித்திருக்க வேண்டும் போன்ற விசயங்கள்) விளக்கியதைத் திரித்து வெளியிட்டன[7]. 2017ல் ராகுல் காந்தி, அஹமது படேலுடன், சோமநாத் கோவிலுக்குச் சென்றபோது, அவர்கள், “இந்துக்கள் அல்லாதவர்,” என்று கோவில்-நுழைவு ரிஜிஸ்டரில் குறிப்பிடப் பட்டது[8]. அதாவது கூட வந்தவர் முஸ்லிம் என்பதால், இவரும் கிருத்துவர் என்று நினைத்து அவ்வாறு எழுதப் பட்டிருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நடக்கும் போது, இந்துக்கள் தான் கஷ்டப்படவேண்டும், அரசியல்வாதிகள் அல்ல. அதாவது, அத்தகைய அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் சித்தாந்த மோதல், இந்துக்களைப் பாதிக்கின்றது என்ற விசயம் எடுத்துக் காட்டப் படுகிறது.

Four Sankara mutts

ஆதிசங்கரர் (507-477 BCE) ஏற்படுத்திய மடங்கள்: ஆதிசங்கரரின் தேதியைக் குறிப்பிடுவதிலேயே அரசியல் ஆரம்பிக்கிறது எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த அந்த பிரச்சினை இன்றும் முடியவில்லை. ஆதிசங்கரரின் காலம் 507-477 BCE என்று சிருங்கேரி மடம் தவிர மற்ற மடங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிருங்கேரி 788-820 CE என்று கொள்கிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள், விவரங்கள், கீழ் வருமாறு:

  மடத்தின் பெயர் திசை பெயர் தற்போதைய மடாதிபதி
1 உத்தராண்ய மட் வடக்கு ஜோதிர் மடம்,

உத்தரகாண்ட்

நியமிக்கப் படவில்லை
2 தக்ஷிணாயன் மட் தெற்கு துவாரகா மடம்,

குஜராத்

ஶ்ரீஸ்வரூபானந்த சரச்வதி
3 பூர்வம்ன்ய மட் கிழக்கு பூரி, ஒரிஸா நிஸ்சலாநந்த சரஸ்வதி
4 பஸ்சிம்ன்ய மட் மேற்கு சிருங்கேரி, கர்நாடகா பாரதி தீர்த்த மஹாஸ்வாமி
5 காஞ்சி காமகோடி தெற்கு காஞ்சி, தமிழ் நாடு. விஜயேந்திர சரஸ்வதி

இந்தியாவில் உள்ள இந்துக்கள், நிச்சயமாக இவர்களை பக்தியுடன், மரியாதையுடன், சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள். அந்நிலையில், அரசியலை காரணமாக வைத்துக் கொண்டு, ஊடகக்காரர்கள், நிருபர்கள், பேட்டி கண்பவர்கள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருப்பவர்கள், இவர்களைப் பற்றி தாறுமாறாக செய்திகளை வெளியிடுவது, விமர்சிப்பது என்று செய்து வருகிறார்கள். Hon’ble, Mr, His Holiness, Rev., மௌலி, முல்லா, சாஹிப், ஹாஜி என்றெல்லாம் மற்ற மதத்தலைவர்களை குறுப்பிடும் போது, இவர்களை அப்படியே குறிப்பிடுவது முதலியன நடந்து வருகிறது. மேலும் துவாரகா, பூரி மற்றும் காஞ்சி மடங்கள், மடாதிபதிகள் என்று வரும் போது, கிண்டலாக, கேலியாக, நக்கலாக தலைப்பிட்டு செய்திகள் போடுவது என்பன தொடர்ந்து நடந்து வருகிறது.

Christians take advantage of the disunity among Hindus -Puri Sankaracharya

பூரி சங்கரச்சாரியாரை விமர்சிப்பது ஏன்?: பூரி சங்கராச்சாரியார், பல பாரம்பரிய விசயங்களை சாஸ்திரங்களின் படி விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். இக்காலத்திற்கு ஏற்ப விளக்கங்களையும் கொடுக்கிறார். ஆனால், ஊடகங்கள், இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்று முழுப்பேச்சையும் குறிப்பிடாமல், ஒரே வரியில் அவர் வர்ணாஷ்ரமத்தை ஆதரிக்கிறார் என்று செய்திகள்ளை போடுகின்றனர்.

  1. முசல்மான்கள், கிருத்துவர் எப்படி தங்களது மதங்களை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்? இந்துக்களால் ஏன் முடியவில்லை?
  2. இந்துக்களின் சோம்பேறித்தனம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வரமாகிறது!
  3. முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் மதம் மாற்றும் முறைகளை
    எப்படிக் கட்டுப்படுத்துவது?
  4. இந்து ஒற்றுமையின்மையை கிருத்துவம் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது!

போன்ற வீடியோ சொற்பொழிவுகளில், பிரச்சினையை நேரிடையாக விளக்குகிறார். இதுவரை மற்றவர்களின் கருத்துகள் இவ்வாறு வெளிப்படையாக, வெளியிடப் படவில்லை. மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பற்றி கொடுக்கும் விளக்கம் சட்டப்படி அருமையாக இருக்கிறது. இவரைப் போலத்தான், ஶ்ரீ ஸ்வரூபானந்தரும், “கோவில் என்ற அமைப்பில் எல்லோருடைய பங்கும் இருக்கிறது. பிராமணர்களுக்கு மட்டும் உரிமை இல்லை[9]. செருப்பு தைப்பவன், துணி துவைப்பவன், பொற்கொல்லன், நாவிதன் என்று எல்லொருக்குமே கோவிலை பராமரிக்க உரிமைகள் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரும் கோவிலை விட்டு, வேறு வேலை செய்யச் சென்று விட்டனர். இத்தகையோ ஒருவர் இல்லாவிட்டாலும், முன்பெல்லாம், கோவில் இயங்க முடியாது. அதனால், இப்பொழுது ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது. அதனால், அனைத்து ஜாதியினரும் மறுப்டியும் கோவில்களுக்கு வரவேண்டும். அரசாங்கள் அவரவர்களுக்கு உரிய நிதியுதவி செய்ய வேண்டும். 21,000 ஏக்கர் கோவில் நிலங்களைக் கோவில்களுக்குத் திரும்ப அளிக்க வேண்டும்,” என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், ஊடகங்கள் இதை செய்தியாக போடவில்லை. விவாதிக்கவில்லை. ஆக, ஒரு இது மடாதிபதி, இந்துக்களின் உரிமைகளைப் பற்றி கவனம் கொள்வது, பேசுவது, விளக்குவது எப்படி கேலிக்கு, விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது சமூக ஊடகங்களில், stooge, agent, criminal அதாவது கைக்கூலி, கையாள், கிரிமினல் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

27-07-2020

How lethargy of Hindus help musalmans and christians -Puri Sankaracharya

[1] Hinduism Today, Swamis Campaign In India Elections, Sinha, B.N., Magazine Web Edition, July 1991,

[2] https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=837

[3]  முதலில் ஆதிசங்கரர் சென்று வந்த பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத் என்று இருந்தது. இப்பொழுது, யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரை என்றாகியது.

[4] Times of India, Shankaracharya samadhi swept away, TNN | Updated: Jun 22, 2013, 06:31 IST.

[5] https://timesofindia.indiatimes.com/india/Shankaracharya-samadhi-swept-away/articleshow/20709897.cms

[6] The Hindu, On a mission to rebuild the Shankara Samadhi Sthal, C. S. Narayanan Kutty, KANHANGAD, FEBRUARY 20, 2014 10:07 IST, UPDATED: MAY 18, 2016 09:39 IST.

[7] https://www.thehindu.com/news/national/kerala/on-a-mission-to-rebuild-the-shankara-samadhi-sthal/article5708821.ece

[8] Times of India, Somnath temple visit: Rahul Gandhi listed as ‘non-Hindu’, Devika Bhattacharya | TIMESOFINDIA.COM | Updated: Nov 29, 2017, 21:54

https://timesofindia.indiatimes.com/india/somnath-temple-visit-rahul-gandhi-listed-as-non-hindu/articleshow/61849303.cms

[9] The Hindu, Temples never belonged to Brahmins alone: Sharada Peetham seer, SPECIAL CORRESPONDENT WARANGAL:, OCTOBER 30, 2014 00:01 IST;

UPDATED: MAY 23, 2016 16:37 IST.

Temples were not the sole property of Brahmins alone but of 21 other castes involved in their set-up and maintenance, observed Sharada Peetham pontiff Swami Swaroopananda. The pontiff, who was here to deliver a discourse, told reporters that the temple system was sabotaged by vested interests who drove away the people and left it with only Brahmins. “The cobbler, washerman, goldsmith, barber all are involved in the maintenance of the temple. Every caste is important and without a single person, the temple will not function,” he pointed out. Swami Swaroopananda said he would soon meet Chief Minister K. Chandrasekhar Rao and urge him to restore 21,000 acres of endowment lands which were occupied by individuals. The priests should be paid a pension like other government employees. He said he would visit all the abandoned temples in Andhra Pradesh from December 11 to January 11, spend a night at each temple and organise a meeting with local people to revive them. In February, he would visit similar temples in Telangana. “Telangana has very old and popular temples that are in dire straits due to dwindling patronage and indifference of authorities. On behalf of Sharada Peetham, we will make efforts to mobilise people of all castes and motivate them to restore those temples,” he said. Captain V. Laxmikantha Rao, MLA V. Satish, Archaka Samakhya leader Gangu Upendra Sharma, Brahmana Samakhya leader I. Satyamohan and others were present.

[10] https://www.thehindu.com/news/national/telangana/temples-never-belonged-to-brahmins-alone-sharada-peetham-seer/article6544987.ece

Indira Gandhi, Kanchi Acharya, Jeyendra Saraswati

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

ஜனவரி 24, 2014

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts

அரசியல்  குறித்து  பேசகூடாது  என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே?

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திரமோடி  பிரதமர்  ஆகுவதற்கு  நான்  எந்த  ஒரு  எதிர்ப்பும்  தெரிவிக்கபோவது  இல்லை,  ஆனால்  அவர்  என்ன  செய்ய வேண்டும்  என்று  நினைக்கிறாறோ  அதனை  மக்களுக்கு  தெளிவுபடுத்த  வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர்  என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].

Swarupananda issue- Bangalore Mirror

“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும்? கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே?

Swarupananda issue- Hindutan times

“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

காங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே!

Swarupananda with Srungeri mutt

வழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று  அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से। मुझे राजनीति पर बात नहीं करनी।’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

முஸ்லிம்மதத்  தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே? இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்!

வேதபிரகாஷ்

© 24-01-2014

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2


[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.

[8] Sharma, however, is not willing to lodge a formal complaint with the police. “He is a revered saint. Unfortunately, he lost his temper. The incident was nothing but a professional hazard,” Sharma told HT.

http://www.hindustantimes.com/india-news/mp-shankaracharya-swaroopanand-slaps-journalist-for-question-on-modi/article1-1175900.aspx

[9] The reporter later said he was not hit as “I ducked and Jagadguru’s hand only hit my mike”. He said would not lodge a police complaint as Swaroopanand is held in high esteem by the people.

http://news.outlookindia.com/items.aspx?artid=825957

[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902129