Posts Tagged ‘சின்டே’

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)

ஜூலை 17, 2017

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)

Leena - CV now lives in US

லீனா கீதா ரகுநாதனின் பின்னணி என்ன?: லீனா கீதா ரகுநாதனின் பின்னணி தெரியவில்லை என்றாலும், அவர் தன்னிலை காத்துக் கொள்ள, பிரச்சார ரீதியில், எழுதியதையேத் திருப்பி-திருப்பி எழுதி வருவது தெரிகிறது[1]. இவ்வருடம் மார்ச் மாதத்தில் கூட அவரது கட்டுரை அதே ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆனால், மூன்றாண்டுகள் ஆகியும், சட்டப்படியான நிலை எவ்வாறு இருக்கிறது என்று அலசவில்லை. மேலும், இப்பொழுது அவர் “கேரவனில்” வேலை செய்யவில்லையாம், “முந்தைய கேரனில் இருந்த மானேஜர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னர் மிகச்சிறிய காலத்திற்கு அரசு மற்றும் சிவில் வழக்கறிஞராக இருந்தார், “தி இந்து”, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் எழுதி வந்தார், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டது[3]. அப்படியென்றால், காரவனிலிருந்து இவர் ஏன் தனது மானேஜர் பதவியைத் துறந்தார் அல்லது அப்பதவியிலிருந்து நீக்கப் பட்டார் என்பதும் தெரியவில்லை. சித்தாந்தம் அல்லது அரசியல் பின்னணி இல்லை என்றால், இத்தகைய பீடிகை எல்லாம் தேவையில்லை. இப்பொழுது அமெரிக்காவில் உள்ளார் என்று தெரிகிறது[4].

Leena went on doing propaganda - Caravan March 2017

காங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் லேனா கேட்கவில்லை?: நியூஸ்.18, 2014லிலேயே[5], “இவரது அதிரடி கட்டுரை வந்தபோது, காங்கிரஸ் அமைதியாக இருந்தது. ஒருவாரம் கழித்து தான், அதில் கூறப்பட்ட விசயங்களை விசாரிக்க வேண்டும் என்றார் சுசில் ஷின்டே. இருப்பினும் காங்கிரஸ் இவ்விசயத்தில் ஒன்றும் பெரிதாக கூச்சல் போடவில்லை. இதனை இரு பெரிய பிரச்சினையாக்கவும் விரும்பவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், நரேந்திர மோடி இந்து ஓட்டுகளை பெற்றுவிடுவார் என்று நினைத்தது. அசீமானந்தாவின் வழக்கறிஞர் அத்தகைய பேட்டிகளே நடைபெறவில்லை என்று மறுத்தனர். ஜே.எஸ். ரானா என்ற வழக்கறிஞர்காரவன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையும் விட்டார். ஆனால், காரவன் தன்னுடைய கட்டுரையை உண்மை என்று வாதித்தது. என்.., அசீமானந்தா நீதிமன்றத்தில் வேண்டுமானால், தன்னிலை விளக்க அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றது. ஆனால், தேர்தல் வருகின்ற நிலையில், இப்பிரச்சினை பெரிதாகுமா அல்லது இயற்கை மரணம் எய்துமா என்று காலம் தான் சொல்ல வேண்டும்”, என்று செய்தி வெளியிட்டது[6]. அப்பொழுது லீனா கீதா ரகுநாதன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.

Arrest Terror Mastermind RSS Chief Bhagwat - CPI(ML) March .2014

காங்கிரஸுக்கு இந்த இந்து / காவி பயங்கர/தீவிரவாதத்திற்கும் தொடர்பு உள்ளதா?: காங்கிரஸ் அமைதியாக இருந்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் மீது ஏன் சந்தேகப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் லீனா கேட்டிருக்கலாமே? காங்கிரஸை, ஷின்டேவை பேட்டிக் கண்டு, ஆதாரத்துடன் நிலையை மெய்ப்பித்திருக்கலாமே? முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் இருப்பது போல, காங்கிரஸைச் சார்ந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தொடர்புகளை லீனா ஏன் அலசவில்லை? அஹ்மது கான் என்ற என்.ஐ.ஏவின் சட்ட ஆலோசகர், பல நீதிமன்றங்களில், பல ஆதாரங்கள் சிதறிக் கிடப்பதாலும், பல நீதிபதிகள் அவற்றை விசாரிப்பதாலும், எல்லாவற்றையும் இணைத்து, ஒரே வழக்காகி, ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஆலோசனை கூறியதாகவும், ஆனால், என்.ஐ.ஏ ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மார்ச் 2017ல் கூறுகிறார்[7]. அப்படியென்றால், காங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பற்றி, இவரும் மௌனமாக இருந்து வருவது, காங்கிரஸுக்கு துணை போகிறாரா அல்லது காங்கிரஸின் பங்கு இதில் இருப்பதால் மறைக்கிறாரா என்ற கேள்வி மறுபடியும் எழுகிறது.

Saffron-Hindu terror - Shinde-Chidambaram-2014

இந்து / காவி தீவிரவாதம் தோற்றுவிக்கப்பட்ட நிலை: ஆஜ்மீர் மற்றும் மலேகாவ் வன்முறைகளுக்குப் பிறகு, காவி தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திடீரென்று பயன்படுத்த ஆரம்பித்தனர். “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. “அபினவ் பாரத்” வீர் சவர்கரால் தோற்றுவிக்கப் பட்டது, ஆனால், அவருக்குப் பிறகு மறைந்து விட்டது. இருப்பினும், அதன் உறுப்பினர் சாத்வி பிரக்யா, அவர் ராஜ்ந்நாத் சிங்குடன் இருந்தார், அதனால், எல்லோருக்கும் உடந்தை என்பது போல சித்தரிக்கப் பட்டது. எல்லா மதத்து சாமியார்கள், பிஷப்புகள், இமாம்கள் எல்லா அரசியல் தலைவர்களுடன் இருப்பது போல புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வற்றையெல்லாம் போட்டு, இத்தகைய செய்திகள் வெளியிடுவதில்ல்லை, பேட்டிகள் எடுத்துப் போடுவதில்லை, அவற்றை தொடர்ந்து பல ஊடகங்களில் போட்டு பிரச்சாரம் செய்வதில்லை. இன்றைக்கு வரையில், காஷ்ம்மீர தீவிரவாதிகளின் உரிமைகள் பற்றி கூக்குரலிடுகிறார்கள்; புர்வானி கொலை செய்யப்பட்டது தவறு என்கிறார்கள்; ஜாகிர் நாயக்கை ஆதரிக்கிறார்கள். எந்த லீனாவோ, மீனாவோ, கீதாவோ, சீதாவோ, பேட்டி எடுத்துப் போட்டு இம்முற்றையில் பிரச்சாரம் செய்ததாகத் தெரியவில்லை.

H- Dig Vijay Singh released book RSS-26-11

திட்டத்துடன்காவி பயங்கரவாதம்”, “காவி தீவிரவாதம்வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டன: “காவி தீவிரவாதம்” என்ற சொற்பிரயோகம் [Saffron terror], 2002ல் இந்து குழுமத்தினரால் [The Hindu] வெளியிடப்பட்டு வரும் “தி பிரென்ட் லைன்” [the Frontline] என்ற நாளிதழில் தான் 2002ல் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது[8]. ஆகஸ்ட் 2010ல், திருவாளர் சிதம்பரம் தில்லியில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், உபயோகப்படுத்தினார்[9]. ஒரு சந்நியாசி இதனை எதிர்த்து ஆக. 29, 2010 அன்று வழக்கு தொடர்ந்தார்[10]. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2010, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

© வேதபிரகாஷ்

16-07-2017

Hindu terror, saffron terror - cases fizzling out

[1] Caravan, A Violent End – The collapse of a murder trial weakens the fight against Hindu fundamentalism, By LEENA GITA REGHUNATH | 1 March 2017

[2] http://www.caravanmagazine.in/perspectives/sunil-joshi-murder-trial-collapse-weakens-fight-hindu-fundamentalism

[3] LEENA GITA REGHUNATH is a former Editorial Manager at The Caravan. Before this job, she had a brief stint as a public prosecutor and civil lawyer. During her days at law school, she freelanced for the city editions of The Hindu and The New Indian Express. She also has a master’s degree in English literature.

[4] https://www.linkedin.com/in/leena-reghunath-9964a158

[5] News18, Alleged RSS terror links: Congress guarded in response to magazine report, D P Satish, Updated:February 6, 2014, 2:40 PM IST

[6] What is surprising many is the stunning silence of the Congress party. After a week, External Affairs minister Salman Khurshid reacted on Thursday demanding that the claims should be investigated. Home Minister Sushil Kumar Shinde said that he will look into the matter. But not much political noise has been heard over the case. According to insiders, the Congress does not want to make it a big issue. The party fears that it may help the BJP’s PM nominee Narendra Modi polarize the Hindu votes in his favour. Aseemanand’s lawyers have already rubbished the report saying that the interview has never taken place. The Hindustan Times reported that Aseemanand’s lawyer JS Rana had issued a statement on Wednesday categorically stating that the content of the article was a bundle of lies. The lawyer also said that his client denied having given any such interview and threatened to take legal action against the magazine and its correspondent. Sources in the National Investigation Agency (NIA) have said that Aseemanand can give a statement before the court. The Caravan says it will stand by its story and there is no need for any clarifications. Only time will tell if the issue becomes bigger as the elections approach or dies a silent death. http://www.news18.com/news/politics/dp-mail-caravan-666715.html

[7] Ahmed Khan, a legal advisor for the agency, told me in 2012 that he had recommended that the agency combine all the blasts involving the same group of suspects into a single case and trial—but that it never did this. As a result, piles of evidence and information are scattered across courts, being examined by different judges in multiple long-drawn procedures. The disintegration of Joshi’s murder trial and the blast conspiracy trials suggests a singular lack of will in serving justice in these vital cases.

http://www.caravanmagazine.in/perspectives/sunil-joshi-murder-trial-collapse-weakens-fight-hindu-fundamentalism

[8] Praveen Swami, Saffron Terror, Volume 19 – Issue 06, Mar. 16 – 29, 2002
India’s National Magazine from the publishers of THE HINDU

http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1906/19060080.htm

[9] From well planned terror attacks, to inciting communal violence, the new phenomenon of ‘saffron terrorism’ led by radical Hindu groups, was raised by the home minister at the meeting of state police chiefs in New Delhi on Wednesday.

NDTV, Saffron  Terrorism – a new phenomenon, says Home Minister Chidambaram, India | NDTV Correspondent | Updated: August 25, 2010 21:20 IST.

http://www.ndtv.com/india-news/saffron-terrorism-a-new-phenomenon-says-home-minister-chidambaram-428832

[10]  Press Trust of India (30 August 2010). “Defamation suit against P Chidambaram for ‘saffron terror’ remark”Daily News and Analysis. Retrieved 30 August 2010.

Advertisements

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், சோதனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப் பட்ட அசீமானந்தா டேப்பும், கிடப்பில் போட்ட காங்கிரஸ் அரசும் (1)

ஜூலை 16, 2017

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், சோதனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப் பட்ட அசீமானந்தா டேப்பும், கிடப்பில் போட்ட காங்கிரஸ் அரசும் (1)

Bhagawat was on UPA terror blacklist - TOI- 15-07-2017

டைம்ஸ்நௌவெளியிட்ட தகவல் [ஜூலை 2017]: சுஷில் குமார் சின்டே, உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை எப்படியாவது, அந்தப்ப்பிடியில் சிக்கவைத்து, விசாரணைக்குக் கூட்டி வரவேண்டும் என்ற திட்டம் போடப்பட்டதாக தெரிகிறது[1]. உள்துறை அமைச்சகம் கோப்புகளில், அந்நேரத்தில் பதிவான விவரங்களை வைத்துப் பார்க்கும் போது, மோஹன் பகவத்தை எப்படியாவது, தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சி நடந்ததாக தெரிகிறது என்கிறது[2]. “நோட்-சீட்” எனப்படுக் குறிப்புகளில் அத்தகைய விவரங்கள் இருப்பதாக வெடிப்புகளை “டைம்ஸ்-நௌ” கூறுகிறது. “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இப்பொழுது “டைம்ஸ்-நௌ”க்கு அளித்த பேட்டியில் ஷின்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார்[3]. அவ்வாறு இருந்தால், தாராளமாக ஜனங்களுக்கு காட்டலாம், எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியும் அதனை மறுத்துள்ளது[4]. இப்பொழுது உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருப்பதனால், உண்மை என்னவென்று அவர் விளக்கிக் கூறலாம். இந்த கருத்தே, அதாவது, “இந்து பயங்கரவாதம்” மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புள்ளது என்ற விவகாரமே லீனா கீதா ரகுநாத் என்பவரின் அசீமானந்தாவுடம் எடுக்கப் பட்டதாகக் கூறப்படும் பேட்டியில் இருந்துதான் தெரியவருகிறது.

Bhagawat was on UPA terror blacklist - TOI- 15-07-2017-CARAVAN story linked

லீனா கீதா ரகுநாத் பேட்டியும், தொடர்ந்த சர்ச்சையும் [பிப்ரவரி 2014]: இதற்காக, பஞ்சுக்லா சிறையில் [Panchkula jail] இருந்த அசீமானந்தாவை மிரட்டி, மோகன் பகவத் பெயரைக் குறிப்பிடச் சொல்லி வற்புருத்தியதாக அல்லது குறிப்பிட்டதாகவும் சில செய்தி குறிப்புகள் வெளியிட்டன.  2014ல் பொது தேர்தல் சமயத்தில், இந்த பேட்டி பிப்ரவரி 2014 காரவன் என்ற சஞ்சிகையில்[5], அசீமானந்தாவின் பேட்டியில் வெளியானது என்பதும் கவனிக்கத் தக்கது. “காரவன்” பத்திரிக்கை நிருபர் லீனா கீதா ரகுநாத் [The Caravan journalist Leena Gita Reghunath] என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசீமானந்தாவை பேட்டி கண்டு, வெளியிட்டதாக அப்பத்திரிக்கைக் குறிப்பே கூறுகிறது[6]. அப்பேட்டியின் தமிழாக்கத்தை இங்கு படிக்கலாம்[7]. லீனா கீதா தான் ஒரு வழக்கறிஞர், அவருக்கு உதவுகிறேன், அவர் வேண்டுமென்றே அவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் சொல்லி அவரிடம் வந்து பேட்டி எடுத்தார். அசீமானந்தா மறுத்த போது, அவரது சேவைகளைப் பற்றியாவது சொல்லுங்கள் என்று நைஸாக பேட்டி காண ஆரம்பித்தார். அப்பேட்டி வெளிவந்தவுடன் சர்ச்சை ஏற்பட்டது.  அசீமானந்தா தான் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்[8]. லீனாவின் பேட்டி தெரியவந்தபோது, இவர் அதனை மறுத்ததோடு, அவர் மீது, சட்டப்படி வழக்குத் தொடரவும் தீர்மானித்தார்[9]. அப்பொழுதும், ஊடகங்கள் அசீமானந்தா வழக்கு தொடருவேன் என்று அந்த நிருபரை மிரட்டினார் என்று தான் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[10]. ஏதோ, ஜெயிலில் இருந்தே மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்பது போலவும் செய்திகள் வெளியிடப்பட்டன[11].

Leena about Aseemananda and NIA-with photo

ஜே.எஸ். ரானாவின் கடிதம் [05-02-2014]: அசீமானந்தாவின் வழக்கறிஞர் ஜே.எஸ்.ரானா என்பவர் 05-02-2014 அன்று, ஊடகங்களுக்கு வெளியிட்ட கடித்தத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்பிக்கையாளர், சங்கத்திற்காக அசீமானந்த செய்த தீவிரமான சேவை என்ற தலைப்பில், பிப்ரவரி 1. 2014 தேதியிட்ட “காரவன்” – பத்திரிக்கையில் வெளிவந்த லீனா கீதா ரகுநாத் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை பொய்மூட்டையாகும். இது நீதித்துறை நிர்வாகம் மற்றும் செயல்பாடு மற்றும் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவருடைய உரிமைகளை மீறி தாக்கும் சதிவேலையாகத் தோன்றுகிறது. கீழே ஒப்பமிட்டுள்ள நான் நப் குமார் சர்கார் எனப்படுகின்ற அசீமானந்தாவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் ஆவேன். அவர் எடுத்துக் காட்டியபடி, அந்த கட்டுரையில் உள்ளவை பொய்யானவை, ஆதாரமில்லஆவை மற்றும் இட்டுக்கட்டியவை. என்னுடைய மனுதாரார் அத்தகைய பேட்டியைக் கொடுக்கவில்லை என்று மறுக்கிறார். இந்த மொத்த கதையும், என்னுடைய மனுதாரரின் மதிப்பை சீர்குலைக்க வேண்டுமென்றே, தீய எண்ணத்துடன் விசமத்தனத்துடன் செய்யப்பட்ட சதிதிட்டமாகும். சுவாமி அசீமானந்தா 2005லேயோ அதற்குப் பிறகோ எப்பொழுதும் சொல்லப்பட்ட இயக்கத்தின் பெரிய அதிகாரிகளுடன் என்றுமே, தனியாக [கதவுகள் மூடப்பட்ட அறையில்] இருந்ததில்லை என்கிறார். அதில் கூறப்பட்டுள்ளவற்றை மெய்ப்பிக்க என்னுடைய மனுதாரர் சவால் விடுகிறார், பொய் என்ற நிலையில் மன்னிப்பு கேட்க கோருகிறார், இல்லையெனில், அவர் மீதும், அப்பத்திரிக்கை மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.”

J S Rana press rekease against Leena interview

நிருபர் லீனா கீதா ரகுநாத் சொன்னது (2016ல்புத்தகத்தில் உள்ளது படி)[12]: “என்.. இதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் கடந்த ஆண்டுகளில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இக்கதை வெளியே வந்தபோது, என்.. அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாதுஇதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.. மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. கடந்த ஆகஸ்டில், சம்ஜௌதா வழக்கில், பிணைக்காக அசீமானந்தா மனு கொடுத்த போது, என்.. அதனை எதிர்க்கவில்லை. மற்ற வழக்குகளில் சிக்கியுள்ளதால் சிறையில் இருக்கிறார். வழக்குகள் நடந்து வந்தாலும், முக்கியமான சாட்சிகள் தங்களது வஅக்குமூலங்களை மறுத்து வருகின்றனர். அதற்குள், ஓரங்கட்டப்பட்ட என்.. பாகிஸ்தான்.எஸ். தொடர்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்து விட்டது. ஆக, தற்பொழுதைய சூழ்நிலைகளில், ஒருவேளை, அசீமானந்த மறுபடியும் சுதந்திர மனிதராகி விட்டால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்”.

Leena about Aseemananda and NIA

சுசில் குமார் ஷின்டே ஜூலை 2017ல் மறுத்தது: அசீமானந்தாவை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை சிக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டது, இவ்விவகாரங்களினால் தான் சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில், அந்த காலகட்டத்தில், அதே நேரத்தில் தான், ஷின்டே என்.ஐ.ஏவிற்கு அழுத்தம் கொடுத்தார். அப்பொழுது, என்..ஐ.ஏவின் தலைமையில் இருந்த சரத் குமார் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த பேட்டியின் பேட்டி அடங்கிய டேப்பை / ஒலிநாடாவை, புரான்சிக் சோதனைக்கு [forensic evaluation of the interview] அனுப்ப வேண்டும் என்றார். பொதுவாக டேப்-ரிகார்ட் பதிவை ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. அதனை மற்ற ஆதர்ரங்களுடன் இணைத்து சரியாக ஒத்துக்ப் போனால்தான், ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அதற்கு ஒப்புதல் தராதலாலும் மற்ற காரணங்களுக்காகவும், அவ்வழக்குக் கிடப்பில் போடப்பட்டது. அதாவது, அந்த டேப் உண்மை என்றால், ஷின்டே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். மேலும், லீனா, “இக்கதை வெளியே வந்தபோது, என்.. அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாதுஇதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.. மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.” என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், லீனா இப்பொழுது தனது கதையினை, ஷின்டே, சிதம்பரம், தி விஜய் சிங், ராகுல் மற்றும் சோனியா பக்கம் திருப்பியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. அப்படியென்றால், லீனா போன்றோர், ஒருதலைப் பட்டமாக செயல்படுகின்றனரா?

© வேதபிரகாஷ்

16-07-2017

Bhagawat was on UPA terror blacklist - TOI- 15-07-2017-Samjautha linked

[1] Times of India, Bhagwat was on UPA terror blacklist, Nikunj Garg| Times Now | Updated: Jul 15, 2017, 04:29 PM IST.

[2] http://timesofindia.indiatimes.com/india/bhagwat-was-on-upa-terror-blacklist/articleshow/59602901.cms

[3] Business Standard,  Congress rubbishes report of putting RSS chief Bhagwat’s name in terror list, ANI  |  New Delhi [India July 15, 2017 Last Updated at 23:48 IST.

[4] http://www.business-standard.com/article/news-ani/congress-rubbishes-report-of-putting-rss-chief-bhagwat-s-name-in-terror-list-117071500960_1.html

[5] The Caravan, The Swami Aseemanand Interviews, The transcripts of all four interviews with Aseemanand,  8 February 2014

http://www.caravanmagazine.in/reportage/swami-aseemanand-interviews

[6] In a statement,  The Caravan magazine said: “In the course of over two years, Aseemanand granted four exclusive interviews to The Caravan journalist Leena Gita Reghunath inside Ambala jail, the total duration of which ran into 09 hours and 26 minutes. In the last two interviews, Aseemanand repeated that his terrorist acts were sanctioned by the highest levels of the RSS—all the way up to Mohan Bhagwat, the current RSS chief, who was the organisation’s general secretary at the time… Knowing the national relevance of the sensitive information that Aseemanand revealed to The Caravan journalist, in an interview which was conducted with the full consent of Aseemanand, we place these facts in front of the public, along with a tape recording and transcript of parts of the conversation that mention Mohan Bhagwat.” http://www.caravanmagazine.in/reportage/press-release

[7] http://www.vinavu.com/2014/02/14/rss-terrorism-aseemananda-confessions-1/

http://www.vinavu.com/2014/02/19/rss-terrorism-aseemananda-confessions-2/

http://www.vinavu.com/2014/02/24/rss-terrorism-aseemananda-confessions-3/

http://www.vinavu.com/2014/02/27/rss-terrorism-aseemananda-confessions-4/

http://www.vinavu.com/2014/03/13/rss-terrorism-aseemenanda-confessions-5/

[8] The Hindu, Aseemanand threatens to launch legal action against The Caravan, NEW DELHI:,FEBRUARY 08, 2014 00:04 IST UPDATED: SEPTEMBER 08, 2016 21:21 IST.

[9] http://www.thehindu.com/news/national/aseemanand-threatens-to-launch-legal-action-against-the-caravan/article5665317.ece

[10] TheFirtPost, RSS terror charges: Aneemanand threatens to sue Caravan scribe, Feb.08, 2014. 13:24:26 IST.

[11] http://www.firstpost.com/india/rss-terror-charges-aseemanand-threatens-to-sue-caravan-scribe-1379939.html

[12] Supriya Nair, The Caravan Book of Profiles, Penguin, New Delhi, 2016.