Posts Tagged ‘சாமி’

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

அண்ணா, பெரியார், கமல் - கற்பனைப் படம்

அண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்

நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன். வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”.  முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12].  மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html

[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.

[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST

[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html

[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.

http://indianexpress.com/article/entertainment/entertainment-others/divorced-kamal-haasan-sarika-greet-each-other-warmly-at-shamitabh-music-launch/

[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு

[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.

[12]  மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.

[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html

[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece

ஜெயலலிதா கைது, சிறையிலடைப்பு, ஜாமீன் கோறல், விடுதலை, விமர்சனங்கள் (2002 மற்றும் 2014 நிகழ்ச்சிகள்)!

ஒக்ரோபர் 21, 2014

ஜெயலலிதா கைது, சிறையிலடைப்பு, ஜாமீன் கோறல், விடுதலை, விமர்சனங்கள் (2002 மற்றும் 2014 நிகழ்ச்சிகள்)!

ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தார் என்பதற்காக, சுப்ரமணியன் சுவாமி 1996/97ல் வழக்குத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப் பட்டு, சமீபத்தில் தீர்ப்பளிக்கப் பட்டு, சிறைலடைக்கப் பட்டது தெரிந்த விசயம் தான். இருப்பினும், அவருக்கு அளிக்கப் பட்ட சிறைவாசம், தண்டனை முதலியவற்றைப் பற்றி ஊடகங்களில் மற்றும் மக்களிடம் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரும்பினாலும், விரும்பா விட்டாலும், இப்பிரச்சினை பலரது மனங்களில் ஓடிக் கொண்டிருந்தன. மக்களின் உணர்ச்சிப் பூர்வமான ஆதரவைப் பார்த்ததும், ஊடகங்கள் கூட ஜெயலலிதாவுக்கு எதிராக விமர்சிப்பதை அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டது. ஆங்கில செனல் ஒன்று இம்முறை அம்மா, தீபாவளியை சிறையில் தான் கழிக்க வேண்டும் என்று, கீழே செய்தியாக போட்டுக் காட்டியபோது, ஆதரவாளர் ஒருவர் பொரிந்து தள்ளிவிட்டார். உடனே, இதனால், ஜெயலலிதா மீது மக்களுக்கு அனுதாபம் அதிகமாகும் என்றுகூட விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். அரசியல் ரீதியில் கருணாநிதி, திமுக மற்ற திராவிட கட்சிகளுக்கும் ஜெயலலிதா மீது விரோதம், காழ்ப்பு, துவேஷம் முதலியன இருந்தாலும், அவையும் அடக்கித் தான் வாசித்தன.

2002 மற்றும் 2014 கைதுகள், சிறைவாசங்கள்: டான்சி வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்று மே 2001ல் மறுபடியும் முதலமைச்சரானார். அப்பொழுது யாரும் இந்த அளவிற்கு ஆர்பாட்டம் செய்யவில்லை. 1996ல் சுவாமி 1991-96 ஆண்டுகளில் முதலமைச்சாராக இருந்த போது ரூ.66.65 கோடிகள் சேர்த்து வைத்தார் என்று வழக்கு போட்டார்[1]. ஜெயலலிதா 1996ல் தேர்தலில் தோல்வியடைந்தார். 1997ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கு போடப்பட்டது. டிசம்பர் 7, 1996 அன்று கைது செய்யப்பட்டார், அதனால், செப்டம்பர் 21, 2001லிருந்து பதவி இழக்க நேர்தது. அக்டோபர் 2000ல் டான்சி வழக்கில் விடுவிக்கப் பட்டார்.  மே.14  2001 முதல் செப்டம்பர் 16 2001 வரையிலான காலத்தில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். பிப்ரவரி 21, 2002ல் தேர்தலில் வெற்றிப் பெற்று, மறுபடியும் முதலமைச்சர் ஆனார். 2003ல் திமுக மனு போட்டு வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றியது[2]. 1996-2001 மற்றும் 2006-2011 ஆண்டுகளில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அக்காலத்தில் திமுகவினர் ஜெயலலிதா கடந்த வாழ்க்கை, ஜெயலலிதா-சசிகலா பற்றி ஜாதிரீதியிலும், பார்ப்பன-எதிர்ப்பு முறையிலும் அதிகமாக விமர்சனம் செய்துள்ளனர். இடையில் 2002-2006 ஆண்டுகளில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால், 2014 கைது, சிறைவாசம், பெயில் முதலியன பற்றி வேறுவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவை இந்துக்கள், மோடி-முகமூடிகள், சங்கப்பரிவார் என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஆரியதிராவிட திரிபுவாதம் இப்பொழுது வேறுவிதமாக செயல் பட்டது: ஆரிய-திராவிட சித்தாந்தம் நீர்த்துவிட்டதால், மற்ற திராவிடக் கட்சிகள் அத்தகைய திரிரிபுவாதங்களை வைக்க வில்லை. மேலும், ஏற்கெனவே, கனிமொழி, ராஜா போன்றவர்கள் திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து வாழ்ந்து கொண்டிருப்பதாலும், மாறன் சகோதரர்கள் மற்றும் கருணாநிதி மனைவி முதலியோர்கள் மீதான வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதாலும், அவை மறுபடியும் நீதிமன்றங்களில் முடிவாக தீர்ப்பாகும் போது, ஜெயலலிதா நிலைதான் அவர்களுக்கும் உண்டு என்பதும், அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்ததால், “சட்டம்-ஒழுங்குமுறை”களை ஆளும் கட்சி மீறுகிறார்கள் என்று விமர்சித்தனர். ஜாதிரீதியிலான விமர்சனம் இல்லை. ஆனால், “இந்து-பிஜேபி-சங்கப்பரிவார்-மோடி முகமூடிகள்”, சுனா-சானா என்று இத்தீர்ப்பை, ஜெயலலிதாவின் பழைய படங்களைப் போட்டு விமர்சனம் செய்து கொண்டிருந்தன. இந்துவிரோத இணைதளங்களிலிருந்து[3] அதாவது “திராவிடர்கள்” அமைதியாக இருந்தாலும், “ஆரியர்கள்” உற்சாகமாக இருந்தார்கள் போலும்! “இந்துத்வவாதிகள்” இந்த முரண்பாட்டை ஏன் புரிந்துகொள்ளவில்லை மற்றும் அவ்வாறு விமர்சித்தவர்களைக் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை!

பிராமணர்களுக்குள் இருந்த பிரச்சினை என்பது போல காட்டியது: ஒரு பிராமணர், இன்னொரு பிராமணர் மீது வழக்கு போட்டு மாட்டி வைத்தார், அதாவது சுப்ரமணியன் சுவாமி ஒரு பார்ப்பனர் ஆனால், அவர் ஜெயலலிதா மீது வழக்குப் போட்டு சிறைவாசம் வாங்கிக் கொடுத்திருக்கிறார், சுனா-சானாவை நான் மற்ற விசயங்களில் ஆதரிக்காமல் இருந்தாலும், இவ்விசயத்தில் ஆதரிக்கிறேன் என்ற எண்ணங்களுடன் விமர்சித்தனர். பிராமணர்களுக்கு மத்தியில் இதனால், கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனை ஊதிவிட்டவர்கள் பிராமணர்-அல்லாதவர் என்று குறிப்பிடத் தக்கது. ஆனானப் பட்ட திராவிடக் கட்சிகளே அளந்து வாசித்தபோது, சிலர் அதிகமாகவே விமர்சித்தனர். சமூகவலைத்தளங்களில் இந்து-பிஜேபி-சங்கப்பரிவார் போன்று போலிமுகமூடிகளை வைத்துக் கொண்டு உலாவருபவர்கள், அதிகமாகவே அவதூறான பதிவுகளை செய்தனர். சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதாவிற்கு மொட்டை போடுவது போன்று படத்தை வெளியிட்டனர். குறிப்பாக இந்து-விரோத இணைதலங்களில் உள்ள சரக்கை அதிகமாகவே உபயோகப் படுத்திக் கொண்டனர். தங்களுடைய பிராமண துவேஷத்தை தாராளமாக வெளிப்படுத்திக் கொள்ள இச்சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தினர். எல்லா விசயங்களுக்கும் எளியதாக்குதலுக்கு இவர்கள் இருப்பது அல்லது உபயோகப் படுத்திக் கொள்வதும், சமூகவியல் மற்றும் மனோதத்துவயியல் ரீதிகளில் நோக்கத்தக்கது.

இந்துத்வவாதிகளின் வாதங்கள்: பூலன் தேவிக்கும், ஜெயலலிதாவுக்கு என்ன வித்தியாசம், ஜெயலலிதாவுக்கு உடல் நலமின்மை காரணமாக பெயில் கொடுத்துள்ள போது, சாத்வி பிரக்னாவுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்ற வாதங்களும் வைக்கப் படுகின்றன. இதில் உள்ள பிரச்சினைகள், விசயங்கள் அவற்றின் தீவிரத்தன்மை, மற்ற விசயங்களுடன் சம்பந்தப் பட்டுள்ள விவகாரங்கள் இவற்றையெல்லாம் அறியாமல் அல்லது அறிந்தும் அறியாதது போல, “ஜெயா-சாமி தூஷணங்கள்” போல, இவற்றை கிளப்பிவிடப் பார்க்கிறார்கள். சாத்வி பிரக்னா விசயத்தை யாரும் பார்ப்பன-பார்ப்பன விரோத முறையில் பார்க்கவில்லை, விமர்சிக்கவில்லை. அமித் ஷா கூட சிறையிலிருந்து, பெயிலில் வெளிவந்துள்ளார், அதையும் யாரும் ஜாதி ரீதியில் அலசுவதில்லை. அவர் அரசிலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இவர்கள் ஒப்பீடு செய்வதில்லை. இப்படி குறிப்பிட்டாலே அவர்களுக்கு கோபம் வரும். நம்மை தாக்கவும் ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், பிரச்சினையை நடுநிலையாக ஆய்வது என்பதில்லாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பிஜேபிக்காரர்கள் நடந்து கொண்ட விதம்: சமீபத்தில் கவுன்சிலர் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக அதிமுக நடந்து கொண்ட விதம், பிஜேபிக்காரர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது, மத்தியில் பிஜேபி ஆட்சியில் உள்ளதால், கொஞ்சம் அதிகமாகவே பேசினர். இருப்பினும், அதிமுகதான் அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்றது. மோடி ஜெயலலிதாவின் நண்பர், என்றெல்லாம் பேசப்பட்டு வந்தாலும், தேர்தலில் எதிர்-எதிராக போட்டியிட வேண்டியதாகியது. பாராளுமன்ற தேர்தலில், அதிமுக பிஜேபிக்கு ஆதரவு மட்டும் தராமல், தனித்துப் போட்டியிட்டதால், அதிக இடங்களை அதிமுக தான் பெற்றது. இதனாலும், தமிழக பிஜெபிக்காரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கை தொடர்வது குறித்து ஆலோசித்து வருவதாக சுப்ரமணிய சாமி டிவிட்டரில் தெரிவித்த போது, “நீலகிரி மாவட்ட பாஜகவினர் தன்னை சந்தித்து, கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரது சொத்துக்கள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளனர்”, என தெரிவித்துள்ளார்[4]. அதாவது இவ்வாறு சாமி அவருக்குத் தேவைப் படுகிறது. ஆனால், “பாஜகவில் ஒரு பொறுப்பிலும் இல்லாதவர் சுப்பிரமணியம் சாமி. இவருக்கெல்லாம் பதில் தர விரும்பவில்லை”, என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார், என்றும் உள்ளது.

பிஜேபிக்காரர்கள் நடந்து கொள்ளும் விதம்: “அம்மா கைது” விசயத்தில், அவர்கள் அதிகமாகவே வித்தியாசமாக நடந்து கொண்டனர். மோடி சுத்தமாக்க விரும்புகிறார், அதனால் தான் ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் யாரானாலும் தண்டிக்கப் படவேண்டும் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தனர்[5]. அதற்குள் ஏதோ தாங்களே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது போல, ரஜினியை பிஜேபிக்கு சேர அழைத்தனர்[6]. தமிழிசை சௌந்தரராஜன், ஜெயலலிதாவின் படங்கள் எல்லாம் எடுக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. ஆனால், அதே நேரத்தில், “மீண்டும் முதல்வராக தகுதி உள்ளவர் ஜெ.என்று வெங்கையா நாயுடு திடீர் கணிப்பு”, என்று செய்தி வந்துள்ளது[8]. ஆகவே, மற்ற தமிழக பிஜேபி தலைவர்கள் அமைதியாக இருக்கும் போது, இந்த இருவர் மட்டும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருப்பது மர்மமாக இருக்கிறது. போதாகுறைக்கு, ரஜினி, மேனகா ஜெயலலிதாவுக்கு எழுதப் பட்ட கடிதங்கள் வெளியிடப் பட்டதும், தமிழக பிஜேபிக்காரர்களுக்கு ஈயாடவில்லை[9]. இதெல்லாம், அவர்களது வியர்த்தமான, பலனற்ற செயல்கள் என்றுதான் ஆகின. மற்ற திராவிட கட்சிகளை விட தாங்கள் பெரிய இடத்தை அடைந்து விட்டது போல நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. தமிழக பிஜேபிகாரர்களுக்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை என்பது தான் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும் பலம் கொண்டுள்ளன: காங்கிரஸ் 1960களில் அரசியல்ரீதியில் செல்வாக்குடன் தமிழகத்தை ஆண்டு வந்தாலும், காமராஜருக்குப் பிறகு, சிறந்த அரசியல்வாதி இல்லாததாலும், 1970களிலிருந்து திமுக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டதாலும், பிறகு அதனை எம்.ஜி.ஆரின் அதிமுக அசைத்து, மாற்றி, திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை ஆட்சிக்கு வந்ததை மக்கள் பார்த்தனர். பிறகு இவ்விருக்கட்சிகள் தாம் மாறி-மாறி ஆட்சி அமைத்துக் கொண்டு ஆண்டு வருகின்றன. இதனால், காங்கிரஸ் இவ்விரு கட்சிகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் காலம் தள்ளிக் கொண்டுவர வேண்டியதாகியது. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும் பலம் கொண்டுள்ளன. போஸ்டர் ஒட்டக் கூட தவித்துக் கொண்டிருந்த காலத்தில் பிஜேபி இருந்தபோது, “கமலாலயம்” கட்டிடம் வாங்கியபோது, உழைத்தவர்கள் பற்றி இப்பொழுதைய பிஜேபிக்காரர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இன்று ஏதோ பதவி கிடத்து விட்டது, அல்லது அவர்கள் நமக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்…….என்ற ரீதியில் இப்பொழுதைய பிஜேபிக்காரர்கள் நடந்து கொள்வது வேடிக்கையே! காங்கிரஸே செய்யாத வேலையை, பிஜேபி செய்ய வேண்டும் என்றால், அதற்காக சித்தாந்த ரீதியில் உழைக்கவேண்டும். “அமித் ஷா” போன்று செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு சுனா-சானா துவேஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. ரஜினியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று சுப்ரமணியன் சுவாமி சொன்னது மட்டும் இவர்களை யோசிக்க வைக்கிறது[10].

நீதிமன்றத் தீர்ப்பும், அதிமுகவின் தர்ம சங்கடமும்: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 18 ஆண்டுகால இழுத்தடிப்பு, வாய்தாக்கள் தாண்டி வந்த தீர்ப்பின்படி, முதல்வராக இருந்த முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும் உடந்தையாக இருந்த வர்களுக்கு அதேபோல் நான்காண்டு சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் என்ற தீர்ப்பு அதிர்ச்சியை அ.தி.மு.க.வினருக்குக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, உச்சநீதி மன்ற அண்மைக்கால சட்ட வலிமை பெற்ற தீர்ப்பின் விளைவாக, மூன்றாண்டுகளுக்குமேல் தண்டனை பெற்ற பதவியாளர்கள், சிறைத் தண்டனை மாத்திரமல்லாமல், பதவியை உடனடியாக இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதன்படி, முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.எல்.ஏ., முதல்வர் பதவியையும் இழந்தவராகிறார் என்ற சட்டபூர்வ நிலையாகிறது. மேலும் அவர் சிறையில் இருப்பதால், அவருக்குப் பதிலாக – அரசியல் சட்டப்படி ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னரும் இதுபோலவே இவர் முதலமைச்சாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலில் ஜெயலலிதா, ஜாமீன் மனு நிராகரிப்பு (27-09-2014 முதல் 17-10-2014 வரை: ஜாமீனில் வெளிவர மனுதாக்கல் செய்தபோது, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால், முன்பு ஏற்பாடு செய்திருந்த, பிரபல வழக்குரைஞர்களுக்குப் பதில் வேறு இரண்டு பிரபல மூத்த வழக்குரைஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு / அப்பீல் செய்யப்பட்டது. சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட முறைகளான மேல்முறையீடுகள், ஜாமீன் போன்றவை மூலம்தான் வெளிவர முயற்சிக்கலாம். ஆனால், அதிமுகவினர் தங்களது விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்ள, தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப்பற்றி தாறுமாறாக வசை பாடி, விமர்சித்து சுவரொட்டிகள் அடித்து ஒட்டினர். பதாகைகளை வைத்து, “கடவுளை மனிதன் தண்டிக்கலாமா? கர்நாடகாவே எங்கள் அம்மாவை எங்களுக்குக் கொடுத்துவிடு – காவிரியை நீயே எடுத்துக்கொள்! மோடி அரசே தலையிட்டு எங்கள் அம்மாவை வெளியே கொண்டுவர முயற்சி செய்! என்று சுவரொட்டிகள், ஒட்டி ஆர்பாட்டம் செய்தது வேடிக்கையாக இருந்தது. ஆனால், இதெல்லாம் அதிமுக-பாணி அல்லது திராவிட-பாணி என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

தொடர்ந்து அதிமுகவினரின் போராட்டங்கள்: தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியதைத் தவிர, தினம்-தினம், ஒப்பாரி வைத்து மாரடிப்பது, பேருந்துகளைக் கொளுத்துவது, பேருந்துகளில் பயணம் செய்வோர்களுக்கு இடைஞல் செய்யும் வகையில் நிறுத்துவது, கடைகளை மூடச் சொல்லியது, என்று “பந்த்” செய்து வந்தனர். இதனால், ஆரம்பத்தில் பொது மக்களுக்கு பிரச்சினைகல் ஏற்பட்டன. பிறகு பள்ளிகள் கூட பந்த் என்று மூடப்பட்டன; நூற்றுக்கணக்கானவர் மொட்டை போட்டுக் கொள்வது, தாடி வளர்ப்பது போன்றவையும் நடந்தன[11]. யாகங்கள், பூஜை, புனஸ்காரங்கள், கல் சோறு, மண் சோறு சாப்பிடுவது போன்றவைகளும் நடந்தன[12]. ஜெயலலிதாவின் கைது சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு இதுவரை 62 பேர் இறந்துள்ளனர். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரடைப்பு காரணமாக மட்டும் 44 பேர் இறந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[13].

  • ஜெ., விடுதலையாக சேலம் சித்தர் கோவிலில் 1,006 பேர் மொட்டை (தினமலர், அக்டோப்பர்.11, 2014)
  • ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும் – அதிமுகவினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை (அக்டோப்பர்.14, 2014)
  • கோவில் நிலங்களை மீட்போம்; ஜெவை காப்போம் – அதிமுகவினருக்கு மடாதிபதிகள் வேண்டுகோள் (அக்டோப்பர்.14, 2014)
  • ஜெ., விடுதலைக்காக முதல்வர், அமைச்சர்கள் விரதம் (தினமலர், அக்டோப்பர்.16, 2014)
  • ஜெ, விடுதலைக்காக அதிமுகவினர் சபதம் – கோவில் நிலமீட்பு இயக்கமாக எடுத்து செல்வோம்(தினமலர், அக்டோப்பர்.16, 2014)

அதிமுகவினரின் காரியங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கின்றன என்று பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப் பட்டன.

17-10-2014 அன்று உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியது, 18-10-2014 அன்று போயஸ் கார்டனுக்குத் திரும்பியது: சுப்ரமணியன் சாமி, ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தவுடன், அதில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால், உடல்நிலை காரணமாக ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்ததால், அதனை தான் எதிர்க்கவில்லை என்று காரணத்தையும் சொன்னார். அம்மாவுக்கு ஜாமீன் கொடுக்கப்படாவிட்டால், தீபாவளி சிறையில்தான் கழிக்க வேண்டியிருக்கும் என்று மறுபடியும் ஊடகங்கள் பாட்டுப் பாட ஆரம்பித்தன. ஆனால், 17-10-2014 அன்று உச்சநீதி மன்றம் நிபந்தைகளுடனான ஜாமீன் வழங்கியது, பலருக்கு வியப்பை அளித்தது. பிறகு 18-10-2014 அன்று அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார் என்பதால், அதிமுகவினரால் பெங்களூர் சிறையிலிருந்து, அவரது வீடு வரை வரவேற்பு அளித்தனர். சென்னையிலேயோ இரண்டு நாட்களாக நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அந்தமழையினையும் பொருட்படுத்தாது, அதிமுகவினர் வரவேற்பில் கலந்து கொண்டனர். எது எப்படியிருப்பினும், தமிழக மக்களில் பலர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது, ஜாமீன் தர நேரம் கடத்தியது, பிறகு கொடுத்தது போன்ற செயல்களினால் வருத்தமடைந்தனர் மற்றும் அவர் மீதான ஆதரவு இன்னும் பெருகியது என்றுதான் தெரிகிறது. குறிப்பாக பெண்களின் ஆதரவு கூடியிருக்கிறது என்று அறியப்படுகிறது. போயஸ் கார்டனுக்குத் ஜெயலலிதா திரும்பியது வெற்றியாகக் கருதப்பட்டது.

ஊடகங்களின் 18-10-2014 அன்று தொடர்ந்து ஒலிபரப்பியது: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை முதல், போயஸ்கார்டன் வரை ஊடகக்க்கரர்கள், குறிப்பாக ஆங்கில செனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, விவரங்களை விடாமல் “ரன்னிங் கமென்டரி” போல சொல்லிக் கொண்டிருந்தது, காட்டிக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. ஏதோ அவற்றிற்கு வேறு எந்த செய்தியும் இல்லையா, அல்லது இரண்டு மாநிலங்களில் ஒரு தலைவருக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்து காட்ட முடிவு செய்தனரா, அல்லது அவற்றிற்கான “ரேடிங்” கூட செய்ததா என்று ஆராய்ந்தாலும், செனல்களில் காட்டியது உண்மை. இதை தொடர்ந்து ஆங்கில செனல்கள் “நேரடியாக” ஜெயா டிவி உதவியுடன் காட்டிக் கொண்டிருந்ததும் உண்மை. மக்கள் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு பார்த்ததும் உண்மைதான்! 19-10-2014 அன்றும் ஊடகங்கள் இச்செய்தியைப் பற்றி அதிகமாகவே பதிவு செய்திருந்தன[14].

© வேதபிரகாஷ்

20-10-2014

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaas-da-case-chronology-of-events/article6452761.ece

[2] http://indianexpress.com/article/india/politics/chronology-jayalalithaa-disproportionate-assets-case/

[3] www.vinavu.com, http://namathu.blogspot.in

[4] http://www.dailythanthi.com/News/India/2014/09/17131028/.vpf

[5] தமிழிசை சௌந்தரராஜனே அத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

[6] ஜினி வீட்டு கொலுவுக்கு சென்ற தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அவரை பா.ஜ.,வில் சேர்ப்பதற்கு முயற்சி செய்தார். அது குறித்து, பரபரப்பு பேட்டிகளும் அளித்து வந்தார்.ரஜினி வந்து விடுவார் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க., வுக்கு அடுத்து, பா.ஜ., தான் என்கிற ரீதியில் பேசி வந்தார்.இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான், ஜெயலலிதாவுக்கு ரஜினி எழுதிய கடிதம், பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1096270

[7] ”சட்டத்தின் முன் குற்றவாளியாக இருக்கும், ஜெயலலிதாவின் படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவில்லை என்றால், அதை அகற்றுவதற்காக, தமிழக பா.ஜ., போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும்,” என, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1093559

[8] தினமலர், 18-10-2014, ப.6. http://www.dinamalar.com/news_detail.asp?id=1094572

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1096270

[10] தினமலர், பாஜகவுக்கு ரஜினி தேவையா? – பதிலளிக்கிறார் சு.சாமி, 12-10-2014, ப.5.

[11] http://www.viduthalai.in/headline/89359-2014-10-16-08-57-06.html

[12] Read more: http://www.viduthalai.in/headline/89359-2014-10-16-08-57-06.html#ixzz3GURpd1J5

[13]http://www.dinamani.com/tamilnadu/2014/10/05/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/article2462486.ece

[14]http://www.dinamani.com/india/2014/10/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF/article2485054.ece