Posts Tagged ‘கோவில் கொள்ளை’

திருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது! [1]

நவம்பர் 20, 2019

திருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது! [1]

09-11-2019 anti-sanatana women conference

திருமாவளவன் ஆபாசமாக விமர்சித்தது [09-11-2019]: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது[1]. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், “…பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்,” என்றும் பேசினார்[2]. திருமாவளவனின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது[3]. திருமாவளவன் பேசியது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாக பாஜகவினர் இந்த்துவ அமைப்புகள் விமர்சித்தனர்[4].

16-11-2019 anti-sanatana VCK is not anti-Hindu
உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை [16-11-2019]: இந்த நிலையில் திருமாவளவன், தான் பேசியது உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை உண்மை உண்டு என்பதை நண்பர்கள் அறிவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். “விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ‘ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளதுஎன்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். ‘அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டுஎன்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர். எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்”. – தொல்.திருமாவளவன்[5].

Gayatri response to Thiruma blabber on Hindus

விடுதலை சிறுத்தைகள் பெண்கள் கலாட்டா செய்தது [16-11-2019]: திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கனும் என்றும் தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள் என்றும் திருமாவளவன் குறித்து ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம் வீடு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் தெருவில், வீட்டின் முன்பாக கூடி கலாட்டா செய்தனர். போலீஸார் தடுத்த போது, அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் சொல்லி கோஷம் போட்டனர். போலீஸாருடன் வாதம் புரிந்து, பெண் போலீஸாரை மிரட்டி அடிக்கவும் செய்தனர்[6]. சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் ராமஜென்ம பூமி குறித்து தீர்ப்பு அளித்தது. அதை விமர்சனம் செய்யும் விதமாக புதுச்சேரியில் நடந்த மகளிர் மாநாடு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘குவி மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் ஹிந்து கோவில்கள்’ என கூறியிருந்தார்.அவர் மத கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Thirumacriticized by H Raja

காயத்ரிக்கு அசிங்கமான போன்கள், மிரட்டல்கள் வந்தது [15-11-2019]: இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராமும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில்’ ஹிந்துக்கள் அனைவரும் திருமாவளனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்’ என கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியில் பேசியது தன்னியல்பாக நடந்தது. அதில் உள்நோக்கம் இல்லை என திருமாவளவன் தெரிவித்த போதிலும் அவரை அடிக்க வேண்டும் என கூறிய காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். மர்ம நபர்கள் சிலர் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு இவை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை எனவே இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை… இல்லை… மடிசார் புடவை அனுப்புங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்தார்.

Gayathri house attacked by VCK women with chappals
காயத்ரியின் சவாலும், விசிக மகளிரின் ஆர்பாட்டமும்: டுவிட்டரில் அவர் நவ. 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10:00 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்[7]. திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார். இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன்” என காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்[8]. இந்நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள நடிகை காயத்திரி ரகுராம் வீட்டை அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.தன் ‘டுவிட்டர்’ பதிவை காயத்ரி ரகுராமும் நீக்கிவிட்டார்.

Thiruma temples should be demolished 2017

இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும்திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[9]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[10][2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும்[11]. இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[12][3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!

© வேதபிரகாஷ்

19-11-2019

Tiruma valavan with Ezra Sargunam -2

[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், திருமாவளவன் பேச்சு சர்ச்சை: உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என விளக்கம், 14, 2019 08:09:15 pm.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-speech-on-hindu-temple-structure-goes-controversy/

[3] பத்திரிக்கை.காம், இந்து கோவில்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்க: எச்.ராஜா வலியுறுத்தல், Posted on November 19, 2019 at 1:47 pm by Haresh

[4] https://www.patrikai.com/h-raja-requests-tngovt-to-arrest-thirumavalavan-for-his-comments-on-temples/

[5] https://www.facebook.com/thirumaofficial/posts/2754054351520581

[6]  இவற்றைக் காட்டும் வீடியோக்கள் இணைதளத்தில் உள்ளன. மேலும், போலீஸாரும் பார்த்துக் கொண்டிருந்த மற்ற பொது மக்களே சாட்சி.

[7] தினமலர், ‘திருமாவுக்கு நடிகை காயத்ரி சவால், Added : நவ 19, 2019 00:58.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2414694

[9] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST.

[10] https://www.youtube.com/watch?v=oyY3E5lC9tM

[11] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1), 09-12-2017

https://islamindia.wordpress.com/2017/12/09/thiruma-valavan-wants-all-hindu-temples-should-be-destroyed/

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/thirumavalavan-speech-against-hindu-temples/articleshow/61963414.cms

திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

செப்ரெம்பர் 26, 2018

திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

Stalin on anti-hindu stance 24-09-2018

தி.இந்துஸ்டாலினிடம் எடுத்த பிரத்யேக பேட்டி[1] செப்டம்பர் 2018): இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2]. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்தார்[3]. வேறெந்த நாளிதழும் போடாத வேளையில், “தி.இந்து” மட்டும் போட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[4]. பி. கோலப்பன் என்பவர், அப்போது அவரிடம், “கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது”, அதாவது கேட்டாராம். இந்த கேள்வியே சொல்லி வைத்து கேட்டது போலத்தான் உள்ளது. அதற்கு முக ஸ்டாலின் அளித்ததாக, “தி.இந்து” செய்தி போட்டுள்ளது. “தி.இந்து” இதே செய்தியை, ஆங்கிலத்தில் இரண்டு முறை, இரண்டு இணைத்தள லிங்குகளில் வெளியிட்டுள்ளது[5]. அதே கோலப்பன் பெயர் தான் அதிலும் காணப்படுகிறது[6].

cow-marched-towards-stalin-14-01-2018-twitter.jpg

இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? ஸ்டாலினின் விரிவான பதில்: அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்: ”இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார். கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்”.

cow-and-stalin-dm-14_01_2018_016_026

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார். இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது. கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை”.

cow-marched-towards-stalin-14-01-2018-chennai-karu-enquires

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் பிரச்சாரம்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும். பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

blood-pongal-as-kru-compared-kumkum-with-blood

தூஷித்துக் கொண்டே இப்படி சொல்லிக் கொண்டால், இந்துக்கள் நம்புவார்களா?: 2015ல், கும்பகோணத்தில் கோவில் பூஜாரிகளுடன் சந்திப்பை வைத்துக் கொண்ட ஸ்டாலின் அதே “தி.இந்து”வுடன் பேசும் போதும், இதே போன்ற கருத்தை சொன்னது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திமுகவில் உள்ளவர் 90% இந்துக்கள். தனது குடும்பத்தினருக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது. எனது மனைவியும் கோவில்களுக்க்கு எல்லாம் சென்று வருகிறாள். அதன் குறுக்கே நான் நிற்பதில்லை. தனது பயணத்தில் முதலில் திருகோஷ்டியூர் கோவிலுக்கு சென்றாராம், ஏனெனில், அங்கு தான் ராமானுஜர் தனது குரு சொன்னதையும் கேட்காமல், கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தனக்குச் சொல்லிக் கொடுத்ததை உரக்க  எல்லோருக்கும் தெரியும் படி சொன்னாராம்[7]. “நாங்கள் எல்லோரும் அண்ணாவைப் பின்பற்றுபவர்கள், அதன் படி திருமூலர் சொன்னபடி “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்என்பதை ஏற்றவர்கள். எங்கள் தலைவர், ராமானுஜர் டெலிசீரியலுக்கு டயலாக் எழுதினார். ஏனெனில், அவர் எல்லோரும் கோவிலில் நுழைவதற்ற்கு வழி வகுத்தார். தேர்தல் வருவதால் கோவில்களுக்கு செல்கிறேன் என்ற வாதத்தை மறுத்து, நான் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், முன்னர் கூட கோவில்களுக்கு சென்றுள்ளேன், எனக்கு பூர்ண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது” கூறிக் கொண்டார்[8]. மேலும் தொடர்ந்து சொன்னது[9], “கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்,” என்றார்[10].

stalin-atheist-visiting-temples-13-01-2018

ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன?: இப்படியெல்லாம் திடீரென்று செய்திகள் வரவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்க வேண்டியுள்ளது. 2019-தேர்தல் நேரத்தில் இவ்வாறு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்று தான், மக்கள் நினைப்பார்கள். நிச்சயமாக பொது மக்கள், திராவிட கட்சியினர் குறிப்பாக, திக-திமுக வகையறாக்களை இந்துக்களுக்கு சாதகமானவர்கள் என்று நினைக்கவே மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டாலினே நெற்றியில் வைத்த குங்குமத்தைத் துடைத்துப் போட்டது, மூன்று மாதங்களுல்லு முன்னர் ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்துக் கொண்டது போன்ற வேலைகளை ஸ்டாலின் செய்தது அனைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. அந்நிலையில், ஒருவேளை பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன், ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். வாஜ்பாயி காலத்தில் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. அத்தகைய கூட்டை 2019ல் வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கலாம். ஆனால், மக்கள் நம்புவார்களா? பிஜேபி இத்தகைய இந்துவிரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-09-2019

Stalin wiped out kumkum put on his forehead

[1] தமிழ்.இந்து, இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு..ஸ்டாலின் பேட்டி, பி.கோலப்பன், Published : 24 Sep 2018 15:32 IST; Updated : 24 Sep 2018 15:32 IST

[2] https://tamil.thehindu.com/tamilnadu/article25027406.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

[3] The Hindu, Stalin sees a bid to portray DMK as anti-God, anti-Hindu; terms it mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.

[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-interview/article25022253.ece

[5] The Hindu, Bid to portray DMK as anti-Hindu mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.

[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/bid-to-portray-dmk-as-anti-hindu-mischievous/article25025286.ece

[7] Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.

The Hindu, DMK – not anti-Hindu, B. Kolappan, October 17, 2015 00:00 IST; UPDATED: October 17, 2015 10:30 IST

[8] “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum  Ontrey Kulam Oruvaney Devan  (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said.  Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the  poorna kumbam .

https://www.thehindu.com/news/cities/chennai/dmk-is-not-antihindu-stalin/article7772219.ece

[9] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின், By Mayura Akilan Updated: Saturday, October 17, 2015, 13:20 [IST].

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-not-anti-hidhu-says-stalin-237922.html