Posts Tagged ‘கோவில் இடிப்பு’

திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

செப்ரெம்பர் 26, 2018

திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

Stalin on anti-hindu stance 24-09-2018

தி.இந்துஸ்டாலினிடம் எடுத்த பிரத்யேக பேட்டி[1] செப்டம்பர் 2018): இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2]. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்தார்[3]. வேறெந்த நாளிதழும் போடாத வேளையில், “தி.இந்து” மட்டும் போட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[4]. பி. கோலப்பன் என்பவர், அப்போது அவரிடம், “கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது”, அதாவது கேட்டாராம். இந்த கேள்வியே சொல்லி வைத்து கேட்டது போலத்தான் உள்ளது. அதற்கு முக ஸ்டாலின் அளித்ததாக, “தி.இந்து” செய்தி போட்டுள்ளது. “தி.இந்து” இதே செய்தியை, ஆங்கிலத்தில் இரண்டு முறை, இரண்டு இணைத்தள லிங்குகளில் வெளியிட்டுள்ளது[5]. அதே கோலப்பன் பெயர் தான் அதிலும் காணப்படுகிறது[6].

cow-marched-towards-stalin-14-01-2018-twitter.jpg

இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? ஸ்டாலினின் விரிவான பதில்: அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்: ”இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார். கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்”.

cow-and-stalin-dm-14_01_2018_016_026

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார். இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது. கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை”.

cow-marched-towards-stalin-14-01-2018-chennai-karu-enquires

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் பிரச்சாரம்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும். பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

blood-pongal-as-kru-compared-kumkum-with-blood

தூஷித்துக் கொண்டே இப்படி சொல்லிக் கொண்டால், இந்துக்கள் நம்புவார்களா?: 2015ல், கும்பகோணத்தில் கோவில் பூஜாரிகளுடன் சந்திப்பை வைத்துக் கொண்ட ஸ்டாலின் அதே “தி.இந்து”வுடன் பேசும் போதும், இதே போன்ற கருத்தை சொன்னது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திமுகவில் உள்ளவர் 90% இந்துக்கள். தனது குடும்பத்தினருக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது. எனது மனைவியும் கோவில்களுக்க்கு எல்லாம் சென்று வருகிறாள். அதன் குறுக்கே நான் நிற்பதில்லை. தனது பயணத்தில் முதலில் திருகோஷ்டியூர் கோவிலுக்கு சென்றாராம், ஏனெனில், அங்கு தான் ராமானுஜர் தனது குரு சொன்னதையும் கேட்காமல், கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தனக்குச் சொல்லிக் கொடுத்ததை உரக்க  எல்லோருக்கும் தெரியும் படி சொன்னாராம்[7]. “நாங்கள் எல்லோரும் அண்ணாவைப் பின்பற்றுபவர்கள், அதன் படி திருமூலர் சொன்னபடி “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்என்பதை ஏற்றவர்கள். எங்கள் தலைவர், ராமானுஜர் டெலிசீரியலுக்கு டயலாக் எழுதினார். ஏனெனில், அவர் எல்லோரும் கோவிலில் நுழைவதற்ற்கு வழி வகுத்தார். தேர்தல் வருவதால் கோவில்களுக்கு செல்கிறேன் என்ற வாதத்தை மறுத்து, நான் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், முன்னர் கூட கோவில்களுக்கு சென்றுள்ளேன், எனக்கு பூர்ண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது” கூறிக் கொண்டார்[8]. மேலும் தொடர்ந்து சொன்னது[9], “கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்,” என்றார்[10].

stalin-atheist-visiting-temples-13-01-2018

ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன?: இப்படியெல்லாம் திடீரென்று செய்திகள் வரவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்க வேண்டியுள்ளது. 2019-தேர்தல் நேரத்தில் இவ்வாறு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்று தான், மக்கள் நினைப்பார்கள். நிச்சயமாக பொது மக்கள், திராவிட கட்சியினர் குறிப்பாக, திக-திமுக வகையறாக்களை இந்துக்களுக்கு சாதகமானவர்கள் என்று நினைக்கவே மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டாலினே நெற்றியில் வைத்த குங்குமத்தைத் துடைத்துப் போட்டது, மூன்று மாதங்களுல்லு முன்னர் ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்துக் கொண்டது போன்ற வேலைகளை ஸ்டாலின் செய்தது அனைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. அந்நிலையில், ஒருவேளை பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன், ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். வாஜ்பாயி காலத்தில் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. அத்தகைய கூட்டை 2019ல் வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கலாம். ஆனால், மக்கள் நம்புவார்களா? பிஜேபி இத்தகைய இந்துவிரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-09-2019

Stalin wiped out kumkum put on his forehead

[1] தமிழ்.இந்து, இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு..ஸ்டாலின் பேட்டி, பி.கோலப்பன், Published : 24 Sep 2018 15:32 IST; Updated : 24 Sep 2018 15:32 IST

[2] https://tamil.thehindu.com/tamilnadu/article25027406.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

[3] The Hindu, Stalin sees a bid to portray DMK as anti-God, anti-Hindu; terms it mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.

[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-interview/article25022253.ece

[5] The Hindu, Bid to portray DMK as anti-Hindu mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.

[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/bid-to-portray-dmk-as-anti-hindu-mischievous/article25025286.ece

[7] Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.

The Hindu, DMK – not anti-Hindu, B. Kolappan, October 17, 2015 00:00 IST; UPDATED: October 17, 2015 10:30 IST

[8] “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum  Ontrey Kulam Oruvaney Devan  (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said.  Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the  poorna kumbam .

https://www.thehindu.com/news/cities/chennai/dmk-is-not-antihindu-stalin/article7772219.ece

[9] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின், By Mayura Akilan Updated: Saturday, October 17, 2015, 13:20 [IST].

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-not-anti-hidhu-says-stalin-237922.html

Advertisements

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

ஓகஸ்ட் 11, 2018

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

Idols stolen from temples

பொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.

Idols stolen from temples- unsafe

ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.

 Vijakamuar senteced 3 yaers. Dinakaran

கேள்விபதில்கள் ழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.

பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?

அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.

அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

செக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.

இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?

இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.

இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?

கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.

ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?

இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Dispute over Pazhani idol

பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது.  சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,

  1. கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),
  2. கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),
  3. சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),
  4. நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது.  இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன.  அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.

வேதபிரகாஷ்

08-08-2018

Dhanapal coming out after bail 06-07-2018.Dinakaran cutting

[1] விகடன், பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம்,  Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).

DT.Next, HR and CE officials claim religious outfits backing IG Pon Manickavel, Published: Aug 07,201804:54 AM.

https://www.dtnext.in/News/TamilNadu/2018/08/07045432/1083250/HR-and-CE-officials-claim-religious-outfits-backing-.vpf

The Hindu, We are being targeted, allege HR&CE staff, STAFF REPORTER, CHENNAI, AUGUST 07, 2018 01:50 IST; UPDATED: AUGUST 07, 2018 01:50 IST

https://www.thehindu.com/news/national/tamil-nadu/we-are-being-targeted-allege-hrce-staff/article24618548.ece

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.

[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/ig-ponmanikkavel-not-identify-the-black-sheep-the-department-endowment-employees/articlecontent-pf318885-326698.html

[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையரிடம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.

[5] http://tamil.eenaduindia.com/State/Central/Trichy/TrichyCity/2018/07/31192203/Murugan-temple-statue-Navapashan-issue-Investigation.vpf

[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=418088

பாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்!

பிப்ரவரி 14, 2016

பாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்!

Jain mandir view from Lahore Anarkaliஜைனகோவில் குப்பைக் கொட்டும் இடமாகி இடித்துத் தள்ளப்பட்ட நிலை: பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் அனார்கலி பஜாரில் உள்ள, புகழ் வாழ்ந்த ஜைன கோவில் இருந்தது[1]. இது 1992ல், பாபரி மஸ்ஜித் இடித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டது[2]. அப்பொழுது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், செக்யூலரிஸ இந்திய அரசியல்வாதிகள், அரசாங்கம், மற்றும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜைன கோவில் சேதப்படுத்தியப் பிறகு, கடைகள் போன்றவை அதனுள் வைக்கப்பட்டு வியாபாரத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. லாஹூர் குப்பை அகற்றும் வாரியம் மற்றும் இன்னொரு தனியார் குப்பைக் கொட்டும் கம்பெனியும் [Lahore Waste Management Company (LWMC) and a private filling station] அக்கோவில் வளாகத்தை உபயோகப்படுத்தி வந்தன[3]. அந்த சாக்கில் ஒரு முல்லா ஒரு அறையை ஆக்கிரமித்துக் கொண்டு மதரஸா கூட நடத்தி வந்தார். இஸ்லாம் எப்படி இதையெல்லாம் அனுமதித்தது என்று யாரும் கேட்கவில்லை, விவாதிக்கவில்லை. குப்பைக் கொட்ட “நாங்களே உபயோகிக்கும் போது, நீயும் குப்பைக் கொட்டப்பா”, என்று விட்டு விட்டனர் போலும்.

Pakistan orange metro rail projectநீதி மன்ற ஆணையை மீறி இடிக்கப்பட்ட நிலை: 2016 ஜனவரியில் ஆரஞ்சு மெட்ரோ ரெயில் திட்டம் [Orange Line Metro Train (OMT) project] தொடர்பான எந்த வேலையும் சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களிலிருந்து 200 அடிகளுக்குள் இருக்கக் கூடாது என்று லாஹூர் உயர்நீதி மன்றம் தடை விதித்தது[4]. முன்னர் உச்சநீதி மன்றமும் ஆணை பிறப்பித்திருந்தது[5]. இருப்பினும் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பஞ்சாப் அரசு அப்புராதன ஜெயின் கோவிலை பிப்ரவரி.10, 2016 புதன்கிழமை அன்று காலை முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது[6]. ஷேக் தாவூத் ஜிலானி சொல்வதை உடனுக்கு உடன் செய்திகளாக வெளியிட்டும், மறுத்தும் விமர்சித்து வரும் ஊடகங்கள் அவ்வாறு உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நீதி மன்றங்கள் இயங்கும் முறை இவ்வாறுதான் உள்ளது போலும். அதாவது, இப்படி மெட்ரோ ரெயில் திட்டம் என்றெல்லாம் நவீனப்படுத்தப் பட்டாலும், இஸ்லாமிய நாட்டில் அடிப்படைவாதிகளை, பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை, ஜிஹாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாமல் தான் இருந்து வருகிறது.

Jain mandir view from Lahore Anarkali- in 2009கோவில் இடிப்புக்கு பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சிகள்: பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்கட்சி தலைவர் இதை எதிர்த்தாலும், நடந்தது, நடந்து முடிந்து விட்டது[7]. பஞ்சாப் முதல்வருக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் கத்தி ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனர்[8]. ஷரீப் சகோதரகளுக்கு – ஷாபாஷ் (பஞ்சாப் முதலமைச்சர்) மற்றும் நவாஸ் (பாகிஸ்தான் பிரதமர்) எதிராக குரல் எழுப்பினர்[9]. நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல அங்கும் மற்ற எதிர் கட்சிகள் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்ஸாப் [Pakistan Teh reek-e-Insaaf], பாகிஸ்தான் முஸ்லிம் லீக் [Pakistan Muslim League(Q)], ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)], பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party]  முதலியன ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனவாம்[10]. ஆனால், அவை மற்றும் அவற்றின் தலைவர்கள் அப்பட்யென்ன “சிறுபான்மையினர்” நலன்களை பாதுகாத்து வருகின்றனாரா? கொல்லப்படும், அடித்து நொறுக்கப்படும் நிலையில் தானே உள்ளார்கள்?

Jain temple that was demolished Feb.2016பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன்: பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன் கூட மக்கள் தங்களது கலாச்சாரத்தை காத்துக் கொள்ளும் உரிமைகளை தாக்காமல் இருக்க வேண்டும், அந்த ரெயில் திட்டத்தைப் பற்றி மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது[11]. கடந்த 70 ஆண்டுகளாக இந்த கமிஷன் இல்லையா அல்லது ஒன்றும் செயல்படாமல் இருந்ததா என்று தெரியவில்லை. இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப் படுகிறாற்கள் என்றேல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றையெல்லாம் ஏன் தடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் மனித உரிமைகள் பிரச்சினை வரவில்லையா?  இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும்? சும்மா சொல்லிவிட்டால் போதுமா?

Jain mandir Anarkali- demolished on 10-02-2016லாஹூர் நீதி மன்ற நடவடிக்கை எடுக்குமா?: கமால் மும்தாஜ் என்பவர் இதை எதிர்த்து லாஹூர் நீதிமன்றத்தில் ஒரு “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒன்றை பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்துள்ளாராம்[12]. மற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களையாவது விட்டு வைக்க ஆணையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்[13]. இதை நம்மவூர் துருக்க-பாய்கள் படித்தால், பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஏன் இந்து கோவில்கள் மறைந்து விட்டன, இந்து மக்கட்தொகை 33%லிருந்து, 7% ஆகக் குறைந்து விட்டது என்றெல்லாம் புதிர்களாக இருக்கின்றன. இத்தனை காலம் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது தான் மனித உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்களா?

Jain mandir view from Lahore Anarkali- demolished on 10-02-2016அயோத்தியா பிரச்சினை வைத்துக் கொண்டு கோவிலை இடித்த போது, அயோத்தியா நிலத்தில் முஸ்லிம்களுக்கு பங்கு கொடுத்தது போல, இங்கும் இடம் கொடுப்பார்களா?: மேலும் அவர்கள் பாகிச்தானில் என்ன அந்த கோவிலுக்கு இன்னொரு இடத்தை ஒதுக்குவார்களா, அங்கு கோவிலை கட்டிக் கொடுப்பார்களா அல்லது கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்ம ஊரில், உச்சநீதி மன்றம், அயோத்தியா கோவில் வளாக நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்குக் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டும். ஆகவே, பாகிஸ்தானிய எதிர்கட்சிகள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தன என்றால், உள்ளூர் அரசியல் செய்துள்ளன அவ்வளவே. அங்கு மைனாரிடியாக உள்ள சீக்கியர்களின் ஓட்டு அவர்களுக்குத் தேவை, அதனால், தங்களது “செக்யூலரிஸாத்தை” இவ்வாறு காட்டிக் கொண்டுள்ளார்கள் போலும்.

Pakistan orange metro rail project- Jain temple demolishedஐநா, நீதிமன்றம் சொல்லதை கேட்காத அரசு யார் சொல்வதை கேட்கும்?: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள்? ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது? ஆமாம், இடித்துத் தள்ளியாகி விட்டது.

© வேதபிரகாஷ்

14-02-12016

[1] The Tribune, Violating HC order, historic Jain temple demolished in Lahore, Posted at: Feb 13, 2016, 1:31 AM

[2] http://www.tribuneindia.com/news/punjab/violating-hc-order-historic-jain-temple-demolished-in-lahore/195631.html

[3] Hidustan Times, Historic Jain temple demolished in Pak to pave way for metro project, PTI, Lahore, Updated: Feb 12, 2016 18:54 IST.

[4] http://www.hindustantimes.com/world/historic-jain-temple-demolished-in-pak-to-pave-way-for-metro-project/story-XOUemmN7KJlG0Iua9JAlJN.html

[5] http://zeenews.india.com/news/india/historic-jain-temple-demolished-in-lahore-to-construct-metro-train-route_1854965.html

[6] On Wednesday morning (10-02-2016), the local administration demolished the building belongs to already damaged temple, shops and office of the Lahore Waste Management Company (LWMC) to clear the area for the train route.

http://www.dailytimes.com.pk/national/10-Feb-2016/orange-line-train-jain-mander-adjacent-buildings-demolished

[7] Times of India, Historic Jain Temple demolished in Lahore, Yudhvir Rana | TNN | Feb 12, 2016, 08.40 AM IST

[8] Daily Times, iian’s temple demolished in Lahore, Kashif Hussain, February 10, 2016, 07.05 am.

[9] Asian Age, Lahore’s iconic Jain temple razed, M. Zulqernain, Lahoe, Feb.12, 2016.

[10] http://timesofindia.indiatimes.com/india/Historic-Jain-temple-demolished-in-Lahore/articleshow/50955160.cms

[11] The Human Rights Commission of Pakistan called upon the Punjab government to review the project and desist from attacking the people’s basic rights to preservation of their heritage.

http://www.deccanchronicle.com/world/neighbours/120216/historic-jain-temple-demolished-in-lahore-for-controversial-metro-project.html

[12] Deccan Chronicle, Historic Jain temple demolished in Lahore, PTI, PublishedFeb 12, 2016, 4:13 pm IST; UpdatedFeb 12, 2016, 4:38 pm IST

[13] http://www.asianage.com/international/lahore-s-iconic-jain-temple-razed-189

[14] UN Special Rapporteur in the field of cultural rights Karima Bennoune, in a press release issued on Friday by the United Nations Human Rights Office of the High Commissioner, said that the project (OMT) passes through the historic centre of Lahore, threatening pre-partition buildings, minority places of worship, historic tombs, shrines and great gardens, many of which are registered protected heritage sites. She said that these sites were of importance not only to local people and the entire cultural landscape of Lahore but are of national significance for the history and cultural heritage of Pakistan. “The project will not only destroy physical sites but the ways of life that have been developed there, that people cherish and through which they express their dignity and identity,” she said.

http://www.dailytimes.com.pk/punjab/23-Jan-2016/un-urges-pakistan-to-halt-construction-of-orange-metro-train

[15] Daily Times, UN urges Pakistan to halt construction of Orange Metro Train, January 23, 2016.

ஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்?:

திசெம்பர் 12, 2015

ஐயப்பனின் கிருத்துவ நண்பன் வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன்  யார்?:

Myth-story telling Pius Arattukulam about arthunkal

ஆன்மீகதலத்தை, சுற்றுலாதலம் போல வைத்து பொருளாதார ரீதியில் கணக்கு போடுவது: கோடிக்கணக்கில் ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்வதினால், போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு, சுற்றுலா கோணத்தில் ஆராய்ச்சி, கணக்கீடுகள் முதலியன நடந்து வருகின்றன[1]. இப்பக்தர்கள் கூட்டமெல்லாம், “வந்து-சென்றுவிடும்” கூட்டம் ஆதலால், அப்பொழுதைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும் என்ற ரீதியில், குறுவியாபாரிகளை வைத்துக் கொண்டு, பெரிய ஏஜென்ட்-வியாபாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். திரும்பச் செல்லும் போது, பிரசாதம், டாலர்கள், மாலைகள், பொம்மைகள் முதலியவற்றை வாங்கிச் செல்வார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். பக்தி பாடல்கள் அடங்கிய காசட், இப்பொழுது சிடி நிச்சயமாக 5,000 விற்பனையாகும் என்று தீர்மானிக்கின்றனர்[2]. இத்தகைய வியாபார நோக்கு, பக்தியைத் தாக்கும் என்பது திண்ணம். இவையெல்லாமும், “வாவர் பள்ளி” போன்று வருடாவருடம் உருவாக்கப்படுபவை தான். நாளடைவில், சபரிமலை யாத்திரையில், ஒரு அங்கமாகி விடும். ஆகவே, சபரி மலை யாத்திரையின் புனிதத்தைக் காக்க வேண்டும். இடைக்காலத்திலிருந்து, கோவில் கட்டுப்பாடு, ஆங்கிலேயர், கம்யூனிஸ்டுகள் என்று கைமாறி இருக்கும் பட்சத்தில், வருமானம் வருவதால், செலவழிக்கிறோம் / சதி செய்து தருகிறோம்  என்ற நிலையில், அனைத்துமே எச்சரிக்கையுடன்  கவனிக்கப்பட வேண்டியவைதான்.

Veluthatchan, Vavar, arthunkal

ஐயப்பனின் கிருத்துவ நண்பன் வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன்  யார்?: கிருத்துவர்களும், ஐயப்பனுடைய நண்பர் ஒரு கிருத்துவர் என்ற கதையை உருவாக்கினர். 2008ல் அர்துங்கல் என்ற இடத்தில் உள்ள சர்ச் [Stephanos Church at Arthungal] ஐயப்பனின் நெருங்கிய நண்பனால் கட்டப்பட்டது என்றும், அவன் வேலுதா, வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன் [Velutha / Veluthachan / Arthunkal Veluthachan] என்ற கிருத்துவன் என்றும், அதனால், சபரிமலைக்கு போகும் பக்தர்கள் இந்த சர்ச்சுக்கு வந்து செல்ல வேண்டும் ஒரு கதையை ஆரம்பித்தனர்[3]. இது கடற்கரையில் சபரிமலைக்குத் தொலைவில் உள்ளது. வெளுத்தச்சன் = வெளுத்த அச்சன் என்றால், வெள்ளைக்கார அப்பா, அதாவது “பறங்கியன் / வெள்ளைக்காரன்” என்பது மலையாளத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது. உண்மையில் போர்ச்சுகீசியர் இங்கிருந்த ஒரு கோவிலை இடித்து, ஒரு சர்ச்சைக் கட்டினர். பிறகு அது புதுப்பிக்கப்பட்டது. இது அவர்கள் இடித்த எத்தனையோ கோவில்களுள் ஒன்று என்று தெரிகிறது. இதேபோல, இந்த ஆன்ட்ரூஸ் [St Andrew’s Church at Arthunkal in Alappuzha District] சர்ச் பற்றிய கதை வேறுவிதமாக சொல்லப்பட்டது. பயஸ் அரட்டுக்குளம் [Church Vicar Fr Pius Arattukulam] என்ற பாதிரி, இச்சர்ச்சின் பூஜாரிகளில் ஒருவன் ஐயப்பனின் நண்பன் என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்[4]. இவரின் கதைப்படி, 1584ல் பாதிரியான ஜெகோமோ பெனிசியோ [Fr Jacomo Fenicio] என்பவன் தான் ஐயப்பனின் தோழனாம்! “மனோரமா”வோ, அந்த நண்பன் செபாஸ்டியன் என்றே குறிப்பிடுகிறது[5]. இது இந்து-கிருத்துவ மதங்களின் ஒற்றுமையின் சின்னமாக இருக்கிறது என்று “டெக்கான் ஹெரால்டில்” வந்துள்ளது[6].  அப்பொழுது, “டெக்கான் ஹெரால்டுக்கு”, ஒரு பதில்லை அனுப்பியிருந்தேன், ஆனால், அவர்கள் போடவில்லை.

Arthunkal church at 22 kilometers north of Alappuzha town - imitating Ayappa movement

டெக்கான் ஹெரால்டுக்குஜனவரி.19, 2010ல் அனுப்பிய கமென்ட்ஸ்[7]: “வாவரைப் போலவே, இந்த ஆள், ஐயப்பனின் நண்பன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஐயப்ப பக்தர்களை ஏமாற்றுவதற்கு, “அமர்-அக்பர்-அந்தனி” பாணியில் இக்கதையை உருவாக்கப் பார்க்கிறார்கள் போலும்! இதற்கு சரித்திர ஆதாரம் எதுவுல் இல்லை என்பதனால், முளையிலேயே இதனை கிள்ளியெறிய வேண்டும். தாமஸ் கட்டுக்கதையினை உறுதிசெய்ய, இதனை நுழைத்து, இதனை ஐயப்பனுடன் சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள். அந்த பாரிஷில் / சர்ச்சில் உள்ள ஆவணங்களை, அவர்கள் தமதிச்சைக்கேற்றவாறு, எப்படி வேண்டுமானாலும் மாற்றி-மாற்றி எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றின் தேதிகளை கண்டுபிடித்தால் உண்மை தெரிந்து விடும். அதனால், அவற்றின் தேதிகள் வரும் வரை கிருத்துவர்கள் அமைதியாக இருப்பது நல்லது”, என்று அனுப்பினேன், ஆனால், அவர்கள் அதனை வெளியிடவில்லை. அதேபோல, அவற்றையும் சோதனைக்கு அனுப்பவில்லை!

Old Church situated behind StAndrews Church of Arthunkal

ஐயப்ப யாத்திரையை காப்பியடித்து நடத்தும் கார்த்திகை மாத விழாக்கள்: ஜூலை 2010ல் இதற்கு பெசிலிகா என்ற அந்தஸ்தை கொடுக்கப்பட்டதால், இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்று தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் யாத்திரைப் போலவே, அதே காலத்தில் டிசம்பர்.10 முதல் ஜனவரி 27 தேதிகளில் மாலையணிந்து இந்த சர்ச்சுக்கு வருகின்றனர். ஜனவரி 20ம் தேதி தேரில் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியை வைத்துக் கொண்டு ஊரவலமாக செல்கின்றனர். “தி இந்து” இதற்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்து வருகிறது[8]. இங்கு மாலைகளைக் கழற்றி வைக்கின்றனர். உண்மையில், ஐயப்ப பக்தர்கள், விரதத்திற்கு அணிந்த மாலையை இங்கு கழட்டி வைப்பது சரியில்லை. ஆகவே, கிருத்துவர்கள் இந்துக்களை ஏமாற்றவே இத்தகைய முறைகளை புதியதாக ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, இந்து கோவிலை அடித்து, அதற்குண்டான பெரிய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, தாமஸ் கட்டுக் கதையுடனும் இணைக்கின்றனர்.  வெளுத்தன், வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ என்றெல்லாம் சொல்லி, அது செபாஸ்டியன் என்கின்றனர்.  இவ்வாறு கட்டுக்கதைகளைப் புனைவதற்கு இவர்களுக்கு துளிக்கூட வெட்கம் இல்லை என்று தெரிகிறது. 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, இக்கட்டுக்கதையை இந்தியாவில், போர்ச்சுகீசியரால் பரப்ப ஆரம்பிக்கப் பட்டு, இப்பொழுது, ஐயப்பனின் நண்பன் என்ற நிலையில் வந்துள்ளது.

veluthachan - வாவரை காப்பியடித்து உருவாக்கப்பட்டது

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!: இத்தலைப்பில், 2010ல் நான் செய்த பதிவு இது[9] – ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்! எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி? 1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்! என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா? பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்! இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது. ஐயப்ப பக்தர்களே உஷார்! இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!

 priest holding sacred mala removed by Ayyappa devotees at Arthunkal Basilica. Photo Manorama

கிருத்துவர்களால் சொல்லப்படும் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம். ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே  கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அந்நியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன. இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

st Sebastian myth develped during 16th cent CE

© வேதபிரகாஷ்

12-12-2015

[1] Muraleedharan, K. P. “Economic Benefits of Pilgrimage Tourism: A Case Study of Sabarimala Pilgrimage with Special Reference to Pandalam Rural Locality in Kerala (India).” (2009).

[2] Shetty, Kavitha. “Divine Pop.” (1990).

[3] http://www.haindavakeralam.com/amritha-tv-spreading-hk14941

[4] Legend has it that one of the early priests of the church was a friend of Lord Ayyappa, the adopted son of the King of a small principality called Pandalam, now in Pathanamthitta District, Church Vicar Fr Pius Arattukulam said.

http://www.deccanherald.com/content/46635/church-portals-open-ayyappa-devotees.html

[5] The belief –Lord Ayyappa, it is said, used to be very friendly with St Sebastian. They were so close that the two were considered brothers by people of both the religions. It is this ideal of religious harmony that draws Sabarimala pilgrims to Arthunkal Basilica.

http://travel.manoramaonline.com/travel/travel-news/why-ayyappa-devotees-visit-arthunkal-basilica.html

[6] A 16th century Catholic Church built by Portuguese missionaries in a coastal hamlet near here stands out as a model of religious harmony with a tradition of hosting Hindu pilgrims returning after worshipping Lord Ayyappa at the famous Sabarimala temple.

Deccan Herald, Church portals open for Ayyappa devotees, Last updated: 13 January, 2010

[7]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/

[8] http://www.thehindu.com/news/national/kerala/arthunkal-church-fete-gets-under-way/article6779690.ece

[9]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/