குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது – பிஜேபிக்கு லாபம் உண்டா, ஆர்.எஸ்.எஸ் சுயபரிசோதனை செய்யுமா? (3)

ஹத்ராஸ் விசயத்தில் காங்கிரஸ் தலைவர்களைப் போற்றி, மோடி-யோகி முதலியோரை நக்கலடித்து பேசிய குஷ்பு, எப்படி மாறினார்?: 05-10-2020 அன்று, குஷ்பு[1], “அமித் ஷா நலம்பெற ட்விட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது[2]. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது[3]. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்,’’ என்று தெரிவித்தார்[4]. இந்த வீடியோவும் இன்னும் சுற்றில் உள்ளது. ஆனால், 12-10-2020 அன்று பிஜேபியில் சேர்ந்த செய்தி வருகின்றது, அப்படி ஒரு வாரத்தில் என்ன நடந்தது? குஷ்பு எப்படி தலைகீழாக பல்டி அடிக்க முடிந்தது? தில்லியில் பிஜேபி தலைவர்களை சந்திப்பது ஒரே நாளில் அரங்கேற்றம் நடத்த முடியுமா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் யோசிக்க வேண்டிய விசயம் ஆகிறது: சினி.ரிப்போர்டர்ஸ்.காம்[5], “ட்விட்டரில் பக்தாஸை விரட்டி, விரட்டி அடிச்சீங்களே. நீங்கள் போய் இப்படி பாஜகவில் சேரலாமா?. இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என்னமா இப்படி பண்றீங்களேமா என்று தெரிவித்துள்ளனர். குஷ்பு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்க காத்திருப்பதாக கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார். அதை பார்த்தவர்கள், முதலில் குஷ்பு பாஜகவுக்கு சென்றிருக்கிறார். அடுத்து நீங்களா?. உங்களை கூட பாஜகவில் சேர வருமாறு அழைத்ததாக அண்மையில் கூறினீர்களே. அக்கா, நீங்களும் அந்த பக்கம் போய்விடுவீர்களா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் ஏன் நடிகைகளை தங்கள் கட்சியில் சேர வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சங்கிகள் எல்லாம் மங்கிகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று சொன்ன குஷ்பு பாஜகவுக்கு சென்றுவிட்டாரே கஸ்தூரி அக்கா. இது பற்றி உங்கள் கருத்து என்ன?. பாஜகவில் குஷ்பு என்கிற தலைப்பில் தயவு செய்து உங்கள் யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிடுங்கள். உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறோம் கஸ்தூரி அக்கா என்று தெரிவித்துள்ளனர்,” இப்படி தமாஷாக போட்டாலும், அதில் உள்ள விவகாரங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்[6]. இத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தன்னுடைய ஒழுக்கமுள்ள இயக்கம், தூய பிம்பம் கறை படாமல் காத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

குஷ்புவின் தனிப்பட்ட பிரச்சினையை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?: மார்ச் 2020லேயே தான் காங்கிரஸிலிருந்து விலக தீர்மானித்ததாகவும், கொரோனா விவகாரத்தினால், நேரியையாக மேலிடத்தை சந்திக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். அழகிரி முடிந்த வரை சமாதனம் செய்தும் ஒப்புக்கொள்ளவில்லை. தனது ராஜினாமா கடிதத்தில்[7], “……..பணத்துக்காகவோ, புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை. களத்திலிருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள்[8]. கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப் போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவதோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்[9]. இந்தச் சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்,’’ என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்[10]. அந்நிலையில், பிஜேபியில் இணைந்தால், வெல்லக்கூடிய எம்.எல்.ஏ சீட், அல்லது ராஜ்ய சபா எம்பி அளிக்கப் படும் என்றதால்[11], கவர்ச்சிகர ஸ்டார் பிரச்சாரகர் என்ற முறையில் இணைக்கப் பட்டுள்ளதாக, ஒரு பிஜேபி தலைவர் கூறினார்[12]. இருப்பினும், அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?

பெண்களை வைத்து பிஜேபி செய்து வரும் பரிசோதனை: பிஜேபி ஏற்கெனவே நடிகைகள், பெண்-பேச்சாளர்கள் முதலியோரை வைத்து செய்த பரிசோதனைகள் நிறையவே உள்ளன. லக்ஷ்மி, கௌதமி, ஜெயலக்ஷ்மி, காயத்ரி, ஜெமிலா, பர்வீன் சுல்தானா, நமிதா….. என்றுள்ளனர். தமாஷாக “அம்மாடியோவ்! பயங்கர ஜொல்லு பார்ட்டி (BJP) தான்!,” என்று கிண்டலடிப்பதும் உண்டு, ஜெயபிரதா, ஹேமாமாலினி, கிரண் கேர்,, வைஜயந்தி மாலா, தீபிகா, ரூபா கங்குலி, சௌந்தர்யா, ஸ்ருதி… போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா, என்று தொடர்ந்தது. மதுவந்தி, குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, சுபத்ரா முகர்ஜி, காஞ்சனா, ரூபாஞ்சனா, ரிம்ஜிம்,… ….அடடா ஜில்ஜில் தான்! இன்னும் யாரல்லாம் .. வரப் போகிறார்களோ? மாதவி லதா, ஆஷா பர்தோலாய், அங்கூர் லதா டேகா, பிரியங்கா காலிதா, ரித்திகா அஸாரிகா, பிரதிமா தேவி, ஜெயஶ்ரீ கோஸ்வாமி..என்று தொடரும். வடகிழக்கு மாநிலங்கள் (வங்காளம் உட்பட) லாக்கட் சட்டர்ஜி, மௌமிதா குப்தா, மௌசுமி சட்டர்ஜி, ரூபா பட்டாச்சார்யா, அஞ்சு கோஸ், அஞ்சனா பாசு, ஈஷா கோபிக்கர், ஷைனா……….என்றுள்ளனர். ஏக் துஜே கே லியே போல ஒரு பாட்டே எழுதலாம் போலிருக்கிறது! லாக்கட், ரிம்ஜிம், மௌமிதா, மௌசுமி, அஞ்சு, அஞ்சனா, நமிதா…………ஆனால், குஷ்பு நிறையவே திட்டியிருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணர் சிசுபாலனை 100 திட்டுக்கள் திட்ட அனுமதித்து, பிறகு கொல்லத்தான் செய்தார். கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை! அம்மாவின் வேண்டுகோளை மதித்தார்! காங்கிரஸ் மற்ற திராவிடக் கட்சிகளைப் பொன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை! கொள்கையுடன் இருப்பவன் மாறமாட்டான்! இதில் ஏற்கெனவே பல பெண்கள் விலகிவிட்டார்கள்.

பிஜேபியை, மோடியை, ராமஜன்ம பூமி என்று எல்லாவற்றையும் விமர்சித்த குஷ்புவை எப்படி அணுகப் போகிறார்கள்?: குஷ்புவின் டுவீட்டுகள் அசாதாரணமானவை. அவற்றை எல்லாம் தமிழில் போட்டால், இந்துத்துவ வாதிகளால் தாங்க முடியாது.
- மோடியை, ராமஜன்ம பூமி விவகாரத்தை, ராமரை விட மோடி பெரிய ஆள் ஆகி விட்டார், என்று “ராமரை மோடி கோவிலுக்கு அழைத்துச் செல்லும் படம்” போட்டு கிண்டலடித்தார். எப்பொழுடு வெடிக்கும் என்று சொல்ல முடியாது, என்றது.
- “மன் கி பாத்-ல் பேசுகின்ற விசயங்கள் வெடிகுண்டுகளாக டிக்-டிக் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்றன”,
- மற்ற விவகாரங்களை, “அச்சே தின்” என்று வாக்களித்தது இது தானா, என்று பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டது.
- मोदी है तो मुमकिन है (மோடி இருந்தால் அது சாத்தியமாகும்) என்று சாலையில் பள்ளம் உண்டான போட்டோவைப் போட்டு என்று கிண்டல் அடித்தது,
- இவற்றையெல்லாம் பிஜேபி-காரர்கள், மோடி-பக்தர்கள், காவி போராளிகள் மறந்து விடுவார்களா?
இவையெல்லாம் இம்மாதம் வரை தொடர்ந்துள்ளது. அப்படியென்றால், காங்கிரஸா-பிஜேபியா என்ற நிலையில், ஜாக்கிரதையாக கடைசிவரை செயல்பட்டுள்ளார். எங்கு சாதகம், பாதுகாப்பு, பலன் என்று ஆராய்ந்து, பேரம் பேசித்தான், தீர்மானத்துடன், பிஜேபியில் சேர்ந்தார் என்று தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் நியாயப் படுத்தப் பார்க்கிறார்கள். குஷ்பாவ் தாகரே (15 August 1922 – 28 December 2003) என்று பிஜேபி தலைவர் மற்றும் எம்.பி இருந்தார். அவரை எத்தனை தமிழக பிஜேபி-காரர்களுக்குத் தெரியும்? அவரையே மறந்து விடும் அளவிற்கு, இன்னொரு குஷ்பு / வாசனை வந்திருக்கிறது! போகின்ற வேகத்தைப் பார்த்தால், “பாரத் மாதாகி ஜே” என்பதற்கு பதிலாக, “குஷ்பு மாதா கி ஜே,” என்று கோஷம் போடுவார்கள் போல!
© வேதபிரகாஷ்
13-10-2020

[1] ஏசியாநெட்.நியூஸ், அமித் ஷாவுக்காக ட்விட் போட்டால் நான் பா.ஜ.க.,காரியா..? கொந்தளிக்கும் குஷ்பு..! , Thiraviaraj RM, Tamil Nadu, First Published 5, Oct 2020, 6:41 PM…
[2] https://tamil.asianetnews.com/politics/if-i-tweet-for-amit-shah-will-i-join-bjp-kariya-turbulent-khushbu-qhqcnd
[3] மாலை மலர், பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள் – குஷ்பு, பதிவு: அக்டோபர் 05, 2020 18:32 IST
[4] https://www.maalaimalar.com/news/district/2020/10/05183244/1942351/Kushboo-says-He-is-rumored-to-be-joining-the-BJP.vpf
[5] சினி.ரிப்போர்டர்ஸ்.காம், மரம் விட்டு மரம் தாவும் குஷ்பு… என்ன ஆச்சு.. டிரெண்டிங்கில் முதலிடம்!, By Cinebazaar Web Mon, 12 Oct 2020.
[6] https://cinereporters.com/latest-news/kushboo-joints-bjp-in-tomorrow/cid1501215.htm
[7] புதிய தலைமுறை, ‘சிலர் என்னை ஒடுக்கினர்’ – காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல், Web Team, Published :12,Oct 2020 10:02 AM
[8] http://www.puthiyathalaimurai.com/newsview/83536/kushboo-resigned-from-congress
[9] விகடன், மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு, தினேஷ் ராமையா, Published:12 Oct 2020 9 AM, Updated:12 Oct 2020 9 AM.
[10] https://www.vikatan.com/news/politics/kushboo-quits-congress-and-from-all-responsibilities
[11] Indian Express, Explained: After battling BJP for long, why has Khushbu Sundar joined BJP?, Written by Arun Janardhanan, Edited by Explained Desk | Chennai | Updated: October 13, 2020 10:38:16 am
[12] A senior BJP leader from Tamil Nadu who was not aware about Khushbu’s decision until Sunday night said she is going to be the star campaigner of BJP in Tamil Nadu. “A winnable MLA seat can make her an MLA or even a Rajya Sabha MP post when the time comes,” he said.
https://indianexpress.com/article/explained/khushbu-sundar-bjp-congress-6722127/