இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, ஜாமீனில் வெளியே, ஆனால், தெய்வக்குற்றத்தை மறைக்க முடியுமா? [3]
கவிதாவை அடுத்து, திருமகள்: சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்தவழக்கில், அறநிலையத் துறை பெண் அதிகாரியை, கைது செய்ய மாட்டோம் என, உயர் நீதிமன்றத்தில், தனிப்பிரிவு போலீஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமின் விசாரணையை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட பிறகு, இன்னொரு அதிகாரி கைது செய்யப்படுவதாக இருந்தது. கவிதாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்[1]. இந்நிலையில், அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக உள்ள, திருமகள் என்பவர், முன்ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனு, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது[2]. போலீஸ் தரப்பில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதுவரை, கைது செய்ய தடை விதிக்கும்படி, திருமகள் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் கோரினார்[3]. இதையடுத்து, ‘தற்போது, பெண் அதிகாரியை கைது செய்ய மாட்டோம்’ என, தனிப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்[4].
பக்தியுள்ள பெண்கள் இவ்வாறு மோசடிகளில்,. கொள்ளைகளில் ஈடுபடுவார்களா?: இப்பெண்களை பார்த்தால், குங்குமம், சந்தனம் ….என்றெல்லாம் நெற்றியில் வைத்துக் கொண்டு, மங்கலமாகக் காட்சியளிக்கின்றனர்.. கோவில் நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு, சகல மரியாதைகளையும் பெறுகின்றனர். அதற்கான செலவெல்லாம் துறையின் கணக்கில் தான் எழுதப் படுகிறது. மக்களின், அதாவது, இந்துக்களின் பணம் தான் செலவாகிறது. ஆனால், இத்தகைய தெய்வக் குற்றங்கள் செய்யும் முறையில், எப்படி அவர்களால் முடிந்தது, முடிகிறது? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் எப்படி இருந்திருக்க முடியும்? எப்பொழுதாவது, ஒருமுறையாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்கள் இல்லையா? ஆனால், அதையும் மீறி செய்துள்ளனர் எனும் போது, அத்தகைய உணர்வு போய் விட்டது என்றாகிறது. நாத்திகத்தில் ஊறி, கடவுள் இல்லை, ஒன்று செய்யது, செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றாகிறது. இதை முழுவதுமாக ஆராய வேண்டியுள்ளது. உண்மையில், மனோதத்துவ மருத்துவர்கள், வல்லுனர்கள், இத்தகைய மனப்பாங்கை ஆராய்ந்தால், பல உண்மைகள் வெளிவரும்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியது: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது, அவற்றின் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விகடன் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகளை ஆதரிக்கும் அவர்கள் அறநிலையத்துறையில் வேலைப் பார்க்கவே யோக்கியதை அற்றவர்கள் என்று வெளிப்படுத்திக் காட்டுகிறது. “இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குற்றவாளிகளைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. ‘குற்றம் செய்தால் தூக்கில் கூட போடுங்கள்’ என்பது நாடகம் போல தெரரிகிறது. ஏனெனில், அவர்களரந்ஹ அளவுக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளது வெளிப்படுகிறது. சிலைகள் குறித்த புள்ளி விவரங்களை பொன். மாணிக்கவேல் கேட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி தனபால் அந்தத் தகவலை கொடுக்கவில்லை என்று ஒப்புக் கொண்டது, துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் காட்டுகிறது. பாதுகாப்பின் மீது அந்த அளவுக்கு அக்கரை இருந்திருப்பின் இந்த அளவுக்கு கொள்ளைகள் அதிகரித்திருக்காது. அதாவது, துறைக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அப்பட்டமாகவே காட்டுகிறது.
புள்ளி விவரங்கள் தெரிந்த தலைவருக்கு, குற்றம் புரிபவர்களை கண்டுபிடிக்கத் தெரியாதா, கட்டுப் படுத்தக் கூடாதா?: சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு தனபாலை கைது செய்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. தனபால் அதனால் கைது, கவிதா கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டதாக சொல்லச் சொல்லி முத்தையா ஸ்தபதியைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள், என்பதெல்லாம் ஆலோசகர் கூறும் பதில்கள் போல இருக்கின்றன. ஏனென்றால், அவரே, அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன, இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு 18 சிலைகள் மட்டும் கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதாவது விவரங்கள் இல்லை, 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். அதாவது போலீஸ் துறையின் மீது, அறநிலையத் துறை குற்றஞ்சாட்டுகிறது! இவ்வாறான பரஸ்பர குற்றச்சாட்டு, நாத்திகத்தை வெளிப்படுத்துகிறது.
நூறாண்டு கொள்ளையை மறைக்க முடியாது: உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, ஆனால், புதிது புதிதாக வழக்குகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மீது வேண்டுமென்றே போலீஸ் பதிவு செய்து வருகிறது என்றெல்லாம் தொடர்ந்து அடுக்குகிறார். பக்தர்களுக்கு இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் முதலியவை தேவையில்லையே, ஏன், எவ்வாறு, எப்படி திருடப்பட்டன என்பதற்கு பதில் இல்லையே? 1920 முதல் 2017 வரை திருட்டு என்றால் நீதிக்கட்சி முதல் திக, திமுக, அதிமுக வரை ஆட்சி செய்த இந்து-விரோத நாத்திகர்ளின் பங்கு வெளிப்படுகிறது. மேலும், “அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அதற்காக தமிழகத்தில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடவைத்து பொன்.மாணிக்கவேலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இயக்குகிறது,” என்பது, உண்மை நிலையை மாற்றாது. அறநிலையத்துறை அதிகாரிகள், இவ்வாறாக சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி, ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள், என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், 1920-2018 என்ற காலகட்டத்தைப் பற்றி ஆய்ந்து பார்க்கவில்லை.
திராவிட நாத்திகமும், இந்துவிரோததும், நோயும்-மருந்தும்: “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்,” என்பது இத்துறைக்குப் பொறுந்தும். நூறாண்டுகளாக திராவிட சித்தாந்தத்தின் இந்துதூஷணம், அரசியல்வாதிகளின் இந்துவிரோதம், முதலியவற்றில் ஊரிக் கிடந்ததால், இவகளுக்கு எல்லாமே மரத்து விட்டது. தினம்-தினம் உண்டியல் உடைப்பு, சிலை திருட்டு, கோவில் சொத்து அபகரித்தல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தியும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. பிறகு, கோவில் திருட்டு, கொள்ளை, அபகரிப்பு முதலியனவும் எப்படி அதிகமாகும், தொடரும்? கூட்டுக் கொள்ளை திட்டமிட்டு நடப்பதால் தான் ஏதுவாகிறது. பலநிலைகளில் அவை மறைக்கப் படுகின்றன. இத்துறைகளின் திருட்டு வேலைகள் இவ்வாறாக வெளிப்படுகிறன. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று ஊளையிட்ட திராவிடத்தின் ஊழல் அவர்களின் தோட்டத்திலேயே மணக்கவில்லை, நாறுகின்றது. தமிழ், தமிழர், தமிழர் தெய்வம்… என்றெல்லாம் ஊளையிடும் வீரர்களும் இதைப் பற்றி பேசாமல் இருப்பது அத்தகைய பிரிவினை சித்தாந்தம், இந்துவிரோதமாக செயல்படுவதைக் காட்டுகிறது. ஆக நோய் முதல் திராவிட நாத்திகம், நோய்நாடினால் அது இந்து தூஷணம் என்றெல்லாம் இருப்பதை கவனிக்கலாம். இனி அது தணிக்க வேண்டுமானால், வாய்நாடி வாய்ப்பச் செய்ய வேண்டியதுள்ளது.
வேதபிரகாஷ்
08-08-2018
[1] தினமலர், பெண் அதிகாரி கைது இல்லை ஐகோர்ட்டில் தனிப்பிரிவு தகவல், Added : ஆக 10, 2018 01:34
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2077746
[3] மாலைமுரசு, சாமி சிலை வழக்கு– கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை, பதிவு: ஆகஸ்ட் 09, 2018 15:10
[4] https://www.maalaimalar.com/News/District/2018/08/09151028/1182697/Swamy-idol-case-HC-Bans-arrest-Additional-commissioner.vpf