“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [1]
“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” – புத்தக வெளியீடு (08-03-2019): 06-o3-2019 அன்று காஞ்சிபுரத்தில், மோடி என்.டி.ஏ தேர்தல் கூட்டத்தை ஆரம்பித்த அதே நாளில், அதிமுக அரசு “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” [‘Is Nadars’ history black or saffron?’] என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடத்த அனுமதி மறுத்தது என்ற பீடிகையுடன், TheMewsMinute பீடிகையுடன் விசயத்தை ஆரம்பித்தது[1]. வைகை லா பர்ம் [Vaigai Law Firm] என்ற கம்பெனி[2] நடத்தி வரும், லஜபதி ராய் அப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், அப்புத்தகம் ஜாதி மற்றும் மதம் சம்பந்தப் பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை சொல்பவர்களாகவும் இருப்பதால், அனுமதி மறுக்கப் படுகிறது என்று 06-03-2019 அன்று தெரிவித்தது[3]. மற்றபடி, “ஏ.ஆர்.மெய்யம்மை” என்பவர் எழுதிய அந்த செய்தி தொகுப்பு, இடதுசாரி மற்றும் திக-கம்யூனிஸ சித்தாந்திகளுக்கு வக்காலத்து வாங்கும் போக்கில் இருந்தது[4]. பிறகு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அந்நிகழ்ச்சி நடைபெற்றது என்ற செய்தி வந்தது[5]. அப்புத்தகத்தை இலக்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும், தேவையானால், மாற்றுக் கருத்தை அதே போல வெளியிடலாம் என்று நீதிபதி தெரிவித்தாராம்!
“I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.”: நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன் சொன்னது, “However, a division bench of justice granted permission citing that the book is an addition to the Tamil literature irrespective of its contents” – அப்புத்தகத்தில் என்ன இருந்தாலும், அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சேர்ப்பாக இருக்கும் என்று எடுத்துக் காட்டி அனுமதி கொடுத்தார் நீதிபதி[6].இத்தகைய புத்தகங்களை எல்லாம் இலக்கியத்தில் சேர்த்தால் இலக்கியத்தின் கதி என்னவாகும் என்று கவனிக்க வேண்டும். தீர்ப்பைப் படித்தால், கருத்துரிமை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்ற இயக்கங்கள் உபயோகம் பற்றி அலசியுள்ளது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசு பள்ளிகளில் சாகா செயல்படுவதை தடுக்க முடியாது என்ற தீர்ப்பின் ஆதாரமாக, இவர்களுக்கும், அந்த அரசு அரங்கத்தில் இடம் மறுக்கக் கூடாது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. முடிவாக அவர் பதிவு செய்தது[8], “I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.” “கடந்த காலம் கருப்பாக இருக்கட்டும், அல்லது காவியாக இருக்கட்டும், ரோஜாவைப் போன்று [நன்றாக, சிறப்பாக, மென்மையாக] இருக்கட்டும்.” இதை இந்த கம்யூனிஸ கூட்டத்தில் உருவர் கூட எடுத்துக் காட்டவில்லை, மாறாக, அந்த நீதிபதி ஒரு பிராமணர் என்று எடுத்துக் காட்டியது திகைப்பாக இருக்கிறது. கம்யூனிஸ-மோடி-எதிர்ப்புக் கூட்டத்தினரில் வழக்கறிஞர் பலர் இருந்தலும், நீதிபதி குறிப்பிட்ட அந்த கடைசி வரி ஏன் நினைவுக்கு வரவில்லை என்பது விசித்திரமாக உள்ளது.
விழாவிற்கு அனுமதி, மறுப்பு மறுபடியும் அனுமதி – பின்னணி என்ன?: “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற நூலை எழுதி நீதிமன்றப் வழக்கிற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய், என்று ஊடகங்கள் கூறியுள்ளன. ஒருவேளை புத்தக விளம்பரத்திற்காக இவர்களே செய்திருக்கலாம் என்று கூட சொல்லலாம். ஏனெனில், விழாவில் பலர் பெயர்களைப் போட்டு, யேஷ்யங்களைக் கிளப்பி விட்டு, பிறகு, அதில் குறிப்பிட்டவர்கள் வராமல் இருப்பது இன்றைய போக்கு. மெய்யம்மையும் இதனை அபாரமாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. மார்ச்-08, 2019 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா?” – தீக்கதிர் கொடுக்கும் விளக்கம்[10]: இதே தினம் 14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது. அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது. மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890) பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே ! சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்[11].
வேதபிரகாஷ்
23-03-2019
[1] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
[2] Vaigai Law Firm , Address: 593, Kurivikaran Road, KK Nagar, Madurai- 625001, Landmark: Near Wakf Board College, Phone: (0452) 4391785, Mobile: 9843251788.
[3] In a letter addressed to Vaigai Law Firm run by Lajapathi Roy, the World Tamil Sangam Director Dr P Chandra said, “With reference to Roy’s communication on February 18, 2019, permission was sought only for a function regarding the release of a book on Nadars’ history. But based on the subsequent letter dated March 6, 2019, we hereby inform that permission for the event is denied as those who hold contrary views on the government are participating as chief guests and also because it appears to be a caste and religious-oriented function.”
[4] AR Meyyammai is a journalist with two decades of experience, has worked for The Hindu, The New Indian Express and Deccan Chronicle, என்று அடியில் விவரத்தைக் கொடுத்தது – திநியூஸ்மினியூட்.
[5] The Times of India, Book on nadars released at World Tamil Sangam after court nod, TNN, March 9, 2019, 04:00 IST.
[6]https://timesofindia.indiatimes.com/city/madurai/book-on-nadars-released-at-world-tamil-sangam-after-court-nod/articleshow/68327107.cms
[7] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 07.03.2019, CORAM: THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN, WP (MD) Nos.5392 & 5477 of 2019 and WMP (MD) Nos.4284 & 4358 & 4359 of 2019
T.Lajapathi Roy … Petitioner in both cases
Vs.
1.The District Collector,
O/o. District Collectorate, Madurai. |
2.The World Tamil Sangam,
Rep.by its Assistant Director, Dr.Thangaraj Salai, Madurai – 625 020. |
3.The World Tamil Sangam,
Rep.by its Director (Incharge), Dr.Thangaraj Salai, Nearby Government Law College, Madurai – 625 020. … |
… Respondents in WP(MD)No.5392 of 2019
|
Respondentin WP(MD)No.5477 of 2019
|
[8] https://indiankanoon.org/doc/77832643/
[9] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
[10] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா ? காவியா ??, [Lajapathy Roy, Kalai Arasu முகநூல் பதிவிலிருந்து.. ] kannan, POSTED ON MAY 14, 2018, 3:03 PM.
[11]https://theekkathir.in/2018/05/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/