Posts Tagged ‘இந்து’
ஜூலை 13, 2020
தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
- மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
- இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
- டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
- அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
- ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
- தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
- இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
- சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
- தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
- ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019

வேண்டிய நண்பர்கள் இப்படி கருத்தைத் தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
- பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
- மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
- மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
- நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.

மாரிதாஸ் தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்து மக்கள் எங்கள் மக்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை, திராவிடம் என்ற போர்வாளை எடுப்போம், பார்ப்பனீயத்தை வேருடன் அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
- பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
- அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
- இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
- இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
- சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
- பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?

மாரிதாஸ் தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமண தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
- 1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
- 1940களில் பிராமண எதிர்ப்பாகி,
- 1950களில் பார்ப்பன துவேசமாகி,
- 1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
- 1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
- 1980களில் அடிக்கப் பட்டு
- 1990களில் வெட்டப் பட்டு,
- 2000களில் அசிங்கப் படுத்தப் பட்டு.
- 2010களில் பன்றிக்கு பூணூல், பூணூல் அறுப்பு முதலியவையாகி
- 2020களில், மறுபடியும் வேரறுப்போம் என்று முடிந்துள்ளது.

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது.
- ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம்.
- அயோத்யா மண்டபத்தின் பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.
- ராகவேந்திர மடங்களில் விக்கிரங்கள் உடைக்கப் படலாம்.
- அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.

ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
© வேதபிரகாஷ்
13-07-2010

குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம், பாஜக, பாரதிய ஜனதா கட்சி, பார்ப்பனன், பார்ப்பனர், பார்ப்பான், பிஜேபி, பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமணீயம், மாரிதாஸ், வீடியோ
ஆன்மீகம், ஆன்மீகம்., இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து மாநாடு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், சங்கம், சங்கரச்சாரி, சங்கராச்சாரியார் சுவாமி, சமூகத் தீவிரவாதம், சம்புகன், சம்பூகன், சாரதா பீடம், சிங்வி, சித்தர்கள், சிவன், சிவன் கோவில், சிவம், சுகி சிவம், சோனியா, சோமன், திக, திட்டம், திமுக, திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பாப்பான், பாரதிய ஜனதா கட்சி, பார்ப்பான், பிஜேபி, பிஜேபி நகரத்தலைவர், பிஜேபிகாரன், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பேச்சாளர், பேச்சு, மாரிதாஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 5, 2020
இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா? [2]

ஸ்டாலின்–ராமதாஸ் அறிக்கைகள் வேடமா, போலியா, அரசியலா?: ஸ்டாலின் சொன்னது, “மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி – மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை – கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் – அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்[1]. பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், கடும் வார்த்தைகளால் மத்திய அரசை கண்டிக்க தவறவில்லை[2]. இவ்விருவரும் ஒரே மாதிரி அறிக்கை விடுத்துள்ளதை, சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளன[3]. இருப்பினும், பாமக இந்து விரோத கட்சியோ, நாத்திகக் கட்சியோ இல்லை[4]. மேலும், திராவிடத்தை ஒழிப்போம் என்று ராமதாஸ் குரல் கொடுத்துள்ளதை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, இவையெல்லாம் அரசியலுக்காக என்று தான் எடுத்துக் கொள்ளலாம்.

இந்துவிரோதி ஸ்டாலின் அறிக்கையைத் தொடர்ந்து இந்து–துவேஷி வீரமணியின் அறிக்கை: தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை (Hindu Religious Endowment Board Department) சார்ந்ததாகும். நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்[7]. கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்‘ ‘பூனை‘களாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம்[8]. அதனுடைய கடமை – பக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா? என்பதற்குத்தான்! மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினை‘ என்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது”.

இந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது. அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று [02-03-2020], தொல்பொருள்துறை கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழக கோவில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இருக்கிறது என்று மத்திய மந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையை பறிக்கும் விபரீத யோசனை. இதன்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வரும். இதனை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசர கடமையாகும்”.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!
இந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி தொடர்கிறது: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “கிஷிமி என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முத லியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில் களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும். நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம் – கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு! இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும்? என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்–நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம்!,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி, இந்த ஒப்பாரியில் துவேச வரிகளை நீக்கி, சிறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலையில் முழுமையாக உள்ளது.

இந்துவிரோத திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்: கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தான், பகுத்தறிவு என்ற பெயரில் பலவற்றை செய்துள்ளது. ஈவேரா, அண்ணா, கருணாநிதி…..என்று எல்லோருமே தங்களது இந்துவிரோதத்தை பரப்பி, கோவில்-எதிர்ப்பு, கடவுள் மறுப்பு கொள்கைகளை திணித்து, மக்களைக் கெடுத்து, கோவில்கள், கோவில் சொத்துகளை கொள்ளை அடித்து, சிலைகளை கடத்தி விற்க உதவியுள்ளார்கள். இன்று வரை கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி, வீரமணி மற்ற வகையறாக்கள் இந்து மதம், கடவுள், சடங்கு, நம்பிக்கைகள் முதலியவற்றைப் பற்றி ஆபாசமாக, அசிங்கமாக, நாகரிகமற்ற முறைகளில் பேசி வருகிறாற்கள். ஊடகங்களில் அவை ஆதாரமாக பதிவாகி உள்ளன. அந்நிலையில், இவர்கள் திடீரென்று தாங்கள் கோவில்கள் மீது அக்கரை உள்ளது போன்று காட்டிக் கொள்ள அறிக்கைகள் விடுப்பது, அரசியல் என்றே வெளிக் காட்டியுள்ளது. உண்மையில் அவர்களுக்கு, எந்த அக்கரையும் இல்லை.

- தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை பற்றி ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? இதுவரை சிதைத்தது தெரியாதா என்ன?
- துரோகம் என்றெல்லாம் பேசும் இந்த ஆளுக்கு, என்ன யோக்கியதை இருக்கிறது? கோவிலுக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமே இல்லையே?
- அமாவாசை-அப்துல் காதர் என்றால் கூட பரவில்லை, இந்த ஸ்டாலின் – கோவில் ஒட்டவே ஒட்டவில்லையே, கழகக் கண்மணிகளே?
- ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிள என்ற நன்னாளை பார்த்த அப்பன், வைத்த ஶ்ரீரங்க சந்தனத்தை அழித்த மகன், பிறகு என்ன வெங்காயம்?
- இதில் மாபெரும் இந்து விரோதி வீரமணி நுழைவது தான், அதை விடக் கொடுமை! ஏதாவது இருக்க வேண்டாமா? கொஞ்சம் கூட இல்லையே?
- நொண்டியின் 100 கிமீ ஓட்டம், கசாப்புக் காரனின் அஹிம்சை, விபச்சாரியின் கற்பு, சிலையுடைப்பு ஈவேரா, இவற்றைவிட அசிங்கமாக இருக்கிறதே?
- தாலியறுப்பு கேசுகள், அமங்கல மூஞ்சிகள், துவேஷ-விஷம் கக்கும் வாய்கள், குரூரமான மங்கள், இவைகளா கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது?
- தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றால், அந்த மக்கள் எல்லோரும் இந்துவிரோதிகளா?
- திராவிட கட்சிகளே, இது பிஜேபி எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா; இல்லை கோவில் ஆதரவா சனாதன ஆதரவா? வெளிப்படையாக சொல்வாயா?
- திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்ற பாமக இப்பொழுது கூட்டு சேர்வது, இந்துவிரோதமா, பிஜேபிஎதிர்ப்பா, கூட்டணி ஒத்திகையா?
- நாளைக்கு பீஜேபி, திமுகவுடன் கூட்டணி வைத்தால், எல்லா பிஜேபிகாரர்களும் தூக்கில் தொங்கவேண்டும், செய்வார்களா? செய்வார்களா? செய்வார்களா?
© வேதபிரகாஷ்
04-03-2020

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்–ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம், By Veerakumar, Updated: Tuesday, March 3, 2020, 19:57 [IST].
[2] https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-condemns-union-government-for-taking-control-of-tamilnadu-temples-378690.html
[3] ஏசியா.நெட்.நியூஸ், ஒரே புள்ளியில் இணைந்த மு.க.ஸ்டாலின்–ராமதாஸ்… மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு..!, By Vinoth Kumar..KumarTamil Nadu, First Published 4, Mar 2020, 12:20 PM IST …
[4] https://tamil.asianetnews.com/politics/mk-stalin-ramadoss-joining-the-same-point-q6npov
[5] தினத்தந்தி, தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? – மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம், பதிவு: மார்ச் 04, 2020 02:15 AM
[6] https://www.dailythanthi.com/News/State/2020/03/04014956/Trying-to-take-control-of-temples-in-Tamil-Nadu–K.vpf
[7] விடுதலை, தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா, செவ்வாய், 03 மார்ச் 2020 14:38
[8] http://www.viduthalai.in/headline/196556-2020-03-03-09-29-14.html
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கருணாநிதி, திராவிடம், துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திகம், மு.க.ஸ்டாலின், ஸ்டாலின்
ஆத்திகம், ஆன்மீகம்., ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சமஸ்கிருதம், துர்கா, துர்கா ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 6, 2019
சுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து–தூஷணம்!

அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா... [1]: சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகி சிவம் அத்தி வரதரின் திடீர் பிரபலம் குறித்துப் பேசியபோது, “இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத ‘பவர்’ 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்… இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா… இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள்.நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார். இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.நீங்கள் இருக்கிறபடி இருந்தால் கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார்’என்று பேசினார்[2].

04-08-2019 அன்று மதுரையில் நடந்த கூட்டம், ஆர்பாட்டம்: இதையடுத்து மதுரை முத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. இதில் சொற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்றார். அங்கு செல்ல முயன்ற அவரை ஹிந்து கடவுளை அவமதித்து பேசியதாக கூறி ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுகு சிவத்தை அவர்கள் மிகவும் மட்டமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர்.அத்து மீறியவர்களில் பத்து பேரை தல்லாகுளம் போலீசார் போலீசார் கைது செய்தனர். ஆக, சுகியின் கூட்டம் இனிதே நடந்தது. ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்கள், கேட்டு ரசித்தவர்கள் தைப் பற்றிக் கவலைப்ப்டவில்லை போலும்! இல்லை, கொடுத்த காசுக்கு, சினிமா பார்ப்பது போல, சுகியின் பேச்சை ரசித்தனர் போலும்!

அத்தி வரதர் தரிசனம் பற்றி நக்கலடித்தது: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும்போது, அவரது பாணியில் அத்தி வரதர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், “அத்திவரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளை காண வேண்டும்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால்தான் என்ன,” என்று பேசியிருந்தார்[3]. இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது[4]. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் அத்தி வரதர் மீதோ இந்து மதத்தின் மீதோ எதிர் கருத்துக்களை வீச வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மக்கள் படும் கஷ்டங்களை பார்த்த பின்பு இந்த கருத்தை தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை கடவுளை வெளியில் தேடுவதை விட நமக்குள் தேட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். சுகியின் 05-08-2019 தேதியிட்ட கடிதம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பதை விட, அகம்பாவம், குசும்புத் தனம் மற்றும் தூண்டிவிடும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது!
எங்கள் நம்பிக்கையை இந்து மத உணர்வை வழிபாட்டுநெறியை இந்த வாடகை வியாபாரிகள் விமர்சிக்க வேண்டாம்[5]: இந்து தமிழர் கட்சி இரவிக்குமார் கூறியது, “இவர் உண்மையிலேயே தத்துவார்த்த பொருளை பேசக்கூடிய ஒரு நபராக இருந்தால் “கன்னி மரியாளுக்கு எப்படியடா இயேசு பிறந்தார்?என்று ஒரு கூட்டத்தில் இவர் கேட்பாரா? அப்படி அவர் கேட்பாரேயானால் அவருக்கானமேடை இந்து தமிழர் கட்சி அமைத்துக் கொடுக்கும். ( பிற மதத்தை விமர்சிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல கருத்து சுதந்திரம்) பிற மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க திராணியற்ற, இந்த பேடி இந்துமத தெய்வங்களை நிந்தனை செய்து இருக்கிறார். கங்கை போல் வரும் பேச்சில் கூவத்தை கலக்க வேண்டாம். படைப்புக் கடவுள் பிரம்மனே அடுத்த பிறவியில் சுகி.சிவத்தை ஊமையாக படைத்திடு! இதற்கு இந்த சுகிசிவம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் பேசுகின்ற பொழுது இந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்,”. இராம. இரவிக்குமார்[6] இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் 86430-81430, 96553-65696.
நாத்திகன் வைரமுத்துவை கேள்வி கேட்ட ஆத்திகன்[7]: ஆண்டாள் விசயத்தில், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- வைர முத்துவை சுகி சிவம் கேட்ட 11 கேள்விகள்! அவற்றை இங்கே படிக்கலாம். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன[8]:
- ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?
- நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர். அப்படி இருக்க, காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?
- அத்துமீறலில் இத்தனை அத்துமீறலா? நாத்திகர்களை திருப்திசெய்ய, ஆத்திகர்களை வலிக்கச்செய்வது விவேகமா கவிஞரே?
ஆனால், சுகி அதே குற்றத்தைத் தான் செய்திருப்பது புலனாகிறது. பிறகு இவர்களிடம் என்ன தகுதி இருக்கிறது, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு.
ஒரு தடவை ரெயிலில் பிரயாணம் செய்தபோது, யாரோ இருவர் எப்படி டீ.ஏ பில் போடும் போது, அதிகமாக பணம் பெற என்ன செய்ய வேண்டும் என்று பேசியதை ஒட்டுக் கேட்டு வந்தாராம்! அவர்கள் அவ்விசயத்தில் பி.எச்டி செய்த நிலையில் துணுக்கங்களை விவரித்தனராம்! சரி, போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா? இதயத்தின் மீது, கைவைத்து, மனசாட்சியுடன் கட்டுகிறேன் என்பாரா? தவறு, குற்றம் என்றால், யார் செய்தாகும் ஒன்றுதான்.

சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு: பக்தி இலக்கியங்கள், புராணக் கதைகளை அங்கும்-இங்குமாக, உதாரணம் காட்டி, ஏளனப் படுத்துவது, இவரது பழக்கமாக உள்ளது. பக்தி இலக்கியம், இடைக்காலத்தில், துலுக்கர், ஜைனர், பௌத்தர் மற்ற நாத்திகள் இவர்களை மறுத்து, மக்களிடம் சிரத்தை உண்டாக்குவதற்குத் தான் உருவாக்கப் பட்டவை. நாவிதன் தன் வேலையை செய்யாமல், விட்டல-விட்டல பாடினால், விட்டல் வந்து சிறைத்து விட்டு போவாவானா என்று கேட்டது, அகம்பாவமும், சரித்திர சூன்யமும் தான்! பெரிய அறிவிஜீவித்தனம் அல்ல. போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா?

- பேச்சு வியாபாரி / வியாபாரம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது, அப்படியென்றால், நுகர்வோர் விருப்ப-வெறுப்புகளும் வரும்.
- காசு, புகழ் , மேடை கிடைத்தால் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பேசுவேன் என்பது, பேச்சு தர்மம் கிடையாது.
- இந்துக்களின் முன்னால், அத்தி வரதரைப் பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்கலாம், அல்லாவை விமர்சித்து துலுக்கன்கள் முன்னால் பேச முடியுமா?
- புத்தன், ஏசு, மேரி பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்க முடியுமா? உதை தான் கிடைக்கும் என்று தெரியுமே?
- திராவிடத்துவ வாதிகள் அத்தகைய பேச்சுக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள், கேட்டுக் கொண்டே நாகரிகம், முதலியவற்றை மறந்தார்கள்!
- ராமசாமி நாயக்கர், அண்ணா, கருணாநிதி, போன்றோரும், அணுகுண்டு, குத்தூசி, முதலிய வகையறாக்களும் இலக்கணம் ஆனார்கள்!
- பட்டி மன்றம் வைத்து, வெட்டிக்கி பேசி, கொட்டமடித்து, அதனையே பொழுது போக்காக்ககினர். அதனால், பேச்சாளர்கள் உருவானார்கள்!
- பொருளைப் பற்றியோ, சரித்திர உண்மை, நியாயம்-தர்மம், ஒழுங்குமுறை முதலியவற்றைப் பற்றியோ கவலைப்படவில்லை.
- குத்தாட்ட குலுக்கல்களில் ஆடைப்பற்றி கவலை படாததது போல அடுக்கு மொழி பேசவேண்டும் என்றால், எல்லைகளையும் கடக்கலாம்!
- சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு, பயனற்ற பேச்சாயாகும்.
© வேதபிரகாஷ்
06-08-2019

[1] ஏசியா.நெட்.நியூஸ், ’காஞ்சிபுரம் அத்திவரதரை வைத்து பெரிய சூதாட்டமே நடக்கிறது’…சுகி சிவம் சுளீர்…., By Muthurama Lingam, Chennai, Tamil Nadu, India, First Published 5, Aug 2019, 9:21 AM IST; Last Updated 5, Aug 2019, 9:21 AM IST
[2] https://tamil.asianetnews.com/cinema/popular-sugi-sivam-speaks-against-the-lord-athivarathar-pvqw1g
[3] நக்கீரன், ‘அத்திவரதர் குறித்து விமர்சனம்‘ சுகிசிவம் விளக்கம்..!, Published on 06/08/2019 (17:26) | Edited on 06/08/2019 (17:37).
[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/suki-sivam-explain-athivarathar-issue
[5] magaram.in, “வாடகை வாய் வியாபாரி” சுகிசிவம் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!, August 4, 2019
[6] https://magaram.in/tamilnadu-government-should-be-take-action-to-suki-sivam/
[7] நக்கீரன், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!, Wednesday, 17 Jan, 3.27 am.
[8]https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/vairamuthuvin+varthaikalil+vanmam+kurooram+melliya+vanjchakam+suki+sivam+kattam-newsid-80048222
குறிச்சொற்கள்:ஆத்திகம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, சிவம், சுகி, சுகி சிவம், சுகிசிவம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக வாதம், நாத்திகம், பட்டி மன்றம், பேச்சு, வெட்டிப் பேச்சு
அல்லா, ஆத்திகம், ஆன்மீகம்., இடம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கருத்து, சிவம், சுகி, சுகி சிவம், சைவம், பட்டி மன்றம், பேச்சாளர், பேச்சு, வெட்டிப் பேச்சு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 27, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]

மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாதியும் சம்பந்திகள் ஆனது: ந.பூ. ராமஜெயம் “தி இந்து” நாளிதழ் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார். 1956லிருந்து அங்கு வேலை பார்த்தவர். 1975ல் இந்து யூனியனின் தலைவர் ஆனார். 1996-2001 காலத்தில் மைலாபூர் தொகுதியின் திமுக எம்.எல்,ஏவாக இருந்தார். செப்டம்பர் 2007ல் இறந்தபோது, என்.முரளி, ராமஜெயம் என்றுமே அரசியலை உள்ளே எடுத்து வந்ததில்லை என்றது வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், எப்படி “தி.இந்து” குடும்பமுன், கருணாநிதி குடும்பமும் சம்பந்திகள் ஆகி விட்டன என்று எல்லோருக்குமே தெரியும். கருணாநிதி, “தி.இந்து”வை, எகத்தாளமாக “மவுண்ரோடு மஹாவிஷ்ணு” என்று நக்கல்-கிண்டல் அடிப்பதுண்டு. ஆனால், “இந்து-ராமின்” மச்சினியை, தயாநிதி கட்டிக் கொண்டவுடன், நக்கல் குறைந்து விட்டது. போதாகுறைக்கு, கனிமொழிக்கு விவாக ரத்தினால் “மனவழுத்தம்’ உண்டான போது, ராம், இந்து “எடிடோரியலில்” உட்கார வைத்து அமைதி படுத்தினாராம். ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா [26-08-1994 அன்று திருமணம் நடந்தது], ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். கலாநிதியின் மனைவி காவேரியும் பிரரமணர்.. இப்படி பாப்பாத்திகளை கட்டிக் கொண்டு, அரை பாப்பான்களாகி விட்டோம் என்று கூட பெருமை பேசிக் கொள்ளலாம். ஒருவேளை, அந்த ஐயங்கார் தொடர்பினால் தான், ராமானுஜரை எடுத்துக் கோண்டு, இரட்டை வேடம் போட்டு, கருணாநிதி, ஒரே கல்லால், இரண்டு காய்களை அடித்தார் போலும்.

திக / ஈவேரா செய்த இந்துவிரோத அட்டூழியங்களை அண்ணா, கரு, ஸ்டாலின் யாரும் தடுக்கவில்லை: “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” மற்றும் “நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன்” அண்ணாதுரை சொன்னர் என்று பீழ்த்திக் கொண்டாலும், பிராமணர்களின் மீது நடந்த தாக்குதல்கள், பூணூல் அறுக்கப் பட்டது, குடுமி வைத்து தெருக்களில் நடந்தவர்களைப் பார்த்து ஆபாசமாக பேசியது [மாமா ஆத்துலே மாமி சௌக்கியமா?] இதையெல்லாம், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று பேசிய அதே அண்ணாதுரை தட்டிக் கேட்கவில்லை, முதல்வராக சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே அண்ணாவின் நாற்காலியைப் பறித்த தம்பி கருணாநிதியும் ஒன்றும் செய்யவில்லை. மாறாக, சேலத்தில், ஜனவரி 23 மற்றும் 24 1971 தேதிகளில் ராமர்-லக்ஷ்மணர்-சீதை படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். அதனை படம் போட்டு, எடுத்துக் காட்டிய “துக்ளக்” இதழை தடை செய்தனர், பிடுங்கி எரித்தழித்தனர். அரசு, அப்படம் போட்ட போஸ்டர்களையும் பறிமுதல் செய்தது. ஊர்வலத்தைத் தடுக்காமல், ஆப்ப்டம் போட்ட போஸ்டர்கள் மதநம்பிக்கையை பாதிக்கும் என்று அரசாணை மூலம் தடுத்து நடவடிக்கை எடுத்தது. திக, திக [ராமகிருஷ்ணன்], பெரியார் திராவிடர் கழகம் போன்ற கருப்புப் பரிவாரங்களின் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தைத் தடுக்கவிலை.மாறாக, “முரசொலி” மூலம் ஆதரிக்கப் பட்டு, முடுக்கிவிடப்பட்டது.

“இந்து திருடன்” என்ற கருணாநிதி: கருணாநிதியும் ராமரை, ராமாயணத்தை தூஷித்ததில் எந்த அளவிலும் குறையவில்லை. “இந்து திருடன்” என்று சொல்லி, அவதூறு செய்து, வழக்கு போட்டாலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவ்வழக்கை மூடிவிட்டது தெரிந்த விசயமே. பிறகு, ராமஜன்ம பூமி, ராமர் பாலம் விவகாரங்களிலும் அவரது அடாவடி, அயோக்கியத் தனமான, இந்துவிரோத பேச்சுகள் தெரிந்த விசயமே. இப்பொழுதும், ராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் சென்றுள்ளனர். பூணூலை அறுத்தவர்கள் தாலிகளை அறுக்கின்றனர். இதில் திருடு மற்றும் விழா நடத்துவது என்று இரண்டு வகை உள்ளது. பூணூலை இப்பொழுது அறுக்கவும் செய்து, பன்றிகளுக்கும் போட்டு விடுகின்றனர். அதாவது, “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்று திராவிட ஆட்சியாளர்கள் கொள்கைக் கடைபிடித்து வருவதால், அதே தூஷண குற்றங்கள் மறுபடி-மறுபடி செய்யப் படுகின்றன. குற்றவாளிக்கும் பயம் இல்லாமல் போய்விட்டது. எப்படி கொலைகாரர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுகிறாதோ, அதுபோல, இவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுவதால், அதே தூஷண குற்றங்கள் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப் படுகின்றன.

செக்யூலரிஸ நாட்டில், எல்லா மதங்களும் ஒரே மாதிரியாக நடத்தப் பட வேண்டும்: செக்யூலரிஸம் என்பது மதத்திற்கு எதிரானது என்றால், அத்தகைய செக்யூலரிஸம் எல்லா மதங்களுக்கும் எதிராக இருக்க வேண்டும். நாத்திகம் கடவுளை மறுக்கும் கொள்கை என்றால் எல்லா மத-கடவுளர்களையும் மறுக்க வேண்டும். நாத்திகத்தை மெய்ப்பிக்க கோவில் முன்னால், ஈவேரா சிலை வைப்பேன் என்றால், அதேபோல, சர்ச், மசூதி, குருத்வாரா என்று எல்லாவற்றின் முன்பாகவும் வைக்க வேண்டும். இப்படி பற்பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால், திராவிட கட்சிகள், கட்சி தலைவர்கள், சித்தாந்திகள், அவ்வாறு செய்யவில்லை. ஒருதலைப் பட்சமாக, இந்து விரோதிகளாகத் தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆகவே, வெறும் வார்த்தைகாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.

இந்துக்களை மட்டும் குறி வைப்பது செக்யூலரிஸம் அல்லது நாத்திகம் ஆகாது: எங்களைப் போன்ற ௬௦-௭௦ ஆட்களுக்கு விநாயகர் சிலையுடைத்து, ராமருக்கு செருப்பு மாலை போட்டது, தாலியறுத்தது, குல்லா போட்டு ஏகாதசி உண்ணா நோன்பை பழித்தது, துலுக்கன் கஞ்சியை நக்கிக் குடித்து அம்மனை பழித்தது, குங்குமத்தை ரத்தம் என்றது-துடைத்தழித்தது எல்லாமே இந்து விரோதம் தான். பூணூல் அறுத்தவன், குல்லாவை கழட்டி எரியவில்லை, கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போடவில்லை.உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு,திக-திமுக-பெரியாரிஸ இந்துவிரோதம், இந்துதூஷணம் -இந்துவேசம் வேறு.. மக்கள் அறிவார்கள்….திராவிடத்துவவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நாத்திக ஆரசியல்வாதிகள், கடவுள் மறுப்பு என்று இந்து கடவுளர்களைத் தான் மறுத்துள்ளனர், தோஷித்துள்ளனர். அதை மறக்கவோ- மறைக்கவோ முடியாது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதன் முதலாக பொதுக் குழுவில், இப்பிரச்சினை பேசப்பட்டது என்றால், தங்களது நிலை வெளிப்பட்டுவிட்டது. ஜனநாயக, தேர்தல் முறைப் போட்டிகளில் இந்துக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன, நசுக்கப் படுகின்ன்றன அன்று அறியப்படுகிறது. இதனால், கூட்டணி கணக்கில் காங்கிரஸ் போல, திமுகவும் இந்துத்துவ வேசத்தைப் போடலாம். தமிழக மக்கள் டேற்றுக் கொள்வார்களா என்று பார்க்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக, இம்முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது:

Karu temple – later removed
- திக, திமுக, விநாயகர் சிலையுடைத்தவன், ராமருக்கு செருப்பு மாலை போட்டவன், … எல்லோரும்இந்து விரோதிகள் தான், சந்தேகமே இல்லை!
- தாலி வேண்டாம் என்றவன், தாலியறுத்தவன், குங்குமத்தை ரத்தம் என்றவன், அழித்தவன் எல்லோருமே இந்து விரோதிகள் தாம்!
- குல்லா போட்டு ஏகாதசி உண்ணா நோன்பை பழித்தவன், துலுக்கன் கஞ்சியை நக்கிக் குடித்து அம்மனை பழித்தவன் எல்லோருமே இந்துவிரோதிகள் தான்.
- ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்றறிவித்து, நான் பிள்ளையாரை, தேங்காயை உடைக்கவும் மாட்டேன், என்றதும் இந்துவிரோதம் தான்.
- ஒன்றே கடவுள், ஒருவளே தேவதை என்று நீ ஏசுவை ஏசினாயா,கிருஸ்து-மேரி சிலைகளை உடைத்தாயா, சிலுவையை எந்த பகுத்தறிவும் அறுத்து மெய்பிக்கவில்லை
- அல்லாவைத் தவிர கடவுளும் இல்லை, மொஹம்மது தான் தூதன் என்று தினம்-தினம் கத்தும் துலுக்கனுக்குப் போட்டியாக எந்த திக-திமுக-காரனும் கூவவில்லை.
- ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்றால்,ஏசு, கிருஸ்து, மேரி, ஜேகோவா, அல்லா, அல்-லத்.., முதலியவை எங்கிருந்து வந்தன என்று கேட்கவில்லை.
- விநாயகரை உடைத்தேன், குளம் தூர் வாரினேன், சிலைகளை கொள்ளையடித்தேன், வேலை திருடினேன் என்பதெல்லாம்,இந்து விரோதம் இல்லையா?
- பூணூல் அறுத்த நீ, குல்லாவை கழட்டி எரிந்தாயா,கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போட்டாயா, பகுத்தறிவே, அண்ணாவே, தம்பியே? என்று கேள்விகள் கேட்டால் என்னாகும்? திருமூலர் பதில் சொல்வாரா?
- உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு, உன்னுடையது இந்துவிரோதமே, இந்துதூஷணமே-துவேசமே…
© வேதபிரகாஷ்
26-09-2018

குறிச்சொற்கள்:இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, கருணாநிதி, சினிமா, சுடாலின், திராவிட நாத்திகம், திராவிடன், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், சுடாலின், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திருடன், துர்கா, துவேசம், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறிவு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]

நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்தியுடன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே?

நாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ!

நக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.
தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.
|
நாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை! அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை? யார் நம்புவார்கள்?
|
உடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.

அப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.
|
நாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது? பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே? செல்லவில்லையே? இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா?
|
இதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார்.
|
அதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும்! அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ? சிரித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே?
|
உடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.
© வேதபிரகாஷ்
15-09-2018

[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு!, Posted Date : 13:03 (29/09/2015)Last updated : 13:43 (29/09/2015)
[2] https://www.vikatan.com/news/tamilnadu/53036.html
[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.
[4] http://tamilsnow.com/?p=62030
[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)
[6] https://www.vikatan.com/news/tamilnadu/128482-stalins-srirangam-visit.html
[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்!, ஜே.டி.ஆர், Published on 22/06/2018 (12:28) | Edited on 22/06/2018 (12:30)
[8] https://nakkheeran.in/24-by-7-news/politics/mk-stalin-cames-srirangam-temple-his-wife
குறிச்சொற்கள்:இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்
இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கருத்து, கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, சுடாலின், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, பகுத்தறிவு, பசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

“தி.இந்து” ஸ்டாலினிடம் எடுத்த பிரத்யேக பேட்டி[1] செப்டம்பர் 2018): இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2]. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்தார்[3]. வேறெந்த நாளிதழும் போடாத வேளையில், “தி.இந்து” மட்டும் போட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[4]. பி. கோலப்பன் என்பவர், அப்போது அவரிடம், “கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது”, அதாவது கேட்டாராம். இந்த கேள்வியே சொல்லி வைத்து கேட்டது போலத்தான் உள்ளது. அதற்கு முக ஸ்டாலின் அளித்ததாக, “தி.இந்து” செய்தி போட்டுள்ளது. “தி.இந்து” இதே செய்தியை, ஆங்கிலத்தில் இரண்டு முறை, இரண்டு இணைத்தள லிங்குகளில் வெளியிட்டுள்ளது[5]. அதே கோலப்பன் பெயர் தான் அதிலும் காணப்படுகிறது[6].

இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? ஸ்டாலினின் விரிவான பதில்: அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்: ”இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார். கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்”.

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார். இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது. கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை”.

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் பிரச்சாரம்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும். பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தூஷித்துக் கொண்டே இப்படி சொல்லிக் கொண்டால், இந்துக்கள் நம்புவார்களா?: 2015ல், கும்பகோணத்தில் கோவில் பூஜாரிகளுடன் சந்திப்பை வைத்துக் கொண்ட ஸ்டாலின் அதே “தி.இந்து”வுடன் பேசும் போதும், இதே போன்ற கருத்தை சொன்னது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திமுகவில் உள்ளவர் 90% இந்துக்கள். தனது குடும்பத்தினருக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது. எனது மனைவியும் கோவில்களுக்க்கு எல்லாம் சென்று வருகிறாள். அதன் குறுக்கே நான் நிற்பதில்லை. தனது பயணத்தில் முதலில் திருகோஷ்டியூர் கோவிலுக்கு சென்றாராம், ஏனெனில், அங்கு தான் ராமானுஜர் தனது குரு சொன்னதையும் கேட்காமல், கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தனக்குச் சொல்லிக் கொடுத்ததை உரக்க எல்லோருக்கும் தெரியும் படி சொன்னாராம்[7]. “நாங்கள் எல்லோரும் அண்ணாவைப் பின்பற்றுபவர்கள், அதன் படி திருமூலர் சொன்னபடி “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்” என்பதை ஏற்றவர்கள். எங்கள் தலைவர், ராமானுஜர் டெலி–சீரியலுக்கு டயலாக் எழுதினார். ஏனெனில், அவர் எல்லோரும் கோவிலில் நுழைவதற்ற்கு வழி வகுத்தார். தேர்தல் வருவதால் கோவில்களுக்கு செல்கிறேன் என்ற வாதத்தை மறுத்து, நான் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், முன்னர் கூட கோவில்களுக்கு சென்றுள்ளேன், எனக்கு பூர்ண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது” கூறிக் கொண்டார்[8]. மேலும் தொடர்ந்து சொன்னது[9], “கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்,” என்றார்[10].

ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன?: இப்படியெல்லாம் திடீரென்று செய்திகள் வரவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்க வேண்டியுள்ளது. 2019-தேர்தல் நேரத்தில் இவ்வாறு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்று தான், மக்கள் நினைப்பார்கள். நிச்சயமாக பொது மக்கள், திராவிட கட்சியினர் குறிப்பாக, திக-திமுக வகையறாக்களை இந்துக்களுக்கு சாதகமானவர்கள் என்று நினைக்கவே மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டாலினே நெற்றியில் வைத்த குங்குமத்தைத் துடைத்துப் போட்டது, மூன்று மாதங்களுல்லு முன்னர் ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்துக் கொண்டது போன்ற வேலைகளை ஸ்டாலின் செய்தது அனைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. அந்நிலையில், ஒருவேளை பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன், ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். வாஜ்பாயி காலத்தில் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. அத்தகைய கூட்டை 2019ல் வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கலாம். ஆனால், மக்கள் நம்புவார்களா? பிஜேபி இத்தகைய இந்துவிரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
15-09-2019

[1] தமிழ்.இந்து, இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி, பி.கோலப்பன், Published : 24 Sep 2018 15:32 IST; Updated : 24 Sep 2018 15:32 IST
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article25027406.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
[3] The Hindu, Stalin sees a bid to portray DMK as anti-God, anti-Hindu; terms it mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-interview/article25022253.ece
[5] The Hindu, Bid to portray DMK as anti-Hindu mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/bid-to-portray-dmk-as-anti-hindu-mischievous/article25025286.ece
[7] Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.
The Hindu, DMK – not anti-Hindu, B. Kolappan, October 17, 2015 00:00 IST; UPDATED: October 17, 2015 10:30 IST
[8] “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum Ontrey Kulam Oruvaney Devan (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said. Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the poorna kumbam .
https://www.thehindu.com/news/cities/chennai/dmk-is-not-antihindu-stalin/article7772219.ece
[9] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின், By Mayura Akilan Updated: Saturday, October 17, 2015, 13:20 [IST].
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-not-anti-hidhu-says-stalin-237922.html
குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துத்துவம், இந்துவிரோதி, கனிமொழி, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சிலை உடைத்தல், திராவிட நாத்திகம், துர்கா, நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், நாயக்கர், பெரியார், ராஜாத்தி, ஸ்டாலின்
அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1] அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஏப்ரல் 10, 2018
தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல்ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர் என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்?…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.

எஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].

ராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].

பிஜேபி தலித்–விரோத அரசு, கட்சி – காங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
© வேதபிரகாஷ்
09-04-2018

[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017
http://www.bbc.com/tamil/india-40105698
[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.
[3] News.18, Siddaramaiah Asks Amit Shah to Clarify if He’s a Hindu or Jain, PTI, Updated:March 30, 2018, 7:32 AM IST
[4] https://www.news18.com/news/india/siddaramaiah-asks-amit-shah-to-clarify-if-hes-a-hindu-or-jain-1703477.html
[5] NDTV, “I Am A Hindu Vaishnav, Not Jain”: Amit Shah, All India | Press Trust of India | Updated: April 06, 2018 22:48 IST.
[6] https://www.ndtv.com/india-news/i-am-a-hindu-vaishnav-not-jain-amit-shah-1833945
[7] Hindustan Times, BJP to convince Dalits to remain with party, says Udit Raj after ‘torture’ claim, Updated: Apr 08, 2018 18:26 IST.
[8] “My tweets r (are) misconstrued that its harming BJP rather it strengthens that at least there r people like me in BJP who r concerned with Dalit atrocities after 2 April agitation. It will convince Dalits & they will remain with party. Govt will check anti-dalit officer/ people (sic),” Udit Raj said on Twitter.
https://www.hindustantimes.com/india-news/bjp-to-convince-dalits-to-remain-with-party-says-udit-raj-after-torture-claim/story-4mH32TO02jTaz2qO2uRBIL.html
[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=391696
[11] Financial Express, Akhilesh Yadav on pact with Mayawati: SP-BSP alliance will knock the daylight off BJP in 2019, By: FE Online | Published: April 8, 2018 2:22 PM.
[12] http://www.financialexpress.com/india-news/akhilesh-yadav-on-pact-with-mayawati-sp-bsp-alliance-will-knock-the-daylight-off-bjp-in-2019/1125566/
[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.
[14] http://tamil.thehindu.com/india/article23430610.ece
குறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துத்துவம், எதிர்-இந்து, எஸ்.சி, எஸ்.டி, கர்நாடகா, காங்கிரஸ், சங்கம், சட்டம், சித்தராமையா, சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், மைனாரிடி, மோடி, மோடி எதிர்ப்பு, லிங்காயத்
இந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, சோனியா, தலித், திமுக, தேர்தல், தேர்தல் பிரச்சாரங்கள், நாயுடு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பரிவார், பாஜப, பிஜேபி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 26, 2016
ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

வழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது. நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.

ரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7]. வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].

102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.

ஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் இதற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.

யார் இந்த தலித் பாண்டியன்?: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.
© வேதபிரகாஷ்
26-05-2016
[1] http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html
[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1472127
[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016, 11.22.
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1527014
[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43
[7] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=573606&cat=504
[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST
[9] http://tamil.eenaduindia.com/Rainbow/SoulSpace/2016/05/11194604/Sri-Sadasiva-Piramentiral-Temple-festival-in-karur.vpf
[10]
தமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)
[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/75-peopls-vomiting-fainting-in-karur-116041500032_1.html
[12] http://www.dinamani.com/edition_trichy/karur/article1399470.ece
[13] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html
[14] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …
குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சேவை, தடை, தலித், தலித் பாண்டியன், நெரூர், புரண்டு, புரள், வழக்கு
அங்கப்பிரதசிணம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, எதிர்ப்பு, கரூர், சங்கரச்சாரி, சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சதாவிசம், ஜாதி, தலித், தலித் பாண்டியன், நெரூர், பாப்பான், பார்ப்பான், பிராமணாள், பிரும்மேந்திரர், புகார், வேண்டுதல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
பிப்ரவரி 14, 2016
பாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்!
ஜைனகோவில் குப்பைக் கொட்டும் இடமாகி இடித்துத் தள்ளப்பட்ட நிலை: பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் அனார்கலி பஜாரில் உள்ள, புகழ் வாழ்ந்த ஜைன கோவில் இருந்தது[1]. இது 1992ல், பாபரி மஸ்ஜித் இடித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டது[2]. அப்பொழுது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், செக்யூலரிஸ இந்திய அரசியல்வாதிகள், அரசாங்கம், மற்றும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜைன கோவில் சேதப்படுத்தியப் பிறகு, கடைகள் போன்றவை அதனுள் வைக்கப்பட்டு வியாபாரத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. லாஹூர் குப்பை அகற்றும் வாரியம் மற்றும் இன்னொரு தனியார் குப்பைக் கொட்டும் கம்பெனியும் [Lahore Waste Management Company (LWMC) and a private filling station] அக்கோவில் வளாகத்தை உபயோகப்படுத்தி வந்தன[3]. அந்த சாக்கில் ஒரு முல்லா ஒரு அறையை ஆக்கிரமித்துக் கொண்டு மதரஸா கூட நடத்தி வந்தார். இஸ்லாம் எப்படி இதையெல்லாம் அனுமதித்தது என்று யாரும் கேட்கவில்லை, விவாதிக்கவில்லை. குப்பைக் கொட்ட “நாங்களே உபயோகிக்கும் போது, நீயும் குப்பைக் கொட்டப்பா”, என்று விட்டு விட்டனர் போலும்.
நீதி மன்ற ஆணையை மீறி இடிக்கப்பட்ட நிலை: 2016 ஜனவரியில் ஆரஞ்சு மெட்ரோ ரெயில் திட்டம் [Orange Line Metro Train (OMT) project] தொடர்பான எந்த வேலையும் சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களிலிருந்து 200 அடிகளுக்குள் இருக்கக் கூடாது என்று லாஹூர் உயர்நீதி மன்றம் தடை விதித்தது[4]. முன்னர் உச்சநீதி மன்றமும் ஆணை பிறப்பித்திருந்தது[5]. இருப்பினும் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பஞ்சாப் அரசு அப்புராதன ஜெயின் கோவிலை பிப்ரவரி.10, 2016 புதன்கிழமை அன்று காலை முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது[6]. ஷேக் தாவூத் ஜிலானி சொல்வதை உடனுக்கு உடன் செய்திகளாக வெளியிட்டும், மறுத்தும் விமர்சித்து வரும் ஊடகங்கள் அவ்வாறு உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நீதி மன்றங்கள் இயங்கும் முறை இவ்வாறுதான் உள்ளது போலும். அதாவது, இப்படி மெட்ரோ ரெயில் திட்டம் என்றெல்லாம் நவீனப்படுத்தப் பட்டாலும், இஸ்லாமிய நாட்டில் அடிப்படைவாதிகளை, பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை, ஜிஹாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாமல் தான் இருந்து வருகிறது.
கோவில் இடிப்புக்கு பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சிகள்: பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்கட்சி தலைவர் இதை எதிர்த்தாலும், நடந்தது, நடந்து முடிந்து விட்டது[7]. பஞ்சாப் முதல்வருக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் கத்தி ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனர்[8]. ஷரீப் சகோதரகளுக்கு – ஷாபாஷ் (பஞ்சாப் முதலமைச்சர்) மற்றும் நவாஸ் (பாகிஸ்தான் பிரதமர்) எதிராக குரல் எழுப்பினர்[9]. நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல அங்கும் மற்ற எதிர் கட்சிகள் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்ஸாப் [Pakistan Teh reek-e-Insaaf], பாகிஸ்தான் முஸ்லிம் லீக் [Pakistan Muslim League(Q)], ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)], பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party] முதலியன ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனவாம்[10]. ஆனால், அவை மற்றும் அவற்றின் தலைவர்கள் அப்பட்யென்ன “சிறுபான்மையினர்” நலன்களை பாதுகாத்து வருகின்றனாரா? கொல்லப்படும், அடித்து நொறுக்கப்படும் நிலையில் தானே உள்ளார்கள்?
பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன்: பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன் கூட மக்கள் தங்களது கலாச்சாரத்தை காத்துக் கொள்ளும் உரிமைகளை தாக்காமல் இருக்க வேண்டும், அந்த ரெயில் திட்டத்தைப் பற்றி மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது[11]. கடந்த 70 ஆண்டுகளாக இந்த கமிஷன் இல்லையா அல்லது ஒன்றும் செயல்படாமல் இருந்ததா என்று தெரியவில்லை. இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப் படுகிறாற்கள் என்றேல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றையெல்லாம் ஏன் தடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் மனித உரிமைகள் பிரச்சினை வரவில்லையா? இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும்? சும்மா சொல்லிவிட்டால் போதுமா?
லாஹூர் நீதி மன்ற நடவடிக்கை எடுக்குமா?: கமால் மும்தாஜ் என்பவர் இதை எதிர்த்து லாஹூர் நீதிமன்றத்தில் ஒரு “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒன்றை பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்துள்ளாராம்[12]. மற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களையாவது விட்டு வைக்க ஆணையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்[13]. இதை நம்மவூர் துருக்க-பாய்கள் படித்தால், பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஏன் இந்து கோவில்கள் மறைந்து விட்டன, இந்து மக்கட்தொகை 33%லிருந்து, 7% ஆகக் குறைந்து விட்டது என்றெல்லாம் புதிர்களாக இருக்கின்றன. இத்தனை காலம் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது தான் மனித உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்களா?
அயோத்தியா பிரச்சினை வைத்துக் கொண்டு கோவிலை இடித்த போது, அயோத்தியா நிலத்தில் முஸ்லிம்களுக்கு பங்கு கொடுத்தது போல, இங்கும் இடம் கொடுப்பார்களா?: மேலும் அவர்கள் பாகிச்தானில் என்ன அந்த கோவிலுக்கு இன்னொரு இடத்தை ஒதுக்குவார்களா, அங்கு கோவிலை கட்டிக் கொடுப்பார்களா அல்லது கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்ம ஊரில், உச்சநீதி மன்றம், அயோத்தியா கோவில் வளாக நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்குக் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டும். ஆகவே, பாகிஸ்தானிய எதிர்கட்சிகள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தன என்றால், உள்ளூர் அரசியல் செய்துள்ளன அவ்வளவே. அங்கு மைனாரிடியாக உள்ள சீக்கியர்களின் ஓட்டு அவர்களுக்குத் தேவை, அதனால், தங்களது “செக்யூலரிஸாத்தை” இவ்வாறு காட்டிக் கொண்டுள்ளார்கள் போலும்.
ஐநா, நீதிமன்றம் சொல்லதை கேட்காத அரசு யார் சொல்வதை கேட்கும்?: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள்? ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது? ஆமாம், இடித்துத் தள்ளியாகி விட்டது.
© வேதபிரகாஷ்
14-02-12016
[1] The Tribune, Violating HC order, historic Jain temple demolished in Lahore, Posted at: Feb 13, 2016, 1:31 AM
[2] http://www.tribuneindia.com/news/punjab/violating-hc-order-historic-jain-temple-demolished-in-lahore/195631.html
[3] Hidustan Times, Historic Jain temple demolished in Pak to pave way for metro project, PTI, Lahore, Updated: Feb 12, 2016 18:54 IST.
[4] http://www.hindustantimes.com/world/historic-jain-temple-demolished-in-pak-to-pave-way-for-metro-project/story-XOUemmN7KJlG0Iua9JAlJN.html
[5] http://zeenews.india.com/news/india/historic-jain-temple-demolished-in-lahore-to-construct-metro-train-route_1854965.html
[6] On Wednesday morning (10-02-2016), the local administration demolished the building belongs to already damaged temple, shops and office of the Lahore Waste Management Company (LWMC) to clear the area for the train route.
http://www.dailytimes.com.pk/national/10-Feb-2016/orange-line-train-jain-mander-adjacent-buildings-demolished
[7] Times of India, Historic Jain Temple demolished in Lahore, Yudhvir Rana | TNN | Feb 12, 2016, 08.40 AM IST
[8] Daily Times, iian’s temple demolished in Lahore, Kashif Hussain, February 10, 2016, 07.05 am.
[9] Asian Age, Lahore’s iconic Jain temple razed, M. Zulqernain, Lahoe, Feb.12, 2016.
[10] http://timesofindia.indiatimes.com/india/Historic-Jain-temple-demolished-in-Lahore/articleshow/50955160.cms
[11] The Human Rights Commission of Pakistan called upon the Punjab government to review the project and desist from attacking the people’s basic rights to preservation of their heritage.
http://www.deccanchronicle.com/world/neighbours/120216/historic-jain-temple-demolished-in-lahore-for-controversial-metro-project.html
[12] Deccan Chronicle, Historic Jain temple demolished in Lahore, PTI, PublishedFeb 12, 2016, 4:13 pm IST; UpdatedFeb 12, 2016, 4:38 pm IST
[13] http://www.asianage.com/international/lahore-s-iconic-jain-temple-razed-189
[14] UN Special Rapporteur in the field of cultural rights Karima Bennoune, in a press release issued on Friday by the United Nations Human Rights Office of the High Commissioner, said that the project (OMT) passes through the historic centre of Lahore, threatening pre-partition buildings, minority places of worship, historic tombs, shrines and great gardens, many of which are registered protected heritage sites. She said that these sites were of importance not only to local people and the entire cultural landscape of Lahore but are of national significance for the history and cultural heritage of Pakistan. “The project will not only destroy physical sites but the ways of life that have been developed there, that people cherish and through which they express their dignity and identity,” she said.
http://www.dailytimes.com.pk/punjab/23-Jan-2016/un-urges-pakistan-to-halt-construction-of-orange-metro-train
[15] Daily Times, UN urges Pakistan to halt construction of Orange Metro Train, January 23, 2016.
குறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சமண கோவில், சமணம், ஜெயினம், ஜைன கோவில், ஜைனம், தூஷண வேலைகள், லாகூர், லாஹூர்
அரசியல், அல்லா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சம உரிமை, சமண கோவில், சமணம், சமூகத் தீவிரவாதம், ஜைன கோவில், ஜைனம், நம்பிக்கை, லாகூர், லாஹூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 12, 2015
சபரிமலையும், பெண்களும் – கட்டுப்பாடுகளின் பின்னணி, சமீப உண்மைகளை மறைத்து இக்கால எதிர்ப்பு பிரச்சாரங்கள்!

சபரிமலைக்கு பெண்கள் ஏன் வரக்கூடாது: இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்[1]. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி. அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறப்பட்டிருக்கும், என்று குறிப்பிடும் விகடன், இது கேரள உயர்நீதி மன்ற தீர்ப்ப்பின் மீது ஆதாரமானதாகும், என்பதனை எடுத்துக் காட்டவில்லை. ஆனால், விகடன் தொடர்ந்து, அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள். பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா, தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது[2]. இப்பிரச்சினை மற்றும் சினிமா ஷுட்டிங் எடுப்பவர்கள் மற்ற விஐபிக்கள் எப்படி இந்த விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பது, பல நேரங்களில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன[3] என்று தெஹல்கா எடுத்துக் காட்டியுள்ளது.

பரயாறு கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதனால், அவர் சொன்ன பதிலை பிரச்சினையாக்கும் குழுக்கள்: மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான். சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், ‘சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்[4]. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், “மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்கள் தூய்மையாக தான் இருக்கிறார்களாஎன உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்யும் கருவி ஏதேனும்கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்“, என்றார்[5]. ஊடகக்காரர்கள் கேட்ட கேள்வி, தோரணை விஷமத்தனமானது, அதனால், அவரும் அதற்கேற்ற முறையில் பதில் கூறியுள்ளார். ஆனால், சில இளம்பெண்கள் இதனை விசமத்தனமாக ஒரு பிரச்சினையாக்கினர்.

கேரளா பரசுராமர் க்ஷேத்திரம்: மேற்குக் கடற்கரைப் பகுதி, பெரும்பாலும் பரசுராமர் சம்பந்தப்பட்ட இடங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக கேரளா, பரசுராமர் க்ஷேத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. தந்தையின் ஆணையின் படி, பரசுராமர், தனது தாயாரான, ரேணுகா தேவியின் தலையைத் துண்டித்தார் என்று புராணம் கூறுகிறது. பெண்ணைக் கொல்லலாமா, அதிலும் பெற்ற தாயைக் கொல்வது மிகப்பெரிய பாவமில்லையா என்றெல்லாம் கேட்கலாம் ஆனால், “தந்தை சொல் தட்டாத தனயன்” என்ற நிலையில் பரசுராமர் இருந்திருக்கிறார். மேலும், “யந்திர-தந்திர-மந்திர” முறைகளில் பிறழ்ந்த, முறைதவறிய பெண் ஒருத்தி அவ்வாறு தண்டிக்கப் பட்டாள் எனலாம். பிறகு, அத்தலை மற்றும் முண்டம் வழிபாட்டிற்கான சின்னங்களாக, விக்கிரங்களாக மாறின. “மஹிஷாசுர மர்த்தினி” போல! தலை தனியாக மற்றும் தலையில்லாத முண்டம் தனியாக என்று பெண் தெயவத்தின், சக்தியின் வழிபாடு (ரேணுகா தேவி) பற்பல இடங்களில் நடந்து வருவதை கவனிக்கலாம். பரசுராமர் தன்னுடைய தாயின் தலையை வெட்டிக் கொன்றதனால், தலை மற்றும் முண்டம் தனித்தனியாக இருந்து, அவற்றை அவ்வாறே வழிபடும் சின்னங்களாக மக்கள் வைத்துக் கொண்டனர் என்று தெரிகிறது. இவற்றில் இன்னும் பல மேற்குக் கடற்கரைப் பகுதி மலைகளில், காடுகளில் தான் இருக்கின்றன. மேலும் கேரள பகுதி, சக்தி வழிபாடு மிக்க இடமாக இருந்ததினால், சாதாரண மக்கள் போக்குவரத்து அங்கு குறைவாகவே இருந்தது.

சக்தி வழிபாடு, குழந்தை வழிபாடாக மாறியது: சக்தி வழிபாட்டுடன் குழந்தை தெய்வ வழிபாடும் இருப்பது நோக்கத்தக்கது. பொதுவாக, சக்தி வழிபாடு “யந்திர-மந்திர-தந்திரங்களுடன்” இருக்கும் நிலையில், அதன் பிரயோகங்கள் காலத்தில் குறைந்தது போலும். இதனால், பிறகு, ஒரு குழந்தை தெய்வம் அறிமுகப்படுத்தப் பட்டு, சக்தியின் உக்கிரம் தணிக்கப்பட்டது போலும். இதனால், ராஜஸ்தானிலிருந்து, குஜராத், மாஹாராஷ்ட்ரா, கர்நாடகம், கேரளா என்று வரும்போது, நின்றுக் கொண்டிருந்த, குழந்தை வடிவக் கடவுள்,

- ஒருகை இடுப்பில், மற்றொரு கை தூக்கியிருக்கும் நிலை (ராஜஸ்தான், குஜராத்).
- இருகைகளும் இடுப்பில் வைத்திருக்கும் நிலை (மஹாராஷ்ரா – பண்டரிபுரம், கர்நாடகா – உடுப்பி).
- இருகைகளும் கீழே வைத்திருக்கும் நிலை (ஒரிஸ்ஸா – பூரி, தமிழ்நாடு – பழனி).
- இருகால்களும் மடக்கி உட்கார்ந்திருக்கும் நிலை (கேரளா – சபரிமலை).
குருவாயூரப்பன் கூட குழந்தை தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளை தெய்வம் என்ற நிலையில் வைத்தால், ஒருவேளை அவர்கள் கடத்தப்பட மாட்டார்கள் என்று அத்தகையை முறையினை ஏற்படுத்தினார்கள் போலும். அவ்வாறே, இடைக்காலத்தில், கிருத்துவ மற்றும் முகமதிய மதங்களின் தாக்குதம், தாக்கம் முதலியவற்றிலிருந்து காக்க, இம்முறை பயன்படுத்தப்பட்டது. பொதுவாக விழா, பண்டிகை, கொண்டாட்டம் என்று இருக்கும் இடங்களில் தாக்குதல்கள் நடத்த முடியாது, அவ்வாறு மீறி தாக்குதல் நடத்தினால், அவர்களை எளிதில் அடையாளம் காணலாம், தடுத்து விடலாம்[6] என்றும் அவ்வாறு அமைத்திருக்கலாம். ஆதிசங்கரர் பௌத்தம், சமணம் முதலிய மதங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த “சண்மதத்தை” ஏற்படுத்தினார். ஆதிசங்கரருடைய காலம் 509-477 BCE அல்லது 788-820 CE என்றுள்ளது. அவர் ஜைன-பௌத்த “யந்திர-மந்திர-தந்திரங்களுடன்” போராடினார் என்றால், 509-477 BCE காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 788-820 CE காலத்தில் கேரளாவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 17ம் நூற்றாண்டிலிருந்து, போர்ச்சுகீசியர் முதல் முகமதியர்கள் வரை பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படியென்றால், அப்பொழுதுதான் ஆதிசங்கரர் தோன்றியிருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
11-12-2015
[1] விகடன், மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டுதலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!, Posted Date : 10:18 (24/11/2015); Last updated : 10:18 (24/11/2015).
[2] http://www.vikatan.com/news/article.php?aid=55482
[3] பார்வை – சபரிமலை சர்ச்சை – சக்கரியா,தெஹல்கா 15.07.2006 இதழில் வெளியானது. ஆசிரியரின் இசைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது.தமிழில்: சுகுமாரன்,
http://www.kalachuvadu.com/issue-80/paarvai.htm
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1393880
[5]தமிழ்.ஒன்.இந்தியா, மாத விலக்கு குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் சர்ச்சை பேச்சு.. பேஸ்புக்கில் கொந்தளிப்பு, Posted by: Anbarasan Vijay Updated: Monday, November 23, 2015, 18:33 [IST].
[6] ஶ்ரீரங்கம் கோவிலில் கருவறை போராட்டம் என்று நுழைந்தவர்கள், நன்றாக அடிவாங்கிக் கொண்டனர் என்பதனை நினைவு கூரலாம். உண்மையில் வெளி மாநிலத்தவர்கள், தங்களுக்கு என்ன பிரச்சினை என்று அறியாமலேயே, அடாவடித் தனம் செய்த அவர்களை நன்றாக மொத்தி அனுப்பி வைத்தார்கள். பிறகு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறிச்சொற்கள்:இந்து, ஐயப்பன், ஐய்யப்பன், கிருஷ்ணர், குருவாயூரப்பன், தந்திரம், பரசுராமர், பிரமச்சாரி, மந்திரம், யந்திரம், ரேணுகா, ரேணுகா தேவி, வாபர், வாவர், ஶ்ரீநாத்ஜி
இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சபரி, சபரி மலை, யந்திரம், வாபர், வாவர், வாவர் பள்ளி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »