தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!
மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
- மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
- இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
- டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
- அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
- ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
- தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
- இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
- சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
- தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
- ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019
வேண்டிய நண்பர்கள் இப்படி கருத்தைத் தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
- பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
- மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
- மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
- நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.
மாரிதாஸ் தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்து மக்கள் எங்கள் மக்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை, திராவிடம் என்ற போர்வாளை எடுப்போம், பார்ப்பனீயத்தை வேருடன் அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
- பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
- அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
- இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
- இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
- சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
- பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?
மாரிதாஸ் தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமண தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
- 1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
- 1940களில் பிராமண எதிர்ப்பாகி,
- 1950களில் பார்ப்பன துவேசமாகி,
- 1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
- 1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
- 1980களில் அடிக்கப் பட்டு
- 1990களில் வெட்டப் பட்டு,
- 2000களில் அசிங்கப் படுத்தப் பட்டு.
- 2010களில் பன்றிக்கு பூணூல், பூணூல் அறுப்பு முதலியவையாகி
- 2020களில், மறுபடியும் வேரறுப்போம் என்று முடிந்துள்ளது.
பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது.
- ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம்.
- அயோத்யா மண்டபத்தின் பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.
- ராகவேந்திர மடங்களில் விக்கிரங்கள் உடைக்கப் படலாம்.
- அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.
ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
© வேதபிரகாஷ்
13-07-2010