மஹாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தேவை, ஆனால், தமிழக-விசுவாசிகளுக்கு வேண்டாம்! பெரியா தான் வேண்டுமாம்!! (3)

காந்தியைத் தூஷித்து, பெரியாரைப் போற்றும் பிஜேபி: பெரியாரைப் போற்ற ஆரம்பித்த பிஜேபிகாரர்களை இப்பொழுது தான் பார்க்கிறோம். சென்ற சில நாட்களாக அவர்கள் பெரியாருக்கு வக்காலத்து வாங்கி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. எல். முருகன், வானதி ஶ்ரீனிவாசன், வினாயகம் …என்று எல்லோரும் புகழ ஆரம்பித்து விட்டனர். ஈவேரா என்று சொல்லக் கூடாது, பெரியார் என்று தான் சொல்ல வேண்டும் போன்ற அறிவுரைகளும் கூறப் பட்டிருப்பது தமாஷாக இருக்கிறது. “பார்ப்பனர்களை நாங்கள் எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறோம்,” என்ற ரீதியில் பேசுவது திகைப்பாக இருக்கிறது. “பெரியாரின் மறுபக்கம்,” எல்லாம் பார்த்தவர்களா இப்படி ஆதரித்துப் பேசுகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. ஒருவேளை, திக-திமுகவுடனே கூட்டு வைத்துக் கொள்வார்களோ, என்னமோ? அரசியல் ஆதாயங்களுக்காக, பிஜேபியும் சமரசம் செய்து கொள்வது விகல்பமாக, பொருந்தாதக, கற்பனை செய்ய முடியாததாக இருக்கிறது. முன்னர் வாஜ்பாயி இருக்கும் போதே, கூட்டு வைத்தோம், அதனால், இப்பொழுது கூட்டு வைப்பதில், எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விளக்கம் கொடுப்பார்கள்.

மகாத்மா காந்தி தூஷணத்தை சட்டப் படிக் கட்டுப் படுத்த, அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?: பாராளுமன்றத்தில் கூட, காந்தியை அவ்வாறு விமர்சனம் செய்வது உண்டு, ஆனால், அவை குறிப்புகளில் இடம் பெறாது. மாயாவதி அவ்வாறு பேசுவது உண்டு[1]. அப்பொழுதே 2009ல், தேசிய கௌரவம் காக்கும், அவமரியாதையை தடுக்கும் (The Prevention of Insult to National Honour Act 1971) 1971 சட்டத்தை முறைப்படி புதுப்பிக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப் பட்டது[2]. ஆனால், சரிவர கவனிக்கப் படவில்லை. சமீபத்தில் பிரக்யா தாகூர் அத்தகைய விமர்சனம் செய்த போது, அவையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்ற குறிப்பிட்ட விமர்சனங்களைப் பார்ப்போம்[3]:

- ஆமித் ஷா, காந்தியை ஒரு சாதுர்யமான / வஞ்சகமான வியாபாரி [ “chatur baniya” (cunning baniya)] என்று பெசியிருக்கிறார்.
- பிரக்யா தாகூர், கோட்சேவை தேசபக்தர் என்று அவையில் பேசிய போது, மோடியே கண்டித்தார். மறுபடியும் அதே போல பேசியதால், ஆலோசனை கமிட்டியிலிருந்து விலக்கப் பட்டார் மற்றும் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப் பட்டது[4].
- சங்கீத் பாத்ரா, தேசப் பிதா, மோடி என்றது.
- ஹரியானா மந்திரி, அனில் விஜ் என்பவரும், காந்தியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். ஆனால், பிறகு வாபஸ் வாங்கிக் கொண்டார்!
- அனில் சௌமித்ரா, காந்தி பாகிஸ்தானின் தேசப் பிதா என்று விமர்சித்ததால், பிஜேபியிலிருந்து நீக்கப் பட்டார்.
- காமாக்ய பிரசாத் டாசா, காந்தியை நேரு போன்று குப்பை என்று விமர்சித்தார்[5].

இதனால், ஒரு எம்.பி, “Prevention Of Insult To The Father Of The Nation And Other Icons Of Freedom Movement Bill” என்னவாயிற்று என்று தெரியவில்லை. அந்த மசோதா நகலை இங்கு படிக்கலாம்[6]. பொதுவாக, இத்தகைய தனி நபர் மசோதாக்கள் ஏற்கப்படுவதில்லை[7], அதனால், அவை சட்டமாகவும் ஆவதில்லை[8]. மகாத்மா காந்தி தூஷணத்தை சட்டப் படிக் கட்டுப் படுத்த, அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டால், இருக்கின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் நிச்சயமாக, சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும். 2011ல், “நான் காந்தியை வெறுக்கிறேன்,” என்ற பேஸ்புக் குழு மீது புகார் கொடுக்கப் பட்டு, வழக்குத் தொடரப்பட்டது[9]. ஒரு IPS அதிகாரியே பேஸ்புக்கில் பதிவானதால், அதன் மீது புகார் கொடுத்தார்[10]. 2019ல் ஒரு ஹிந்து மஹாசபா தலைவர் மீதும் வழக்குத் தொடரப் பட்டது[11]. நிதர்சன நிகழ்வுகளை அறிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு ஆதாரமில்லாத சிந்தனையுடன் தூண்டிவிடும் நோக்கத்துடன் கருத்துகள் வெளியிடப் படுகின்றன[12]. இதெல்லாம் சில உதாரணங்கள் தாம். ஆனால், இருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளால், ஆட்சி-அதிகாரம் முதலியவற்றைப் பற்றி அரசியல்வாதிகள் குறியாக இருப்பதால், இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

காந்தி–எதிர்ப்புவாதிகள் யோசிக்க வேண்டியது: காந்தி எதிர்ப்பில், நேரிடையாக எதிர்மறையாக மோதல்களில் உள்ள சித்தாந்திகள் ஈடுபட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது.
- மகாத்மா காந்தி பேசினது, எழுதியது என்று நூறுக்கும் மேலான தொகுப்புகளை பேராசிரியர் கே. சுவாமிநாதன் மூலம் சரிபார்த்து வெளியிடப்பட்டுள்ளன . அவற்றை “டவுன்லோட்” செய்து கொள்ளலாம் . மலிவுவிலை பதிப்பும் அரசு வெளியிட்டுள்ளது .
- மகாத்மா காந்தியின் பேச்சுகளை, எழுத்துகளை அவற்றில், அந்தந்த காலம்-நேரம்-இடம்-பிரச்சினை முதலியவற்றை வைத்துக் கொண்டு படித்தறிய வேண்டும்.
- அங்கொரு வரி, இங்கொரு வரி என்று எடுத்துக் கொண்டு, விளக்க அளிக்க முடியாது. காந்தியை எதிர்ப்பவர்கள், எதிர்-காந்தித்துவவாதிகள், காங்கிரஸ்-எதிரிகள், இந்து-விரோதிகள் என்று பலபோர்வைகளில் அத்தகைய திரிபு விளக்கங்கள், பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் அறிந்த விசயங்கள் தாம் ஒன்றும் ரகசியம் இல்லை..
- காந்தியைப்பொறுத்த வரையில் எல்லா விசயங்களும் வெளிப்ப்படையாகத் தான் இருக்கின்றன. மற்றத் தலைவர்களைப் போல, சிலவற்றை மறைப்பது, போன்ற விவகாரங்கள் இல்லை.
- இன்றைய நிலையில் நூறு புத்தகங்களையும் படித்தறிந்து விவாதிப்பதில்லை, பிரச்சார ரீதியில், மேற்குறிப்பிட்ட வகையில் எழுதியுள்ளதைப் படித்து விட்டு, எல்லாமே தெரிந்தது, அறிந்தது மற்றும் புரிந்தது போன்று எழுதியும்-பேசுவதும் வழக்கமாகி விட்டது. இப்பொழுது,

- 6. “தென்னாட்டு காந்தி அண்ணாவே சொன்னார்” என்ற எம்ஜிஆர் பாட்டை எதிர்த்தனரா, கோட்சே ஆதரவாளர்கள்? இன்று ஈவேராவைப் புகழும் பிஜேபிகாரர்கள், வாக்காலத்து வாங்கும் இந்துத்துவ வாதிகள் யோசிக்க வேண்டும்.
- 7. காந்தியை தூவேசிப்பவர்கள் [சில இந்துத்துவவாதிகளையும் சேர்த்து] அந்நிய பொருட்களை எரிப்பார்களா, உபயோகிக்காமல் இருப்பார்களா? அந்நியநாட்டு துணிகளை எரிக்க ஆரம்பித்தபோதுதான், ஆங்கிலேயர் மருண்டனர், லங்காஸையர் தொழிற்சாலைகளில் துணிகள் தேங்கியபோது, துடித்தனர்.
- 8. அம்பேத்கர், துலுக்கர், கிருத்துவர், ஆங்கிலேயர் …… என்று அனைவராலும் வெறுக்கப்பட்ட காந்தியை சில இந்துக்கள் எதிர்ப்பது????
- 9. இக்கால இளைஞர்கள் விவரமானவர்கள், உண்மையினை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள், ஆகவே உண்மையினை சரி பார்த்து ஏற்றுகொள்ளட்டும்.
- 10. அத்தகைய ஒன்று சதை மற்றும் ரத்தத்துடன் இப்பூமியின் மீது நடந்ததா என்று நம்புவதற்கு பல தலைமுறைகள் வர வேண்டியிருக்கும்! சொன்னது விஞ்ஞானி ஐன்ஸ்டைன்! ஐன்ஸ்டைனை விட புத்திசாலிகளா காந்தியை வெறுப்பவர்கள், அவதூறு பேசுபவர்கள்! அதிலும், இந்தியர், இந்துக்கள்!
© வேதபிரகாஷ்
02-10-2020

[1] Hindustan Times, ‘Amend laws to protect honour of Father of Nation’, Satya Prakash, Updated: Jun 29, 2009 01:00 IST.
[2] The Prevention of Insult to National Honour Act 1971 must be amended to make a suitable provision to protect the fair name of the Father of the Nation,
[3] Rediff.com, 6 times when BJP leaders insulted Mahatma Gandhi, By THE REDIFF NEWS BUREAU, February 03, 2020 14:10 IST
[4] BJP’s Lok Sabha MP form Bhopal and Malegaon blast accused, Pragya Singh Thakur, has repeatedly called Mahatma Gandhi’s assassin Nathuram Godse a “patriot”. Reacting to Pragya’s remarks, Prime Minister Narendra Modi had said that he will never forgive her with his heart. This, however, did not stop the Bhopal MP to laud her ‘idol’ again. During the winter session of Parliament last year, Pragya once again praised Godse on the floor of the House. The BJP as a punishment axed her from a consultative committee on defence and barred her from attending its parliamentary party meeting.
[5] https://www.rediff.com/news/report/pix-six-times-when-bjp-leaders-insulted-mahatma-gandhi/20200203.htm
[6] http://164.100.47.4/billstexts/lsbilltexts/asintroduced/302ls.pdf
[7] The Week, Pvt member’s bill seeking punishment for insulting Mahatma Gandhi introduced in RS, PTI April 05, 2020 01:17 IST.
[8] A private member’s bill can be introduced by an MP other than an Union minister. Such bill is introduced by the member in his personal capacity and normally such bills fail to get passed.
https://www.theweek.in/wire-updates/national/2019/12/06/del126-bill-gandhi-insult.html
[9] The police have lodged a case under sections 153, 153 A(1)(a), 153 A(1)(b), 153 A(1)(c), 153-B, 290, 504, 505 (1), 505 (2),506 of the IPC and section 66(A) of the Information Technology Act, 2000.
[10] India Today, Facebook faces FIR for ‘insulting’ Mahatma Gandhi, Mail Today Bureau,LucknowJanuary 25, 2011UPDATED: January 25, 2011 11:47 IST.
[11] DECCAN CHRONICLE, Defamatory comments against Mahatma Gandhi, | RABINDRA NATH CHOUDHURY, PublishedNov 17, 2019, 2:33 am ISTUpdatedNov 17, 2019, 2:33 am IST
[12] https://www.deccanchronicle.com/nation/current-affairs/171119/defamatory-comments-against-mahatma-gandhi.html
