Archive for the ‘வீரமணி’ Category
பிப்ரவரி 15, 2020
திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

இதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,

கோவில்–மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.

நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –
- கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;
- உண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..
- சூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,
- தாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….
- குங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,
- பூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]
- பன்றிக்கு பூணூல் போடுவது
என்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம். பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும்? தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு! அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு?

ஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம்! பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்!
© வேதபிரகாஷ்
15-02-2020.

[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/539287-dravidar-kazhagam-protest-2.html
[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, பிப்ரவரி 10, 2020.
[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/d-k-protest-in-tirupananthal-succeed-120021300013_1.html
[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்!, செல்வகுமார், Published on 12/02/2020 (14:39) | Edited on 12/02/2020 (14:52)
[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dharumapuram-aadhinam
குறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், இந்து விரோத திராவிட நாத்திகம், தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருப்பனந்தாள், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல்
அரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, உருளுதல், உருள், உள்நோக்கம், எதிர்ப்பு, எம்ஜிஆர், கருணாநிதி, கழகம், சங்கரச்சாரி, சம உரிமை, திருப்பனந்தாள், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், விடுதலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 15, 2020
பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்‘ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4] – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்‘ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.

“பட்டினப்பிரவேசம்” பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

“ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
15-02-2020.

[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM
[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition
[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38
https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html
[4] இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.
[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |
[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html
குறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், சேவை, தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், தூக்குதல், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள்
அரசியல், அறநிலையத் துறை, ஆதீனகர்த்தர், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எம்ஜிஆர், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கழகம், குன்றக்குடி அடிகளார், சங்கரச்சாரி, சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், ஜீயர், தருமபுர ஆதினகர்த்தர், தூக்குதல், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை மனிதன் சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள், வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:
“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].
எண் |
சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் |
வயது |
ரிக் வேத மந்திரத்தின் பொருள் |
Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D |
1 |
குழந்தை |
0 முதல் 4 வரை |
சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
|
In charge of Pubarche, appearance of pubic hair |
2 |
பேதை.
|
5 முதல் 8 வயது |
3 |
பெதும்பை |
9 முதல் 10 வயது வரை |
விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.
|
In charge of Thelarche, appearance breasts. |
4 |
மங்கை.
|
11 முதல் 14 வயது வரை |
5 |
மடந்தை |
15 முதல் 18 வயது வரை |
அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.
|
In charge of Menarche, 1st periods |
6 |
அரிவை |
19 முதல் 24 வயது வரை |

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33
[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm
[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
குறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்
அக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [1]

முஸ்லிம்களை தாஜா செய்த விதம்: உபியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி அன்று தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாகத்தான் பயன் படுத்தி வந்துள்ளது. இதே முறையை, வங்காளத்தில் மம்தாவும், தெற்கில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. மலபுரம் என்ற மாவட்டத்தை கேரளாவில், முஸ்லிம்களுக்கு என்று உருவாக்கியது அறிந்ததே. ஓட்டுகளுக்காக, தேர்தல் தொகுதிகள் அவ்வாறே பிரிக்கப் படுகின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், அத்தகைய தொகுதிகளாகப் பிரிப்பதால், அவர்கள் ஓட்டுப் போடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதியாகின்றது. பிறகு, முஸ்லிம்கள் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்றிக் கொகின்றனர். இல்லையென்றால், கலவரத்தை உண்டாக்கி, சாதித்துக் கொள்கின்றனர். ராஜீவ் காலத்தில், ஷா பானு வழக்கு, முஸ்லிம் பெண்கள் சட்டம் முதலியவை, இவற்றை அப்பட்டமாக எடுத்துக் காட்டின.

மாயாவதி முஸ்லிம்களுக்கு விடுத்த கோரிக்கை: கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில்[1], “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்,” என பேசினார். மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்[2], “மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார்.

அலி, பஜ்ரங் பலி இருவருமே தேவை – யோகி ஆதித்யநாத்: “இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், மாயாவதி இன்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராம நவமி நாளன்று, மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், பஜ்ரங்பலி மற்றும் அலி ஆகியோருக்கு இடையில் வெறுப்பு மற்றும் மோதலை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக இது நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அலி, பஜ்ரங் பலி சர்ச்சை தொடர்பாக இன்று தேர்தல் பேரணியில் மாயாவதி பேசும் போது அலி, பஜ்ரங் பலி இருவருமே எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். ‘‘நான் முதல்வர் ஆதித்திய நாத்துக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எங்களது முன்னோர் குறித்து அவர் முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதற்காக அவருக்கு என் நன்றிகள். பஜ்ரங் பலி ஒரு காட்டுவாசி, தலித் என்று ஏற்கெனவே முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்[3]. அதற்கு நன்றி,’’ மாயாவதி, ‘‘பஜ்ரங் பலி எங்களை போன்ற தலித் சமூகத்தினர் என்பதால் அவருடைய ஆசி எங்களுக்கு மிகவும் அவசியம்’’ என்று மாயாவதி தெரிவித்தார்[4].

முஸ்லிம்களும், பாஜகவும்: இஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்குத் தான் என மயாவதி உறுதியாக நம்புகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த முதல்வர் யோகி[5], ‘ராகுல் அமேதி தொகுதியை புறக்கணித்துவிட்டு கேரளாவின் வயநாடு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அங்கு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டை கூறு போட்டவர்கள் இஸ்லாமியர்கள். உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பச்சை சாயம் பூச முயல்கின்றன. அது நடக்காது. அவர்களுக்கு அலி என்றார் எங்களுக்கு பஜ்ரங்க் பலி’ என கூறியுள்ளார். யோகி உத்திர பிரதேசத்தின் பல தொகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பரப்புரை நடத்தினார். யோகியின் இந்த அறிக்கை மூலமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை உத்திர பிரதேச பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது[6]. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம் தான், ஆனால், முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் பெண்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அதனை, தடுக்கத்தா, இத்தகைய பிரசாரம் நடக்கிறது. பர்கா தத், அஸாசுதீன் உவைசியுடன் 13-04-2019 அன்று நடத்திய பேச்சு / பேட்டி, அதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், அடிப்படைவாதமும், முஸ்லிம்களும்: சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. காலப் போக்கில், இது முஸ்லிம் அடிப்படைவாதிகளில் கைகளில் சிக்கி, திசைமாற ஆரமித்தது. சையது அகமது கானின் கனவையே சிதைக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. பல்கலை வேந்தர்கள், பேராசிரியர்க தாக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்[7].

அனைவருக்கும் சம உரிமை – யோகியின் வாக்குறுதி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ”அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்” எனத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்[8].
வேதபிரகாஷ்
14-04-2019

[1] தினமலர், பஜ்ரங்பலி – அலி இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 16:45
[2] http://www.dinamalarnellai.com/web/news/69002
[3] தினமணி, ஹிந்து–முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு, By DIN | Published on : 14th April 2019 02:27 AM
[4]https://www.dinamani.com/india/2019/apr/14/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3132892.html
[5] சமயம், அவர்களுக்கு ’அலி’ என்றால் எங்களுக்கு ’பஜ்ரங் பலி’; அரசியல் டிஆர் ஆகிய யோகி, Samayam Tamil | Updated:Apr 10, 2019, 11:02AM IST
[6] https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/if-they-have-faith-in-ali-we-have-bajrang-bali-says-yogi/articleshow/68806384.cms
[7] தி.ஹிந்து.தமிழ், அலிகர் பல்கலைக்கழகத்தில் தலித்துகள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம்: உ.பி. முதல்வர் யோகி உறுதி, Published : 12 Apr 2019 13:15 IST, Updated : 12 Apr 2019 13:15 IST.
[8] https://tamil.thehindu.com/india/article26816861.ece
குறிச்சொற்கள்:ஆதித்யநாத், ஆஸம் கான், ஓட்டு, கொலை, தாத்ரி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம், யோகி
ஆதித்யநாத், ஆஸம் கான், சமண கோவில், சமணம், தோமா, தோமையர், நக்கீரன், நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, ராகுல், வழக்கு, வாக்காளர், விபூதி, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் ! [3]

திகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].

பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்!,” என்று விடுதலை முடித்தது[3].

இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].

இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது சகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா?: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்றம் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.

2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர்! அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று! இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.

அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.

இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்துமத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] https://www.viduthalai.in/e-paper/179293.html
[2] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[3] https://www.viduthalai.in/e-paper/179293.html
[4] மாலைமலர், கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி, பதிவு: ஏப்ரல் 06, 2019 11:20
[5] நக்கீரன், கிருஷ்ண அவதாரம் குறித்த வீரமணியின் கருத்து, பதிலளித்த ஸ்டாலின்…, கமல்குமார், Published on 06/04/2019 (13:09) | Edited on 06/04/2019 (13:37)
[6] https://www.nakkheeran.in/special-articles/special-article/k-veeramani-about-krishna-dmk-president-stalin-reply
[7] https://www.maalaimalar.com/News/District/2019/04/06112014/1235907/if-veeramani-said-anything-wrong-about-krishna-must.vpf
ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், திருச்சி, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், தேர்தல், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மோடி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாசக்தி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

வைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].

திகவினர் சொல்வது என்ன? விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].

காவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].

மோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].

இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்!, Updated: April 5, 2019, 1:29 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html
[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[4] https://www.viduthalai.in/e-paper/179293.html
[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[6] https://www.viduthalai.in/e-paper/179293.html
[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[8] https://www.viduthalai.in/e-paper/179293.html
[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[10] https://www.viduthalai.in/e-paper/179293.html
குறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்
அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 6, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்! [1]

கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் மற்றும் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. “ஈவ்டீசிங் கேசுல முதலில் புக் பண்ணவேண்டிய ஒரு ஆள்னா அது இந்த கிருஷ்ணனைத் தவிர, கிருஷ்ண அவதாரத்தைத்தவிர வேறு யாருயா? பொள்ளாச்சிகாரனுக்கே அவன்தான்யா முன்னோடி. பொள்ளாச்சிகாரன் ஃபோட்டோ எடுத்தான்னு சொல்றாங்க. ஒருவேளை வீடியோ கிருஷ்ணன் கையில கிடைச்சிருந்தா அதை அவன் வீடியோ எடுத்து எல்லா தேவர்களுக்கும் போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள் மன்னிக்கணும், இந்த புராணம் பற்றிய விஷயங்களை பேசும்போது எனக்கே சங்கடமாக இருக்கு. அறுவை சிகிச்சைக்கு சென்றபிறகு உடையை கலட்டாமல் அறுவை சிகிச்சை செய்யுங்கள் எனக்கூறினால் எப்படி பண்ணமுடியும். அதுபோல் உண்மையை அதன் நிர்வாணத்தன்மை என சொல்லக்கூடிய அளவில் ஆராயவேண்டும், ” நக்கீரன் இவ்வாறு வெளியிட்டுள்ளது[2].

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது[3]. தமிழ் ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டாலும், அத்தகைய நிகழ்வு எப்படி, ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதனை விசாரித்து எழுதி இருக்க வேண்டும். யாரும், அத்தகைய காரியங்களில் இறங்க மாட்டார் என்பது தெரிந்த விசயம்.

திக-திமுகவினரின் நாத்திகம் செக்யூலரிஸமாக இல்லை, ஆனால், கம்யூனலாக இருந்து வருகின்றது: திக-திமுக தலைவர்களே கடந்த 70 ஆண்டுகளாக, இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றையும் விமர்சித்து வருவதோடு, ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தூஷ்ணமாகவும் பேசி-எழுதி வருகின்றனர். முன்பு, ஏதோ பிட் நோட்டீஸ், குறும்புத்தகம் என்று வந்த போது, பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், இப்பொழுது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்ளில் வரும் போது, லட்சக்கணக்கில், உலகம் முழுவதும் கவனிக்கும் வகையில், இத்தகைய செய்திகள் பரவுகின்றன. அப்பொழுது, இவர்களது பாரபட்சம் மிக்க, ஒருதலைப்பட்சமான, சார்புடைய சித்தாந்தம், மனப்பாங்கு, முதலியவை வெளிப்படுகின்றன. செக்யூலரிஸம்-சமதர்மம் என்று இருந்தாலும், அவர்களின் போலித் தனம், நடுநிலைமை அற்ற குணாதிசயம், முதலியவையும் வெளிப்படுகின்றன. இந்து அல்லாத மதங்களைப் பற்றி விமர்சிப்பதே கிடையாது, மாறாக, அவர்களது பண்டிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும். விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டியும் செய்து வருகின்றன. அத்துடன் நில்லாமல், அதே நிகழ்ச்ச்களில் இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் முதலியவற்றை கிண்டலடித்து தூஷித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் இன்றைக்கு கவனித்து வருகின்றனர்.

திருநாவுக்கரசரை ஆதரித்து திக மேடை பேச்சு: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க 04-04-2019 அன்று இரவு 8 மணியளவில் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்[4]. அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர்[5]. கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்[6].

திருநாவுகரசு, திருநாவுகரசன், பதிலாக திருநாவுக்கரசர் ஏன்?: திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்துக் கொண்டதிலிருந்தே, திருநாவுகரசு, திருநாவுகரசன், என்று வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. அதாவது மனிதனுக்கே அந்த அளவுக்கு மரியாதை எத்ர்பார்க்கு, மமதை, ஆணவம் எல்லாம் இருக்கிறது. மேலும், முன்னர், இவர் பிஜேபியில் இருந்தவர். அந்த அழகில், வீரமணி, இவருக்கு ஆதரவு தெரிவித்து, பேச வேண்டிய அவசியம் என்ன என்ன தெரியவில்லை. பிறகு, இவரும், அத்தகைய, இந்துவிரோத நாத்திகத்திற்கு ஒத்துப் போகிறார் என்றாகிறது. இல்லையென்றால், தனிப்பட்ட முறையில், “என்ன வீரமணி, இப்படி எல்லாம் பேசவது, எழுதுவது எல்லாம் தேவையா, இது செக்யூலரிஸம் ஆகாதே என்று கேட்டிருக்கலாம்,” ஆனால், கேட்கவில்லை என்றே ஆகிறது.

இந்துமுன்னணி, திகவினர் மோதல்: அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர்[7]. அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன[8]. இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்பட்டது[9]. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது[10]. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்[11].

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[12]: “திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே 04.04.2019 அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திடீரென்று புகுந்த இந்து முன்னணி அமைப்பினர், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தி.க.வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு திரு.கி.வீரமணி அவர்கள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் உள்ள இ.பி ரோட்டில் வேனை மறித்து இந்து முன்னணியினர் கலகம் செய்துள்ளனர். ஏற்கனவே, “தினமலர்” நாளிதழில் அவரை தாக்க வேண்டும் என, கேள்விபதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பிறகும் அவருக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததால், வேனில் திரும்பும் போதும் தாக்க முற்பட்டுள்ளனர். தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர்மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது. மேலும் திரு.கி.வீரமணி அவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகும், போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. தமிழக அரசு உடனடியாக தி.க.தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் “தமிழக அரசே பொறுப்பு” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] தினமலர், திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல், Added : ஏப் 04, 2019 22:28
[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/k-veeramani-about-krishna-dmk-president-stalin-reply
[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2248617
[4] நியூஸ்.7.டிவி, இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்!, April 05, 2019, Posted By : Shanmugapriya
[5] http://ns7.tv/ta/955j75
[6] நியூ.ஏசியா.நியூஸ், வீரமணியை ஓட ஓட விரட்டிய இந்து முன்னணியினர் ! காலணி வீசி கலவரம் ! 2 பேர் மண்டை உடைப்பு !!, By Selvanayagam P, First Published 4, Apr 2019, 10:35 PM IST
[7] https://tamil.asianetnews.com/politics/veeramani-meeting-stone-belt-ppg4sm
[8] தமிழ்.ஒன்.இந்தியா, வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு, By Velmurugan P | Published: Thursday, April 4, 2019, 21:32 [IST]
[9] https://tamil.oneindia.com/news/trichirappalli/dravidar-kazhagam-members-attacked-by-hindu-munnani-in-trichy-345948.html
[10] விகடன், திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!, சி.ய.ஆனந்தகுமார் சி.ய.ஆனந்தகுமார், வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019) கடைசி தொடர்பு:10:45 (05/04/2019)
[11] https://www.vikatan.com/news/tamilnadu/154207-hindu-munnani-movement-leaders-attacked-on-dmk-election-campaign-meeting-at-trichy.html
[12] தினமணி, கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், By DIN | Published on : 05th April 2019 03:04 PM
[13] https://www.dinamani.com/tamilnadu/2019/apr/05/cpi-condemns-attack-over-kveeramani-meting-held-in-trichy-3127748.html
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், துர்கா ஸ்டாலின், நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, பொள்ளாச்சி, வீரமணி, ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், திக, திமுக, நாத்திகம், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [2]

வீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல்வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].

ஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்?

சாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்‘ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு? எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.
ஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின்? ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்‘ காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.
[2] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=2244849
[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST
[4] https://tamil.thehindu.com/tamilnadu/article26691030.ece
[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/29175017/1030311/Veeramani-chennai-police-case.vpf
[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்
பதிவு: ஏப்ரல் 01, 2019 15:19
[8] https://www.maalaimalar.com/News/State/2019/04/01151953/1235077/Hindu-munnani-complaint-against-Veeramani-in-palani.vpf
[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM
[10] https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/01130550/Some-have-created-the-image-of-a-DMK-opponent.vpf?fbclid=IwAR09Xqy4-YgZCkLl291-8CpJwG6t63Ddcfyk5LMZtUWH7BIswX-MpEFfSFE
[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அரவிந்தன் நீலகண்டன், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபி, கோபிகா, கோபிகை, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பகுத்தறிவு, ராசலீலா, ராசலீலை, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்!
பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா?: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.
கமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது!

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்?
சேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா?: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்!
தீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது? நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்
கடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
- முதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.
- எதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.
- “நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.
- அதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.
- ஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.
- “நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.
- “ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.
- “. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…!- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்!, Posted by: Shankar, Published: Saturday, October 3, 2015, 10:15 [IST].
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/has-kamal-donated-rs-16-cr-or-not-236952.html
[3] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html
[4] http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு
அல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

அண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்
நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal
சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal
அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு
அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Kamal pretending as a Hindu – frustrated on all accounts
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Kamal pretending as a Hindu – asking permission to shoot
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html
[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.
[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST
[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html
[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.
http://indianexpress.com/article/entertainment/entertainment-others/divorced-kamal-haasan-sarika-greet-each-other-warmly-at-shamitabh-music-launch/
[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு
[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm
[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.
[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.
[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.
[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html
[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece
குறிச்சொற்கள்:அக்ஷரா, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, சகிப்புத்தன்மை, சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், மது, விடுதலை, விபூதி, விருது, வீரமணி, ஸ்ருதி
அக்ஷரா, அரசியல், இந்து, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், கமக் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், விடுதலை, விருது, வீரமணி, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »