Archive for the ‘வருமானம்’ Category

ஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன!

நவம்பர் 27, 2016

ஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன!

omalur-google-map-location

ஆங்கிலேயர் ஆட்சி, திராவிடர் ஆட்சி – கோவில் சமந்தப்பட்ட விசயங்களில் தலையீடு, வழக்குகள் பெருகுவது: கோவில்களில் ஆகம சாத்திரங்கள் மற்றும் பாரம்பரியமாக நடந்து வரும் பூஜைகள், சடங்குகள், கிரியைகள், ஆடல்-பாடல்கள் எல்லாமே நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் யாரும் போலீஸ், நீதிமன்றம் என்று யாரும் போவதில்லை, தேவையுமில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் யானைக்கு வடகலை அல்லது தென்கலை நாமம் போட வேண்டும் என்று கோர்ட்டுக்குச் சென்றதாக உள்ளது. இதெல்லாம், பாரம்பரியத்தை சீரழிக்க செய்யும்கூட்டத்தினருடையது என்றறியப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் வந்ததும் அத்தகைய வழக்குகள் அதிகமாகின. மேலும், “கடவுள் இல்லைளென்று இன்றும் பறைச்சாற்றி வரும் நாத்திக-திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில்கள் சீரழிய ஆரம்பித்தன. அத்தகைய சித்தாந்திகள் லட்சக்கணக்கில், இன்று இந்துஅறநிலையத் துறையில் புகுந்து, வேலை செய்து வருகின்றனர். அந்த அலங்கோலம் தான், ஒவ்வொரு சீரழிவிலும் வெளிப்படுகிறது. கோவில் திருவிழா நடத்தினால், பணம் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இத்தகைய ஆபாச நடனங்களை நடத்தி வருகிறார்கள்.

madras-high-court-directions-and-conditions-for-function

சரத்துகளை மீறியதால், போலீஸ் அனுமதி மறுத்தது, நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றம் உரிய சரத்துகளுடன் அனுமதி அளிக்க ஆணையிட்டது: 03-03-2016 அன்று ஶ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் விழா, சங்கணுரில் நடத்த அனுமதி கேட்டு [Sri Sakthi Kunju Mariamman Thirukovil festival to be held at Senkanur, Pagalpatty village, Omalur Taluk, Salem] போலீஸ் மறுத்தபோது, விக்ரம் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[1]. அதற்கு நீதிபதி, கீழ்கண்ட சரத்துகளுடன் கொண்டாட அனுமதியளித்து, போலீஸாருக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆணையிட்டார்[2]:

  1. 03-03-2016 அன்று திருவிழா கலாச்சார நிகழ்சி மாலை30 முதல் 10.30 வரை நடத்தலாம்.
  2. நடன நிகழ்சியின் போது, பங்கு கொள்பவர் ஆபாச நடனம், ஆபாச – அசிங்மான உரையாடல் எதுவும் இருக்கக் கூடாது.
  3. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் வகையில் இருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட எந்த பாடலும் ஒலிபரப்பக் கூடாது.
  4. பாடல், ஆடல் எந்த அரசியல் கட்சி, மதம், ஜாதி, சமூகம் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது.
  5. எந்த அரசியல் கட்சி, ஜாதி மற்றும் சமூதாயத் தலைவர் கட்-அவுட் வைக்கக் கூடாது.
  6. நிகழ்சி மதரீதியிலாகவோ, எந்த ஜாதியினரை வேற்றுமைப் படுத்திக் காட்டக் கூடியதாகவோ, அமைதியைக் குலைக்கும் முறையிலோ இருக்கக் கூடாது.
  7. இந்த சரத்துகளை மீறினால், போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்கலாம்.
  8. அதே போல, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி, நிகழ்சி நடத்தினால், போலீஸார் நிறுத்தலாம்.
  9. இதையெல்லாம் குறிப்பிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.

இதேபோல, கரையூரில் உள்ள ஶ்ரீ நாத காட்டு மாரியம்மன் கோவிலில்[3] [the Rangagoundapura Sri Nathdha Kattu Mariyamman Kovil, situated at Karaiyavur (Rangagoundapuram via), Aattukaraiyanoor Post, Omalur Taluk, Salem District] 05-02-2016 அன்று விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது[4]. 03-03-2016 அன்று குப்பலூரில் உள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்[5] [Sri Sakthi Mariamman Temple festival situated at Kuppalur, Omalur Taluk, Salem District] நடத்த அனுமதி கொடுக்க போலீஸாருக்கு கோர்ட் ஆணையிட்டது[6]. இவையெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே, கோவில் திருவிழா பெயரில் எவ்வாறு ஆபாச நடனங்கள் முதலியவை நடந்து வருகின்றன, மாணவர்-இளைஞர்களைக் கெடுக்கிறது முதலியவற்றை கவனிக்கலாம். ஆனால், மீறி நடத்தப் படுவது, சமூகத்தைக் கெடுத்தாலும் பரவாயில்லை என்று நிகழ்சிகளை நடத்துவது, ஒரு திட்டமிட்ட சதியாகத்தான் தெரிகிறது.

omalur-chemmandippatti-mariamman-koil-nude-dance-june-2016

திராவிட பிரச்சார கூட்ட பாணியில் இரவு நேரம் போகபோக நடனத்தில் ஆடை குறைந்தது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் [ஜூன் 2016] திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது, ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்குத் தெரிந்துதான் ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கேற்றபடி, ஆட பெண்கள் கூட்டி வரப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர், பிறகு அங்கு கூட்டி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடினர்[7]. நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள்[8]. 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள் என்று ஊடகங்கள் விளக்கியுள்ளன[9].  1960களில் திராவிட பிரச்சாரக் கூட்டங்களில், பெரிய-பெரிய தலைவர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள் எல்லோருமே, இரவில் நேரம் ஆக-ஆக, இப்படித்தான் வாயினால் ஆபாசபேச்சு பேசி, மக்களை ஊக்குவிப்பர். அதே பாணியைத்தான், இந்த நடனத்திலும் பின்பற்றப்படுகிறது போலும்.

omalur-nude-dance

குடும்பத்துடன் நிர்வாண நடத்தை ரசித்த மக்கள்: அவ்வாறு கொஞ்சம்-கொஞ்சமாக அவிழ்த்து போட்டு ஆடிய நடனத்தை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்லோரும் கண்டு ரசித்துள்ளனர்[10]. அதாவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்று பார்த்தார்களா அல்லது அதெல்லாம் தவறு என்று அறியாமல் பார்த்தார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். இருப்பினும், மனசாட்சி இருந்த யாரோ சிலர் இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்[11]. வேறு வழியில்லை அல்லது நீதிமன்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்[12].  அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர். அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.

© வேதபிரகாஷ்

27-11-2016

obscene-and-vulgar-dances-at-temples-madurai-dinakaran

[1] Madras High Court – Viram vs The Inspector Of Police on 1 March, 2016 – IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED : 01.03.2016 – CORAM – THE HONOURABLE MR. JUSTICE R.SUBBIAH – W.P.No.7582 of 2016.

[2] https://indiankanoon.org/doc/138253317/

[3] Madras High Court, V.Rajendiran vs The Inspector Of Police on 4 February, 2016, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 04.02.2016; CORAM: THE HONOURABLE MR.JUSTICE R.SUBBIAH, W.P.No.4252 of 2016.

[4] https://indiankanoon.org/doc/69166474/

[5] Madras High Court – C.Pachaimuthu vs The Inspector Of Police on 26 February, 2016; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS – DATED  : 26.02.2016; CORAM: THE HONOURABLE MR.JUSTICE R.SUBBIAH, W.P.No.7136 of 2016.

[6] https://indiankanoon.org/doc/186115943/

[7] மாலைமலர், ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம், பதிவு: ஜூன் 14, 2016 12:15.

[8] http://www.maalaimalar.com/News/State/2016/06/14121508/1018717/4-womens-running-for-when-obscene-dance-scared-by.vpf

[9] தமிழ்.வெப்துனியா, ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nude-dance-show-in-salem-police-seized-dress-116061400058_1.html

[11] லைவ்டே, சேலம் அருகே நள்ளிரவில் நிர்வாண டான்ஸ் ஆடிய பெண்கள்!!, Jun 14, 2016 at 1:33 PM : By LIVEDAY.

[12] http://liveday.in/tamilnadu-live-headline-news/tamil-nadu-village-dance-program/

“இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந்துக்களின் நலனிற்காகவா, இல்லை அந்நலன்களுக்கு எதிராகவா?

நவம்பர் 30, 2013

“இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந்துக்களின் நலனிற்காகவா, இல்லை அந்நலன்களுக்கு எதிராகவா?

மதுரை ஆதீனம் மீது வைஷ்ணவி புகார் 2013இந்து  மக்கள்  கட்சித்  தலைவரிடம்  குற்றப்பிரிவு  போலீஸ்  விசாரணை[1]: மதுரை ஆதீனம் மீது புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலைக்கண்ணனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் கொடுத்த புகார் மனுவில், ‘மதுரை ஆதீன மடம் 1,500 ஆண்டுகள் பழமையானது. ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 33 ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடி வரை கையாடல் செய்து மடத்துக்கு வர வேண்டிய வருமானத்தை அபகரித்துள்ளார். இதற்கு உதவியாளர் வைஷ்ணவி, அவரது தாயார் கமலம், சகோதரி கஸ்தூரி, கணவர் வேதமூர்த்தி ஆகியோரும் உடந்தை”. என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோலை கண்ணன் மற்றும் அவரது வக்கீலிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள், ஆதீனம் மடத்தில் நடந்த மோசடிகள் குறித்த ஆவணங்களை கொடுத்துள்ளனர். விரைவில் ஆதீனம் மடத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[2].

சோலைக்கண்ணன், அர்ஜுன் சம்பத்மதுரை  ஆதீனம்மீது  மோசடி  இந்துமக்கள்  கட்சி  புகார்: இந்து மக்கள் கட்சி, “வைஷ்ணவி கல்யாணத்துக்காக ரூ. 25 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் ஆதீனம். மேலும் ஆதீனத்தின் பல கோடி சொத்துக்களுக்குக் கணக்கே இல்லை. அந்த வகையில் ரூ. 750 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது”, என்று குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், மதுரை ஆதீன மடம் 1500 ஆண்டுகள் பழமையானது. கடந்த 1.3.1980ம் ஆண்டு முதல் ஆதீனமாக அருணகிரிநாக்தர் என்ற மதுரை ஆதீனம் இன்று வரை 33 ஆண்டுகள் இம்மடத்திற்கு வரவேண்டிய வருமானத்தை சுமார் 750 கோடி வரை அபகரித்துள்ளார். மடத்தில் தற்போது ஆதீனத்திற்கு உதவியாளராக இருக்கும் வைஷ்ணவியும் இதற்கு உடந்தையாக உள்ளார்.

நெல்லைக்கண்ணன், சோலைக்கண்ணன், அர்ஜுன் சம்பத்.வைஷ்ணவி குடும்பத்தாரின் மீது புகார்:  அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், “மதுரை ஆதீன மடத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளின் மூலம் மாதம் 10 லட்சம் வரை கிடைக்கிறது. இதுவரை 33 ஆண்டுகளில் 750 கோடி வரை வருமானத்தை பெற்றுள்ளார் ஆதீனம். அவருடைய உதவியாளர் வைஷ்ணவி, வைஷ்ணவி தாயார் கமலம், சகோதரி கஸ்தூரி, கணவர் வேதமூர்த்தி அனைவரும் சேர்ந்துகொண்டு ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரித்து வருகின்றனர்[3]. மடத்தின் வருமானத்தில் இருந்து 25 லட்சம் வரை வைஷ்ணவி திருமணத்திற்கு ஆதீனம் செலவு செய்துள்ளார். ஆதீனம் மடம் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ கூடாது என்ற நிலையில் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதையும் மீறி 55 லட்சம் ரூபாய்க்கு மதுரை அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார். ஏற்கனவே அருணகிரிநாதரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கக்கோரி தமிழக அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்த மனு விசாரணை நடைபெறும் நிலையில், அவருடைய பதவியை நீக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்[4].

சோலைக்கண்ணன், அர்ஜுன் சம்பத், நெல்லைக்கண்ணன்மதுரை  ஆதீனம்  மீது   வைஷ்ணவி  புகார்: மதுரை ஆதீன மடத்தின் பணிகளை கவனித்து வருபவர் வைஷ்ணவி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று காலை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கணவர் மற்றும் வக்கீல் சண்முகம் ஆகியோருடன் வந்தார். போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து அவர் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “நான் (வைஷ்ணவி) மதுரை ஆதீன மடத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மேலகோபுர வாசலில் உள்ள ஆதீன மடத்துக்கு சொந்தமான கடையை வாடகைக்கு அனுபவிப்பதில் அந்த பகுதியைச் சேர்ந்த சாமி அய்யா என்பவரது மகன்கள் பூபதி மற்றும் சுந்தர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக சுந்தரிடம் வாடகை வாங்கவும், கடை தொடர்பான ஆவணங்களை அவரிடம் ஒப்படைக்கவும் மதுரை ஆதீனம் என்னிடம் கூறினார். அதன்படி சுந்தரிடம் வாடகை பெற்று ரசீது கொடுத்தேன்.

மதுரை ஆதீனம் வைஷ்ணவி புகார் 2013பூபதி, தேவராஜன் இன்ஸ்பெக்டர் மிரட்டல்: இந்த நிலையில் பூபதி, அவரது மாமனாரும், ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜனும் என்னை (வைஷ்ணவி) இதுதொடர்பாக மிரட்டினார். ஆதீனம் சொல்வதை செய்வதுதான் எனது பணி. ஆனால் பூபதி, ஆதீன மடத்தில் உள்ளது போல் போலி ஆவணம் மற்றும் ரசீது தயார் செய்து சொத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டார். இதுகுறித்து அப்போதே அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பூபதியின் செயலுக்கு நான் உடந்தையாக செயல்படாததால் பொய்யான வழக்கு தொடர்ந்து அதில் என்னையும் சேர்த்து அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். என் மீது களங்கத்தை ஏற்படுத்தவே அவர்கள் வழக்கில் என்னை சேர்த்துள்ளனர்[5]. இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நான் எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் எனது பெற்றோரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆனால் பூபதி உள்ளிட்ட 2 பேரின் தேவையில்லாத செயல்களால் நான் கோர்ட்டு வழக்குகளை சந்திக்க வேண்டி உள்ளது.

 வைஷ்ணவி, ரஞ்சிதா-இந்துநலனைக் காக்கவா

கர்ப்பிணியாக,   உடல்நலம்   சரியாக  இல்லாமலிருந்தும்  தேவையில்லாமல்  கோர்ட்டுக்கு  வரவேண்டியுள்ளது:  கடந்த வாரம் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கோர்ட்டில் ஆஜரானேன். இதனால் என்மீது போடப்பட்ட பிடிவாரண்டு திரும்ப பெறப்பட்டது. வழக்கு காரணமாக என்னால் ஊருக்கு செல்ல முடியவில்லை. நான் மோசடி செய்ததுபோல மக்கள் மத்தியில் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்டவர்களிடம் கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே திட்டமிட்டு என் மீது களங்கத்தை ஏற்படுத்திய பூபதி, தேவராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும் படி விளக்குத்தூண் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விளக்குத்தூண் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

வைஷ்ணவி, ரஞ்சிதா

நித்யானந்தா விசயமாக சென்ற  வருடம் மே 2012 ஏற்பட்டப் பிரச்சினைகள், புகார்கள்: நித்யானந்தாவை 293-வது இளைய ஆதீனமாக நியமித்து சர்ச்சையாகி, பிறகு நீக்கிவிட்டார்[7]. அப்பொழுது வைஷ்ணவி தாக்கப்பட்டாள் என்ற செய்திகள் வந்தன.  மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

இந்து நலனுக்கு உதவுனமா

பத்திரிக்கைக்காரர்களுக்கு  சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

இந்து நலனுக்கு உதவுனமா இவை

“இந்து” இயக்கங்கள், இந்துக்களின் நலனிற்காக வேலைசெய்கின்றனவா அல்லது வேறு உள்நோக்கங்கள் உள்ளனவா?: இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஊடகங்கள், இந்து-விரோதிகள், நாத்திகவாதிகள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் நன்றாக குளிர்காய்ந்தனர்[8]. இந்துக்களை, இயக்கங்களை விதவிதமாக பெயர் சொல்லி ஏளனம் செய்தனர்[9]. இப்பொழுதே, “சமீபத்தில், சில இயக்கங்கள்இந்துஎன்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன”, என்று குறிப்பிட்டிருந்தேன். அப்பொழுது கிருத்துவர்கள்-நாத்திகர்கள் “அறிவுஜீவி” போர்வைகளில் சாதிப்பிரச்சினையைக் கூட நுழைக்கப் பார்த்தனர். ஆனால், இதே இந்து இயக்கங்கள் அவருக்கு உதவியாக வரவில்லை[10].

Karu-as-nataraja

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!

மதுரை  ஆதீனத்தை  முஸ்லீம்கள்  மிரட்டியபோது, இந்த  அர்ஜுன்சம்பத், நெல்லைகண்ணன்  முதலிய  இந்துக்கள், இயக்கங்கள்  என்ன  செய்து  கொண்டிருந்தன? ஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை[11]. இப்பொழுது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலைக்கண்ணனும் சேர்ந்து விட்டார் போலிருக்கிறது. முஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை. முஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர். இஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது? ஆகவே, “இந்து” பெய்ரை வைத்துக் கொண்டு, இந்துக்களின் நலனிற்கு எதிராகவே இவை செயல்படுகின்றன என்றாகிறது. ஏனெனில், இதைப் பற்றி ஊடகங்களில் அதிகமான விவாதங்கள் வரும், இந்துமதத்தின் மீது சேறு வாரி இரைக்கப்படும். அதில் கூட இந்துக்கள் பிளவுபட்டு கருத்துக்களை அள்ளி வீசுவார்கள். அவையெல்லாம் இந்துவிரோதிகளுக்குத்தான் உதவியாக போய்விடும்.

© வேதபிரகாஷ்

30-11-2013


[1] தினகரன், இந்துமக்கள்கட்சித்தலைவரிடம்குற்றப்பிரிவுபோலீஸ்விசாரணை, 30-11-2013.