Archive for the ‘லட்சுமி’ Category

லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]

ஏப்ரல் 19, 2018

லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]

Governor patting Journalist 17-04-2018

ஒரே படம், ஒரே சம்பவம், ஆனால், வக்கிரத்துடன் ஊடகங்கள் தலைப்பிட்டு போட்ட செய்திகளின் போக்கு: மேற்குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, உண்மை விளங்கும், ஆனால், ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ஊடகங்கள் அநாகரிகமாக செய்துள்ள அவதூறு, அவற்றின், அவற்றின் பின்னால் இருக்கும் வக்கிர மனிதர்களின் பண்மை, கலாச்சாரத்தை, கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது.

  1. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது[1] கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்[2].
  2. பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய[3] விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்[4].
  3. #கன்னம்கிள்ளிகவர்னர்; கலாய்க்கும் நெட்டிசன்கள்[5]
  4. Video: பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய கவர்னர்[6]
  5. கன்னத்தைத் தொட்ட ஆளுநர்… பதிலடி கொடுத்த நிருபர்…![7]

பெண் பத்திரிக்கையாளரைத் தொடுவது, கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். கன்னம் கிள்ளிய / கன்னத்தை தட்டிய / தடவிய கவர்னர்….என்று பலவாறு வர்ணித்தது ஆபாசமாக, அருவருப்பாக இருந்தது[8]. ஆனால், அந்த அம்மணி அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை, சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லி, கவர்னர் என்னை அப்படி செய்து விட்டார் என்று தான் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்[9].

Lakhsmi asking repeatedly and getting pat 17-04-2018

ஆளுநர் எதனால் அப்படிச் செய்தார்? – அதாவது கன்னத்தைத் தட்டினார்?: விகடன் சொல்வதாவது[10] – செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம், “செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் கவர்னர் இருக்கையிலிருந்து எழுந்தார் அப்போது எங்கள் அருகில் இருந்த ரிப்போர்ட்டர் ஒருவர், `நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள் அது தற்போது எந்த அளவில் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘தமிழ் ஒரு இனிமையான மொழி. நான் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்என்றார். அந்த சமயம் கவர்னர் அருகில் இருந்த நானும் மற்றொரு ரிப்போர்ட்டரும்உங்களது தமிழ் ஆசிரியர் யார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தார். மேலும், ‘மாநில அரசின் ஆட்சிமுறை நிறைவாக உள்ளது என்கிறீர்களே  அப்படியென்றால் மறைமுகமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் தவறு என்கிறீர்களா?’ என்று நான் கேட்டேன். எனது அந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டாரா என்று கூடத் தெரியவில்லை. சட்டென எனது கன்னத்தை தட்டிக் கொடுத்தார்என்று கூறியவர் மேற்படி எதுவும் பேச மறுத்துவிட்டார்” ஆக, பொதுவில் செய்தியாக பரப்பும் இவற்றை, உண்மை என்ன என்பதை உறுதியாக சொல்லாமலே, பிரச்சாரம் செய்வது நோக்கத் தக்கது.

Kanimozhi says touching body - Hindu Tamil- 18-04-2018

ஸ்டாலின், கனிமொழி, வாசுகி உமாநாத், ஜோதிமணி என்று டுவிட்டியது: அவரது “தட்டல்” எதிர்ப்பு வார்த்தை பதிவு ஏதோ தீண்டாமை வெளிப்படுத்தும் அறுவருப்பான விதமாக, ஆணவப்பிடிவாதமாக இருந்தது “என் முகத்தை பலதடவை கழுவினேன், இருப்பினும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை, அந்த அளவுக்கு கவர்னர் என்னை கொதிக்க மற்றும் கோபம் கொள்ள செய்தார். அது உம்மைப் பொறுத்த வரையில் பாராட்டு மற்றும் தாத்தாவின் அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நீர் செய்தது தவறு”. அவரது கழுவலுக்குப் பிறகு ஆதரவான பதிவுகள் ஸ்டாலின், கனிமொழி, போன்றவர்களிடமிருந்து தான் ஆரம்பித்தன. ஸ்டாலின் சொன்னது[11], “துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! ”. கனிமொழி சொன்னது[12], “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.” வாசுகி உமாநாத், ஜோதிமணி முதலியோரது பதிவுகள் தொடர்ந்தன. அதாவது, திமுக, காங்கிரஸ், மார்க்ஸிய கட்சிக்காரர்கள் ஆதரவு தெர்வித்தனர். லக்ஷ்மியிடம் வெளிப்படுவது தேர்ந்தெடுத்த மோடி-எதிர்ப்பு, காங்கிரஸ்-ஆதரவு, மார்க்ஸிய சித்தாந்த ஒப்புதல் முதலியவையே. இவற்றை அவரது டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஊடக எழுத்துகளில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

Lakshmi sub- supporting Cart-Bala abut his perverted comments-17-04-2018

லக்ஷ்மி அம்மணிக்கு என்னத்தான் வேண்டும்?: கழுவலுக்குப் பிறகும், உடனே 200 ஊடகக்காரர்கள் கவர்னரை மன்னிப்புக் கேட்கும் படி கடிதம் எழுதி இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். 200 பேர் யார், அவர்களுடைய பின்னணி என்ன, எப்படி அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பினர், என்ற விவரங்கள் தெரியவில்லை. “நானே 40 வருட பத்திரிக்கைக் காரன் தான், ஊடகத்தில் உமக்குள்ளத் திறமையினை மெச்சி, தாத்தா போல, தட்டி பாராட்டினேன்,” என்ற பிறகும் ஊடகக்காரர்களின் அடாவடித் தனமான கேள்விகளை கவனிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கலாமே, கையை நீட்டித் தடுத்திருக்கலாமே, “தாத்தா, இது சரியில்லை,” என்று சொல்லியிருக்கலாமே, கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே? “உமது மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் எனது கேள்வியைப் பாராட்டித் தான் அவ்வாறு செய்தேன் என்பதை ஏற்கவில்லை,” என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கும் மேலாக அந்த அம்மணி எதை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதனை அரசியலாக்கும் போக்கு ஏன் என்றும் தெரியவில்லை. “அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்”, என்பது பொய், ஏனெனில் அந்த வீடியோ அவர் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தது போல இருந்தது. தன்னுடைய சக-ஆண்-ஊடகக்காரரிடமும் ஏதோ தமாஷாக பேசியதும் தெரிகிறது!

CPM demand to withdraw Governor 16-04-2018

தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்ற அறிக்கையும் தொடர்ந்த பிரச்சாரமும்[13]: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது’ தேசிய அளவில் எந்த ஆதரவும் இல்லாத, தமிழகத்தில் பெயருக்கு இருக்கின்ற, இக்கட்சி இவ்வாறு தம்பட்டம் அடிப்பதும், அதை வைத்துக் கொண்டு, விகடன் போன்ற ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது[14].

Lakshmi (left) during a shoot with the Jaya TV team in Salem ahead of the 2004 Lok Sabha elections

லக்ஷ்மி சுப்ரமணியன் மூலம் வெளிப்படுவது பத்திரிக்காஅகங்காரம், பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்கு, குறியிட்ட நபரைத் தாக்கும் திட்டம்[15]: நிர்மலா தேவி மூலம் வெளிப்படுவது, திராவிடத்துவம் எவ்வாறு பெண்மையினை சதாய்த்துள்ளது, அடிமையாக்கி வைத்துள்ளது போன்றவை…லக்ஷ்மி சுப்ரமணியனுக்கு ஜெயா-டிவியில் வேலை செய்து, விசுவாசத்தை மறந்து மாறியதால், ஸ்டாலின் கனிமொழி ஆதரவு கிடைக்கிறதா? வாசுகி உமாநாத் [சிபிஎம்], ஜோதிமணி [காங்கிரஸ்] ஆதரவு, லக்ஷ்மி சுப்ரமணியனின் பத்திரிக்கா / அரசியல் கூட்டணியைக் காட்டுகிறதா? பரிதாபகரமான கவர்னரும், சண்டைப் போட்டுக் கொள்ளும் தமிழ பிஜேபியும், முட்டாள் இந்துத்துவவாதிகளும் – கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது போலும்! நிர்மலா தேவியை வைத்துக் கொண்டு தான், லக்ஷ்மி சுப்ரமணியன் விளையாடுகிறார் என்று தெரிகிறது, பிறகு, இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? இதே பல்கலையில் முன்னர் பாலியல் புகார் வந்தபோது, லக்ஷ்மி சுப்ரமணியன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஜெயலலிதாவுக்குக் கட்டுப் பட்டு கிடந்தாரா? பாலியல் நிறங்காட்டி, கொச்சைப்படுத்தி, ஒரே நாளில் பிரபலம் அடையும் போக்கு, அந்த சீமான் போன்ற வகையறாக்களைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

19-04-2018

Exuding warmth- Chandrasekaran with Principal Correspondent Lakshmi Subramanian at Mohanur -Bhanu Prakash Chandra

[1] தி.இந்து, பெண் பத்திரிக்கையாளரை தொடுவது கண்ணியமானதல்ல: ஆளுநர் செயல் குறித்து கனிமொழி ட்வீட், Published : 18 Apr 2018 12:27 IST; Updated : 18 Apr 2018.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23582832.ece

[3] https://www.ietamil.com/tamilnadu/banwarilal-purohit-mk-stalin-kanimozhi-condemns/

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/tngovernor-banwarilal-purohit-pat-journalist-on-the-cheek-without-her-consent-agitations-erupts-over-governors-gesture-15965.html

[5] http://www.newstm.in/Tamilnadu/1524034806108?-

[6] https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-governor-pats-journalist-on-cheek-sparks-controversy/videoshow/63809405.cms

[7] https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/female-reporter-stronger-condemnation

[8] Republic World, Journalist Lakshmi Subramanian Speaks To Republic TV | TN Governor Controversy, 17 ஏப்., 2018 அன்று வெளியிடப்பட்டது.

[9] https://www.youtube.com/watch?v=Y6rOW1qnPFY

[10] விகடன், “சிரித்துக்கொண்டே கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்!” – கவர்னரின் செயலை விவரிக்கும் `தி வீக்’ நிருபர், ஐஷ்வர்யா, Posted Date : 09:58 (18/04/2018) Last updated : 10:49 (18/04/2018).

https://www.vikatan.com/news/tamilnadu/122521-journalist-lakshmi-subramanian-of-the-week-magazine-takes-twitter-to-storm-against-tamilnadu-governor.html

[11] https://t.co/rjywYVXQQ9 — M.K.Stalin (@mkstalin) 17 April 2018

[12] Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 17 April 2018

[13] விகடன், `தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!’ – மாணவிகள் புகார் விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.எம், தினேஷ் ராமையா, Posted Date : 18:47 (16/04/2018) Last updated : 18:47 (16/04/2018)

[14] https://www.vikatan.com/news/tamilnadu/122371-cpm-urges-fair-trail-on-aruppukkottai-college-issue.html?artfrm=related_article

[15] Lakshmi Subramanian, principal correspondent, is a hardcore political journo. She has 15 years of extensive experience in writing about politics in Tamil Nadu. She is interested in political gossips and writing investigative stories.

Advertisements

லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]

ஏப்ரல் 19, 2018

லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]

Coutesy of the Tamilnadu Journalists- 17-04-2018

விகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.

  1. `தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.
  2. `பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.
  3. முதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர்.
  4. எல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.
  5. சரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.

இப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.

Tapping, touching, pinching check -one photo-many narratives-1

கவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:

  1. “உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா?”
  2. “சிபிஐ விசாரிக்குமா?”
  3. “இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.
  4. “சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன?”
  5. “நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?’
  6. “நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?”
  7. “கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா?”

இத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா? என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.

Tapping, touching, pinching check -one incidence-many narratives-2

இருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி. விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம்தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.

Lakhsmi about tapping, washing and Stalin 17-04-2018

கவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால்,  ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].

Governor, Journalist, Professor

கவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம்மணி  ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.

© வேதபிரகாஷ்

19-04-2018

Tapping check -Dinakaran- 18-04-2018

[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரைகவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?, ஞா. சக்திவேல் முருகன், Posted Date : 17:18 (18/04/2018) Last updated : 11:03 (19/04/2018)

[2] https://www.vikatan.com/news/miscellaneous/122567-tamilnadu-governor-banwarilal-purohit-press-meet-details.html

[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்!’ – ஆளுநரின் முதல் செய்தியாளர் சந்திப்பு, MUTHUKRISHNAN S Posted Date : 18:18 (17/04/2018) Last updated : 19:41 (17/04/2018)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/122485-anyone-who-is-guilty-will-be-punished-says-banwarilal.html

[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..!” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)

[6] https://www.vikatan.com/news/coverstory/122491-give-respect-to-my-post-and-shoot-your-questions-slams-banwarilal-purohit.html

[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.

[8] https://m.youtube.com/watch?v=BJVCHzERpMM&feature=youtu.be