Archive for the ‘ராஜஸ்தான்’ Category

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது (2)

ஜூலை 27, 2018

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது (2)

1984, anti-sikh riot, killings

மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது: இந்தியாவில் இப்பொழுது பொது தாக்குதல் ரீதியில் நடைபெற்று வருவதற்கு மதசாயம் பூசப்பட்டு, ஊடகங்கள் பிரச்சினை செய்து வருகின்றன. ஆனால், அநியாயத்தை, அக்கிரமத்தைக் காணும் பொது மக்கள் வெகுண்டு “தரும அடி” கொடுத்து அனுப்புவது சகஜமான முறை. அத்தகைய பொது தாக்குதலில் உயிரிழப்பு இருக்காது, இருப்பினும் இருந்தால் அது விரும்பத் தகாத விபத்தாக இருக்கிறது. ஒட்டு மொத்த அடிக்கும் எண்ணம், உயிரெடுக்கும் சதி, கூட்டுக் கொலை திட்டம், முதலியை பொது மக்கள் தாக்குதலில் இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சௌரி-சௌரா என்ற இடத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, காந்தியே அதனை நிறுத்தி விட்டார். இந்தியா போன்ற 130 கோடி மக்கள் வாழும் நாட்டில், பலவித காரணங்களுக்காக சட்டமீறல்கள், குற்றங்கள் நடப்பது நிதர்சனமே, அதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால், எல்லாவற்றிற்கும், அடித்தவன் – செத்தவன் மதங்க்ளைக் கண்டு பிடித்து, மதசாயம் பூசுவது சரியில்லை. அதுவும் “லிஞ்சிங்” வகையில் விவாதிக்கலாம். ஆனால், அது தற்செயலாக நடந்தது.

Rajasthan lynching demo

இப்பொழுதைய கொலைகளை, பொது தாக்குதல்களை திட்டமிட்ட கொலைகளாக கருத முடியாது: மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது, சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே லிஞ்சிங்  என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுப்பது தவறாகும், ஏனெனில், மேலே குறிப்பிட்ட கொலைகளில், மத அடிப்படையில், மதத்தலைவர் தான் அத்தண்டனையைக் கொடுக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் தண்டனை நிறைவேற்றப் படுகிறது. அதாவது, அங்கு விசாரணை இருந்தது போலவும், இங்கு விசாரணை இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்படுகிறது. அங்கு விசாரணை இருந்தது என்றால், அது மதநம்பிக்கையின் அடிப்படையில், இருந்து அத்தகைய குரூரமான-கொடிய தண்டனை அளிக்கப்பட்டது. இப்பொழுதையது போன்று, பொதுமக்கள் கொதித்து எழுந்து அல்லது வெகுண்டு அடிக்க முற்பட்டவை அல்ல. அங்கங்கு பல இடங்களில் ஏதேச்சையாக நடக்கும் நிகழ்சிகள். ஆகவே, வேண்டுமென்றே, ஏதோ, இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களை மீறி இவை நடப்பதாக சித்தரிக்கப் படுகிறது.

Child trafficking in 2013

ஊடகங்கள், சித்தாந்திகள் திடீரென்று பிரச்சினை அற்ற விசயங்களை பிரச்சினையாக்க முயலும் போக்கு: சமீபத்தில், “சகிப்புத் தன்மை” பற்றி பெரிதளவில் பேசப்பட்டு, விவாதிக்கப் பட்டது. ஏதோ, இந்தியாவிலேயே அது தான் மிகப் பெரிய குற்றம், அநீதி போல விவாதிக்கப் பட்டு அமைதியாகி விட்டனர். இப்பொழுது “லிஞ்சிங்” பற்றிய விவாதத்தை உண்டாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் நடப்பவை பல காரணங்களுக்காக உள்ளன:

 1. கௌரவக் கொலை [பெற்றோர் விரும்பாமல் பெண் அல்லது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், கொலை செய்வது]. இது பெரும்பாலும் ஜாதி அடிப்படையில் நடப்பது.
 2. கல்லெறிந்து அடித்துக் கொலை [காஷ்மீரத்தில் தொடர்ந்து நடப்பது]. கல்லடி ஜிஹாத் என்பது
 3. ஜிஹாத் கொலை [பலவிதங்களில் அரங்கேறி வருகிறது].
 4. லவ்-ஜிஹாத் கொலை, தற்கொலை.
 5. பிள்ளைப் பிடிப்பவர்கள், கடத்துபவர்களை அடித்துக் கொல்வது [திருவண்ணாமலை அருகில் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டது[1]]. அவ்வாறு தவறாக கொண்டும் கொலை செய்வது….முதலியன[2].
 6. பசுமாடுகளைக் கடத்துபவரை அடித்தல், அதனால் இறப்பது [ஊடகங்ளில் இதற்குத் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது].
 7. எதேச்சையாக கல்லடி கலாட்டாவில் அடிபட்டு இறப்பது [கேரள எல்லையில் தமிழக கிளீனர் முபாரக் பாஷா கல்லடி கலாட்டாவில் அடிபட்டு இறந்தது[3]].

When a tree shook delhi 31-10-1984

2014ற்கு முன்பாக லிஞ்சிங் ஏன் நடக்கவில்லை: 2014ல் மோடி அரசுக்கு வந்த பிறகு, திடீரென்று ஊடகங்களில் இவ்வார்த்தை பிரயோகம் திடீரென்று ஆரம்பிதுள்ளது. இந்து கும்பல் முஸ்லிம்களை கொல்கின்றது என்று செய்திகள் வர ஆரம்பித்தன[4]. 2015ல் தாத்ரி என்ற இடத்தில் நடந்த கூட்டுக் கொலை பற்றி அதிகமான விவாதம் எழுந்தது. 2016ல் ஜார்கன்ட், 2017ல் ஆல்வார், என்று தொடர்ந்தன. ஜூலை 2018ல் மறுபடியும் ஆல்வார் லிஞ்சிங் வந்துள்ளது. கால்நடைகள், பசுக்கள் உட்பட, மாட்டிறைச்சிற்காக, வாங்கி மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன. அதாவது, கால்நடைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் இறைச்சிக்காக கொல்லப்பட்டு, அறுக்கப்பட்டு, பதப்படுத்தப் பட்டு விற்கப்படுகிறது, ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால், அவ்வாறு எடுத்துச் செல்வதை, பசு பாதுகாப்பு குழுக்கள் எதிர்த்து வருகின்றன.கோஷாலைகள் அமைத்து பாதுகாத்தும் வருகின்றன. இருப்பினும், முழுவதுமாக நடைமுறையில் அவ்வாறு முடியாது என்றநிலையில், மாமிச உற்பத்தி நடக்கிறது. அந்நிலையில், இப்பிரச்சினையை இப்பொழுது மதப்பிரச்சினையாக்கி வருகிறார்கள். பொதுவாக, கசாப்புக் கடைகளை வைத்து நடத்துவதில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர் என்பது தெரிந்த விசயமே. எனவே, பசுக்கள் கடத்தல்-கொல்லுதல் தடுப்பது என்றால், அவர்களது வியாபாரத்தில் தலையிடுவது என்பதை விட, வியாபாரத்தை-லாபத்தை குறைப்பதாகும். எனவே, இதை மதரீதியாக திரித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவ்வாறு குறிப்பிடுவதால், உள்நோக்கத்த்டன் செய்யப்படுகிறது என்று தெரிகிறது. மேலும் 2014க்கு முன்பாக எதுவும் நடக்கவில்லை என்பது போல, சித்தரிக்கப் படுவது சரியில்லை. ஏனெனில், மாமிச ஏற்றுமதி தொடந்து நடந்து வருவது தெரிந்த விசயமாக இருக்கிறது.

Mubarak Basha, Vijaya Murukesan, honour killing 23-07-2018

கொல்லப்பட்டவரை வைத்து மதவாத ரீதியில் அலசல் ஏன், எப்படி வருகிறது?: கோவையில் இருந்து கேரளாவின் ஆழப்புழாவிற்கு காய்கறிகள் ஏற்றிக் சென்ற தமிழக லாரி மீது 22-07-2018 அன்று, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் லாரியின் க்ளீனர் முகமது பாட்ஷா பலியாகி உள்ளார்[5]. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி லாரி இயக்கியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை முஸ்லிம் என்பதனால் கொன்றனர் என்று சொல்ல முடியாது. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், “இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி படிக்கும் அயல்நாட்டினர் பேரச்சம் அடைந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டிலும் இது போன்ற வன்முறை நிகழ்ச்சிகள்  ஏன் நடைபெறுகின்றன என்பதை அவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி நாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை”, என்றெல்லாம் ஆங்கில ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்[6]. ஆகார் படேல் எழுதியதை படித்துப் பார்த்தேன்[7]. ஆனால், அதிலும் நேர்மைத் தனம் இல்லை[8]. மே 2018ல் காஷ்மிரில் சுற்றுலாவுக்கு சென்ற தமிழக இளைஞர் திருமணிச்செல்வம் என்பவரை இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாத மிருகங்கள் கல்லால் அடித்தே கொன்று தீர்த்துள்ளன[9]. இக்கொலைக்கு எந்த காரணமும் கிடையாது என்று சொல்ல முடியாது, அப்படி கொலை செய்தே திருப்தி அடையும் போக்கு இருந்து வருகிறது. காஷ்மிர் முதல்வர் மக்பூபா முக்தியும், ஓமர் அப்துல்லாவும் இதற்கு தம் கடுமையான கண்டனத்தை பதிவிட்டனர்[10], ஆனால், தமிழக அரசியல்வாதிகள் மூடிக் கொண்டு இருந்தனர்.

© வேதபிரகாஷ்

27-07-2018

Campaign against mob-lynching

[1]மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி அடித்துக் கொலை – 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது, பதிவு: ஜூன் 14, 2018 11:26

[2]  https://www.maalaimalar.com/News/District/2018/06/14112603/1170095/old-woman-murdered-near-Polur-three-arrested-in-Goonda.vpf

[3] தினமலர், கேரளாவில் தமிழக லாரி மீது தாக்குதல், Updated : ஜூலை 23, 2018 10:31 | Added : ஜூலை 23, 2018 10:23.

[4] விகிபிடியாவும்,அவ்வாறே வர்ணிக்கிறது, ஆகவே, இத்ல் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=2067383

[6] விடுதலை, இழைத்த குற்றம் மெய்ப்பிக்கப்படாமலேயே மக்களைக் கொல்லும் கலவரக் கும்பல்கள், திங்கள், 09 ஜூலை 2018 14:58; நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 1-07-2018, தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

http://www.viduthalai.in/e-paper/164680.html

[7] Aakar Patel is Executive Director of Amnesty International India. A former editor, Patel is a senior columnist and a translator of Urdu and Gujarati works.

http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html

[8] ஏசியன் ஏஜில் வந்ததை, டெக்கான் ஹெரால்ட் மற்றும் ஆகார் படேலை, அக்பர் படேல் என்றெல்லாம், விடுதலையில் போட்டிருக்கிறார்கள்.

[9] விகடன், காஷ்மீர் கல்வீச்சில் கொல்லப்பட்ட தமிழக இளைஞன்அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்!, கா . புவனேஸ்வரி. Posted Date : 21:37 (09/05/2018)Last updated : 21:37 (09/05/2018).

[10]  https://www.vikatan.com/news/coverstory/124607-tamil-youth-killed-in-kashmir.html

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

ஜனவரி 21, 2014

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

ஜைன சமாஜத்தினர் ராகுலை சந்தித்தது (20-01-2014): இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது[1]). ஜெயின் சமூக பிரதிநிதிகள் 20-01-2014 அன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Minority status to Jains cartoon

Minority status to Jains cartoon

சிறுபான்மைஅந்தஸ்துஉடனேஅளித்தது (21-01-2014): ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது[2]. இந்த நிலையில் 21-01-2014 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது[3]. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆகவே, இப்புதல் ஒரு சரத்துடன் சேர்ந்தது என்று குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்திய சிறுபான்மையினர் கமிஷன் சட்டத்தின் சரத்து 2(c) ன் படி அந்த அந்தஸ்த்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Minority status to Jains - hindi news cutting

Minority status to Jains – hindi news cutting

நீதிமன்றங்களில்நிலுவையிலுள்ளவழக்குகளைமீறிஅந்தஸ்துகொடுத்தது: 2005ல் ஜெயினர்கள் சிறுபான்மைஅந்தஸ்த்தைக் கேட்டு பல் பாடில் [Jains advocate Bal Patil ] வழக்குத் தொடுத்த போது, உச்சநீதிமன்றம், அத்தகைய தீர்மானத்தை மாநிலங்கள் தாம், “மொழி மற்றும் மதரீதியிலாக” [ T.M.A. Pai case ] அவ்வாறு உள்ளார்களா என்று கண்டறிந்து அத்தகைய நிலையை அறிவிக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மறுபரிசீலினை மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது[4]. மேலும் இவ்வழக்கில் படிப்பளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்கின்ற கல்லூரிகளுக்கு அத்தகைய அந்தஸ்து கொடுக்கலாமா, கூடாதா என்ற பிரச்சினையில் தான் வழக்குப் போடப் பட்டது[5]. இப்பொழுது, இதனை, மதரீதியில் சிறுபான்மை என்ற நோக்கில் திசைமாறுவது நோக்கத்தக்கது. இந்நிலையில், சோனியா காங்கிரஸ் வேண்டுமென்றே, சட்டத்தின் நிலையை அறிந்தும், தேர்தல் காலத்தில் ஓட்டுகளை, சீட்டுகளைப் பெறலாம், அல்லது அச்சமூகத்தினரை உடைத்து ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இதே காரணத்திற்காக, பிஜேபியும் அமையாக இருக்கிறது என்பதனை கவனிக்கலாம்.

Minority status to Jains cartoon.vedaprakash

Minority status to Jains cartoon.vedaprakash

ஆறவதுசிறுபான்மையினர்ஆவார்களாம்: ஒருவேளை, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஜைனர்களுக்கு சார்பாக முடிவானால், செக்யூலரிஸ இந்தியாவில் இவர்கள் ஆறாவது சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தைப் பெறுவர்[6]. அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே

 1. முஸ்லிம்,
 2. கிறிஸ்தவர்,
 3. சீக்கியர்,
 4. புத்தமதத்தினர் மற்றும்
 5. பார்சி இனத்தவர்

சிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய சிறுபான்மை விவகாரஆமைச்சர், ரஹ்மான் கான், ஜைனர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்துள்ளது என்றும், அது பரிசீலினையுள்ளது என்றும் அறிவித்திருந்தார். 2001 சென்சஸின் படி 0.4% ஜைனர்கள் இந்திய ஜனத்தொகையில் உள்ளனர்.

T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002[7]: டி.எம்.ஏ. பை பவுண்டேஷன் வழக்கு பள்ளி, கல்லூரி முதலியவற்றை நிர்வாகிக்க்கும் விசயத்தில் சலுகைகளைப் பெறுவதற்காக, சிறுபான்மை அந்தஸ்து கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றனர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின், பிரிவு 25ன் படி, “சமூக மற்றும் படிப்பு நிர்வாகமுறைகளுக்கு” ஜைன, பௌத்த மற்றும் சீக்கிய நிறுவனங்கள், இந்துக்களைப் போன்றே கருதப்படும் என்றுள்ளது. ஆகவே, முதலில் இதனை உடைத்தாக வேண்டியுள்ளது. பிறகு பிரிவு 30ன் கீழ் வர, தங்களை “சிறுபான்மையினர்” என்று தெர்வித்துக் கொள்ளவேண்டும், பிறகு அரசு அவ்வாறே அறிவிக்க வேண்டும். அம்பேத்கர் இப்பிரிவுகளை நுழைக்கும் போது, ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து பின்னர் தான், இப்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, சட்டத்தில் இடம் பெற்றன. ஆனால், இன்றோ, அம்பேத்கரையும் மீறி ராகுல் போன்றோர் ஒரே நாளில், சட்டங்களை மீறத் தயாராகி விட்டனர்.  “மொழிரீதியில் அல்லது மதரீதியில்” சிறுபான்மையினர் எனும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், அவ்வாறு ஏகப்பட்ட பிரிவுகள் வருவார்கள்.

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் வருவார்கள், ஆனால், அவர்களுக்கு அந்நிலை கொடுக்கப் படவில்லை.
 • சமஸ்கிருத மொழி ரீதியில் அம்மொழி பேசுபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் “சிறுபான்மை அந்தஸ்து” கிடைக்க வேண்டும், கிடைப்பதில்லை.
 • பிராமணர்களும் அவ்வாறே கேட்கலாம், கேட்டால் எதிர்ப்பு வந்துவிடும்.
 • இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 • ஆனால், செக்யூலரிஸ இந்தியாவில் சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை, அமூல் படுத்தப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

© 21-01-2014


[3] தினத்தந்தி, ஜெயின்சமூகத்துக்குசிறுபான்மையினர்அந்தஸ்து; மத்தியமந்திரிசபைஒப்புதல்வழங்கியது, பதிவு செய்த நாள் : Jan 21 | 04:49 am

[4] In 2005, the Supreme Court had disposed the appeal of minority-designation-for-Jains advocate Bal Patil — in the case that now goes by his name — on the ground that the judgment in the T.M.A. Pai case had said States would be the unit for considering demands of both linguistic and religious minority status. A review petition filed by the Centre in this regard is still pending.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[6] The Union Cabinet on Monday decided to accord minority status to Jains but the decision would be subject to the outcome of pending cases on the issue. If the court cases are settled in favour of the Jains, the community would become the sixth designated minority community of the country. As per the Cabinet note, Jains would be included as a minority under Section 2(c) of the National Commission for Minorities (NCM) Act (NCM), 1992.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[7] Supreme Court of India – T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002

Author: Kirpal Bench: B.N.Kirpal, G.B.Pattanaik, V.N.Khare, S Babu, S.S.M.Quadri; CASE NO.: Writ Petition (civil) 317 of 1993; http://www.indiankanoon.org/doc/512761/