Archive for the ‘முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்!’ Category

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [2]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [2]

Yogi and Mus;ims friendship

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ்வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].

UP and Muslim politics

உபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019:  சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது!,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங்பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்!

Stali condemned Rama rath yathra

தென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல்! ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம்! உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார்! இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.

75 years old man killed canvassing for Modi 14-04-2019

13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].

Modi followers killed 13-04-2019, Tamil news cutting.3

மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Modi followers killed 13-04-2019, Tamil news cutting.2

ஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்பை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்பார்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin on marriage mantras

[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவதி பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.

[2] http://www.thinaboomi.com/2019/04/12/107923.html

[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.

[4] https://tamil.news18.com/news/national/ec-issues-show-cause-notice-to-yogi-adityanath-and-mayawati-for-violating-model-code-of-conduct-va-139065.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .

[6] https://tamil.oneindia.com/news/thanjavur/elder-man-murdered-for-asking-vote-for-bjp-in-tanjore-346864.html

[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை! – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).

[8] மாலைமலர், பா...வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.

[9] https://www.maalaimalar.com/News/District/2019/04/14103609/1237084/BJP-support-campaign-social-activist-murder-police.vpf

[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).

[11] https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/killing-a-voter-wearing-modis-image-119041400025_1.html

[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்!, பகத்சிங், Published on 14/04/2019 (23:23) | Edited on 14/04/2019 (23:32)

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanjavur-district-orathanadu

[14] https://www.youtube.com/watch?v=RhSkE9mnbYM

இந்திய முஜாஹித்தீன், குண்டுவெடிப்புகள், சோனியா காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள், முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்!

ஜூலை 23, 2013

இந்திய முஜாஹித்தீன், குண்டுவெடிப்புகள், சோனியா காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள், முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்!

IM warning and claimகுஜராத் கலவரங்களினால் தான் இந்திய முஜாஹித்தீன் உருவாக்கப் பட்டது: ஷகில் அஹமது என்ற சோனியா காங்கிரஸ் கட்சியின் ஊடக தொடர்பாளர், குஜராத் கலவரங்களினால் தான் இந்திய முஜாஹித்தீன் உருவாக்கப்பட்டது என்று டுவிட்டரில் தெரிவித்தார்.

“Indian Mujahideen (IM) was formed after the Gujarat riots, says NIA in its chargesheet. Even now BJP and RSS will not desist from their communal politics,” Ahmed tweeted[1].

தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அறிக்கையில் குறிப்பிட்டதைத் தான், நான் குறிப்பிட்டேன் என்று நியாயப்படுத்தினார்.

In a charge-sheet filed on July 17 against five IM operatives for hatching a conspiracy to carry out terror attacks in different parts of the country, the NIA had said[2], “IM was formed in 2003 after ultra radicalized Muslim youth segregated from the Student Islamic Movement of India(SIMI) due to communal mobilization caused by factors like the riots in Gujarat in 2002 after the Godhra train burning incident and the Babri Masjid demolition. They do not believe in India’s Constitution and IM’s members nurse communal hatred against the Hindu community.”

தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அறிக்கையில், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் முதலியவற்றை அடுத்து, தீவிர-அடிப்படைவாதிகளான (Radical Muslims) சிமியிலிருந்து பிரிந்தவர்கள் இந்திய முஜாஹித்தீன் என்ற அமைப்பை 2003ல் உருவாக்கினார்கள். அவர்களுக்கு இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் நம்பிக்கை இல்லை, மேலும் இந்துக்களுக்கு விரோதமாக வெறுப்பைக் கொண்டிருந்தனர், வளர்க்கவும் செய்தனர், என்று அந்த அறிக்கைக் கூறுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, “குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இந்திய முஜாஹித்தீன் உருவாக்கப்பட்டது என்று NIA அறிக்கைக் கூறுக்கிறது. இப்பொழுதும் BJP மற்றும் RSS மதவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்”, என்று குறிப்பிட்டார்.

IM-1அல்லாவின் பெயரால் இந்துக்களைக் கொல்ல இப்படி ஜிஹாதி நடத்துகிறோம்என்று இந்திய முஜாஹித்தீன் அறிவித்ததை மறைப்பது: ரஷீத் மசூத் என்ற எம்.பியும் இதனை ஆதரித்து பேசினார். ஆனால், ரேணூகா சௌத்ரி காங்கிரஸுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்[3]. நவம்பர் 2007ல் பைசாபாத், லக்னௌ, வாரணாசி முதலிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்திய போது, ஊடக அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் தாங்கள் தாம், “அல்லாவின் பெயரால் இந்துக்களைக் கொல்ல இப்படி ஜிஹாதி நடத்துகிறோம்” என்று அறிவித்தனர். ஆனால், 2000களிலேயே, இதற்கான ஆயத்தம், பயிற்சி, ஜிஹாதித்துவம் (காபிர்களை-இந்துக்களை கொல்லும் போர்முறை), சஹீதுத்துவம் (அதற்காக உயிர்விடவும் தயாக உள்ளநிலை), அதற்கான மனப்பாங்கு (கொலைவெறியை மத்தில் உருவாக்கி வைத்தல்), முதலியவை லஸ்கல்-இ-தொய்பா (LeT) மற்றும் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ (Pakistani intelligence agency ISI) ஏற்பாடு செய்து கொடுத்தன[4].  இதை பீஜேபிகாரர்கள் எடுத்துக் காட்டியதும், சோனியா காங்கிரஸ்காரகள் கதிகலங்கி விட்டார்கள். திக்விஜய சிங், வழக்கம் போல, ஷகில் அஹமது சொன்னதை ஆதரித்துப் பேசினார்.

IM-2
இந்தியன் முகாஜிதீனின் செய்தித் தொடர்பாளர் போல் ஷகீல் அகமது செயல் படுகிறார்ஆர்.எஸ்.எஸ் விமர்சனம்[5]: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம்தான் இந்தியன் முகாஜிதீன் பயங்கரவாத இயக்கம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமதுவை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க சுற்றுப்பயணத்தையொட்டி அங்கு சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ்சின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: “இந்தியன் முகாஜிதீனின் செய்தித் தொடர்பாளர் போல் ஷகீல் அகமது செயல்படுகிறார். அவரைப் போன்ற அனுதாபிகளால்தான் இந்தியாவில் பயங்கரவாதம் தழைத்தோங்குகிறது.பயங்கரவாதத்திற்கு ஷகீல் அகமது நியாயம் கற்பிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் பாணிதான் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது”, என்று ராம் மாதவ் கூறியுள்ளார். இவரது பேச்சு சரியாக இருக்கும் என்பதனால், ஊடகங்களும் உஷாரகி விட்டன. ஏனெனில் சந்தை பொருளாதாரத்தில் பொய், வம்பு, உளறல்கள் எடுபடாது என்பது தெரியும்.
IM-3

தீவிரவாதிகளின் ஊடகதொடர்பாளராக / ஆதரவாளராக மாறிவிட்ட ஷகில் அஹமது: தீவிரவாதிகளின் ஊடக தொடர்பாளராக மாறிவிட்டதைப் போல அவரது பேச்சு, விளக்கம் இருந்தது. முதலில், சோனியா காங்கிரஸ் வழக்கம்போல, கட்சிக்கும், அவரது கருத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், ஷகில் அஹமதுவின் இந்தியில் பேசிய பேச்சு, விளக்கம் முதலிய பேச்சுகளை இந்தியா முழுவதும் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால், பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, ரேணுகா சௌத்ரியை விட்டு பின்வாங்கச் சொன்னார்கள்[6]. “இப்பொழுது கட்சியின் நிலைப்பாடு அந்த வகையில் இல்லை” [“It is not the party line as of now,” spokesperson Renuka Choudhary told reporters here when asked about Ahmed’s tweet on the issue which led to a political controversy yesterday] என்றார்[7]. அப்படியென்றால், வேண்டுமென்றால், இத்தகைய உளறல்களை எப்பொழுதாவது செய்வார்கள் போலும்! இந்த அம்மையார் பேச்சும் ரொம்பத் திமிராக, நக்கல்லாகத்தன் இருக்கும். ஆனால், இவ்விஷயத்தில் பவ்யமாக பதில் அளித்தது விசித்திரமாக இருந்தது. விஷயம் விபரீதமாகி போய்விட்டதால், ராஹுலும் 21-07-2013 அன்று கண்டிக்க வேண்டியதாகி விட்டது[8]:

“Spokespersons and panelists may have their individual views, but as party spokespersons and panelists you have to be within party line. We cannot go beyond party ideology. Those who go beyond will be noticed and action will be taken,” Gandhi said.

IM-4முஸ்லிம்களும், “ஷகில் சொன்னதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்த ம் இல்லை” என்கின்றனர்: சில முஸ்லிம் தலைவர்களும் ஷகீல் அஹமது சொன்னது தவறு என்று சொன்னாலும், அந்த சாக்கில் இந்திய முஜாஹித்தீன் ஐபியால் உருவாக்கப் பட்டது என்று இன்னொரு குண்டைப் போட்டுள்ளார். “குண்டு வெடிக்கும் போதெல்லாம், இந்திய முஜாஹித்தீன் பெயர் இழுக்கப்படுகிறது. ஏன்?”, என்று சரிக் அன்ஸார் கேட்கிறார்

  • இலியாஸ் [All India Muslim Personal Law Board working committee member Dr S Q R Ilyas] என்பவர்[9] “சாக்கில் இந்திய முஜாஹித்தீன் ஐபியால் உருவாக்கப் பட்டது”, என்று இன்னொரு குண்டைப் போட்டுள்ளார்.
  • மௌலானா யாசூப் அப்பாஸ் [Maulana Yasoob Abbas, spokesperson of the All India Shia Personal Law Board], பொறுப்புள்ள அவர் அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது என்றார்[10].
  • ஜபருல்-இஸ்லாம் என்பவர் [Dr Zafarul-Islam Khan, president of the All India Muslim Majlis-e Mushawarat (AIMMM), an umbrella body of Muslim organizations], அவர் சொன்னதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்[11].
  • சரிக் அன்ஸார் [Sharique Ansar, national secretary of the Students’ Islamic Organisation of India] “குண்டு வெடிக்கும் போதெல்லாம், இந்திய முஜாஹித்தீன் பெயர் இழுக்கப்படுகிறது. ஏன்?”, என்று கேட்கிறார்[12].

இந்த தூண்டுதலை, இனி திக்விஜய சிங், ஷகீல் அஹமது முதலியோர் புரிந்து கொள்வார்கள் போலும்.

IM-6தேர்தல் வரும் போதல்லாம் முஸ்லிம்களை தாஜா செய்யும் சோனியா காங்கிரஸ்: தேர்தல் வரும்போதெல்லாம் முஸ்லிம்களை தாஜா செய்யும் சோனியா காங்கிரஸ், முஸ்லிம்களை செய்தி தொடர்பாளர்கள், பிரச்சாரப் பேச்சாளர்கள், சிறுபான்மைத்துறை நல அமைச்சர், முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சர், வெளி விவகாரங்கள் அமைச்சர், என்ரு வத்துக் கொண்டு விஷமத்தனமான, விஷத்தை விடக் கொடிய மதவாத அரசியலை “செக்யூலரிஸம்மென்ற போர்வையில் நடத்தி வருகின்றது. குறிப்பாக பிஜேபியை மதவாத கட்சி என்று பிரச்சாரம் செய்து கொண்டு அரசியல் லாபம் பெற்று, ஆட்சிக்கு வந்து, ஊழலை வாடிக்கையாகக் கொண்டு, கோடானு கோடிகளைக் கொள்ளையடித்து வருகிறது. செக்யூலரிஸம் போலவே, ஊழலையும் தீவிரவாதமாக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்வித்து, கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இத்தகைய போக்கை மக்கள் உணர்ந்து கொள்ள சில காலம் ஆகும். ஏனெனில் பெரும்பாலான ஊடகங்கள் சோனியாவிற்கும், சோனியா காங்கிரஸுக்கும், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதனால் தான், அவை ஒட்டு மொத்தமாக இந்திய நலன்களுக்கு எதிராக செயல் பட்டு வருகின்றன. ஆனால், அதையும் மதவாத சக்திகளுக்கு எதிராக என்று சொல்லிக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இப்படி எல்லா அரசியல் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால், எல்லாவித தீவிரவாதங்களிலும் அவர்கள் தாம் அதிகமாக பாதிக்கப் பட்டு வருகிறார்கள்.

IM-5திக் விஜய சிங்கின் புத்தகயாவைப் பற்றிய டுவிட்டர் உளறல்  (ஜூலை 8, 2013): திக்விஜய சிங் ஆட்சியில் இருப்பதால், சில விஷயங்களை அறிந்து கொண்டு, உண்மைகளை திசைத் திருப்புவதிலும், அப்பட்டமான பொய்களை சொல்லி பிரச்சாரம் செய்வதிலும் வல்லவர்[13]. ஊட்டகங்களே இவரது பொய்களைக் கேட்டு, எங்கே தங்களது மரியாதை போய்விடுமோ என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் இப்பொழுது புத்தகயாவில் ஜூலை 7, 2013 அன்று அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ் பங்கு உள்ளது என்று தனக்கே உரிய பாணியில் ஒரு குண்டை டுவிட்டரில் போட்டு வைத்தார். ஆனால், இந்தியன் முஜாஹித்தீன் பர்மாவில் / மியன்மாரில் முஸ்லிம்கள் பௌத்தர்களால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கத்தான், தாங்கள் புத்தகயாவில் குண்டுவெடிப்பு நடத்தியதியதாக பொறுப்பேற்று டுவிட்டரில் செய்தி அனுப்பியது[14]. இது பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளதாக ஐபி மற்றும் உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது[15]. போதாகுறைக்கு ஜூலை 13 அன்று மும்பையைத் தாக்குவோம் என்று மிரட்டியுள்ளனர்: “Hamara agla target Mumbai hai. Rok sago (sako) to rok lo. Seven days left – ஹமாரா அகிலா டார்ஜெட் மும்ஐ ஹை. ரோக் சகோ தோ ரோக் லோ (எங்களுடைய அடுத்த இலக்கு மும்பை. ஜூலை 13 அன்று தாக்கப் போகிறோம். முடிந்தால் தடுத்துக் கொள்)”. ஜூலை 17 அன்று இந்தியன் முஜாஹித்தீன் தான் குண்டுவெடிப்பு செய்துள்ளது என்று கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம்  உறுதிசெய்தது[16]. உடனே காங்கிரஸ்காரர்களும் ஊடகங்களும் மௌனமாகி விட்டன. இந்த உண்மையை எல்லோருக்கும் தெரிகின்ற மாதிரி அறிவிக்கப்படவில்லை. ஜூலை 12 அன்று, விரது என்ற பர்மாவின் பௌத்தத் துறவி, “புத்தகயாவில் குண்ட்டுகளை வெடித்தது ஹோஹிங்கா முஸ்லிம்கள் தாம்”, என்றார்[17].

You have probably heard of the suspicion that the Bodh Gaya blasts were caused by the Islamists upset with the treatment of Rohingyas in Myanmar. What are your reactions?
I am sure they did it. They are trying to take over Myanmar by violence, like what they tried in Southern Thailand. Unrest in Myanmar is almost over, but extremist forces are trying to use the clashes in Myanmar to justify violent activities elsewhere.

1987ல் ராஜிவ் காந்தி பின்பற்றிய கம்யூனல் / மதவாத அரசியல்  (22-07-2013): மெத்தப் படித்த, மேனாட்டு கலாச்சாரத்தில் ஊறிய சசி தரூர் கூட வெட்கமில்லாமல் காங்கிரஸ் கடைப்பிடித்து வரும் செக்யூலரிஸம் உண்மையில் கம்யூனலிஸம் என்பதை அறிந்தும், அது கரண் தாபரிடம் உரையாடியபோது, நன்றாகவே வெளிப்பட்டும், 1987ல் நடந்தவற்றைப் பற்றியெல்லாம் இப்பொழுது பேசவேண்டிய அவசியம் இல்லை என்பது போல மழுப்பினார்.

  • ஷாபானு வழக்கில் முஸ்லிம்களை சமாதானப் படுத்தியது.
  • அந்த உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காது முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்தது
  • முஸ்லிம்களுக்கு தனியாக விவாகரத்து சட்டத்தைக் கொண்டு வந்தது
  • வடகிழக்கு மாநிலங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கிருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியது, ஜெருசலேம் யாத்திரியைக்கு மானியம் அறிவித்தது..
  • ராமஜென்ம கோவிலின் கதவுகளைத் திறந்து விட்டது
  • “சிலன்யாஸ்” என்ற ராமர் கோவில் கட்ட பூஜையை நடத்தியது.

என்று கரண் தாபர் ராஜிவ் காந்தி செய்த மதவாத செயல்களை எடுத்துக் காட்டியபோது, பதில் சொல்லமுடியாமல் திணறி விட்டார். வழிந்த சசி தரூர் பேச்சை மாற்ற ஆரம்பித்தார். கரண் தாபர் விடாமல் பதில் சொல்ல பணித்தபோது, மறுபடியும் பழையதை எல்லாம் நான் விவாதிக்க முடிய விரும்பவில்லை என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். பிறகு எப்படி பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் முதலியோரை மதவாதிகள் என்று சொல்கிறீர்கள், உங்களது காரியங்கள் அவர்களை விட மதவாதிகளாகக் காட்டுகின்றனவே, என்றெல்லாம் கேட்டபோது, திக்கும்முக்காடி விட்டார். திக்விஜயசிங் போல சிரிக்கமுடியா விட்டாலும், புன்னகை புரிந்து சமாளித்தார்.

ஒரு பத்து-பத்து பதினைந்து நாட்களில் இப்படி நாடெங்கிலும், பயங்கரவாத குண்டுவெடிப்புகள், மதவாத செயல்கள், தீவிரவாத பேச்சுகள், பொய்யான பேச்சுகள், ஊடகங்களின் பிரச்சாரங்கள் முதலியன நடக்கின்றன. ஒன்றைப் போட்டு என்ன நடக்கும் என்று சமூகத்தில் அபாயகரமான பரிசோதனை செய்கிறது சோனியா காங்கிரஸ். குண்டுவெடிப்புகளில் கூட பிஜேபியை எதிர்க்க வேண்டும் என்று செக்யூலரிஸ உளறல்களை சேர்த்துக் கொண்டுள்ளது. இதனால், இந்துக்கள் தேவையில்லாமல் தூஷிக்கப் படுகிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள். இதனால், மே 2014 வரை என்னென்ன நடக்குமோ தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 23-07-2013

 


[4] Though IM came to notice for the first time when it sent emails to media houses before serial blasts in Faizabad, Lucknow and Varanasi in UP in November 2007, its genesis goes back to 2000 when the underworld network was roped in to organize talent spotting, motivation and training of Indian youth in the facilities of LeT and Pakistani intelligence agency ISI.

[9] All India Muslim Personal Law Board working committee member Dr S Q R Ilyas came out strongly against Ahmed’s assertion. “If he (Shakeel Ahmed) is trying to say Muslims reacted to 2002 riots through terrorism, I refute his claim. IM is a fabrication of the Intelligence Bureau. In the name of terrorism, the UPA government and the NDA before them are targeting a community and playing with our country’s security,” he said.

[13] டைம்ஸ்-நௌ டிவி செனலில் – திக்விஜய சிங்கை இது விஷயமாக கேட்ட போது, குட்டு வெளிப்பட்டு முகம் சிவந்து, சுருங்கி விட்டது. மழுப்பலாக சிரித்து சமாளித்தாலும் அவரது முகம் காட்டிக் கொடுத்தது. பார்த்தவர்கள், அடடா, இந்த ஆள் இப்படி அப்பட்டமான பொய்களை, ஏதோ எல்லாமே தனக்குத் தெரியும் என்பது போல சொல்லி வந்துள்ளாரே, வருகிறாரே என்று புரிந்து கொண்டனர்.

[15] Sources in Maharashtra’s Anti-Terrorism Squad (ATS) and the home ministry in Delhi told TOI that the person using the Twitter handle @IndianMujahidin had uploaded the messages from somewhere in Pakistan. “Our probe has established that the tweets originated in Pakistan. We cannot pinpoint the exact city or location at this point of time since we have not got a detailed report from the microblogging firm,” a senior source in Maharashtra ATS said.