பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!
பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்‘ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.
12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4] – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்‘ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.
மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.
“பட்டினப்பிரவேசம்” பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
“ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
15-02-2020.
[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM
[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition
[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38
https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html
[4] இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.
[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |
[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html