லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]
ஒரே படம், ஒரே சம்பவம், ஆனால், வக்கிரத்துடன் ஊடகங்கள் தலைப்பிட்டு போட்ட செய்திகளின் போக்கு: மேற்குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, உண்மை விளங்கும், ஆனால், ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ஊடகங்கள் அநாகரிகமாக செய்துள்ள அவதூறு, அவற்றின், அவற்றின் பின்னால் இருக்கும் வக்கிர மனிதர்களின் பண்மை, கலாச்சாரத்தை, கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது.
- பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது[1] கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்[2].
- பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய[3] விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்[4].
- #கன்னம்கிள்ளிகவர்னர்; கலாய்க்கும் நெட்டிசன்கள்[5]
- Video: பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய கவர்னர்[6]
- கன்னத்தைத் தொட்ட ஆளுநர்… பதிலடி கொடுத்த நிருபர்…![7]
பெண் பத்திரிக்கையாளரைத் தொடுவது, கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். கன்னம் கிள்ளிய / கன்னத்தை தட்டிய / தடவிய கவர்னர்….என்று பலவாறு வர்ணித்தது ஆபாசமாக, அருவருப்பாக இருந்தது[8]. ஆனால், அந்த அம்மணி அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை, சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லி, கவர்னர் என்னை அப்படி செய்து விட்டார் என்று தான் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்[9].
ஆளுநர் எதனால் அப்படிச் செய்தார்? – அதாவது கன்னத்தைத் தட்டினார்?: விகடன் சொல்வதாவது[10] – செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம், “செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் கவர்னர் இருக்கையிலிருந்து எழுந்தார் அப்போது எங்கள் அருகில் இருந்த ரிப்போர்ட்டர் ஒருவர், `நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள் அது தற்போது எந்த அளவில் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘தமிழ் ஒரு இனிமையான மொழி. நான் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்‘ என்றார். அந்த சமயம் கவர்னர் அருகில் இருந்த நானும் மற்றொரு ரிப்போர்ட்டரும் ‘உங்களது தமிழ் ஆசிரியர் யார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தார். மேலும், ‘மாநில அரசின் ஆட்சிமுறை நிறைவாக உள்ளது என்கிறீர்களே அப்படியென்றால் மறைமுகமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் தவறு என்கிறீர்களா?’ என்று நான் கேட்டேன். எனது அந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டாரா என்று கூடத் தெரியவில்லை. சட்டென எனது கன்னத்தை தட்டிக் கொடுத்தார்” என்று கூறியவர் மேற்படி எதுவும் பேச மறுத்துவிட்டார். ” ஆக, பொதுவில் செய்தியாக பரப்பும் இவற்றை, உண்மை என்ன என்பதை உறுதியாக சொல்லாமலே, பிரச்சாரம் செய்வது நோக்கத் தக்கது.
ஸ்டாலின், கனிமொழி, வாசுகி உமாநாத், ஜோதிமணி என்று டுவிட்டியது: அவரது “தட்டல்” எதிர்ப்பு வார்த்தை பதிவு ஏதோ தீண்டாமை வெளிப்படுத்தும் அறுவருப்பான விதமாக, ஆணவப்பிடிவாதமாக இருந்தது “என் முகத்தை பலதடவை கழுவினேன், இருப்பினும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை, அந்த அளவுக்கு கவர்னர் என்னை கொதிக்க மற்றும் கோபம் கொள்ள செய்தார். அது உம்மைப் பொறுத்த வரையில் பாராட்டு மற்றும் தாத்தாவின் அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நீர் செய்தது தவறு”. அவரது கழுவலுக்குப் பிறகு ஆதரவான பதிவுகள் ஸ்டாலின், கனிமொழி, போன்றவர்களிடமிருந்து தான் ஆரம்பித்தன. ஸ்டாலின் சொன்னது[11], “துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! ”. கனிமொழி சொன்னது[12], “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.” வாசுகி உமாநாத், ஜோதிமணி முதலியோரது பதிவுகள் தொடர்ந்தன. அதாவது, திமுக, காங்கிரஸ், மார்க்ஸிய கட்சிக்காரர்கள் ஆதரவு தெர்வித்தனர். லக்ஷ்மியிடம் வெளிப்படுவது தேர்ந்தெடுத்த மோடி-எதிர்ப்பு, காங்கிரஸ்-ஆதரவு, மார்க்ஸிய சித்தாந்த ஒப்புதல் முதலியவையே. இவற்றை அவரது டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஊடக எழுத்துகளில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
லக்ஷ்மி அம்மணிக்கு என்னத்தான் வேண்டும்?: கழுவலுக்குப் பிறகும், உடனே 200 ஊடகக்காரர்கள் கவர்னரை மன்னிப்புக் கேட்கும் படி கடிதம் எழுதி இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். 200 பேர் யார், அவர்களுடைய பின்னணி என்ன, எப்படி அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பினர், என்ற விவரங்கள் தெரியவில்லை. “நானே 40 வருட பத்திரிக்கைக் காரன் தான், ஊடகத்தில் உமக்குள்ளத் திறமையினை மெச்சி, தாத்தா போல, தட்டி பாராட்டினேன்,” என்ற பிறகும் ஊடகக்காரர்களின் அடாவடித் தனமான கேள்விகளை கவனிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கலாமே, கையை நீட்டித் தடுத்திருக்கலாமே, “தாத்தா, இது சரியில்லை,” என்று சொல்லியிருக்கலாமே, கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே? “உமது மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் எனது கேள்வியைப் பாராட்டித் தான் அவ்வாறு செய்தேன் என்பதை ஏற்கவில்லை,” என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கும் மேலாக அந்த அம்மணி எதை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதனை அரசியலாக்கும் போக்கு ஏன் என்றும் தெரியவில்லை. “அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்”, என்பது பொய், ஏனெனில் அந்த வீடியோ அவர் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தது போல இருந்தது. தன்னுடைய சக-ஆண்-ஊடகக்காரரிடமும் ஏதோ தமாஷாக பேசியதும் தெரிகிறது!
தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்ற அறிக்கையும் தொடர்ந்த பிரச்சாரமும்[13]: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது’ தேசிய அளவில் எந்த ஆதரவும் இல்லாத, தமிழகத்தில் பெயருக்கு இருக்கின்ற, இக்கட்சி இவ்வாறு தம்பட்டம் அடிப்பதும், அதை வைத்துக் கொண்டு, விகடன் போன்ற ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது[14].
லக்ஷ்மி சுப்ரமணியன் மூலம் வெளிப்படுவது பத்திரிக்கா–அகங்காரம், பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்கு, குறியிட்ட நபரைத் தாக்கும் திட்டம்[15]: நிர்மலா தேவி மூலம் வெளிப்படுவது, திராவிடத்துவம் எவ்வாறு பெண்மையினை சதாய்த்துள்ளது, அடிமையாக்கி வைத்துள்ளது போன்றவை…லக்ஷ்மி சுப்ரமணியனுக்கு ஜெயா-டிவியில் வேலை செய்து, விசுவாசத்தை மறந்து மாறியதால், ஸ்டாலின் கனிமொழி ஆதரவு கிடைக்கிறதா? வாசுகி உமாநாத் [சிபிஎம்], ஜோதிமணி [காங்கிரஸ்] ஆதரவு, லக்ஷ்மி சுப்ரமணியனின் பத்திரிக்கா / அரசியல் கூட்டணியைக் காட்டுகிறதா? பரிதாபகரமான கவர்னரும், சண்டைப் போட்டுக் கொள்ளும் தமிழ பிஜேபியும், முட்டாள் இந்துத்துவவாதிகளும் – கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது போலும்! நிர்மலா தேவியை வைத்துக் கொண்டு தான், லக்ஷ்மி சுப்ரமணியன் விளையாடுகிறார் என்று தெரிகிறது, பிறகு, இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? இதே பல்கலையில் முன்னர் பாலியல் புகார் வந்தபோது, லக்ஷ்மி சுப்ரமணியன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஜெயலலிதாவுக்குக் கட்டுப் பட்டு கிடந்தாரா? பாலியல் நிறங்காட்டி, கொச்சைப்படுத்தி, ஒரே நாளில் பிரபலம் அடையும் போக்கு, அந்த சீமான் போன்ற வகையறாக்களைத்தான் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] தி.இந்து, பெண் பத்திரிக்கையாளரை தொடுவது கண்ணியமானதல்ல: ஆளுநர் செயல் குறித்து கனிமொழி ட்வீட், Published : 18 Apr 2018 12:27 IST; Updated : 18 Apr 2018.
[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23582832.ece
[3] https://www.ietamil.com/tamilnadu/banwarilal-purohit-mk-stalin-kanimozhi-condemns/
[4] https://tamil.news18.com/news/tamil-nadu/tngovernor-banwarilal-purohit-pat-journalist-on-the-cheek-without-her-consent-agitations-erupts-over-governors-gesture-15965.html
[5] http://www.newstm.in/Tamilnadu/1524034806108?-
[6] https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-governor-pats-journalist-on-cheek-sparks-controversy/videoshow/63809405.cms
[7] https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/female-reporter-stronger-condemnation
[8] Republic World, Journalist Lakshmi Subramanian Speaks To Republic TV | TN Governor Controversy, 17 ஏப்., 2018 அன்று வெளியிடப்பட்டது.
[9] https://www.youtube.com/watch?v=Y6rOW1qnPFY
[10] விகடன், “சிரித்துக்கொண்டே கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்!” – கவர்னரின் செயலை விவரிக்கும் `தி வீக்’ நிருபர், ஐஷ்வர்யா, Posted Date : 09:58 (18/04/2018) Last updated : 10:49 (18/04/2018).
[11] https://t.co/rjywYVXQQ9 — M.K.Stalin (@mkstalin) 17 April 2018
[12] Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 17 April 2018
[13] விகடன், `தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!’ – மாணவிகள் புகார் விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.எம், தினேஷ் ராமையா, Posted Date : 18:47 (16/04/2018) Last updated : 18:47 (16/04/2018)
[14] https://www.vikatan.com/news/tamilnadu/122371-cpm-urges-fair-trail-on-aruppukkottai-college-issue.html?artfrm=related_article
[15] Lakshmi Subramanian, principal correspondent, is a hardcore political journo. She has 15 years of extensive experience in writing about politics in Tamil Nadu. She is interested in political gossips and writing investigative stories.