லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]
விகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.
- `தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.
- `பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.
- முதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர்.
- எல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.
- சரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.
இப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.
கவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:
- “உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா?”
- “சிபிஐ விசாரிக்குமா?”
- “இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.
- “சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன?”
- “நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?’
- “நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?”
- “கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா?”
இத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா? என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.
இருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.”
கவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].
கவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம்மணி ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை… கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?, ஞா. சக்திவேல் முருகன், Posted Date : 17:18 (18/04/2018) Last updated : 11:03 (19/04/2018)
[2] https://www.vikatan.com/news/miscellaneous/122567-tamilnadu-governor-banwarilal-purohit-press-meet-details.html
[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்!’ – ஆளுநரின் முதல் செய்தியாளர் சந்திப்பு, MUTHUKRISHNAN S Posted Date : 18:18 (17/04/2018) Last updated : 19:41 (17/04/2018)
[4] https://www.vikatan.com/news/tamilnadu/122485-anyone-who-is-guilty-will-be-punished-says-banwarilal.html
[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..!” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)
[6] https://www.vikatan.com/news/coverstory/122491-give-respect-to-my-post-and-shoot-your-questions-slams-banwarilal-purohit.html
[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.
[8] https://m.youtube.com/watch?v=BJVCHzERpMM&feature=youtu.be