சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)
ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில் கோவில் அடிக்கல் நாட்டு பூமி பூஜை விழா: ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில், ஶ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்வதற்கான “முஹூர்த்தம்” நல்ல நேரம் குறிக்கப் பட்டது[1]. ஆனால், அது இந்து நாட்காட்டியின் படி, “உத்தம காலம்” இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால், பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை தூஷிக்க ஆரம்பித்துள்ளனர்[2]. ஆகஸ்ட் 5, தக்ஷிணாயன, பாத்ரபத மாதம், கிருஷ்ண பக்ஷத்தில் வருகிறது. பாத்ரமாத மாதத்தில், வீடு / கோவிலைக் கட்டும் வேலையை ஆரம்பிப்பது இல்லை என்றார். தவிர சென்ற வருடம் 2019 பிப்ரவரி 21ம் தேதியே, கோவிலுக்கு அடிக்கல் நடும் பூஜையை, இவர் வாரணாசியில், தன்னுடைய ஆசிரமத்தில் செய்தார்[3]. ஒரு யாத்திரைக்குக் கூட ஏற்பாடு செய்தார், ஆனால், இவரது, உடல் அசௌகிரயத்தினால் கைவிடப் பட்டது[4]. மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. தேவையில்லாமல், ஒரு பழைய புகைப்படத்தைப் போட்டு, ,பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை சமூக ஊடகங்களில் தாக்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே, இதன் பின்னணியை எடுத்துக் காட்ட வேண்டியதுள்ளது.
காங்கிரஸ்–பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தது: காங்கிரஸ் மற்றும் பிஜேபி சங்காரச்சாரியார்களை, ராமஜென்மபூமி விசயத்தில், வைத்து, அரசியல் செய்து வருகின்றன. ராஜிவ் காந்தி, வி,பி.சிங் காலம் தொடர்ந்து, ராமஜென்பமபூமி கோவில் விவகாரத்திற்கு இடைஞ்சலாக, ஷாபானு, மண்டல் கமிஷன் போன்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து காலங்கடத்தினர். 1992க்குப் பிறகும், “கோவில் கட்டுவோம்” என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ்-பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தனர். இப்படியாக தேர்தல் நேரத்தில் “ராமர் கோவில்” என்றும் மற்ற நேரங்களில், கோர்ட் சொன்னதை கேட்போம் என்றும் கூறிக் கொண்டு காலத்தைக் கழித்தனர். இந்தியாவில், செக்யூலரிஸம் என்ற கொள்கை வந்த பிறகு, இந்து மடாதிபதிகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கின. ஏனெனில், தேவையில்லாமல், கோவில் வழிபாடு, மடங்கள், மடங்களின் நிர்வாகம், சொத்து, முதலியவைப் பற்றிய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் நுழைந்து, மடாதிபதிகள் நீதிமன்றங்களிக்கு செல்லுமாறு செய்து, மறைமுகமாக, அதிக அளவிற்கு அவற்றை அரசியல் கட்டுப் பாட்டில் வைக்க முயன்றன.
சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க செய்த வேலைகள்: ஆனால், ராமஜென்ம பூமி விசயத்தில், ஆரம்பத்தில் அரசியல் கலப்பில்லாமல், அவ்வியக்கம் சென்று கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வந்தது. அகில இந்திய மடாதிபதிகளின் சபை கூட்டம், சாது-சந்நியாசிகள் கூட்டம் போன்றவற்றை நடத்தி, விஎச்பி சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் என்று வரவழைத்து, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் முதலியன நடத்தப் பட்டன. பக்தர்கள், பின்பற்றுபவர்கள் முதலியோரும் கலந்து கொண்டனர். முதன் முதலாக, இவ்வாறு சாது-சந்நியாசிகள் கூட்டம் ஒரே இடத்தில் வருவது, பெரிய விசயமாகியது. உலக அளவில், ஊடகங்களில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலை நாடுகள், இந்தியாவில். இத்தனை, சாது-சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப் பட்டனர். அரசியல் கட்சிகள் கதி கலங்கன. தமக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூட அஞ்சினர். முலாயம் சிங் யாதவ், முதலியோர் திகைத்தனர். அந்நிலையில் தான் அவர்களது ஒற்றுமையை சீர்குலைக்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டன. மாநில அளவில், மடாதிபதிகளுக்கு பிரச்சினைகளை உண்டாக்கினர். மடாதிபதிகளே, ஒருவர் மீது, ஒருவர் வழக்குகள் போட்டார்கள். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்காரர்கள், எதிர்கட்சிகள் ஒருபக்கம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்றவை இன்னொரு பக்கம் என்று நின்று மோத ஆரம்பித்தன. 1992 நிகழ்வுக்குப் பின்னர், அரசியல் கட்சி மோதல்கள் அதிகமாகின.
தொடர்ந்து சங்கர மடங்கள் தாக்கப் படுவது (1987 முதல் இன்று வரை): சங்கரமடங்களைத் தாக்குவது என்று தொடர்ந்து நடந்து வருகிறது. ஊடகக் காரர்கள், சங்கராச்சாரியார்களிடம், அரைகுறையாக எதையாவது கேட்டுக் கொண்டு, அவற்றை ஊடகங்களில் செய்திகளாகப் போட்டு, பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளனர். 1987ல் காஞ்சி சங்கராச்சாரியார், மடத்தை விட்டுச் சென்ற போது, அத்தகைய வேலையை செய்தனர். 1990களில் பூரி சங்கராச்சாரியார்களின் கருத்துகளைத் திரித்து, சதி, பசு-கொல்லாமை, பெண்கள்வேதங்கள் படிப்பது போன்றவற்றைப் பிரச்சினை ஆக்கினர். 2004லிருந்து, மறுபடொயும், காஞ்சி சங்கராச்சாரியாரை பிரச்சினைக்குட்படுத்தப் பட்டது. இந்த தடவை கொலைக்குற்றம். 2013ல் விடுவிக்கப் பட்டாலும், 2004லிருந்து, காஞ்சி மடம் மட்டுமல்லாது, மற்ற மடங்களின் மீதும், அவதூறாக, அசிங்கமாக பேசுவது, எழுதுவது புத்தகங்கள் போடுவது என்று தொடர்ந்தன. 2018ல் ஜெயேந்திரர் காலமாகி, சமாதியானார். ஆனால், துவாரகா சங்கராச்சாரியாரின் மீதான தக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மடத்தின் தரப்பில் கொடுக்கப் பட்ட விளக்கம்…

K.A.Paul with Modi, Amit Sha
கொலைக் குற்றம் சாட்டப் பட்ட பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் போட்டுத் தாக்குவது: கே.ஏ.பால் என்ற பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படம் போட்டு, இப்பொழுது தூஷணத்தை மறுபடியும் ஆரம்பித்துள்ளனர். 2005லேயே, மடம் தரப்பில், மறுப்பு தெரிவிக்கப் பட்டு, கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஒரு சாதாரண பக்தனோ அல்லது ரொம்ப வேண்டப் பட்ட பக்தனோ, எந்த சங்கராச்சாரியாரையும் தொட முடியாது. இங்கோ, இந்த பாதிரி, தோளின் மீது கை போட்டது மாதிரியும், தலைமீது கை வைப்பது போலவும் புகைப்படங்களில் தெரிகிறது. ஆகவே, இது நிச்சயமாக நம்புகிறபடி இல்லை. மேலும், மேனாட்டுப் பத்திரிக்கைகளே, இப்பாதிரியைப் பற்றி தமாஷாக எழுதியுள்ளன. அந்நிலையில், அவனது சகோதரனையே கொன்றுவிட்டார் என்ற செய்திகள் வருகின்றன[5]. இவனை கைது செய்து, சிறையில் அடைக்கப் படுகிறான்[6]. ஆனால், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் படுகிறான்[7]. அப்பொழுது, ராஜசேகர ரெட்டியின் பேரில் தான், கைது செய்யப் பட்டதாக, பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறான்[8]. போதா குறைக்கு, பிறகு, ஒரு கட்சி ஆரம்பித்து, ரெட்டியை எதிர்க்கிறேன் என்று ஓட்டைப் பிரித்து, அவரையே ஆட்சிக்கு வரும்படி ஆகி விட்டது. இதெல்லாம், கிருத்துவர்கள் சேர்ந்து நடத்திய நாடகமா என்றெல்லாம், நாயுடு தான் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஏனெனில் தோல்வியடைதது சந்திரபாபு நாயுடு தான். ஆனால், அந்த பாலை வைத்து, சங்கரச்சாரியாரைத் தாக்குவதில் தான், விசமம் வெளிப்படுகிறது.
இந்துக்கள் மாற்று மதத்தினர் போல, சங்கராச்சாரியர்களை வசைப்பாடி தூஷிப்பது ஏன்?: ஒரு போட்டோவில் தோளின் மீது கை வைப்பது போலவும், இன்னொரு புகைப்படத்தில், தலையின் மீது கைவைப்பது போல உள்ளது. இவ்வாறு ஒரு போப்பின் மீது, ஒரு பூஜாரி இவ்வாறு கை வைக்க முடியுமா? முதலில், இவ்வாறு அருகில் விடுவார்களா? ஆகவே, இந்த ஆள் எதற்காக, அவ்வாறு செய்தான் என்று ஆராய வேண்டியுள்ளது. கிருத்துவர்கள் தான் இவ்வாறு சங்கரமடத்தை, சங்கராச்சாரியாரைத் தாக்குகிறர்கள் என்றால், அதே படங்களை வைத்துக் கொண்டு இந்துத்துவ வாதிகள் தாக்குவது திகைப்பாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்து, வாத-விவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை கூர்ந்து கவனித்தால், ஒட்டு மொத்தமாக, சங்கர மடங்களை ஒழித்டு விட வேண்டும் என்ற போக்கில் உள்ளது போலிருக்கிறது.இந்துக்களே, சங்கராச்சாரிகளை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு, இவர்களே, அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதமும் பெறுவார்கள். ஏதாவது பலனைக் கேட்டும் அனுபவிப்பார்கள். இந்த அசிங்கத்தை எல்லாம் தொகுத்து வைத்துக் கொண்ட இந்துஎதிரிகள் நாளைக்கு புத்தகங்களில் குறிப்பிடுவர், இல்லை, சங்கரமடத்து ரகசியங்கள் என்று புத்தகங்களே எழுதுவர்.
முடிவுரையாக சில குறிப்புகள்: மேலேயுள்ள விவரங்களைத் தவிர, பல உள்ளன, ஆனால், அவற்றையெல்லாம், இங்கு விவாதிக்க முடியாது. இந்துத்துவ வாதிகளே, பலவற்றை தமது மனங்களில் வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்களில் கொட்டி வருகின்றன. அவையெல்லாம் நல்லதற்கு அல்ல.
- சங்கர மடங்கள், 2500ற்கும் மேலான ஆண்டுகளாக, பாரதத்தில், ஆன்மீக, சமய, இறையியல் ரீதிகளில் இந்தியர்களை வழிநடத்தி வருகின்றன!
- அவற்றின் பீடாதிபதிகளான சங்கராச்சாரியார்களும், அவ்வாறே மதிக்கப் பட்டு, பாரதம் முழுவதும் சென்று வந்து மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளனர்.
- ஆங்கிலேயர் காலங்களில், சங்காராச்சாரியார்கள், மடங்கள், மடங்களின் இறையியல் நூல்கள் இவற்றைக் கண்டு அதிசயித்தனர்.
- அத்தகைய தத்துவார்த்த, கிரியை, சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தவர்களை வேறெங்கும் காணமுடியவில்லை.
- இந்தியாவில் மதரீதியில் ஒருத்துவ அதிகாரம் கொண்ட மதத்தலைவர், தத்துவ குரு, இறையியல் பீடம் இல்லை என்றே அவர்கள் கருதினர்.
- நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, மக்கள் குழுமம், இனம், வர்க்கம் போன்ற காரணிகளில் மற்ற மதங்கள் பிரிந்து கிடந்தன, மோதின.
- ஆனால், பாரதத்தில் அத்தகைய காரணிகள் இருந்தாலும், ஒன்றாக இருந்தனர்; நான்கு திசைகளில் உள்ள புண்ணியக்ஷேத்திரங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றுவந்தனர்.
- அந்நிலையில் தான், மடங்களுக்குள் வேறுபாடுகளை உண்டாக்க விரும்பினர், புதிய மடங்கள், மடாதிபதிகள் உருவாக ஊக்குவித்தனர்.
- ஆதிசங்கரருடைய நூல்கள் திரிபு விளக்கங்களுக்கு உட்படுத்தப் பட்டு, ஜாதிய, மாநில, திசை போன்ற திரிபுகளுக்குத் திருப்பினர்.
- ஆதிசங்கரரின் தேதியைக் குறைக்க, சங்கர மடங்கள் ஐந்தல்ல, நான்கு தான், அத்வைதம் துலுக்கர்களின் ஒருத்துவத்திலிருந்து பெறப்பட்டது போன்ற கருதுகோள்களை உண்டக்கினர்.
- சங்கர-சிருங்கேரி நீதிமன்ற வழக்குகளை ஊக்குவித்தனர், அவை இன்றும் தொடர்கின்றன, இந்துவிரோதிகளுக்குத் தீனி போடுகின்றன.
- எனவே, அந்நிலையில், சங்கரமடங்களை, சங்கராச்சாரியார்களை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம், இந்து-ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம்.
© வேதபிரகாஷ்
24-07-2020
[1] Daijiworld, Shankaracharya objects to ‘Bhoomi Pujan Mahurat’, Thu, Jul 23 2020 01:22:59 PM
[2] http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=733362
[3] Times of India, Varanasi: Swami Swaroopanand Saraswati symbolically lays down foundation stone of Ayodhya’s Ram Mandir, Feb 22, 2019, 07:00AM ISTSource: TNN
[4] https://timesofindia.indiatimes.com/videos/city/lucknow/varanasi-swami-swaroopanand-saraswati-symbolically-lays-down-foundation-stone-of-ayodhyas-ram-mandir/videoshow/68098454.cms
[5] Times of India, Evangelist K A Paul arrested in murder conspiracy case, PTI | Updated: May 21, 2012, 16:43 IST.
[6] https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Evangelist-K-A-Paul-arrested-in-murder-conspiracy-case/articleshow/13355388.cms
[7] Economic Times, Evangelist KA Paul arrested for murder conspiracy by Andhra Pradesh police, By CR Sukumar, Last Updated: May 22, 2012, 02:36 AM IST
[8] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/evangelist-ka-paul-arrested-for-murder-conspiracy-by-andhra-pradesh-police/articleshow/13367273.cms