Archive for the ‘போத்தீஸ்’ Category

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்!

பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா?: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம்

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.

கமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது!

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன்

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்?

சேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா?: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்!

தீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான்சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது? நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்

கடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

  1. முதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.
  2. எதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.
  3. நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.
  4. அதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.
  5. ஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.
  6. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.
  7. ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.
  8. . தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…!- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்!, Posted by: Shankar, Published: Saturday, October 3, 2015, 10:15 [IST].

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/has-kamal-donated-rs-16-cr-or-not-236952.html

[3] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html

[4] http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html

Advertisements

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

Akhsayta and sruti - daughters of Kamal

Akhsayta and sruti – daughters of Kamal – அக்ஷயா மற்றும் ஸ்ருதி என்றால் தமிழா, அரேபிக்கா, உருதா?

பகுத்தறிவாளன்: கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். எனக்கு நாத்திகம் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேச முடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்”. அதெல்லாம் சரிதான், அதேபோலத்தான் கடவுள் இலத்தீனில் பேசுமா, அரேபிய மொழியில் பேசுமா, உருது மொழியில் பேசுமா என்றேல்லாம் கேட்டிருந்தால், பகுத்தறிவின் உச்சத்தைக் கண்டு திகைத்திருக்கலாம், ஆனால், இது குறிப்பிட்ட மதத்தினரை எதிர்ப்பதாகத்தானே உள்ளது? அது சரி, தனது மகள்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று பெயர் வைக்க வேண்டும், அவை என்ன அரேபிய மொழியில் உள்ளனவா? இல்லை, இல்லாத கடவுளுக்குத் தெரியக் கூடாது என்று வைத்திருக்கிறரா?

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.

இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதா?: கமல் ஹஸன் தொடர்கிறார், “தெய்வங்கள் ஒரு புறம் இருக்கட்டும், உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள்.  மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறு கிறார்கள்[1]உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம்[2]. மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்”. அதிருக்கட்டும், பன்றி மாமிசம் சாப்பிடுகிறேன், எனக்கு உரிமை இருக்கிறது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே? ஏன், அப்பொழுது ஏதாவது “பன்றி சாமியார்” வந்து பயமுருத்தப் போகிறாரா? சாப்பாடே இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அது மாட்டிறைச்சி விவகாரத்தால் அல்ல, இவரைப்போல கோடீஸ்வரர்காளால் தான். இவருக்கு பட்டினி, பசி என்றெல்லாம் நடித்துதான் காட்ட முடியும். ஆனால், அவற்றை நீக்க முடியாது.

Kamal and beef eating philosophy

Kamal and beef eating philosophy

சகிப்புத் தன்மை இல்லை:  ஜனாப் கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்[3]. நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய நாட்டை பங்கு பிரிவினை போட்டு கொடுத்து விட்டோம் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை நிகழ விடக் கூடாது”, என்றார். விழாவில் கவிஞர் புவியரசு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்”, என்பதில் விசமத்தனத்துடன் சொல்லியிருப்பது தெரிகிறது“[4].  “நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம்,” என்றதிலிருந்து, ஏதோ இந்துக்கள் தாம் அவ்வாறு செய்தனர், முஸ்லிம்கள் ரொம்ப நல்லவர்கள் போன்று கூறியுள்ளார். இங்குதான் தெப்பெண்ணம், பாரபட்சம், திரிபுவாதம் முதலியவை வெளிப்படுகின்றன. மதத்தின் பெயரால் தனி வீடு, அதாவது நாடு கேட்டது ஜின்னா மற்றும் முஸ்லிம்கள். பாகிஸ்தான் உருவானால், எனது பிணத்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்று காந்தி சொன்னதையே பொய்யாக்கி விட்டு, உண்மையிலேயே பல இந்துக்களைக் கொன்று அவர்களின் மீதுதான் நடந்து பாகிஸ்தானிற்கு சென்றனர். அப்போழுதும், காந்தி, நவகாளியில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அங்கு பாதயாத்திரையாக சென்றார். இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம், இந்த நடிகன் இப்படி சொல்லிவிட்டான், இனி ரசிகர்கள் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கும்.

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை: ஶ்ரீமான் கமல் ஹஸன் தொடர்கிறார், “சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேசபக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டிற்குமுன் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா? நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால் தான் இதையெல்லாம் சொன்னேன். எனக்கு அக்னி பரீட்சை வைக்க முடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்”, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்[5]. இங்கிருக்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை போலும், “உலக பக்தி” பற்றி பேச ஆரம்பித்து விட்டான் “உலக நாயகன்”! இதேபோல, கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றவற்றையும் கொண்டாட மாட்டேன் என்று கூறியிருந்தால், இவரது செக்யூலரிஸத்தை பாராட்டலாம். ஆனால், திராவிட நாத்திகம் போலத்தான் பேசியிருப்பதால், போலி நாத்திகத்தைத்தான் காட்டியுள்ளார், இந்து-விரோதத்தன்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அக்னி பரீட்சை வைக்கும் அளவுக்கு என்ன அப்படி தாம்பத்திய வாழ்க்கையினை தூய்மையாகவா வைத்திருந்தார் கமல். சட்டப்படி இரண்டு மனைவிகள், இரண்டு விவாக ரத்துகள், திருமணம் ஆவதற்கு முன்பே இரண்டு மகள்கள், சிம்ரன் உடன் வாழ்வு, செர்ர்ந்து வாழ்வது என்ற தோரணையில் பிறகு கௌதமி என்று வாழும் அவருக்கு யாரும் அக்னி பரீட்சை வைக்க முடியாதுதான்!

Pothys Kamal Hassan AD.2

Pothys Kamal Hassan AD.2

தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது…..: பொதுவாக தமிழ் ஊடகங்கள் இதுவரை கருத்துத் தெரிவித்ததை பார்க்கவில்லை. ஆனால், இவ்விசயத்தில், “பத்திரிக்கையாளர்கள் எப்படி தன் சொந்தக் கருத்தை செய்தியில் சேர்க்கக்கூடாதோ, அது போல் நடிகர்களுக்கும் நடிப்பு வேறு, சொந்தக் கருத்துகள் வேறு தான். அது மறுப்பதற்கில்லை[6]. ஆனபோதும், தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது”[7], என்று பிளிம்.பீட்.தமிழ் என்ற தளத்தில் படித்தது, சிலர் தமது கருத்தை வெளியிடும் நிலையில் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் சொல்லவேண்டிய கருத்து அதில் உள்ளதால், அதனை அப்படியே போட்டுள்ளேன். இந்நிலையில், அவர் போத்தீஸிடம் வாங்கிய பணத்தை, எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் கொடுத்தார் என்பது பொய்[8] என்று குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது! இதேபோல கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றதற்கும் விளம்பரப்படங்களில் நடித்து, அப்பண்டிகளைப் பற்றி விமர்சனம் செய்தால், இவரது பகுத்தறிவை அல்லது செக்யூலரிஸ நாத்திகத்தை ஒப்புக்கொள்ளாலாம். தைரியமுள்ள, ரோசம், மானம் உள்ள உலக நாயகன் செய்வானா?

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: நடிகர் கமலஹாசன், Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 21:00 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html

[3] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece

[4] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece

[5] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html

[6] பிளிம்.பீட்.தமிழ், உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?, Posted by: Jayachitra Published: Sunday, November 8, 2015, 15:21 [IST]

[7] Read more at: http://tamil.filmibeat.com/heroes/actor-kamal-s-controversial-attitude-on-diwali-celebration-037544.html

[8] This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. – Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee)#kamalhaasan #ptptrust”

http://www.dnaindia.com/entertainment/report-ptp-trust-denies-that-kamal-haasan-made-a-donation-to-them-2131017

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

அண்ணா, பெரியார், கமல் - கற்பனைப் படம்

அண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்

நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன். வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”.  முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12].  மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html

[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.

[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST

[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html

[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.

http://indianexpress.com/article/entertainment/entertainment-others/divorced-kamal-haasan-sarika-greet-each-other-warmly-at-shamitabh-music-launch/

[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு

[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.

[12]  மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.

[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html

[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

நவம்பர் 7, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

Pothys Kamal Hassan ad

Pothys Kamal Hassan ad

கமலும், தீபாவளியும், போத்தீஸ் விளம்பரமும் (அக்டோபர்-நவம்பர்.2015): “என்னத்தான் வருசா வருசம் வயசு ஏறிக்கிட்டே போனாலும், தீபாவளி அன்னிக்கு எனக்கு வயசு பத்து தாங்க. புது ரிலீஸ் படம் காட்டிலும் டமால் டுமீல்னு பட்டாசு எல்லாம் வெடிக்கிறாங்க. ஜாலியாக டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கலாம், ஆனா, ஸ்வீட் சாப்பிடனும். உம்என்னத்தா வருசம் முழுவதும் நினச்சப்ப எல்லாம் புது டிரஸ் எடுத்தாலும், இந்த தீபாவளி டிரஸை யாரும் மறக்க முடியுமா சொல்லுங்க. அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய எங்கு எடுப்போம்? நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே?”, என்று சொல்லிக் கொண்டே ராக்கெட் விடுகிறார் கமல். “திபூஸ் போதிஸ், இது மக்கள் போத்தீஸ்”, என்று பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதாங்க கமலின் தீபாவளி புரமோஷன் அட் பிளிம்[1], அதாவது தீபாவளி வியாபாரத்தைப் பெருக்க எடுத்த ஒரு விளம்பரப்படம். இது எப்படி எடுத்தனர் என்பதை விளக்கும் விடியோவும் உள்ளது[2]. இப்பொழுது பட்டாசு வெடிக்காதே என்று பிரச்சாரம் நடக்கும் நிலையில், இந்த விளம்பரப்படமே தமாஷாகத்தான் இருக்கிறது. இருப்பினும், உலக மகா நாயகன் நடித்தது என்று கவனித்தில் கொள்ளவேண்டும். இதனால், தீபாவளியை அந்த நாத்திகன் ஏற்றுக் கொண்டதாக ஆகாது. இதனை விளம்பர விபச்சாரம், வர்த்த வேசித்தனம், வியாபாரப் பரத்தைத்தனம் என்பதா என்று நுகர்வோர் தான் தீர்மானிக்க வேண்டும்[3].

Pothys Kamal Hassan AD.2

Pothys Kamal Hassan AD.2

வாங்கிய பணத்தை நல்ல காரியத்திற்குக் கொடுத்தார்: இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[4]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்.

No crackers campaign for Deepavali

No crackers campaign for Deepavali

தீபாவளியை வெறுக்கும் கமல் செய்யும் பரித்துரை மூலம் நுகர்வோர் பயன் பெறுவார்களா?: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா? தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா? “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா? சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா? கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள்? எதை வாங்கினாலும், அதன் தரத்தை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா? எதிர்விளைவுகளினால், பின் விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பதை பகுத்தறிவா தீர்மானிக்கும்.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

படபிடிப்பு எடுக்க அனுமதி கேட்க மடத்துள் நுழைந்த நாத்திகன் கமல் (செப்டம்பர். 2014): கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6] என்றது தினமலர். மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[7]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[8]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்க விஜயம்: நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ? என்று பலர் கேள்வி எழுப்பினர். கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார். உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும் என்றார்[9]. இப்படியெல்லாம் மழுப்பினாலும், வியாபார ரீதியில் ஒப்புக்கொண்டார்கள் என்றாகிறது அவ்வளவுதான். சூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதெல்லாம் போலித்தனமானது.

I want beef, but no crackers

I want beef, but no crackers

கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!: இதை விமர்சித்து, ஒரு பதிவு உள்ளது, “அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது[10]. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சரிஅது இருக்கட்டும்இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன. ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்”, என்ற அப்பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.[11]. இவ்வாறான உள்ளூர் பழக்க-வழக்கக்கள் இருக்கின்றன என்றால், அவை பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மீறி இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்றால், அது இந்துக்களின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

07-11-2015

[1] https://www.youtube.com/watch?v=Wg4u0xcqQBU

[2] https://www.youtube.com/watch?v=jDdUDDY4lC8

[3] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.

[4] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/holy-books-say-brahmins-ate-beef-says-kamal-hassan-225248.html

[6] தினமலர், நெற்றியில் விபூதி பட்டையுடன் மடாதிபதியை சந்தித்தார் கமல்!, செப்டம்பர்.4, 2014.08.17. PM IST.

[7] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[8] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[9] http://cinema.maalaimalar.com/2014/09/03125909/kamal-change-to-aanmeegam.html

[10] தமிழ்.நியூௐ.டிவி, கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!, On 9/05/2014 10:05:00 AM by Abdul Farook in Break, Tirunelveli.   

[11] http://tamilnadunewstv.blogspot.in/2014/09/blog-post_377.html

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)!

நவம்பர் 7, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)!

Diwali-ad- No crackers

Diwali-ad- No crackers

தீபாவளி வந்தால், திராவிட நாத்திகர்களின் இந்துதூஷணம்: தமிழகத்தைப் பொறித்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்த தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்க;ல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்.

போத்தீஸ், கமல், தீபாவளி

போத்தீஸ், கமல், தீபாவளி

டபுள்தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்[1] (நவம்பர். 2015): தினமலர் இவ்வாறு தலைப்பிட்டு சினிமா ரிலீஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்றாலும், தனது பிறந்த நாளில் ரிலீஸ் என்று தான் சொல்லிக் கொள்கிறார். ஆனால், தீபாவளி விளம்பரத்தில் மட்டும் நடித்துள்ளார்!. ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது! இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீபாவளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம்! அதனால் தான் “மாயா நரகாசுரனை” வேண்டும் என்றானாம் கமல் ஹஸன்!

கமலஹாஸன் - ஆத்திகரா, நாத்திகரா

கமலஹாஸன் – ஆத்திகரா, நாத்திகரா

ஷோபனா நல்ல சமையல்காரர் என்றால், ஹஸனும் அவ்வாறே மாறினார் போலும் (2009): 2009ல் நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்” நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார். முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில், “கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால், இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும். நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்[5].”

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்

நான் ராவணனின் பரம ரசிகன்கமல் (2009): “ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது[6]. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாதுநடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும். இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல்மாயா நரகாசுரனையும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்”, என்றார்[7]. மாயா நரகாசுரன் வெளிவந்தானோ இல்லையோ, அது கமல் ஹஸன் மூலம் வெளிப்பட்டுவிட்டது போலும்!

நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்-கமல்

நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்-கமல்

மாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா?: அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[8].

என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்

தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .

பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது

விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.

கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்

எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்

மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மதஅடிப்ப்டைவாதம் அது

கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!

 

ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?

எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா?

அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா?

கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளாமாய சாத்தான்” நாடகம் நடக்குமா?

ஆனால், “விஸ்வரூபம்” அனுபவித்தில் சாத்தானின் தொல்லையை அனுபவித்தது ஜாபகத்தில் இருக்கும். “சினிமாவில் நான் அரசியல் பண்ணியதில்லை……..[9] ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும்”, என்றார் ஒரு முறை நடிகர் கமல்ஹாஸன்[10]. ஆனால், மறைமுகமாக அரசியலை செய்து கொண்டுதான் வந்துள்ளார். திராவிடத் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அரசியல்வாதி நடித்துக் கொண்டிருப்பான், நடிகன் அரசியல் செய்து கொண்டிருப்பான். இவன் உலக மகா நாயக நடிகன் என்பதால், பெரிய அரசியல்வாதி என்றுதான் சொல்லவேண்டும்.

கமல் - நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்

கமல் – நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்

கமலின் நாத்திக, இந்து-விரோத வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது: வர்த்த ரீதியில் கமல் ஹஸன் சினிமா போலம் லாபங்களை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது வியாபார விருப்பங்களைக் கச்சிதமாகக் கவனித்து வருகிறார். திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என நடிகர் கமல் தெரிவித்தார்[11]. விஸ்வரூபம் படம் மும்பையில் திரையிடப்பட்ட போது, நிருபர்களிடம் பேசிய கமல், “நான் பிரச்னையில் இருந்த போது, சினிமா உலகம் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு என்னை நெகிழச் செய்து விட்டது. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்னைப் போல் யாரும் பிரச்னையில் சிக்கக்கூடாது. எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறேன். ஏராளமான முஸ்லிம்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தைப் பார்க்காமலேயே படத்திற்கு எதிராக போராடுகின்றனர். சில தவறான வழி நடத்தல்கள் காரணமாகவே இந்த எதிர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னைகள் எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக என்று கூறுவது தவறு. நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல. அரசியல் ரீதியானது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன். பேச்சுவார்த்தைக்குப்பின் எனது படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி”, இவ்வாறு பேசினார்[12].

© வேதபிரகாஷ்

07-11-2015

[1] தினமலர், டபுள்தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள், நவம்பர்.7, 2015:05.03.

[2]  இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.

[3]http://www.dinamani.com/cinema/2015/10/12/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AF%80/article3076224.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1381776

[5]http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D!+-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D&artid=107173&SectionID=143&MainSectionID=143&SectionName=TV&SEO=

[6] தமிள்.பிளிம்.பீட், நான் ராவணனின் பரம ரசிகன்கமல், Published: Friday, August 28, 2009, 14:33 [IST].

[7] http://tamil.filmibeat.com/heroes/28-we-don-even-try-to-realize-our-pride-kamal.html

[8] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமா அரசியல் எனக்கும் தெரியும்! – கமல்ஹாஸன், Posted by: Shankar, Updated: Tuesday, September 2, 2014, 14:41 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-know-cinema-politics-says-kamal-210055.html

[11]  தினமலர், இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி, ஜனவரி.31, 2013.18.13.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=637921&Print=1