ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]
ஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.
- திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].
- யமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].
- ஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].
- நீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].
- தன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக கூறினார் [24-25].
மேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.
ஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை!
சக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர் – யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.
புராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன?[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.
எதிர்மறைத்துவம், வில்லன்–வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.
ஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜைன-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.
© வேதபிரகாஷ்
08-09-2018
[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
- M. Sanyal, The Srimad Bhagavatam of Krishna-Dwaipayana Vyasa, Munshiram Manohrlal Publishers, New Delhi, Vol.II, Chapt.XXII, pp. 90-94
[2] Ravi Gupta and Kenneth Valpey (2013), The Bhagavata Purana, Columbia University Press, , pp. 151-155.
[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்–பெண் உறவு, பாச–பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].
[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-and-hindus-cannot-contradict/