Archive for the ‘பீப்’ Category

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)?

நவம்பர் 8, 2015

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும்இந்தியஇந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)?

Kapil Sibal appeared to oppose Deepavali crackers

Kapil Sibal appeared to oppose Deepavali crackers

கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே? காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.

abhishek Manu Singhvi appeared to oppose Deepavali crackers

abhishek Manu Singhvi appeared to oppose Deepavali crackers

பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாதுஉச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.

Kapil Sibal and Promila Sibal - Promila operates a slaughter house and exports to China.

Kapil Sibal and Promila Sibal – Promila operates a slaughter house and exports to China.

கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி?: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது

Kapil sibal business interests - Companies etc

Kapil sibal business interests – Companies etc

தீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்?: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா? மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.

I want beef, but no crackers

I want beef, but no crackers

தமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள  உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்லைன்  வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோஉண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக  அரசு  அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த  கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக  தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்?

© வேதபிரகாஷ்

08-11-2015

[1] http://www.business-standard.com/article/news-ians/sc-notice-on-plea-for-banning-firecrackers-during-dussehra-diwali-115100801183_1.html

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article7746160.ece

[3] http://scroll.in/latest/1166/supreme-court-refuses-to-ban-firecrackers-this-diwali

[4] http://timesofindia.indiatimes.com/india/SC-refuses-to-restrict-setting-off-firecrackers-on-Diwali/articleshow/49565004.cms

[5] NDTV, Cracker Ban on Diwali Will Hurt Religious Sentiments, Supreme Court Told, All India | Written by A Vaidyanathan, Updated: October 27, 2015 23:59 IST

[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!, Posted Date : 15:25 (07/11/2015), Last updated : 15:25 (07/11/2015).

[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்?

[8] http://www.vikatan.com/news/article.php?aid=54812

Advertisements

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

நவம்பர் 7, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

Pothys Kamal Hassan ad

Pothys Kamal Hassan ad

கமலும், தீபாவளியும், போத்தீஸ் விளம்பரமும் (அக்டோபர்-நவம்பர்.2015): “என்னத்தான் வருசா வருசம் வயசு ஏறிக்கிட்டே போனாலும், தீபாவளி அன்னிக்கு எனக்கு வயசு பத்து தாங்க. புது ரிலீஸ் படம் காட்டிலும் டமால் டுமீல்னு பட்டாசு எல்லாம் வெடிக்கிறாங்க. ஜாலியாக டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கலாம், ஆனா, ஸ்வீட் சாப்பிடனும். உம்என்னத்தா வருசம் முழுவதும் நினச்சப்ப எல்லாம் புது டிரஸ் எடுத்தாலும், இந்த தீபாவளி டிரஸை யாரும் மறக்க முடியுமா சொல்லுங்க. அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய எங்கு எடுப்போம்? நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே?”, என்று சொல்லிக் கொண்டே ராக்கெட் விடுகிறார் கமல். “திபூஸ் போதிஸ், இது மக்கள் போத்தீஸ்”, என்று பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதாங்க கமலின் தீபாவளி புரமோஷன் அட் பிளிம்[1], அதாவது தீபாவளி வியாபாரத்தைப் பெருக்க எடுத்த ஒரு விளம்பரப்படம். இது எப்படி எடுத்தனர் என்பதை விளக்கும் விடியோவும் உள்ளது[2]. இப்பொழுது பட்டாசு வெடிக்காதே என்று பிரச்சாரம் நடக்கும் நிலையில், இந்த விளம்பரப்படமே தமாஷாகத்தான் இருக்கிறது. இருப்பினும், உலக மகா நாயகன் நடித்தது என்று கவனித்தில் கொள்ளவேண்டும். இதனால், தீபாவளியை அந்த நாத்திகன் ஏற்றுக் கொண்டதாக ஆகாது. இதனை விளம்பர விபச்சாரம், வர்த்த வேசித்தனம், வியாபாரப் பரத்தைத்தனம் என்பதா என்று நுகர்வோர் தான் தீர்மானிக்க வேண்டும்[3].

Pothys Kamal Hassan AD.2

Pothys Kamal Hassan AD.2

வாங்கிய பணத்தை நல்ல காரியத்திற்குக் கொடுத்தார்: இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[4]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்.

No crackers campaign for Deepavali

No crackers campaign for Deepavali

தீபாவளியை வெறுக்கும் கமல் செய்யும் பரித்துரை மூலம் நுகர்வோர் பயன் பெறுவார்களா?: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா? தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா? “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா? சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா? கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள்? எதை வாங்கினாலும், அதன் தரத்தை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா? எதிர்விளைவுகளினால், பின் விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பதை பகுத்தறிவா தீர்மானிக்கும்.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

படபிடிப்பு எடுக்க அனுமதி கேட்க மடத்துள் நுழைந்த நாத்திகன் கமல் (செப்டம்பர். 2014): கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6] என்றது தினமலர். மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[7]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[8]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்க விஜயம்: நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ? என்று பலர் கேள்வி எழுப்பினர். கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார். உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும் என்றார்[9]. இப்படியெல்லாம் மழுப்பினாலும், வியாபார ரீதியில் ஒப்புக்கொண்டார்கள் என்றாகிறது அவ்வளவுதான். சூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதெல்லாம் போலித்தனமானது.

I want beef, but no crackers

I want beef, but no crackers

கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!: இதை விமர்சித்து, ஒரு பதிவு உள்ளது, “அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது[10]. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சரிஅது இருக்கட்டும்இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன. ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்”, என்ற அப்பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.[11]. இவ்வாறான உள்ளூர் பழக்க-வழக்கக்கள் இருக்கின்றன என்றால், அவை பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மீறி இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்றால், அது இந்துக்களின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

07-11-2015

[1] https://www.youtube.com/watch?v=Wg4u0xcqQBU

[2] https://www.youtube.com/watch?v=jDdUDDY4lC8

[3] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.

[4] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/holy-books-say-brahmins-ate-beef-says-kamal-hassan-225248.html

[6] தினமலர், நெற்றியில் விபூதி பட்டையுடன் மடாதிபதியை சந்தித்தார் கமல்!, செப்டம்பர்.4, 2014.08.17. PM IST.

[7] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[8] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[9] http://cinema.maalaimalar.com/2014/09/03125909/kamal-change-to-aanmeegam.html

[10] தமிழ்.நியூௐ.டிவி, கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!, On 9/05/2014 10:05:00 AM by Abdul Farook in Break, Tirunelveli.   

[11] http://tamilnadunewstv.blogspot.in/2014/09/blog-post_377.html