தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)?
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே? காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.
பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி?: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது
தீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்?: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா? மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.
தமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்?
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.business-standard.com/article/news-ians/sc-notice-on-plea-for-banning-firecrackers-during-dussehra-diwali-115100801183_1.html
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article7746160.ece
[3] http://scroll.in/latest/1166/supreme-court-refuses-to-ban-firecrackers-this-diwali
[4] http://timesofindia.indiatimes.com/india/SC-refuses-to-restrict-setting-off-firecrackers-on-Diwali/articleshow/49565004.cms
[5] NDTV, Cracker Ban on Diwali Will Hurt Religious Sentiments, Supreme Court Told, All India | Written by A Vaidyanathan, Updated: October 27, 2015 23:59 IST
[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!, Posted Date : 15:25 (07/11/2015), Last updated : 15:25 (07/11/2015).
[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்?