குடித்து–கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)!
“பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டம்: பிப்ரவரி 4, 2009 அன்று வேலன்டைன் கொண்டாட்டத்தையும் எதிர்ப்பதாக, புத்தாலிக் அறிவித்த போது, நிஷா சூஸன் என்ற டெஹல்காவின் நிருபர், “பிங்க் ஜட்டி” பிரச்சாரம் என்று ஆரம்பித்து வைத்தார். அதாவது, போராட்டம் மூலம் பெண்களின் ஜட்டி, கீழுள்ளாடைகளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கும் போராட்டமும் நடத்தப் பட்டது! ஆனால், இதே பெண்பணி, தர்ண் தேஜ்பால், பாலியல் வக்கிரத்தில் கைதானபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இதிலும் பாரம்பரிய பெண்கள் எதிர்ப்புத் தெர்விக்கவில்லை என்றாலும், தங்களது மறுப்பை வெளிப்படுத்தினர். ரேணுகா அம்மையாரின் தவப்புதல்வி தேஜஸ்வினி தான், கொரியர் மூலம் “பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்று சில ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஒருவேளை 2009 தேர்தல் ஆண்டு என்பதனால், இப்பிரச்சினை பெரிதாக்கப்பட்டது போல தெரிகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.
12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டது[1]: 12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து [குடித்த இளசுகளை அடித்த] விடுவிக்கப் பட்டனர்[2]. மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளுள் ஒருத்தி கூட புகார் கொடுக்கவில்லை, சாட்சி சொல்ல வரவில்லை[3]. வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரையும் அறிவித்ததாக அறிவித்தார்[4]. குற்றம் சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல், எவ்வாறு அவர்கள் வேண்டுமென்றே, சம்பந்தமில்லாத சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார்[5].
Section 120B – குற்றம் செய்ய வேண்டும் என்ற சதி திட்டம் தீட்டியது, குறிப்பிட்ட குற்றத்தை செய்ய வேண்டும் என்று கூடியது.
Section 143 – சட்ட விரோதமாக கூடியது.
Section 147 – கலவரத்தை உண்டாக்கியது
Section 323 – வேண்டுமென்றே தாக்கியது.
Section 341 – சட்டத்திற்குப் புறம்பாக தடுத்தது.
Section 342 – சட்டத்திற்குப் புறம்பாக பிடித்து வைத்தது.
Section 448 – வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.
Section 505 (2) – இரு பிரிவுகளுக்குள் விரோதம், வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுவது.
Section 506 – குற்றம் செய்யும் வகையில் மிரட்டுவது.
இப்படியெல்லான் வழக்கு தொடுத்தாலும், நடந்தவை எல்லாமே வீடியோக்களில் உள்ளன. போதாகுறைக்கு, பாதிக்கப் பட்டதாகக் கூறப்படும், எந்த பெண்ணும் புகார் கொடுக்கவில்லை[6].
காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள்: நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர், “எனது எதிரிகைளை நான் நன்றாக அறிவேன். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள். இவர்கள் எனக்கு எதிராக இயங்குபவர்கள். ஆனால் தற்போது எனக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் எனது சொந்த மக்களை நினைத்து நான் கவலை கொள்கிறேன். இவர்கள் முதுகில் குத்துவதில் தேர்ந்தவர்கள். பிரவின் தொகாடியாவிற்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்[7]. ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக குறை கூறிய முதாலிக், “கர்நாடக மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பெந்தேவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செத்தார் மற்றும் எம்.பி.ப்ராஹ்லத் ஜோஷியின் ஆதரவு உள்ளது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் நான் இருப்பதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்[8]. மேலும், “என்னுடைய மக்களே என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னுடைய புகழ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் கவலையடைந்துள்ளேன். அவர்களுக்கு யாரும் பேரும் புகழும் அடைவது பிடிக்காது. அவர்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் பலவற்றை சாதித்துள்ளேன். அவர்கள் இல்லாமலும் நான் பலவற்றை சாதித்துள்ளேன். இதனாலேயே நான் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற கட்டாயப் படுத்தப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை: இன்னும், தனது 40 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வீனாக்கிவிட்டதாகவும், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் இல் உள்ளதாகவும் ஆனால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்து ஒற்றுமையை எவ்வாறு அடைவார்கள், என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தும் இந்துத்வாவில் தனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராம் சேனா அமைப்பை தொடங்குவதற்கு முன் கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் கர்நாடக மாநில சிவ சேனா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதோடு வர இருக்கும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்டு பாஜகவிற்கு தகுந்த பாடம் கற்பிக்க போவதாக அறிவித்திருந்தார்[10]. இந்நிலையில் முதாலிக் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது குறித்து கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.
இப்பொழுதும் அரசியல் மயமாக்க செய்யப்படும் முயற்சிகள்: மேலே குறிப்பிட்ட படி, இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுருத்தப்படுகிறது. இப்பிரச்சினை பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்ற திரிபுவாதமும் வைக்கப் படுகிறது[11]. தீர்ப்பு அரிராம் சேனையின் சட்டவிரோதமான செயலை நியாயப்படுத்தியுள்ளது, மற்றும், பிஜேபுக்கு ஆதரவாக உள்ளது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[12]. சங்கப் பரிவார் என்று சொன்னாலும், முத்தாலிக் மற்றும் பிஜேபிக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் திகைக்க வைக்கின்றன. 2009ல் நிர்மலா வெங்கடேஷ் காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. 2014ல் முத்தாலிக் பிஜேபியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக விலக்கப்பட்டார். இப்பொழுது 2018-19களில் என்னாகும் என்று நோக்கத் தக்கது.
© வேதபிரகாஷ்
13-03-2018
[1] Times of India, Pub attack: Police took a year to file chargesheet, TNN | Mar 13, 2018, 08:54 IST.
[2] NDTV, Sri Ram Sene’s Pramod Muthalik Acquitted In 2009 Mangalore Pub Attack Case, Reported by Nehal Kidwai, Edited by Deepshikha Ghosh | Updated: March 12, 2018 18:51 IST
[3] https://www.ndtv.com/karnataka-news/sri-ram-senes-pramod-muthalik-acquitted-in-2009-mangalore-pub-attack-case-1822876
[4] News18, Mangalore Pub Attack Case: Pramod Muthalik, 30 Others of Sri Ram Sene Walk Free Due to ‘Lack of Evidence’, Updated:March 12, 2018, 6:32 PM IST
[5] https://www.news18.com/news/india/mangalore-pub-attack-case-pramod-muthalik-30-others-of-sri-ram-sene-walk-free-due-to-lack-of-evidence-1686951.html
[6] https://timesofindia.indiatimes.com/city/mangaluru/pub-attack-police-took-a-year-to-file-chargesheet/articleshow/63278925.cms
[7] தினமலர், ‘என் உயிருக்கு ஆபத்து‘ முத்தாலிக் அலறல், Added : ஜன 20, 2018 22:35
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1942558
[9] புதிய தலைமுறை, தொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக், By Wafiq Sha, January 20, 2018
[10]http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/
[11] The First Post, Verdict on 2009 Mangaluru pub attack legitimises Pramod Muthalik’s Sri Ram Sene: Acquittal could benefit BJP ,TS Sudhir Mar 13, 2018 14:24:15 IST; Published Date: Mar 13, 2018 12:28 PM | Updated Date: Mar 13, 2018 14:24 PM.
[12] http://www.firstpost.com/india/verdict-on-2009-mangalore-pub-attack-legitimises-pramod-muthaliks-sri-ram-sene-acquittal-could-prove-advantageous-for-bjp-4387699.html