Archive for the ‘நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிப்பு’ Category

இந்து முன்னணியே, ஓடாதே – நில்! இப்படி கத்துவது திக!

ஜூலை 11, 2010

இந்து முன்னணியே, ஓடாதே – நில்! இப்படி கத்துவது திக!

கரூரில் இந்து முன்னணியின் வாலாட்-டத்தால் – திராவிடர் கழகத்தின் மண்-டல மாநாடு ஒன்றை ஈரம் காய்வதற்குள் நடத்தும்படி நேர்ந்தது.

செம்மொழி மாநாட்டு விளம்பரப் பதாகையைக் கிழித்து தங்களின் தமிழ் வேஷத்தினை துல்லியமாகக் காட்டிவிட்டனர். கலைஞரின் உருவப்படத்தைக் சிதைத்ததன் மூலம் தங்களின் ஜென்ம விரோதத்தனத்தை விளம்பரப் படுத்திக்கொண்டனர்.

மாநாட்டில் அவர்கள் போட்ட காட்டுக் கூச்சல் கரூர் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து திராவிடர் கழகத் தலைவர் கரூரில் திராவிடர் கழக மண்டல மாநாடு என்று வெளியிட்ட அறிவிப்பு கரூர் மக்களைக் களிப்படையச் செய்துவிட்டது.

கடந்த செவ்வாயன்று (6-.7-.2010) கரூரைச் சிறுக்கச் செய்து கருஞ்சட்டைக் கடல் பெருக்கெடுத்து ஓடியது. கருஞ்சட்டைச் சேனை பெருத்தது – கரூர் சிறுத்தது. ஆத்திரம் வராதோ ஆரியக் கும்பலுக்கு? எரிச்சல் முட்டாதா இந்து முன்னணிக் கூட்டத்துக்கு?

கழக மாநாடு நடக்குமுன் கரூர் இந்து முன்னணியினர் சில வினாக்களைத் துண்டு வெளியீடுகள் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் எழுப்பியிருந்தனர்.

வினாக்கணைகள்தானே கருஞ்சட்டைச் சேனைக்கு விருப்பமான உணவு? எதிர்ப்புதானே எங்களுக்கு இன்பத் தேனிலா?

இந்து முன்னணி எழுப்பிய வினாக்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்-டில் பதில்களைக் கூறிவிட்டார் என்று தினமணி (9.-7.-2010) மரியாதையாக ஒப்புக் கொண்டிருக்கிறது – அதனைப் பாராட்டலாம்தான்!

இந்து முன்னணியினர் புதியதாக சில வினாக்-களை எழுப்பியதாக அதே தினமணி வெளியிட்டுள்ளது.

(1) காஞ்சி சங்கரமடத் தலை-வராக தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்பொழுது தி.க.விலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கர மடம் பிராமணர்-களாலும், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்-களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்-களாலும், கோவிலூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்-கப்படுகிறது. இவ்வாறு சமுதாய-வாரியாக மடங்கள் உள்ளன.

தி.க. கடவுள் மறுப்பு இயக்-கமாக இருந்து வந்ததா? இல்லை, ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டு-கோளுடன் கூடிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இதன் மூலம் காஞ்சி சங்கர மடம் பிராமணர்-களுக்கு மட்-டும், பிராமணர்களால் தோற்று-விக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்கு வேண்டுமானால் கரூர் இந்து முன்னணியினரை ஒரு முறை கைதட்டிப் பாராட்டலாம்.

காஞ்சி மடம் என்பது பார்ப்பனர்களின் மடம்- பார்ப்-பனர்களுக்காகவே உள்ள மடம். சூத்திர பஞ்சம தமிழர்-களே, அங்கு ஏன் செல்-கிறீர்கள்? அவர்களின் கால்-களில் ஏன் மண்டியிடுகிறீர்கள்? ஏன் காணிக்கையைக் கொட்டு-கிறீர்கள்.

சங்கர மடத்தினால் நிறு-வப்பட்ட அத்தனை அறக்-கட்டளைகளும் பார்ப்பனர்-களுக்காகத்தான் _ அத்தனை உதவிகளும், சலுகைகளும். சமாராதனைகளும் பார்ப்-பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டுவதற்குத்தான் என்று திராவிடர் கழகம் சொல்லும் பொழுதெல்லாம் – எழுதும்-போதெல்லாம் – இது குறுகிய கண்ணோட்டம், பிராமணத் துவேஷம் என்று சொல்லி வந்ததெல்லாம் பசப்பு வார்த்தைகள்; பகட்டு வார்த்தைகள் என்பது புரியவில்லையா? கரூர் கொடுத்த அடியில், தமிழர் தலைவர் மான-மிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த சாட்டை-யடியில் விழி பிதுங்கி, மண்டைக் காய்ந்து, மளமளவென்று உண்மைச் சரக்கை ஊரறிய உலகறிய உளறிக் கொட்டி விட்டது. இது சங்கர மடத்துக்கும், சங்கர மடப் பக்தர்களுக்கும் மறை-விடத்தில் தேள் கொட்-டியது போன்றதுதான். இந்து முன்னணி வகையறாக்களுக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்று செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

இனி சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லப்படுவதற்கு அவர் அருகதை உடையவர்தானா?

இனி கண்டிப்பாக அழுத்தம் திருத்தமாக ஜெகத்குரு என்று சொல்லுவதை வாபஸ் வாங்கிக் கொண்டு, பார்ப்பன குரு என்றுதான் அழைக்க வேண்டும். ஏன் என்றால் இந்து முன்னணியே ஒப்புக் கொண்டுவிட்டது – சங்கர மடம் பார்ப்-பனர்களுக்கானது என்று. அவாள் அவாளை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் – தாராளமாக தூக்கிச் சுமக்கட்டும் -_- சுயமரியாதைக்காரர்கள் அப்பொழுது கண்டிப்பாக குறுக்கிடவே மாட்டார்கள் _- மாட்டவே மாட்டார்கள். அப்பொழுதும் கூட பார்ப்பன குரு என்று அழைக்க-வேண்டுமே தவிர பிராமணக் குரு என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் பார்ப்-பனர் அல்லாத எங்களை சூத்திரர்கள் என்று மறை-முகமாக அழைப்பதாகப் பொருள்படும். அதன் காரண-மாக சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்ற முழக்கம் எங்களை உசுப்பிவிடும்.

இன்னொன்றும் இருக்-கிறது. இந்துக்களின் தலைவர் சங்கராச்சாரியார் என்றும் குறிப்பிடக்கூடாது; இந்துக்-களே ஒன்று சேர்வீர் என்று அழைப்பு கொடுக்கும் யோக்-கியதையும் அவாளுக்குக் கிடை-யவே கிடையாது; வேண்டுமா-னால் பார்ப்பனர்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பிட்டுத் தொலையட்டும்!

இனிமேல் சைவக் கோயில்களில் குடமுழுக்கு செய்ய சங்கராச்சாரி-யார்கள் வரக்கூடாது. அப்படி ஒரு தடைச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். சைவர்கள் வேறு – பார்ப்-பனர்கள் வேறு என்பதை ஆயிரம் ஆயிரம் எடுத்துக் காட்டுகளுடன் தமிழ-ரான _ சைவ மெய்யன்பரான, தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என அழைக்கப்பட்ட கா.சு.பிள்ளை போன்றவர்கள் கறாராகவே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இனிமேல் சங்கராச்சாரியார் உபந்நியாசம் செய்ய வேண்டுமானால் பார்ப்பனர் வட்டத்துக்குள் தான் சுருங்கிக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனர் அல்லாதாரை வளைக்கும் அயோக்கியத் தனத்தில் ஈடுபடக்கூடாது – அதற்கான அடிப்படைத் தகுதி அவர்களுக்குக் கிடையாது என்பதை இந்து முன்னணி தினமணி வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு விட்டது.

திராவிடர் கழகத்துக்குத் தலித் ஒருவர் தலைவராக வருவதில் எந்த விதத் தடையும் கிடையாது. தலித் வரக்கூடாது என்ற விதிகளும் இல்லை.

இயக்கத்தின் கொள்கைகளில் தோய்ந்து, இயக்கத்திற்காகப் பாடுபடும் இயக்கத் தோழர்களின் மதிப்பைப் பெறும் எந்தத் தலித்தும் திராவிடர் கழகத்தின் தலைவராக வருவதில் தடையில்லை. கழகப் பொறுப்புகள் என்பது வேலை வாய்ப்பு அலுவல-கமும் அல்ல -_ இடஒதுக்கீடு சுழற்சி முறைக்கு. தொண்டு செய்வதற்குரிய துல்லியமான இடம்.

பார்ப்பனர்கள் கழகத்தில் உறுப்பிரான முடியவே முடியாது. கழகத்தில் உறுப்பினராகும் எவரும் அதன் தலைமையிடத்துக்கு வர வாய்ப்பு இருக்கும் போது திராவிடர் கழகத்திற்குத் தலித் தலைவர் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம் என்பது எதிரிகளும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். இதில் ஜாதிப் பிரச்சினையைத் திணிக்கப் பார்ப்பது பரிதாபத்திற்குரியது.

தலித் ஒருவர் திராவிடர் கழகத்-திற்குத் தலைவராக வருவதற்குத் தடையில்லை என்பது போல, சங்கர மடத்திற்கு அப்படி ஒரு விதி _- சம்பிரதாயம் உண்டா – இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் தேவை.

(2) கடவுள் இல்லை என்பதை மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சி-யினரைத் தேர்தலில் போட்டி-யிடும்போது கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும், கடவுள் நம்பிக்கை உள்ள-வர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறமுடியுமா என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி கூறுகிறது. இது தேர்தலில் நிற்கக் கூடியவர்-களைப் பார்த்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

இன்னொன்று, – தேர்தல் என்பது கடவுள் உண்டா -இல்லையா என்பதற்-காக நடத்தப்படுவது அல்ல. – ஆட்சியை அமைப்பதில் அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்து-கின்றன. அங்கே அரசியலைப் பார்க்-கிறார்களே தவிர ஆன்மிகவாதிகளா, நாத்திகர்களா என்று பார்ப்பதில்லை. அரசியல் கட்சிகளில் ஆன்மிகவாதி-களும் உண்டு. நாத்திகவாதிகளும் உண்டு. அப்படி இருக்கும் போது அரசி-யல் கட்சிகள் இதனை முன்னிறுத்த வாய்ப்பே கிடையாது.

அதே நேரத்தில் இந்து முன்னணி-யினர் கவனத்தை 1971-_ஆம் ஆண்டிற்கு இழுத்துப் போக வேண்டியதுதான்.

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி – பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வ-லத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.

அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பா லடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்-டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனை-யும் பிரார்த்தித்தது தினமணி -_- தி.மு.க. தோற்க வேண்டுமாம்

முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக் கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடு கள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.

இந்து முன்னணியே! இந்து முன்-னணியே! இதற்கு என்ன பதில் சொல்-கிறாய்?

ஆஸ்திகம் – நாஸ்திகத்தை முன்னி-றுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ் திகம் வென்றுவிட்டதே – _ நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!

Advertisements

கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் கருணாநிதி ஆட்சியா?

ஜூலை 9, 2010

கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் கருணாநிதி ஆட்சியா?

கோயில்களை இடிப்பதை நிறுத்த தமிழக சிவசேனா வலியுறுத்தல்: இந்துக்களுக்கு ஒன்றும் சுரணை இல்லை போலும், எப்பொழுது பார்த்தாலும், இப்படி, சிவசேனா, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி ………..என்றெல்லாம் சொல்லப் படுகின்ற “சங்கப் பரிவார்” தான் இப்படி சொல்லவேண்டும், அதை பாவம், ஏதோ ஒரு பத்திரிக்கையில் செய்தியாக போட வேண்டும் “சென்னையில் சாலைகளை விரிவுப்படுத்துவதாக கூறி கோயில்களை இடிப்பதை நிறுத்த வேண்டும்,” என தமிழக சிவசேனா தலைவர் குமாரராஜா கேட்டு கொண்டார்[1].

சிவசேனாவிற்கு இருக்கும் கோரிக்கைகள் அதிகமாகவே உள்ளன: மதுரையில் அவர் கூறியதாவது: “ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ரோடுகளை விரிவுப்படுத்தும் போது கோயில்களை இடிக்க நேரிட்டால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். பின், கோயிலுக்கு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இதை கண்டித்து சென்னையில் ஜூலை 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் மத பிரசாரம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அத்தகைய நோட்டுக்களை பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்”, என்றார். இதிலிருந்து தெரிவதாவது, இப்படி  பல கோரிக்கைகள் வைத்துக் கொண்டு, இவர்கள் இந்துக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை? ஏற்கெனவே பல கோவில்கள் இடித்து முடித்துள்ள நிலையில் அப்பொழுது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும் தெரியவில்லை.

அறநிலைய துறை கோயிலில் மோசடி : எச்.ராஜா குற்றச்சாட்டு[2]: “காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 10 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். அவர் கூறியதாவது: “கோயில் அறங்காவலர் குழு தலைவராக, 2009 பிப் 23 முதல் 2010 பிப்., 22 ம் தேதி வரை, சுந்தரம் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். பிப்., 22 ம் ததி அவருடைய பதவி காலாவதியானது. மே 15 ம் தேதி முதல், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மது அருந்தி கோயிலுக்கு வருவதால், அவர் இதுவரை பதவியேற்கவில்லை. மே 15ம் தேதிக்குள் நான்கு வங்கி “செக்’ மூலம், கோயில் கணக்கில் இருந்து, 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. “செக்’ ல் கையெழுத்து போடும் அதிகாரம் அறங்காவலர் குழு தலைவருக்கு மட்டுமே உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியான நிலையில், வங்கி கணக்கில் பணம் எடுக்க அதிகாரிகள் அனுமதித்தது தவறு; 10 லட்ச ரூபாயை கோயிலில் ஒப்படைக்க வேண்டும். தனி நபர் ஒழுக்கம் இல்லாத நபர்களை அறங்காவலர் குழுவில் நியமிக்க கூடாது. அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், பா.ஜ., போராடும் என்றார்.

இந்துக்களுக்கு அறிவு எங்கே போயிற்று? இன்னும் எத்தனை காலம் தாம் இந்துக்கள் இப்படி இருப்பார்கள், இந்துக்களை இப்படி ஏமாற்றி வருவார்கள், அவர்களும் சினிமா, கிரிக்கெட் பார்த்துக் கொண்டு கிடப்பார்கள் என்று தெரியவில்லை. ஐராவதமஹாதேவன் அய்யர், வைத்தியநாத ஐயர் என்றெல்லாம் செம்மொழி மாநாட்டில் இருந்தார்களே என்று ஒப்பாரி வைக்க, இன்னொரு ஐயரை வைத்துக் கொண்டே, வேறொரு ஐயரை திட்டவைத்து விட்டார்கள். பாவ, எல்லொரும் தங்களது அப்ளிகேஷன்களில் / விண்ணப்பங்களில் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் “இந்து” என்று தான் போட்டுக் கொள்கிறார்கள். அப்பொழுதே சாப்படு சாப்பிடும் ரோசமுள்ள இந்துவாக இருந்திருந்தால், “ஏன்னயா கலைஞரே, இப்படி செய்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம் என்று, இந்த ஐயர்கள் எல்லாம் கேட்டிருக்க வேண்டாமா? ஐயர்கள் கேட்க வேண்டும் எம்பதில்லை மற்ற இந்துக்களுக்கு எங்ஏ சுரணை போயிற்று?

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 22 கோயில்களை இடிக்க பரிந்துரை[3]: சென்னையில் போக்கு-வரத்துக்கு இடையூறாக இருக்கும் 22 கோயில்-களை இடித்துத் தள்ளும்-படி காவல்துறையினர், மாநகராட்சிக்குப் பரிந்-துரை செய்துள்ளனர். சென்னையில் குறுக-லாக உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்-று-வதன்மூலம் அவற்றை அகலப்படுத்தி வருகிறார்-கள். அந்த வகையில் போக்குவரத்துக்கு இடை-யூறாக உள்ள சாலை-யோர கோயில்களை இடித்துத் தள்ளும்படி, போக்குவரத்து காவல்-துறையினர் மாநகராட்-சிக்குப் பரிந்துரை செய்-துள்ளனர். போக்குவரத்-துக் காவலர்கள் மொத்-தம் 38 கோயில்களை இடிக்கும்படி பரிந்துரை செய்திருந்தனர். அவற்றில் 16 கோயில்கள் ஏற்கெ-னவே இடிக்கப்பட்டு விட்டன.

இடிக்கும்படி பரிந்-துரை செய்யப்பட்டுள்ள பட்-டியலில் உள்ள மேலும் 22 கோயில்கள் விவரம் வருமாறு:-

1. என்.எஸ்.சி. போஸ் சாலை உயர்நீதிமன்ற ஆவின் கேட் அருகே உள்ள நீதிகருமாரி அம்மன் கோவில்.

2.என்.எஸ்.சி. போஸ் சாலை -ஆர்மேனியன் தெரு சந்திப்பில் உள்ள அம்மன் கோயில்.

3. எம்.எஸ்.கோவில் தெரு விநாயகர் கோயில் (என்.1 காவல் நிலையம் எதிரில்).

4. ஈவ்னிங் பஜார் சாலை பியா கடை அருகே உள்ள கோயில்.

5. தங்கசாலை தெரு, மின்ட் பிரஸ் அருகில் உள்ள கோயில்.

6. 100 அடி சாலை அம்பத்தூர் எஸ்டேட் சாலை சந்திப்பு பிள்ளை-யார் கோயில்.

7. அண்ணாசாலை- இளங்காளி அம்மன் கோயில் (சைதாப்-பேட்டை காவல் நிலையம் எதிரே)

8. கோடம்பாக்கம் பாளையக்காரன் தெரு விநாயகர் கோயில்.

9. அப்புசாலி தெரு கருமாரியம்மன் கோயில்.

10. கோடம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு கோயில்.

11. 3 ஆ-வது அவென் மாரியம்மன் கோயில்.

12. அசோக்நகர் 11- ஆவது அவென்யூ விநாய-கர் கோயில்.

13. மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோயில் தெரு அம்மன் கோயில்.

14. கலைஞர் கருணா-நிதி நகர். பிள்ளையார் கோவில் தெரு கோயில்.

15. வள்ளுவர் தெரு கங்கையம்மன் கோயில்.

16. லாயிட்ஸ் சாலை சார்ஜா பவன் டிரஸ்ட் அருகே உள்ள கோயில்.

17. காந்தி நகர் 1- ஆவது குறுக்கு தெரு சுந்தரவிநாயகர் கோயில்.

18. எல்லையம்மன் கோவில் தெரு, குல்கர்னி சாலை சந்திப்பு கோயில்.

19. சாஸ்திரிநகர் 1- ஆவது அவென்யூ சாலை, ஜீவரத்தினம் நகர் சந்-திப்பு யோகேஸ்வரர் கோயில்.

20. ஈ.சி. சாலை வடக்கு மாட தெரு சந்-திப்பு வால்மீகி கோயில்.

21. வால்மிகி தெரு, திருவள்ளுவர் சாலை சந்-திப்பு பெருமாள் கோயில்.

22. டி.டி.கே. சாலை, கே.பி.தாசன் சாலை சந்திப்பு கோயில்.

உச்சநீதிமன்ற உத்தர-வுப்படி இந்த நடவ-டிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரி-வித்தனர்[4].

கோயம்புத்தூரில் பெருமாள் கோவில் இடிப்பு (ஜூலை 16, 2010)[5]: ரோட்டின் ஓரத்தில் அமைந்திருந்த பெருமாள் கோவிலை நேற்று மாநகராட்சியினர் இடித்து தள்ளினர். கோவை வடவள்ளி, பி.என்.புதூர் ரோட்டின் ஓரத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக, இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டது இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட, வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தாராபுரம் ரோட்டில் ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக மாகாளியம்மன் கோவில் இடிக்கப்பட்டது[6] (ஜூலை 3, 2010). திருப்பூரில் உள்ள முக்கிய ரோடுகளில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, ரோடு விரிவு செய்யப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் ஒரு மாதமாக ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த மாகாளியம்மன் கோவில் நேற்று இடிக்கப்பட்டது.ரோட்டோரத்தை ஆக்கிரமித்திருந்த இக்கோவிலை அகற்ற வேண்டிய அவசியத்தை, கோவில் நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 10 நாட்களுக்கு முன்பே கோவிலில் இருந்த விநாயகர், மாகாளியம்மன் உள்ளிட்ட சிலைகள், பூஜை செய்யப்பட்டு அகற்றப்பட்டன. அதே பகுதியில், வேறொரு இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (தெற்கு) வத்சலா வித்யானந்தி, உதவி பொறியாளர் பாலுமணி தலைமையில், சாலை பணியாளர்கள், கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் இடிக்கும் பணிக்காக மூன்று பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தெற்கு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உறையூரில் பழமையான சாலை பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டது[7]: திருச்சி உறையூரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த பழமையான சாலை பிள்ளையார் கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் போக்குவரத்து வசதி அதிகரிக்க சாலைகளை அகலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக மாநகரில் ரோட்டின் ஓரத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வழிபாட்டுதலங்களை மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியை செய்து வருகிறது. நேற்று உறையூரில் கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் சாலை பிள்ளையார் கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவிலை இடிக்க துவங்கும் முன் பக்தர்களே அங்கிருந்த பிள்ளையார் சிலையை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அதே பகுதியில் இருந்த மற்றொரு பிள்ளையார் கோவிலையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்தனர். இதையொட்டி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆவடியில் விநாயகர் கோவில் இடிப்பு (ஜூன் 30, 2010)[8]: ஆவடி புதிய ராணுவ சாலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுசாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நீண்ட காலமாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்கத்துக்காக இந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் மதியழகன் முன்னிலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக் கப்பட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

திருச்சியில் மூன்று கோவில்கள் இடிப்பு (ஜூன் 19, 2010)[9]:திருச்சி மாநகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று கோவில்கள் நேற்று இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மூலம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. அந்த நிதி மூலம் மாநகரில் உள்ள சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிதி கிடைத்தவுடன் மாநகரில் சாலை வசதியை மேம்படுத்த வசதியாக மாநகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளில் உள்ள கோவில்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் அரசுடன் கலந்து பேசி, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்களை அகற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த இந்து கோவில்களும், பாலக்கரை, மலைக்கோட்டை வாசல் பகுதியில் இருந்த முஸ்லீம் வழிபாட்டு தலங்களும் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று காலை  பொன்னகரில் உள்ள ஸ்ரீ வரப்பிரசாத செல்வ விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சி அதிகாரிகள்  கோவிலை இடிக்க பொக்லின் இயந்திரத்துடன் வந்தபோது, அந்த பகுதி மக்கள் கோவிலை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் சமாதானப்படுத்தி சாலைமறியலை கைவிட வைத்தனர். அதன்பின் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. தென்னூர் மற்றும் புத்தூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆஞ்சனேயர் கோவில்களை, அதை நிர்வகித்து வந்தவர்களே தாமாக முன்வந்து அகற்றிக் கொண்டனர். நேற்று மாநகராட்சியால் மூன்று கோவில்கள் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு[10] (மே 14, 2010)! செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நூறாண்டுகளுக்கு மேலான கோவில்கள் எனும்போது, கோவில்கள் முன்னமே உள்ளன, இப்பொழுதைய சாலைகள் தாம், புதிதாக வருகின்றன என்றாகிறது. ஆகவே, உள்ள கோவில்களைக் குறைச் சொல்வதா, புதிதாக / பின் வந்த சாலைகளைக் குறைச் சொல்வதா?

‘‘ஆத்தா சும்மா இருக்க மாட்டா..!’’ ஈரோடு மாரியம்மன் கோவில்: மக்கள் போராட்டத்தில் தப்பியது (மே-ஜூன், 2010): ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம் பணி நடக்கிறது. மேம்பால பணியால் பெரிய மாரியம்மன் கோவிலில் 15 அடி தூரம் வரை இடிக்கப்படுவதாக நெஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரிய மாரியம்மன் கோவிலை இடிக்க கூடாது என்றும், பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரியும், 80 அடி சாலையை திறக்க கோரியும், பெரியமாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் போராடி வருகின்றனர்[11]. மக்கல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்[12].

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுப்ரமணியர் சன்னிதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது (மே 2010)[13]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னிதி, கும்பாபிஷேகம் செய்யப்போவதாகக் கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்றாண்டுகள் (அப்படியென்றால் 2007ல் இடிக்கப்பட்டதா?) ஆகியும் கட்டப்படவில்லை. பூஜை கூட நடத்தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என கடலூர் கலெக்டரிடம் தீட்சிதர் புகார் தெரிவித்துள்ளதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வெக்காளியம்மன் கோயில் இடிப்பு (பிப்ரவரி 9, 2010[14]): பிப்.​ 9:​ திருக்கோவிலூர் அருகே பொது மக்களால் அனுமதியின்றி கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.​ இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது.​ இக் கோயில் நீண்ட காலமாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இக் கோயிலுக்கு அருகில் புதிதாக வெக்காளியம்மன் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்து,​​ அதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன.​  இந்நிலையில் எவ்வித அனுமதியுமின்றி இக் கோயில் கட்டப்படுவதாக ​ இந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் சென்பகவள்ளி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸôரும்,​​ தாசில்தார் பாமா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.​ இவர்கள் முன்னிலையில் அக் கோயில் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. ​ மறியல் அறிவிப்பு:​​ இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை இன்ஸ்பெக்டர்,​​ வருவாயத் துறை மற்றும் காவல்துறையினரை கண்டித்து புதன்கிழமை ​(பிப்.​ 10) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் பல கோவில்கள் மறைந்து விட்டனவாம்[15]!  ஒரு அன்பர் (பெயர் தெரியவில்லை) இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “மதுரையில் கடந்த 2006ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவின் பேரில் பல அனுமதி பெறாத இடங்கள் இடிக்கப்பட்டன, பல கட்சி கொடிகம்பங்களும், மன்றங்களும், வைரம் பாய்ந்த பல மரங்களும், கோவில்களும் தப்பவில்லை. அனுமதி பெறாத இருபது அடி உயர கோபுரங்களை கொண்ட கோவில்களும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. பல ரோட்டு கோவில்கள் உள்தெருவில் தஞ்சம் புகுந்தது. பல கடைகள் தயவில்லாமல் குப்பகள் ஆகப்பட்டன. அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை()ந்து போயின”. இவ்விஷயம் நன்றியுடன் இங்கு சேர்க்கப்படுகிறது.

‘‘ஆத்தா சும்மா இருக்க மாட்டா..!’’: இப்படி மக்கள் கொதித்தெழுந்து சாபமிட்டபோதுதான், அரசியல்வாதிகளுக்கு, நாத்திகர்களுக்கு உறைத்தது போலும். ‘அம்மனுக்கு துரோகம் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சிவலோக பதவி அடையுமாறு பிரார்த்திக்கிறோம்’- என்று இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டியதும், பயந்து விட்டனர், பகுத்தறிவுவாதிகளும், அதிகாரிகளும்.


[1] தினமலர், கோயில்களை இடிப்பதை நிறுத்த தமிழக சிவசேனா வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35312

[2] தினமலர், அறநிலைய துறை கோயிலில் மோசடி : எச்.ராஜா குற்றச்சாட்டு, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35287

[3] விடுதலை,போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 22 கோயில்களை இடிக்க பரிந்துரை, ஜூலை 2, 2010, http://www.viduthalai.periyar.org.in/20100702/news03.html

[4]தினத்தந்தி, ÚTÖehYW†‰eh CÛPï\ÖL C£ப்TRÖL ÙNÁÛ]›¥ 22 Y³TÖy| RXjLÛ[ CzeL T¡‹‰ÛW, ஜூலை 2, 2010,  http://www.dailythanthi.com/article.asp?NewsID=577527&disdate=7/2/2010&advt=2

[5] தினமலர், பெருமாள் கோவில் இடிப்பு,  ஜூலை 17, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=21066

[6]தினமலர், ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக கோவில் இடிப்பு, ஜூலை 03,2010, http://www.dinamalar.com/news_Detail.asp?Id=31140

[7] தினமலர், ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த பிள்ளையார் கோவில் இடிப்பு, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=30219

[8] மாலைமலர், ஆவடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவில் அகற்றம்,  http://www.maalaimalar.com/2010/06/30174717/vinayagar-temple.html

[9] தினமலர், திருச்சியில் 3 கோவில்கள் அகற்றம்: மக்கள் சாலைமறியலால் பரபரப்பு, ஜூன் 20, 2010, http://thinamalar.net/News_Detail.asp?Id=23136

[10] வேதபிரகாஷ், செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு, http://chemozhi.wordpress.com/2010/05/15/செம்மொழி-மாநாட்டிற்காக/

[11] தினமலர், ஈரோட்டில் பந்த்: வீடு வீடாக பிட்நோட்டீஸ், மே20, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=4634

[12] தினகரன்,, மே 23, 2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=6339&id1=4

[13] தினமலர், தரைமட்டமாக்கப்பட்ட கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது : கலெக்டரிடம் தீட்சிதர் புகார், http://thinamalar.net/News_Detail.asp?Id=8851

[14] தினமணி, வெக்காளியம்மன் கோயில் இடிப்பு, பிப்ரவர் 10, 2010, http://www.dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Tamilnadu&artid=194719&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

[15] இந்த பெயர் தெரியாத அன்பருக்கு நன்றி, http://marudhai.blogspot.com/2008/01/2.html