Archive for the ‘தூஷண வேலைகள்’ Category
ஜூன் 30, 2020
ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன? [2]

ஜைன–பௌத்த ராமாயணங்கள் மற்றும் சூப்பனகையின் மகன் சம்புகன்: ஜைன ராமாயணங்களில் மூன்று வகைகள் / புரட்டி மாற்றிய வடிவங்களில் உள்ளன[1].
- விமலசூரி (3rd century BCE and 4th century CE).
- குணபத்ரன் (fl. fourth century CE)
- சம்கதாசன் (fl. fifth century CE)
என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ராமாயணங்களை பாலி, சமஸ்கிருதம், அப்பிரம்ஸா மொழிகளில் எழுதி வைத்தனர். இவையெல்லாமே, “விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா” பாணியில் எழுதப் பட்டவை. ராமனுடைய எதிரிகளான ராவணன், வாலி எல்லோருமே ஜைனர்கள். லக்ஷ்மணன் தான் ஹீரோ, ராமனின் சகோதரி சீதை என்றுதான் உள்ளன. இன்னொரு ஜைன ராமாயணத்தில், ராவணனின் மகள் சீதை என்ற கதையும் எழுதி வைத்தனர். கௌசிக ராமாயணத்தில் வரும் சம்புகனை, லக்ஷ்மணன் கொல்கிறான். அவன் சூப்பணகையின் மகனாக சித்தரிக்கப் படுகிறான். அவன், ஒரு சக்தி வாய்ந்த கத்தியைப் பெற, தலைகீழாகத் தொங்கி தவம் செய்வது போல சித்தரிக்கப் படுகிறான்[2]. இங்கு, இந்த சம்புகனைக் கொல்வது லக்ஷ்மணன், ராமன் இல்லை. ஏனெனில், ஜைன ராமாயணத்தில், ஹீரோ லக்ஷ்மணன் தான். சீதை ராமனுக்கு சகோதரி. ஆக இப்படி 300[3], 3000 ராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஆக, ஒன்றொன்றிற்கும், விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்துக்கள் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதனால் தான் “சம்புக வதம்” என்று நாடகங்கள்[4], நடத்தினாலும், வெகுஜன மக்களின் மீது எந்த தாக்கமும் இல்லை. அதாவது, அவை பொய் என்பதால், கண்டு கொள்வதில்லை. 1987க்குப் பிறகு, இப்பொழுது 2020ல் ராமாயணத்தை மறுபடியும் தொலைக்காட்சியில் காட்டினால், கோடிக்கணக்கில் மக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இருந்து, ஆராய்ச்சி செய்கிறேன் என்று, புத்தகங்களை வெளியிட்டுபவர்கள், முதலில், இவ்வுண்மையினை அறியவேண்டும்..

பிராமண, ஜைன, பௌத்த மடாலயங்கள்-ஆஸ்ரமங்களின் வேறுபாடு: ஜைன-பௌத்தர்கள் உடலுடன் நிர்வாணம் / நிரியாணம் அடைய முயன்றுள்ளனர். அதற்க்காக, மந்திர-தந்திர-யந்திர முறைகளில், “வஜ்ராயன தந்திரம்”, “வாமாசாரம்” போன்ற யுக்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் தான், இவ்வாறாக, தலைகீழாகத் தொங்கி தவம் செய்தல், யாகம் செய்தல், தலையை அறுத்து பலி கொடுத்தல், போன்றவை விளக்கப் படுகின்றன. விக்கிரமாதித்தியன் போன்ற கதைகளில் காளிக்கு பலி கொடுக்கும் மந்திரவாதியைக் கவனித்திருக்கலாம். ஜைன ஓலைச்சுவடிகள், சித்திரங்கள் மற்றும் புத்தகங்களில் இத்தகைய “தலைக்கீழ் முறை” யுக்திகள் விளக்கப் பட்டிருக்கின்றன. “விருக்ஷாஸன” என்று ஜைனத்தில் ஒரு ஆசனம் உள்ளது. ஆனால், வேதங்களில் அத்தகைய முறைகள் இல்லை. பிராமணர்களின் தொழில் படிப்பது-படிக்கவிப்பது என்றிருந்ததால், நூல்கள், பள்ளிகள் / ஆஸ்ரமங்க்கள் முதலியவற்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். பிராமணர்களிடம் சத்திரியர்கள் கல்வி கற்க அனுப்பப் படுவதை இதிகாசம்-புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஜைன-பௌத்த கல்விகூடங்கள், மடங்கள், விஹாரங்கள் தோன்றியபோது, அவை தொலைவில், மலைப்பகுதிகளில் செயல்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக வாழ்ந்தனர். பௌத்தர்களின் மடாலயங்களும் அவ்வாறே செயல்பட்டன. மந்த்ரகா த போஸ் என்ற ஆராய்ச்சியாளர், தான் இதுவரை, ராமன் வாலி மற்றும் சம்புகனைக் கொன்றது போன்ற சித்திரம் / ஓவியத்தை பார்க்கவில்லை என்கிறார். 17ம் நூற்றாண்டு பாரசீக ஓவியத்தில்காணப்படுவதால், அத்தகைய பிரதிபலிப்பு பிறகு உண்டாகியிருக்க வேண்டும்.

சம்புகனை ராமர் கொன்றார்– கட்டுக்கதை, பரப்பும் விதம்: ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, மறைத்து இன்றும் கீழ்கண்டவை நடந்து வருகின்றன:
- கட்டுக்கதை என்று தெரிந்தும், “ராமன் சம்புகனைக் கொன்றான்” கதையை, இந்துவிரோதிகள் அவ்வப்போது, அவிழ்த்து விடுவர், விடுகின்றனர்!
- வால்மீகி ராமாயணத்தில், இல்லை, அது இடைச்செருகல் என்று பற்பல சரித்திராசிரியர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டினாலும் அது தொடர்கிறது.
- சம்புகன் தலைகீழாகத் தொங்கி கொண்டு தவம் செய்தான், யாகம் செய்தான், வித்தைக் காட்டினான் என்றெல்லாம் புனைவுகள்!
- அதுமட்டுமல்ல, அப்படியே அதே தேகத்துடன் சுவர்க்கத்திற்கு போக வேண்டும் என்று தவத்தை / யாகத்தை ஆரம்பித்தான், என்று சொல்லிக் கொள்கிறான்!
- அப்படியெல்லாம் செய்யப் படும் தவங்கள் வேதங்களில் இல்லையே, எந்த பிராம்மணனும் பார்ப்பானும் செய்ததில்லை, இன்றும் செய்வதில்லையே?
- பிறகு சம்புகன் அதை யாரிடமிருந்துக் கற்றுக் கொண்டான்? ஜைன-பௌத்த தந்திரங்களில் அத்தகைய கடின யுக்திகள் உள்ளன!
- ஆக, ஜைனர்கள் எப்படி ராமாயாணத்தை தலைகிழாக்கி “ஜைன ராமாயணத்தைப்” புனைந்தனறோ, அதே போல பௌத்தர்கள் செய்த வினைதான் இது!
- விஸ்வாமித்திரர் அவ்வாறு பிடிவாதமாக முயற்சித்தது, க்ஷத்திரிய-பிரமாண மோதலை, வெறுப்பை வெளிப்படுத்த புனைந்தது.
- சம்புகன் ராமன் புனைவு க்ஷத்திரிய-சூத்திர மோதலில் வெளிப்பாடாக்கியது, விக்ரம்-வேதாளக் கதைகளில் சுருண்டது!
- ஏனெனில் ராமர்- குஹன், சபரி, அனுமன், விபீஷணன் என்று எல்லோரிடத்திலும் அன்பாக இருந்தார். அதாவது, எஸ்.டி மற்று எஸ்.சிக்களின் விடுதலை வீரர்!
- ஆக, சம்புகனை ராமன் ஏற்கவில்லை என்பது ஒவ்வாதது, பௌத்தர்கள் விஷமத் தனம் – இடைசெருகல் செய்தும் மாட்டிக் கொண்டனர்!
- விஸ்வாமித்திரர்-சம்புகன்-விக்கிரமதி்த்தன் கதைகள், தலைகீழாக தொங்கும் விவகாரங்கள் தான். “தலைகீழ் தொங்கல்” வேலை தொடர்கிறது!
© வேதபிரகாஷ்
29-06-2020

[1] The story of Rama in Jainism can be broadly classified into three groups; Samghadasa’s version, Vimalsuri’s version and Gunabhadra’s version.
Vimalsuri’s version
Author Language Work
|
|
Vimalsuri |
Prakrit |
Paumchariya |
Shilankacharya |
Prakrit |
Chaupannamahapurusa Chariyam |
Haribhadra |
Prakrit |
Dhurtakhyana |
Bhadreshvara |
Prakrit |
Khavali |
Shilankacharya |
Prakrit |
Chaupannamahapurusa Chariyam |
Ravishena |
Sanskrit |
Padmapurana |
Yogashastra Vritti |
Sanskrit |
Hemachandra |
Hemchandra |
Sanskrit |
Trishashtisalakapurusha Charitra |
Dhaneshvara |
Sanskrit |
Shatrunjaya Mahatma |
Svayambhu |
Apbhramsha |
Paumchariyu |
|
Gunabhadra’s Version
Author Language Work
|
|
Gunabhadra |
Sanskrit |
Uttarpurana |
Krishna |
Sanskrit |
Punyachandrodaya |
Pushpadanta |
Apbhramsha |
Mahapurana |
Samghadasa’s version
Author Language Work
|
Samghadasa Gani |
Prakrit |
Vasudevahindi |
Harisena |
Prakrit |
Kathakosha |
|
[2] John Brockington, Mary Brockington, The Other Ramayana Women: Regional Rejection and Response, Routledge, New York, 2016
[3] Ramanujan, A.K. 1992. Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation, in Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia in (Paula Richman ed.) pp. 22-49. Delhi: Oxford University Press.
[4] Richman, Paula. Why Can’ta Shudra Perform Asceticism? Sambuka in Three Modern South Indian Plays.” The Ramayana Revisited (2004): pp.125-148.
Between 1920 and 1954, in sharp contrast, three influential south Indian playwrights analyzed below responded to Sambuka’s beheading not with approval but with horror. Juxtaposing plays in Telugu, Tamil, and Kannada suggests how troubling Rama’s beheading of a shudra proved in twentieth-century south India. The earliest of the three plays examined in this essay was written in Telugu by Tripuraneni Ramasvami Chaudari (1887–1943).
A more extreme attack on Rama’s treatment of S ambuka appears in the 1954 play titled Ramayana Natakam [Ramayana drama] by Thiruvarur K. Thangaraju, a Tamil journalist, playwright, and actor.
In the mid-1940s, Sudra Tapasvi [The Shudra ascetic] was published in Kannada. Its author, K. V. “Kuvempu” Puttappa (1904–1994) enjoyed an extraordinarily successful career as a writer and public intellectual in Karnataka.

குறிச்சொற்கள்:சத்திரியன், சம்புகன், சம்பூகன், சிரச் சேதம், சிரச்சேதம், சூத்திரன், ஜைன ராமாயணம், தலை வெட்டு, பிராமணர், முன்னூறு ராமாயணங்கள், ராமன், ராமானுஜம், ராமாயணம், வர்ணம், வால்மீகி, வால்மீகி ராமாயணம், வெட்டு, வைசியர், ஷம்புகன், ஷம்பூகன்
அரசியல், இடைசெருகல், இட்டுக் கதை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கட்டுக் கதை, கதை கட்டு, கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காட்டுவாசி, காபிர், க்ஷத்திரியன், சகிப்புத் தன்மை, சங்கம், சந்நியாசி, சபரி, சம்புகன், சம்பூகன், சிரச் சேதம், சிரச்சேதம், சூத்திரன், துவேசம், தூஷண வேலைகள், பிராமணன், பேச்சு, பொய்க் கதை, வனவாசி, வழக்கு, ஷம்புகன், ஷம்பூகன், ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:
“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].
எண் |
சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் |
வயது |
ரிக் வேத மந்திரத்தின் பொருள் |
Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D |
1 |
குழந்தை |
0 முதல் 4 வரை |
சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
|
In charge of Pubarche, appearance of pubic hair |
2 |
பேதை.
|
5 முதல் 8 வயது |
3 |
பெதும்பை |
9 முதல் 10 வயது வரை |
விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.
|
In charge of Thelarche, appearance breasts. |
4 |
மங்கை.
|
11 முதல் 14 வயது வரை |
5 |
மடந்தை |
15 முதல் 18 வயது வரை |
அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.
|
In charge of Menarche, 1st periods |
6 |
அரிவை |
19 முதல் 24 வயது வரை |

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33
[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm
[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
குறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்
அக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் ! [3]

திகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].

பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்!,” என்று விடுதலை முடித்தது[3].

இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].

இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது சகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா?: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்றம் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.

2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர்! அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று! இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.

அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.

இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்துமத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] https://www.viduthalai.in/e-paper/179293.html
[2] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[3] https://www.viduthalai.in/e-paper/179293.html
[4] மாலைமலர், கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி, பதிவு: ஏப்ரல் 06, 2019 11:20
[5] நக்கீரன், கிருஷ்ண அவதாரம் குறித்த வீரமணியின் கருத்து, பதிலளித்த ஸ்டாலின்…, கமல்குமார், Published on 06/04/2019 (13:09) | Edited on 06/04/2019 (13:37)
[6] https://www.nakkheeran.in/special-articles/special-article/k-veeramani-about-krishna-dmk-president-stalin-reply
[7] https://www.maalaimalar.com/News/District/2019/04/06112014/1235907/if-veeramani-said-anything-wrong-about-krishna-must.vpf
ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், திருச்சி, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், தேர்தல், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மோடி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாசக்தி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

வைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].

திகவினர் சொல்வது என்ன? விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].

காவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].

மோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].

இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்!, Updated: April 5, 2019, 1:29 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html
[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[4] https://www.viduthalai.in/e-paper/179293.html
[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[6] https://www.viduthalai.in/e-paper/179293.html
[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[8] https://www.viduthalai.in/e-paper/179293.html
[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[10] https://www.viduthalai.in/e-paper/179293.html
குறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்
அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [2]

வீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல்வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].

ஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்?

சாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்‘ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு? எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.
ஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின்? ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்‘ காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.
[2] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=2244849
[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST
[4] https://tamil.thehindu.com/tamilnadu/article26691030.ece
[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/29175017/1030311/Veeramani-chennai-police-case.vpf
[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்
பதிவு: ஏப்ரல் 01, 2019 15:19
[8] https://www.maalaimalar.com/News/State/2019/04/01151953/1235077/Hindu-munnani-complaint-against-Veeramani-in-palani.vpf
[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM
[10] https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/01130550/Some-have-created-the-image-of-a-DMK-opponent.vpf?fbclid=IwAR09Xqy4-YgZCkLl291-8CpJwG6t63Ddcfyk5LMZtUWH7BIswX-MpEFfSFE
[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அரவிந்தன் நீலகண்டன், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபி, கோபிகா, கோபிகை, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பகுத்தறிவு, ராசலீலா, ராசலீலை, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [1]

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019
[2] https://www.viduthalai.in/page1/178638.html
[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html
[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814
[7] தினமலர், அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 23, 2019
“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [1]

“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” – புத்தக வெளியீடு (08-03-2019): 06-o3-2019 அன்று காஞ்சிபுரத்தில், மோடி என்.டி.ஏ தேர்தல் கூட்டத்தை ஆரம்பித்த அதே நாளில், அதிமுக அரசு “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” [‘Is Nadars’ history black or saffron?’] என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடத்த அனுமதி மறுத்தது என்ற பீடிகையுடன், TheMewsMinute பீடிகையுடன் விசயத்தை ஆரம்பித்தது[1]. வைகை லா பர்ம் [Vaigai Law Firm] என்ற கம்பெனி[2] நடத்தி வரும், லஜபதி ராய் அப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், அப்புத்தகம் ஜாதி மற்றும் மதம் சம்பந்தப் பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை சொல்பவர்களாகவும் இருப்பதால், அனுமதி மறுக்கப் படுகிறது என்று 06-03-2019 அன்று தெரிவித்தது[3]. மற்றபடி, “ஏ.ஆர்.மெய்யம்மை” என்பவர் எழுதிய அந்த செய்தி தொகுப்பு, இடதுசாரி மற்றும் திக-கம்யூனிஸ சித்தாந்திகளுக்கு வக்காலத்து வாங்கும் போக்கில் இருந்தது[4]. பிறகு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அந்நிகழ்ச்சி நடைபெற்றது என்ற செய்தி வந்தது[5]. அப்புத்தகத்தை இலக்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும், தேவையானால், மாற்றுக் கருத்தை அதே போல வெளியிடலாம் என்று நீதிபதி தெரிவித்தாராம்!

“I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.”: நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன் சொன்னது, “However, a division bench of justice granted permission citing that the book is an addition to the Tamil literature irrespective of its contents” – அப்புத்தகத்தில் என்ன இருந்தாலும், அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சேர்ப்பாக இருக்கும் என்று எடுத்துக் காட்டி அனுமதி கொடுத்தார் நீதிபதி[6].இத்தகைய புத்தகங்களை எல்லாம் இலக்கியத்தில் சேர்த்தால் இலக்கியத்தின் கதி என்னவாகும் என்று கவனிக்க வேண்டும். தீர்ப்பைப் படித்தால், கருத்துரிமை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்ற இயக்கங்கள் உபயோகம் பற்றி அலசியுள்ளது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசு பள்ளிகளில் சாகா செயல்படுவதை தடுக்க முடியாது என்ற தீர்ப்பின் ஆதாரமாக, இவர்களுக்கும், அந்த அரசு அரங்கத்தில் இடம் மறுக்கக் கூடாது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. முடிவாக அவர் பதிவு செய்தது[8], “I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.” “கடந்த காலம் கருப்பாக இருக்கட்டும், அல்லது காவியாக இருக்கட்டும், ரோஜாவைப் போன்று [நன்றாக, சிறப்பாக, மென்மையாக] இருக்கட்டும்.” இதை இந்த கம்யூனிஸ கூட்டத்தில் உருவர் கூட எடுத்துக் காட்டவில்லை, மாறாக, அந்த நீதிபதி ஒரு பிராமணர் என்று எடுத்துக் காட்டியது திகைப்பாக இருக்கிறது. கம்யூனிஸ-மோடி-எதிர்ப்புக் கூட்டத்தினரில் வழக்கறிஞர் பலர் இருந்தலும், நீதிபதி குறிப்பிட்ட அந்த கடைசி வரி ஏன் நினைவுக்கு வரவில்லை என்பது விசித்திரமாக உள்ளது.

விழாவிற்கு அனுமதி, மறுப்பு மறுபடியும் அனுமதி – பின்னணி என்ன?: “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற நூலை எழுதி நீதிமன்றப் வழக்கிற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய், என்று ஊடகங்கள் கூறியுள்ளன. ஒருவேளை புத்தக விளம்பரத்திற்காக இவர்களே செய்திருக்கலாம் என்று கூட சொல்லலாம். ஏனெனில், விழாவில் பலர் பெயர்களைப் போட்டு, யேஷ்யங்களைக் கிளப்பி விட்டு, பிறகு, அதில் குறிப்பிட்டவர்கள் வராமல் இருப்பது இன்றைய போக்கு. மெய்யம்மையும் இதனை அபாரமாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. மார்ச்-08, 2019 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா?” – தீக்கதிர் கொடுக்கும் விளக்கம்[10]: இதே தினம் 14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது. அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது. மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890) பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே ! சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்[11].
வேதபிரகாஷ்
23-03-2019

[1] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
[2] Vaigai Law Firm , Address: 593, Kurivikaran Road, KK Nagar, Madurai- 625001, Landmark: Near Wakf Board College, Phone: (0452) 4391785, Mobile: 9843251788.
[3] In a letter addressed to Vaigai Law Firm run by Lajapathi Roy, the World Tamil Sangam Director Dr P Chandra said, “With reference to Roy’s communication on February 18, 2019, permission was sought only for a function regarding the release of a book on Nadars’ history. But based on the subsequent letter dated March 6, 2019, we hereby inform that permission for the event is denied as those who hold contrary views on the government are participating as chief guests and also because it appears to be a caste and religious-oriented function.”
https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883
[4] AR Meyyammai is a journalist with two decades of experience, has worked for The Hindu, The New Indian Express and Deccan Chronicle, என்று அடியில் விவரத்தைக் கொடுத்தது – திநியூஸ்மினியூட்.
[5] The Times of India, Book on nadars released at World Tamil Sangam after court nod, TNN, March 9, 2019, 04:00 IST.
[6]https://timesofindia.indiatimes.com/city/madurai/book-on-nadars-released-at-world-tamil-sangam-after-court-nod/articleshow/68327107.cms
[7] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 07.03.2019, CORAM: THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN, WP (MD) Nos.5392 & 5477 of 2019 and WMP (MD) Nos.4284 & 4358 & 4359 of 2019
T.Lajapathi Roy … Petitioner in both cases
Vs.
1.The District Collector,
O/o. District Collectorate,
Madurai. |
2.The World Tamil Sangam,
Rep.by its Assistant Director,
Dr.Thangaraj Salai,
Madurai – 625 020. |
3.The World Tamil Sangam,
Rep.by its Director (Incharge),
Dr.Thangaraj Salai,
Nearby Government Law College,
Madurai – 625 020. … |
… Respondents in WP(MD)No.5392 of 2019
|
Respondentin WP(MD)No.5477 of 2019
|
[8] https://indiankanoon.org/doc/77832643/
[9] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883
[10] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா ? காவியா ??, [Lajapathy Roy, Kalai Arasu முகநூல் பதிவிலிருந்து.. ] kannan, POSTED ON MAY 14, 2018, 3:03 PM.
[11]https://theekkathir.in/2018/05/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/
குறிச்சொற்கள்:அ.மார்க்ஸ், இயக்குனர் அமீர், கரு.பழனியப்பன், கா.பிரபு ராஜதுரை, ச.ராஜசேகர், சம்பத் சீனிவாசன், சாணார், சுப.உதயகுமார், சுவாமிநாதன், தீர்ப்பு, நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பார்ப்பனன், பாஸ்கர சேதுபதி, பிராமணத் துவேஷம், பிராமணர், பூங்கோதை ஆலடி அருணா, மதுரை, வி.ஆர். சுவாமிநாதன், விவேகானந்தர்
அ.மார்க்ஸ், அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கரு.பழனியப்பன், காவி, காவி உடை, காவியுடை, சாணார், சுவாமிநாதன், செக்யூலரிஸம், ஜாதி, தடை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பாஸ்கர சேதுபதி, பூங்கோதை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மோடி, லஜபதி ராய், வி.ஆர். சுவாமிநாதன், விவேகானந்தர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]

நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்தியுடன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே?

நாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ!

நக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.
தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.
|
நாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை! அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை? யார் நம்புவார்கள்?
|
உடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.

அப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.
|
நாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது? பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே? செல்லவில்லையே? இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா?
|
இதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார்.
|
அதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும்! அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ? சிரித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே?
|
உடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.
© வேதபிரகாஷ்
15-09-2018

[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு!, Posted Date : 13:03 (29/09/2015)Last updated : 13:43 (29/09/2015)
[2] https://www.vikatan.com/news/tamilnadu/53036.html
[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.
[4] http://tamilsnow.com/?p=62030
[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)
[6] https://www.vikatan.com/news/tamilnadu/128482-stalins-srirangam-visit.html
[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்!, ஜே.டி.ஆர், Published on 22/06/2018 (12:28) | Edited on 22/06/2018 (12:30)
[8] https://nakkheeran.in/24-by-7-news/politics/mk-stalin-cames-srirangam-temple-his-wife
குறிச்சொற்கள்:இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்
இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கருத்து, கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, சுடாலின், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, பகுத்தறிவு, பசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூலை 22, 2018
பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [2]

பெண்ணை–பெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:
- பெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே?
- ஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா? அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை?
- பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அப்படி என்றே செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை?
- பெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!
- குதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா?
- முதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
- வேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.
- துலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா?
- தமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ?
- 50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன!
இங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.

உண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.

ஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை நம்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா? கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.

ஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன! இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.

வேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.
© வேதபிரகாஷ்
22-07-2018

குறிச்சொற்கள்:அரசியல், கார்த்திகேயன், கிரியை, கோவில், சடங்கு, சர்ச், செக்யூலரிஸம், ஜோகினி, தந்திரம், புதிய தலைமுறை, பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், பெண்கள், மசூதி, மந்திரம், மாதவிடாய், மாதவிலக்கு, யோகினி, ரத்தம்
அங்கப்பிரதசிணம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கார்த்திகேயன், கோவில் இடிப்பு, சபரி, சபரி மலை, சமண கோவில், சமணம், சர்ச், சைவம், ஜெயின், ஜைன கோவில், ஜைனம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறிவு, பிஜேபி, பிரச்சாரம், பெண், பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், மாதவிடாய், மேரி, யந்திரம், ரத்தம், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 16, 2017
ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், சோதனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப் பட்ட அசீமானந்தா டேப்பும், கிடப்பில் போட்ட காங்கிரஸ் அரசும் (1)

“டைம்ஸ்–நௌ” வெளியிட்ட தகவல் [ஜூலை 2017]: சுஷில் குமார் சின்டே, உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை எப்படியாவது, அந்தப்ப்பிடியில் சிக்கவைத்து, விசாரணைக்குக் கூட்டி வரவேண்டும் என்ற திட்டம் போடப்பட்டதாக தெரிகிறது[1]. உள்துறை அமைச்சகம் கோப்புகளில், அந்நேரத்தில் பதிவான விவரங்களை வைத்துப் பார்க்கும் போது, மோஹன் பகவத்தை எப்படியாவது, தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சி நடந்ததாக தெரிகிறது என்கிறது[2]. “நோட்-சீட்” எனப்படுக் குறிப்புகளில் அத்தகைய விவரங்கள் இருப்பதாக வெடிப்புகளை “டைம்ஸ்-நௌ” கூறுகிறது. “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இப்பொழுது “டைம்ஸ்-நௌ”க்கு அளித்த பேட்டியில் ஷின்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார்[3]. அவ்வாறு இருந்தால், தாராளமாக ஜனங்களுக்கு காட்டலாம், எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியும் அதனை மறுத்துள்ளது[4]. இப்பொழுது உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருப்பதனால், உண்மை என்னவென்று அவர் விளக்கிக் கூறலாம். இந்த கருத்தே, அதாவது, “இந்து பயங்கரவாதம்” மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புள்ளது என்ற விவகாரமே லீனா கீதா ரகுநாத் என்பவரின் அசீமானந்தாவுடம் எடுக்கப் பட்டதாகக் கூறப்படும் பேட்டியில் இருந்துதான் தெரியவருகிறது.

லீனா கீதா ரகுநாத் பேட்டியும், தொடர்ந்த சர்ச்சையும் [பிப்ரவரி 2014]: இதற்காக, பஞ்சுக்லா சிறையில் [Panchkula jail] இருந்த அசீமானந்தாவை மிரட்டி, மோகன் பகவத் பெயரைக் குறிப்பிடச் சொல்லி வற்புருத்தியதாக அல்லது குறிப்பிட்டதாகவும் சில செய்தி குறிப்புகள் வெளியிட்டன. 2014ல் பொது தேர்தல் சமயத்தில், இந்த பேட்டி பிப்ரவரி 2014 காரவன் என்ற சஞ்சிகையில்[5], அசீமானந்தாவின் பேட்டியில் வெளியானது என்பதும் கவனிக்கத் தக்கது. “காரவன்” பத்திரிக்கை நிருபர் லீனா கீதா ரகுநாத் [The Caravan journalist Leena Gita Reghunath] என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசீமானந்தாவை பேட்டி கண்டு, வெளியிட்டதாக அப்பத்திரிக்கைக் குறிப்பே கூறுகிறது[6]. அப்பேட்டியின் தமிழாக்கத்தை இங்கு படிக்கலாம்[7]. லீனா கீதா தான் ஒரு வழக்கறிஞர், அவருக்கு உதவுகிறேன், அவர் வேண்டுமென்றே அவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் சொல்லி அவரிடம் வந்து பேட்டி எடுத்தார். அசீமானந்தா மறுத்த போது, அவரது சேவைகளைப் பற்றியாவது சொல்லுங்கள் என்று நைஸாக பேட்டி காண ஆரம்பித்தார். அப்பேட்டி வெளிவந்தவுடன் சர்ச்சை ஏற்பட்டது. அசீமானந்தா தான் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்[8]. லீனாவின் பேட்டி தெரியவந்தபோது, இவர் அதனை மறுத்ததோடு, அவர் மீது, சட்டப்படி வழக்குத் தொடரவும் தீர்மானித்தார்[9]. அப்பொழுதும், ஊடகங்கள் அசீமானந்தா வழக்கு தொடருவேன் என்று அந்த நிருபரை மிரட்டினார் என்று தான் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[10]. ஏதோ, ஜெயிலில் இருந்தே மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்பது போலவும் செய்திகள் வெளியிடப்பட்டன[11].

ஜே.எஸ். ரானாவின் கடிதம் [05-02-2014]: அசீமானந்தாவின் வழக்கறிஞர் ஜே.எஸ்.ரானா என்பவர் 05-02-2014 அன்று, ஊடகங்களுக்கு வெளியிட்ட கடித்தத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்பிக்கையாளர், சங்கத்திற்காக அசீமானந்த செய்த தீவிரமான சேவை என்ற தலைப்பில், பிப்ரவரி 1. 2014 தேதியிட்ட “காரவன்” – பத்திரிக்கையில் வெளிவந்த லீனா கீதா ரகுநாத் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை பொய்மூட்டையாகும். இது நீதித்துறை நிர்வாகம் மற்றும் செயல்பாடு மற்றும் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவருடைய உரிமைகளை மீறி தாக்கும் சதிவேலையாகத் தோன்றுகிறது. கீழே ஒப்பமிட்டுள்ள நான் நப் குமார் சர்கார் எனப்படுகின்ற அசீமானந்தாவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் ஆவேன். அவர் எடுத்துக் காட்டியபடி, அந்த கட்டுரையில் உள்ளவை பொய்யானவை, ஆதாரமில்லஆவை மற்றும் இட்டுக்கட்டியவை. என்னுடைய மனுதாரார் அத்தகைய பேட்டியைக் கொடுக்கவில்லை என்று மறுக்கிறார். இந்த மொத்த கதையும், என்னுடைய மனுதாரரின் மதிப்பை சீர்குலைக்க வேண்டுமென்றே, தீய எண்ணத்துடன் விசமத்தனத்துடன் செய்யப்பட்ட சதிதிட்டமாகும். சுவாமி அசீமானந்தா 2005லேயோ அதற்குப் பிறகோ எப்பொழுதும் சொல்லப்பட்ட இயக்கத்தின் பெரிய அதிகாரிகளுடன் என்றுமே, தனியாக [கதவுகள் மூடப்பட்ட அறையில்] இருந்ததில்லை என்கிறார். அதில் கூறப்பட்டுள்ளவற்றை மெய்ப்பிக்க என்னுடைய மனுதாரர் சவால் விடுகிறார், பொய் என்ற நிலையில் மன்னிப்பு கேட்க கோருகிறார், இல்லையெனில், அவர் மீதும், அப்பத்திரிக்கை மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.”

நிருபர் லீனா கீதா ரகுநாத் சொன்னது (2016ல்–புத்தகத்தில் உள்ளது படி)[12]: “என்.ஐ.ஏ இதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் கடந்த ஆண்டுகளில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இக்கதை வெளியே வந்தபோது, என்.ஐ.ஏ அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்–டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாது, இதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.ஐ.ஏ மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்–வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. கடந்த ஆகஸ்டில், சம்ஜௌதா வழக்கில், பிணைக்காக அசீமானந்தா மனு கொடுத்த போது, என்.ஐ.ஏ அதனை எதிர்க்கவில்லை. மற்ற வழக்குகளில் சிக்கியுள்ளதால் சிறையில் இருக்கிறார். வழக்குகள் நடந்து வந்தாலும், முக்கியமான சாட்சிகள் தங்களது வஅக்குமூலங்களை மறுத்து வருகின்றனர். அதற்குள், ஓரங்கட்டப்பட்ட என்.ஐ.ஏ பாகிஸ்தான்–ஐ.எஸ்.ஐ தொடர்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்து விட்டது. ஆக, தற்பொழுதைய சூழ்நிலைகளில், ஒருவேளை, அசீமானந்த மறுபடியும் சுதந்திர மனிதராகி விட்டால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்”.

சுசில் குமார் ஷின்டே ஜூலை 2017ல் மறுத்தது: அசீமானந்தாவை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை சிக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டது, இவ்விவகாரங்களினால் தான் சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில், அந்த காலகட்டத்தில், அதே நேரத்தில் தான், ஷின்டே என்.ஐ.ஏவிற்கு அழுத்தம் கொடுத்தார். அப்பொழுது, என்..ஐ.ஏவின் தலைமையில் இருந்த சரத் குமார் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த பேட்டியின் பேட்டி அடங்கிய டேப்பை / ஒலிநாடாவை, புரான்சிக் சோதனைக்கு [forensic evaluation of the interview] அனுப்ப வேண்டும் என்றார். பொதுவாக டேப்-ரிகார்ட் பதிவை ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. அதனை மற்ற ஆதர்ரங்களுடன் இணைத்து சரியாக ஒத்துக்ப் போனால்தான், ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அதற்கு ஒப்புதல் தராதலாலும் மற்ற காரணங்களுக்காகவும், அவ்வழக்குக் கிடப்பில் போடப்பட்டது. அதாவது, அந்த டேப் உண்மை என்றால், ஷின்டே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். மேலும், லீனா, “இக்கதை வெளியே வந்தபோது, என்.ஐ.ஏ அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்–டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாது, இதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.ஐ.ஏ மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்–வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.” என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், லீனா இப்பொழுது தனது கதையினை, ஷின்டே, சிதம்பரம், தி விஜய் சிங், ராகுல் மற்றும் சோனியா பக்கம் திருப்பியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. அப்படியென்றால், லீனா போன்றோர், ஒருதலைப் பட்டமாக செயல்படுகின்றனரா?
© வேதபிரகாஷ்
16-07-2017

[1] Times of India, Bhagwat was on UPA terror blacklist, Nikunj Garg| Times Now | Updated: Jul 15, 2017, 04:29 PM IST.
[2] http://timesofindia.indiatimes.com/india/bhagwat-was-on-upa-terror-blacklist/articleshow/59602901.cms
[3] Business Standard, Congress rubbishes report of putting RSS chief Bhagwat’s name in terror list, ANI | New Delhi [India July 15, 2017 Last Updated at 23:48 IST.
[4] http://www.business-standard.com/article/news-ani/congress-rubbishes-report-of-putting-rss-chief-bhagwat-s-name-in-terror-list-117071500960_1.html
[5] The Caravan, The Swami Aseemanand Interviews, The transcripts of all four interviews with Aseemanand, 8 February 2014
http://www.caravanmagazine.in/reportage/swami-aseemanand-interviews
[6] In a statement, The Caravan magazine said: “In the course of over two years, Aseemanand granted four exclusive interviews to The Caravan journalist Leena Gita Reghunath inside Ambala jail, the total duration of which ran into 09 hours and 26 minutes. In the last two interviews, Aseemanand repeated that his terrorist acts were sanctioned by the highest levels of the RSS—all the way up to Mohan Bhagwat, the current RSS chief, who was the organisation’s general secretary at the time… Knowing the national relevance of the sensitive information that Aseemanand revealed to The Caravan journalist, in an interview which was conducted with the full consent of Aseemanand, we place these facts in front of the public, along with a tape recording and transcript of parts of the conversation that mention Mohan Bhagwat.” http://www.caravanmagazine.in/reportage/press-release
[7] http://www.vinavu.com/2014/02/14/rss-terrorism-aseemananda-confessions-1/
http://www.vinavu.com/2014/02/19/rss-terrorism-aseemananda-confessions-2/
http://www.vinavu.com/2014/02/24/rss-terrorism-aseemananda-confessions-3/
http://www.vinavu.com/2014/02/27/rss-terrorism-aseemananda-confessions-4/
http://www.vinavu.com/2014/03/13/rss-terrorism-aseemenanda-confessions-5/
[8] The Hindu, Aseemanand threatens to launch legal action against The Caravan, NEW DELHI:,FEBRUARY 08, 2014 00:04 IST UPDATED: SEPTEMBER 08, 2016 21:21 IST.
[9] http://www.thehindu.com/news/national/aseemanand-threatens-to-launch-legal-action-against-the-caravan/article5665317.ece
[10] TheFirtPost, RSS terror charges: Aneemanand threatens to sue Caravan scribe, Feb.08, 2014. 13:24:26 IST.
[11] http://www.firstpost.com/india/rss-terror-charges-aseemanand-threatens-to-sue-caravan-scribe-1379939.html
[12] Supriya Nair, The Caravan Book of Profiles, Penguin, New Delhi, 2016.
குறிச்சொற்கள்:அசீமானந்தா, அஸீமாநந்தா, அஸீமானந்தா, ஆசீமாநந்தா, காவி உடை, காவி பயங்கரவாதம், காவியுடை, கீதா, சம்ஜௌதா, சிதம்பரம், சின்டே, சுசில்குமார் சின்டே, சோனியா, திக்விஜய் சிங், மலேகாவ், மெக்கா மஸ்ஜித், லீனா, லீனா கீதா, லீனா கீதா ரகுநாத், ஷிண்டே, ஷின்டே
அசீமானந்தா, அஸீமாநந்தா, ஆசீமாநந்தா, ஆர்.எஸ்.எஸ், ஆஸீமானந்தா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், காங்கிரஸ், காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள், காவி, காவி உடை, காவியுடை, கீதா, குண்டுவெடிப்புகள், சோனியா, சோனியா ஊடக தொடர்பாளர்கள், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பயங்கரவாதம், பிஜேபி, பிரச்சாரம், லீனா, லீனா கீதா ரகுநாத், லீனா ரகுநாத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »