Archive for the ‘தீபாவளி’ Category
ஒக்ரோபர் 26, 2017
“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (2)

விஜய், ஜோசப் விஜய் ஆகி, “ஜீசஸ் சேவ்ஸ்” என்ற கடிதத்துடன் நன்றி சொன்னது: விசயம் முற்றி திசைமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பாராட்டு கடிதத்தை வெளியிட்டுள்ளதும் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. நடிகர் விஜய் வெளியிட்டு உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது[1]: “மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்க, ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய்”, என குறிப்பிட்டு உள்ளார்[2].

லெட்டர்பேடும், ஊடகங்களும்: ஜோசப் விஜய் லெட்டர்பேட் கடிதத் தாளை உபயோகித்ததை, தன் முழுப் பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே இந்த அறிக்கையைத் தந்துள்ளார்[3]என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. அந்த லெட்டர் பேடில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது[4] என்று ஏதோ கண்டுபிடித்தால் போன்றும் குறிப்பிடுகின்றன[5]. ஜோசப் விஜய் என்ற பெயரை முன்வைத்து சர்ச்சைகள் உருவான நிலையில் இந்த அறிக்கையை தன் லெட்டர்பேடிலேயே வெளியிட்டுள்ளார் விஜய் என்கிறது தினமணி[6]. இதுவரை அவ்வாறு தனது பெயரை அவ்வாறு வெளியிடாமல், இப்பொழுது வெளியிட்டிருப்பது போன்று செய்தி வெளியிட்டிருப்பது, வியப்பாக இருக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிடுவதே பொய்யானது.

ஜோசப் விஜய், “ஜீசஸ் சேவ்ஸ்” முன்னர் இல்லமலா இருந்தது?: ஜோசப் விஜய் என்ற பெயர் ஒன்றும் ரகசியமானதல்ல. அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒப்பீடுகளில், விஜயை, ஜோசப் விஜய் என்று தான் போட்டுள்ளனர். விஜயே தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பலருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிகிறது. அதிலும் ஜீசஸ் சேவ்ஸ் என்றுள்ளது. 17-06-2014தேதியிட்ட, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதமும் அத்தகைய லெட்டர் பேடில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது[7]. எனவே, இதெல்லாம் பிஜேபிகாரர்களுக்கு தெரியாது என்பது போல, ஊடகங்கள் சித்தரிப்பது அபத்தமானது. ஆகவே, எச். ராஜா இன்று சொல்லிவிட்டார் என்று எல்லோரும் குதிக்க வேண்டிய அவசியமோ, அதை வைத்து ராஜாவை விமர்சனம் செய்வது முதலியானவை தேவையற்றதாகும். உண்மையில், ஊடகங்கள் தாம், விஜயை, பிஜேபிக்கு எதிரானவர் என்பது போல சித்தரிக்கின்றன. அவ்வலையில், விஜயும் அவர் தந்தை சந்திரசேகரும் விழுந்து விட்டனர் என்றாகிறது. ஆக, ஊடகங்களின் எச். ராஜா எதிர்ப்பு மற்றும் பிஜேபி எதிர்ப்பு ஏன் என்றுதான் அலச வேண்டியுள்ளது.

தமிழ்.ஒன்.இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற–விரோத வெளிப்பாடு[8]: தமிழ்.ஒன்.இந்தியா என்ற இணைதளம் வெளியிட்டுள்ளது, “மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். இதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என நஞ்சை கக்கினார் பாஜக தேசிய செயலர் எச். ராஜா. அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனாலும் அடங்காத எச். ராஜா, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரில்தான் உள்ளது. நடிகர் விஜய் ஒருபோதும் தம்முடைய சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டவர் அல்ல; ஆனால் ஓட்டு அரசியல்வாதிகள்தான் அவரை மத முத்திரைக்குள் திணிக்கின்றன. அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தாம் எப்போதும் பயன்படுத்தும் அதே லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். சமூக வலைதளங்களிலும் விஜய், ஜோசப் விஜய் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எச். ராஜா வகையறாக்களுக்கு இப்படித்தான் பதில் தர வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்”.

ஊடகத்தின் பாரபட்சம் மிக்க துவேச வெளியீடு[9]: இதில், “அநாகரிகத்தை தொடர்ந்தார்”, “அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்”…போன்றவை வக்கிரம், வெறுப்பு, துவேசம் முதலியவற்றைத் தான் காட்டுகிறது. ஊடகங்கள் செய்திகளைத் தான் வெளியிட வேண்டுமே தவிடர, இத்தகைய துவேச மனப்பாங்குடன் தங்களது வெறுப்பை செய்தியாக, செய்தியில் நுழைத்து வெளியிடுவது தான், பத்திரிகா தர்மத்திற்கு விரோதமானது. முரசொலி, தீக்கதிர், விடுதலை…. போன்ற அரசியல் கட்சி பத்திரிக்கைகள் அவ்வாறு செய்யலாம், ஆனால், “தமிழ்.ஒன்.இந்தியா” போன்றவை செய்வது, ஏதோ, ஜோசப் விஜய்க்கு ஆதரவாக செய்ல்படுவது போலவும், பிஜேபி, ராஜா ; போன்றவர்களுக்கு எதிராக செயல்படுவது என்றும் வெளிப்படுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. காழ்ப்பு, குரோதம், கோபம் போன்ற குணாதிசயங்கள் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளன.

சினிமாகாரர்களின் உபதேசம், பொறுப்பு, மற்றும் பதில் சொல்ல வேண்டிய நிலை: சினிமாகாரர்களால் தான் இப்பொழுதைய சமூகம் அதிகமாகப்வே கெடுகிறது. எனவே, அவர்களுக்கு சமூக பிரஞை போர்வையில் பொய்களை வசனங்களில் அள்ளி வீசமுடியாது. அவ்வாறு செய்வதையும் அனுமதிக்கலாகாது. சினிமாகாரர்களால் எத்தனை பெண்கள் கற்பிழந்தார்கள், குடும்பங்கள் சீரழிந்தன, வாழ்க்கை கெட்டது, தற்கொலை செய்து கொண்டனர், எத்தனை பேர் வரியேய்ப்பு செய்தனர், கருப்புப் பணம் உருவாக எவ்வாறு உதவினர், …என்று ஆராய்ச்சி செய்தால், அவர்களது உண்மை நிலை வெளிப்படும். இன்றைக்கு நடிகைகள் பலர், தான் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். பிறகு, அவர்களுக்கு எந்த தார்மீக பொறுப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
© வேதபிரகாஷ்
26-10-2017

[1] தினத்தந்தி, மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி – நடிகர் விஜய், அக்டோபர் 25, 2017, 04:21 PM
[2] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/25162149/Mersal-movie-great-successThanks-to-everyone-Actor.vpf
[3] பிளிமி.பீட்.தமிழ், மெர்சல் பிரச்சினையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! – ‘ஜோசப்‘ விஜய், Posted By: Shankar, Updated: Wednesday, October 25, 2017, 16:40 [IST].</P>
[4] https://tamil.filmibeat.com/news/vijay-thanked-for-supporting-mersal-issue-049375.html
[5] தினமணி, மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி, அக்டோபர் 25, 2017. 04:14 PM.
[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/25/vijay-thanks-everyone-for-making-mersal-a-huge-success-2795708.html
[7] http://www.moviecrow.com/News/18328/joseph-vijay-thanks-everyone-for-mersals-success
[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே நன்றி சொல்லி எச். ராஜாவுக்கு நச் பதிலடி தந்த விஜய்!, Posted By: Mathi, Published: Wednesday, October 25, 2017, 16:31 [IST].
[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vijay-thanks-fans-support-mersal-299544.html
குறிச்சொற்கள்:அரசியல், ஆஸ்பத்திரி, இலவசம், எச். ராஜா, சந்திரசேகர், சிங்கப்பூர், சினிமா, சென்னை, ஜி.எஸ்.டி, ஜோசப் விஜய், தமிழிசை, தீபாவளி, பாஜக, பிஜேபி, மதமாற்றம், மருத்துவம், மருத்துவர், மெர்சல், ராஜா, வரி, வரியேய்ப்பு, விஜய்
இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், எச். ராஜா, கமலஹாசன், காங்கிரஸ், காவி, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சந்திரசேகர், சிதம்பரம், ஜோசப் விஜய், தமிழிசை, திராவிடம், தீபாவளி, பிஜேபி, பிரச்சாரம், பெரியாரிஸம், பொய், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஒக்ரோபர் 26, 2017
“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

மெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:
- 7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை?
- மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.
- இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.
- ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்!”
- நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.
- அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா? என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.
- கோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.
- “நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்?: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.

பொய்யான ஜி.எஸ்.டி– சிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.
© வேதபிரகாஷ்
26-10-2017

[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.
[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.
[3] http://www.bbc.com/tamil/india-41752132
[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,
23 அக்., 2017.
[5] https://www.youtube.com/watch?v=iONiCGIGKm4
குறிச்சொற்கள்:அரசியல், இலவசம், ஊடகம், எச். ராஜா, ஏசு, ஏசுகிருஸ்து, சந்திரசேகர், சிங்கப்பூர், சினிமா, செய்தி, ஜி.எஸ்.டி, ஜீசஸ், ஜோசப் விஜய், தீபாவளி, மதமாற்றம், மதம், மருத்துவம், மெர்சல், ராஜா, விஜய்
அதிமுக, அரசியல், ஆட்சி, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, எச். ராஜா, எதிர்ப்பு, எஸ். வி. சேகர், கமல் ஹஸன், காங்கிரஸ், காவி, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சந்திரசேகர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜோசப் விஜய், தமிழிசை, திமுக, தீபாவளி, பிஜேபி, பொய், மெர்சல், ரஜினி, ராகுல் காந்தி, விஜய், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்!
பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா?: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.
கமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது!

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்?
சேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா?: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்!
தீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது? நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்
கடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
- முதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.
- எதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.
- “நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.
- அதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.
- ஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.
- “நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.
- “ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.
- “. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…!- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்!, Posted by: Shankar, Published: Saturday, October 3, 2015, 10:15 [IST].
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/has-kamal-donated-rs-16-cr-or-not-236952.html
[3] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html
[4] http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு
அல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

Akhsayta and sruti – daughters of Kamal – அக்ஷயா மற்றும் ஸ்ருதி என்றால் தமிழா, அரேபிக்கா, உருதா?
பகுத்தறிவாளன்: கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். எனக்கு நாத்திகம் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்–பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேச முடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்”. அதெல்லாம் சரிதான், அதேபோலத்தான் கடவுள் இலத்தீனில் பேசுமா, அரேபிய மொழியில் பேசுமா, உருது மொழியில் பேசுமா என்றேல்லாம் கேட்டிருந்தால், பகுத்தறிவின் உச்சத்தைக் கண்டு திகைத்திருக்கலாம், ஆனால், இது குறிப்பிட்ட மதத்தினரை எதிர்ப்பதாகத்தானே உள்ளது? அது சரி, தனது மகள்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று பெயர் வைக்க வேண்டும், அவை என்ன அரேபிய மொழியில் உள்ளனவா? இல்லை, இல்லாத கடவுளுக்குத் தெரியக் கூடாது என்று வைத்திருக்கிறரா?

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.
இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதா?: கமல் ஹஸன் தொடர்கிறார், “தெய்வங்கள் ஒரு புறம் இருக்கட்டும், உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள். மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறு கிறார்கள்[1]. உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம்[2]. மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்”. அதிருக்கட்டும், பன்றி மாமிசம் சாப்பிடுகிறேன், எனக்கு உரிமை இருக்கிறது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே? ஏன், அப்பொழுது ஏதாவது “பன்றி சாமியார்” வந்து பயமுருத்தப் போகிறாரா? சாப்பாடே இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அது மாட்டிறைச்சி விவகாரத்தால் அல்ல, இவரைப்போல கோடீஸ்வரர்காளால் தான். இவருக்கு பட்டினி, பசி என்றெல்லாம் நடித்துதான் காட்ட முடியும். ஆனால், அவற்றை நீக்க முடியாது.

Kamal and beef eating philosophy
“சகிப்புத் தன்மை இல்லை‘: ஜனாப் கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்[3]. நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய நாட்டை பங்கு பிரிவினை போட்டு கொடுத்து விட்டோம் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை நிகழ விடக் கூடாது”, என்றார். விழாவில் கவிஞர் புவியரசு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்”, என்பதில் விசமத்தனத்துடன் சொல்லியிருப்பது தெரிகிறது“[4]. “நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம்,” என்றதிலிருந்து, ஏதோ இந்துக்கள் தாம் அவ்வாறு செய்தனர், முஸ்லிம்கள் ரொம்ப நல்லவர்கள் போன்று கூறியுள்ளார். இங்குதான் தெப்பெண்ணம், பாரபட்சம், திரிபுவாதம் முதலியவை வெளிப்படுகின்றன. மதத்தின் பெயரால் தனி வீடு, அதாவது நாடு கேட்டது ஜின்னா மற்றும் முஸ்லிம்கள். பாகிஸ்தான் உருவானால், எனது பிணத்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்று காந்தி சொன்னதையே பொய்யாக்கி விட்டு, உண்மையிலேயே பல இந்துக்களைக் கொன்று அவர்களின் மீதுதான் நடந்து பாகிஸ்தானிற்கு சென்றனர். அப்போழுதும், காந்தி, நவகாளியில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அங்கு பாதயாத்திரையாக சென்றார். இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம், இந்த நடிகன் இப்படி சொல்லிவிட்டான், இனி ரசிகர்கள் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கும்.

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்
தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை: ஶ்ரீமான் கமல் ஹஸன் தொடர்கிறார், “சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேசபக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டிற்குமுன் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா? நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால் தான் இதையெல்லாம் சொன்னேன். எனக்கு அக்னி பரீட்சை வைக்க முடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்”, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்[5]. இங்கிருக்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை போலும், “உலக பக்தி” பற்றி பேச ஆரம்பித்து விட்டான் “உலக நாயகன்”! இதேபோல, கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றவற்றையும் கொண்டாட மாட்டேன் என்று கூறியிருந்தால், இவரது செக்யூலரிஸத்தை பாராட்டலாம். ஆனால், திராவிட நாத்திகம் போலத்தான் பேசியிருப்பதால், போலி நாத்திகத்தைத்தான் காட்டியுள்ளார், இந்து-விரோதத்தன்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அக்னி பரீட்சை வைக்கும் அளவுக்கு என்ன அப்படி தாம்பத்திய வாழ்க்கையினை தூய்மையாகவா வைத்திருந்தார் கமல். சட்டப்படி இரண்டு மனைவிகள், இரண்டு விவாக ரத்துகள், திருமணம் ஆவதற்கு முன்பே இரண்டு மகள்கள், சிம்ரன் உடன் வாழ்வு, செர்ர்ந்து வாழ்வது என்ற தோரணையில் பிறகு கௌதமி என்று வாழும் அவருக்கு யாரும் அக்னி பரீட்சை வைக்க முடியாதுதான்!

Pothys Kamal Hassan AD.2
தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது…..: பொதுவாக தமிழ் ஊடகங்கள் இதுவரை கருத்துத் தெரிவித்ததை பார்க்கவில்லை. ஆனால், இவ்விசயத்தில், “பத்திரிக்கையாளர்கள் எப்படி தன் சொந்தக் கருத்தை செய்தியில் சேர்க்கக்கூடாதோ, அது போல் நடிகர்களுக்கும் நடிப்பு வேறு, சொந்தக் கருத்துகள் வேறு தான். அது மறுப்பதற்கில்லை[6]. ஆனபோதும், தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது”[7], என்று பிளிம்.பீட்.தமிழ் என்ற தளத்தில் படித்தது, சிலர் தமது கருத்தை வெளியிடும் நிலையில் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் சொல்லவேண்டிய கருத்து அதில் உள்ளதால், அதனை அப்படியே போட்டுள்ளேன். இந்நிலையில், அவர் போத்தீஸிடம் வாங்கிய பணத்தை, எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் கொடுத்தார் என்பது பொய்[8] என்று குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது! இதேபோல கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றதற்கும் விளம்பரப்படங்களில் நடித்து, அப்பண்டிகளைப் பற்றி விமர்சனம் செய்தால், இவரது பகுத்தறிவை அல்லது செக்யூலரிஸ நாத்திகத்தை ஒப்புக்கொள்ளாலாம். தைரியமுள்ள, ரோசம், மானம் உள்ள உலக நாயகன் செய்வானா?
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: நடிகர் கமலஹாசன், Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 21:00 [IST].
http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html
[3] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece
[4] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece
[5] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html
[6] பிளிம்.பீட்.தமிழ், உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?, Posted by: Jayachitra Published: Sunday, November 8, 2015, 15:21 [IST]
[7] Read more at: http://tamil.filmibeat.com/heroes/actor-kamal-s-controversial-attitude-on-diwali-celebration-037544.html
[8] This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. – Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee)#kamalhaasan #ptptrust”
http://www.dnaindia.com/entertainment/report-ptp-trust-denies-that-kamal-haasan-made-a-donation-to-them-2131017
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இறைச்சி, உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, சகிப்புத்தன்மை, தீபவலி, தீபாவளி, நாத்திகம், பகுத்தறிவு, பட்டாசு, பாகிஸ்தான், பீப், பூச்சி, போத்தீஸ், மாட்டிறைச்சி, வெடி
அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, தீபவலி, தீபாவளி, நாத்திகம், பகுத்தறிவு, பசு, போத்தீஸ், மாமிசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

அண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்
நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal
சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal
அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு
அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Kamal pretending as a Hindu – frustrated on all accounts
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Kamal pretending as a Hindu – asking permission to shoot
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html
[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.
[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST
[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html
[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.
http://indianexpress.com/article/entertainment/entertainment-others/divorced-kamal-haasan-sarika-greet-each-other-warmly-at-shamitabh-music-launch/
[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு
[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm
[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.
[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.
[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.
[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html
[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece
குறிச்சொற்கள்:அக்ஷரா, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, சகிப்புத்தன்மை, சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், மது, விடுதலை, விபூதி, விருது, வீரமணி, ஸ்ருதி
அக்ஷரா, அரசியல், இந்து, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், கமக் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், விடுதலை, விருது, வீரமணி, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (4)?

நரகாசுரனுக்கு வீர வணக்கம் – 2015
இணைப்பு (அதியமான் அறிக்கை)[1]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் இட்லர், முசோலினி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., –பா.ஜ.க., சங்பரிவாரங் களின் நடவடிக்கைகளில் சில:
- பகவத்கீதையை தேசியநூலாக அறிவிக்கத் துடிப்பது.
- ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று அறிவித்தது[2].
- சமஸ்கிருதத்தை உலக மொழிக்கு இணையாக உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது.
- பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி.
- கர்வாப்சி என்ற பெயரில் வறுமையில் வாடும் இசுலாமியருக்கு ரூ.5 லட்சமும், கிறித்துவருக்கு ரூ.2 லட்சமும் கொடுத்து ஆசைகாட்டி கட்டாயத்தின் பெயரில் இந்து மதத்திற்கு மாற்றும் முயற்சிகள்.
- இசுலாமிய, கிறித்துவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்.
- பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தின் போது, மசூதிகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, இசுலாமிய வரலாற்றுச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இந்துக் கடவுள்கள் பிறந்ததாக கட்டுக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுவது.
- கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் மட்டும் 38 கிறிஸ்துவ ஆலயங்கள் மீதும், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்[3],
- கருத்துரிமைக்கு எதிரான படு கொலைகள்
- பகுத்தறிவு கருத்தாளர்கள் புனேயை சேர்ந்த நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கோவிந் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி, ஆகியோரைப் படுகொலை செய்தது[4].
- ஆசிரியர் சுசீந்திரகுல்கர்னி முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது.
- பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் மனிதப் படுகொலைகள்.
- உத்தரப்பிரதேசம், தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தியைப் பரப்பி முகமது அக்லாக் என்பவரைப் படுகொலை செய்தது.
- அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதில் வருவோரை படுகொலை செய்வது,
- மாட்டுக்கறி விருந்து கொடுத்ததாக கூறி காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ. ரஷித் என்பவர் முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது,
- இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதிகள்
- மருத்துவக் கல்விக்கான இடஒதுக் கீட்டை ரத்து செய்து ஒரே மாதிரி யான நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வருவதற்கான முயற்சி.
- தமிழகத்தில் தேவேந்திரர் குலம் என்று கூறிக் கொண்டு ஒரு சிலரை அழைத்து இடஒதுக்கீடே வேண் டாம் என்று வாக்குமூலம் கொடுக்க வைப்பது[5],
- இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஜாதி இந்துக்களை தூண்டிவிடுவது.
- தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான படுகொலைகள்.
- அரியானா மாநிலம், சன்பேத் கிரா மத்தில் இரண்டு குழந்தைகளைப் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து படுகொலை.
- அதே போன்று கோவிந்த் என்ற சிறுவன் படுகொலை,
- 2014இல் 2249 தாழ்த்தப்பட்ட பெண் கள் மீது பாலியல் வன்கொடுமைகள்[6].
- 500-க்கும் மேற்பட்ட ஜாதியப் படுகொலைகள்.
- கவுரவக் கொலை என்ற பெயரில் 15க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள்,
- தருமபுரி மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தேர் எரிப்பு.
- பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில்பேர் படுகொலை.”

gandhiji-statue-broken-salem
தேசத் தலைவர்கள் அவமதிப்பு[7]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “இந்திய நாட்டின் தேசப்பிதா என்றழைக்கப்படும்[8] காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சிலைகளை எழுப்புவது, சமூகநீதிக்காக போராடிய தலைவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது[9]. தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி, திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணங்கள். இப்படி தொடரும் எண்ணற்ற ஜாதிவெறி, மதவெறி, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தும் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதே! அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். தீபாவளியைப் புறக்கணிப்போம் இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடாகவே அது இருக்கும்”[10].

Karu temple – later removed
அதியமான் என்ன சொல்ல வருகிறார்?: அதியமான் தொகுத்துக் கூறியுள்ளதில் புதியதான விசயம் எதுவும் இல்லை. இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற, “மோடி-எதிர்ப்பு” பிரச்சாரத்தில், மிக்கப்படித்த மேதைகள், அதிமேதாவிகள், அறிவுஜீவிகள், பெரிய-பெரிய விருதுகளைப் பெற்றவர்கள், அவ்விருதுகளைத் திரும்பக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கூறுவதையெல்லாம் தினம்-தினம் நாளிதழ்களில் போட்டு, டிவி-செனல்களில் விவாதம் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் தாம் இந்த தொகுப்பு. தீபாவளி எதிர்ப்பு, இப்படி புது-புது கூட்டத்தினரால் எல்லாம் உபயோகப்படுத்தும் போலிருக்கிறது! இதனால், இவற்றிற்கு என்ன லாபம் என்று தெரியவில்லை! முதலில் இந்த “ஆதித் தமிழர் பேரவை” பற்றி தமிழகத்திலேயே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அறிக்கையை படித்துப் பார்க்கும் போது, இருக்கின்ற திராவிட சிந்தாந்திகளைப் போன்றுதான் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடு எனும் போது, அதேபோல, மற்ற தத்துவங்களையும், அவற்றின் குறியீடுகளையும் இவர்கள் எதிர்க்காததும், அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதிலிருந்தும், இவர்களும், அவர்களின் ஆதரவாளர்களா இருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

மாவீரன் நரகாசுரன்
இந்தியாவைத் தூற்றும்போக்கு ஏன்?: உலகத்திலேயே, சொந்த நாட்டை இவ்வாறு கேவலப்படுத்தும் மக்கள் இந்தியாவில் தான் இருக்கக்கூடும். “மோடி-எதிர்ப்பு” என்று சொல்லிக் கொண்டு, தேசத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள், கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனமானப்படுத்தி, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தியா என்றாலே, மற்ற நாடுகளுக்கு இளக்காரமாகத்தான். பாகிஸ்தான், போன்ற எதிரி நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இஸ்லாமிய-ஜிஹாதி நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா போன்றவையோ, இந்தியர்களை வைத்தே தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றன. அல்-கொய்தாவை ஆதரித்ததாக இரண்டு இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது[11]. கடந்த ஓராண்டில் இந்தியாவில் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர திட்டமிட்ட 19 இந்தியர்களில் 16 பேர் தெலுங்கானா போலீஸாரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அதுதவிர ஐ.எஸ். அனுதாபிகள் 60 பேரை அடையாளம் கண்ட தெலுங்கானா போலீஸார் அத்தகவலை உளவு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12]. அவர்கள் முஸ்லிம்கள் என்றதால், இவர்கள் அதைப் பற்றியெல்லாம் விவாதிப்பதில்லை[13]. அந்நிலையில் தான், இந்திய குடிமகன்களிடமிருந்து இத்தகைய அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கும், மேலே பட்டியலிட்டுக் காணும் திறமைக் கொண்டவர்கள், கடந்த 60 ஆண்டுகாலத்தில், இந்தியா எப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பார்த்திருக்க வேண்டும். உண்மையில் இந்தியா ஏதாவது வளர்ச்சியடைந்துள்ளதா, முன்னேறியுள்ளதா, 1947க்குப் பிறகு, எதையாவது சாதித்துள்ளாதா என்று சீர்துக்கிப் பார்க்க வேண்டும். ஊடகங்கள் தாம், இத்தகைய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24 x 7, செய்திகளை தயாரித்து, அவற்றைப் பற்றிய வாதம்-விவாதங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் மட்டும் எதை சாதித்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

டாஸ்மாக் ஊழியருக்கு இரட்டிப்பு சம்பளம் – கரு, ஸ்டாலின்
மதுவை எதிப்பவர்கள் கீழ்கண்டவற்றிற்கு பதிலளிப்பார்களா?:
- திராவிட சித்தாந்திகளுக்கு மகாத்மா காந்தி மீது எந்த கரிசனமும் இல்லை. காந்தி சிலைகள் உடைபடுவது தமிழகத்தில் தான். அச்சிலைகள் உடையாமல் ஏன் தடுக்கவில்லை?
- குடிப்பது என்பது தவறு என்றால், அதனுடன் தொடர்புடையவைகளும் தவறு என்று சுட்டிக் காட்ட மறுப்பது போலித்தனத்தைக் காட்டுகிறது.
- திராவிட ஆட்சியில் சாராயம், கள்ளாசாராயம், மதுக்கடைகள், அவற்றின் உற்பத்தி, ஏலம், முதலியவற்றை செய்து வருவது திராவிடர்களே, திராவிட சிந்தாந்திகளே.
- பிறகு அவற்றை வெளிப்படுத்திக் காட்டுவதில் ஏன் தயக்கம்?
- மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் “தலித்” மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், என்றால் அவர்களை திருத்தலாமே?
- அவர்கள் “அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும்” நிலைக்கு யார் வைத்திருக்கிறார்கள்? குடிப்பவர்களா, குடிக்காதவர்களா?
- இக்குடியை எதிர்ப்பவர்கள் “பப்-குடியை” ஆதரிப்பதேன்?
- தமிழ், தமிழன், ஆதித் தமிழன்……..என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள், திருவள்ளுவர் சொல்லியபடி கடைப்பிடித்து வாழ்வது தானே?
- மதுவை நிறுத்தினால் தீபாவளி நின்று விடுமா? இல்லை அவர்களால் மது விற்பனை நின்று விடுமா? பிறகு எதற்கு, இத்தகைய விளம்பர அறிக்கைகள்?
- தீபாவளிக்கு வெடிக்கக் கூடாது என்று மூன்று குழந்தைகள் வழக்குப் போட்டனவே? அதேப்போல இந்த வீரர்களும் வழக்குப் போட வேண்டியதுதானே?

திராவிடர்களின் மது சாம்ராஜ்யம்- எதிர்ப்பது யார்
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.inneram.com/news/tamilnadu/4987-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html
[2] ஆசிரியர்களை மதிக்க வேண்டாமா, வெறுக்க வேண்டுமா? ஆசிரியர்களை மதிக்காமல் தான், தமிழகம் இந்நிலையில் வந்துள்ளது.
[3] இதில் ஈடுப்பட்டவர்கள், சாதாரண திருடர்கள் என்றும், அந்நிகழ்ச்சிகளும் திருட்டுவேலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று தில்லி போலீஸார் எடுத்துக் காட்டியதும், கிருத்டுவர்கள் அமைதியாகிவிட்டனர்.
[4] கொலைகள் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான், கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது காங்கிரஸ் அரசுதான்.
[5] யார் எந்த ஜாதி என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கா அல்லது அவர்களுக்கா? இவரே தீர்மானித்து விட்டால், பிறகு மறவர்களின் உரிமை, சுதந்திரம் பற்றியெல்லாம் ஏன் பேசவேண்டும்.
[6] இப்படி நடக்கின்ற குற்றங்களை, இப்பட்டியிலில் சேத்து சொல்லும் அவசியம் என்ன? 2014க்கு முன்னர் கொலைகளே நடக்கவில்லையா அல்லது வெறெந்த குற்றங்களே நிகழவில்லையா?
[7] இந்நேரம்.காம், மதுவெறி, மதவெறி சாதிவெறிக்கு எதிராக தீபாவளி புறக்கணிப்பு!, திங்கட்கிழமை, 02 November 2015 10:36.
[8] ஆக இவரோ, இவரது இயக்கமோ அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை போலும்! “மகாத்மா” என்று குறிப்பிடாதத்தும் கவனிக்கத்தக்கது. கருணாநிதியின், “உத்தமர் காந்தி”யையும் விடுத்து “காந்தியார்” என்று கூறுகிறார் அதியமான்!
[9] சகிப்புத்தன்மை அப்படியென்றால், யாரிடம் இல்லை என்று கவனிக்க வேண்டும். சிலைகளை மோதவிட்டது யார் என்று எடுத்துக் காட்ட வேண்டும். சாமிசிலைகளை உடைப்பவர்கள் யார், இச்சிலைகளை அவமதிப்பது யார் என்று கவனிக்க வேண்டும்.
[10] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/29511-2015-11-02-05-30-33
[11]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7850869.ece
[12]http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7832565.ece
[13] http://www.dinamani.com/world/2015/11/07/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/article3117037.ece
குறிச்சொற்கள்:அதியமான், இறைச்சி, கமல் ஹஸன், சாராயம், சிலை, தடை, தமிழர் பேரவை, தீபவலி, தீபாவளி, பட்டாசு, பிராந்தி, போத்தீஸ், மது, மாட்டிறைச்சி, மாது, வழக்கு, வியாபாரம், விஸ்கி, வெடி
அதியமான், அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், எதிர்ப்பு, தடை, தீபவலி, தீபாவளி, பட்டாசு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே
தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்[1]. வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளது.

போத்தீஸ், கமல், தீபாவளி
மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு: தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க ஆதித் தமிழர் பேரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்சியில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி[2]: “மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளியன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.350 முதல் 400 கோடி வரை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் தலித் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதை முறியடிக்கும் வகையில் அன்றைய தினம் நாங்கள் வீடுவீடாகச் சென்றும், டாஸ்மாக் கடைகள் முன்பாக நின்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வோம். நாட்டில், கருத்து சொல்வது கூட தவறு என்பது போல், சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன[3]. சிறுபான்மை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த அரசு செயல்பட்டு வருகிறது[4]. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு அதிகரித்துள்ளது”, என்றார். அப்போது பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் குயிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்[5]. இப்படி தினகரன், தினமலர், நக்கீரன் முதலியவை சுருக்கமாகக் கொடுத்துள்ளது. மற்ற குறிப்பிட்ட இணைதளங்கள் அதியமானின் அறிக்கை என்று கீழ்கண்டவாறு முழுவதுமாக வெளியிட்டுள்ளன.

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்
மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமைதானே, பிறகு ஏன் அதை எதிர்க்கிறார்கள்?: தெரிந்தோ, தெரியாமலோ, நன்னத்தை, ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தூய்மை என்றெல்லாம் பேசும் போது, பலவித நற்குணங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் பதிஎன்கீழ்கணக்கில், “நீதி நூல்கள்” அதிகமாகவே உள்ளன. 19-20ம் நூற்றாண்டுகள் வரை தமிழச்சிகள், தமிழச்சன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே” என்றேல்லாம் பாடல்கள் எழுதப்பட்டு, பட்டி-தொட்டில்களில் எல்லாம் ஒலித்தன. ஆனால், இன்றோ, நிலைமை வேறுமாதிரி இருக்கிறது:
- பப்புக்கு போவது என்னுடைய உரிமை!
- குடித்து ஆடுவது என்னுடைய உரிமை!!
- குடித்து மற்ற ஆணோடு அல்லது பெண்ணோடு சேர்ந்து ஆடுவது என்னுடைய உரிமை!!
- திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், சேர்ந்து வாழ்வது என்னுடைய உரிமை.
- தாலி கட்டினாலும், கழட்டிப் போடுவது, வெட்டுவது முதலியனவும் என்னுடைய உரிமை.
- நான் ஆணாக இருந்தாலும், ஆணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
- நான் பெண்ணாக இருந்தாலும், பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
- என்னுடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது!!
- என்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடு அல்லது சாப்பிடாதே என்று சொல்லமுடியாது!!!
- அதேபோலத்தான் இவையெல்லாம்!!!!!!!!!
பிறகு குடிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். சங்கத்தமிழ் சமூகத்தில் குடியும், கூத்தியும் விலக்கப்பட்டதல்ல[6]. ஆகவே, அவற்றை சமூகத்தில் இருக்கக்கூடாது என்று ஏன் விலக்க வேண்டும். மேலும் இதற்கெல்லாம், வெறெதையோ ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்?

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்
பாரதீய ஜனதாவின் மோடி இந்துத்துவ அரசுதான்[7]: அதியமான் சொல்கிறார், “அரசு இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு வாழுகின்ற மக்கள் அனை வரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரத்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி[8]. ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை மறைமுகமாக தூண்டி விட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான்! என்பதை வெளிப் படையாகவே உறுதிசெய்கிறது”.

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- காரணங்கள்
மத்திய–மாநில அரசுகளை எதிர்க்க தீபாவளியை எதிர்ப்போம்[9]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “பகவத்கீதையை தேசிய நூல் என்பது, சமஸ்கிருதத்தை உலக மொழி தகுதிக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, ஜாதி வெறிகளைத் தூண்டி நாட்டை அமைதியிழக்கச் செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க. தமிழக ‘ஜெ‘ அரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது. மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது[10]. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாமல் செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது. இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை மதுவெறி, மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, ஜாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பது” என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது”.
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html
[2] தினகரன், தீபாவளியை புறக்கணிக்க ஆதி தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நேரம்:2015-11-02 13:03:45.
[3] தினமலர், தீபாவளி புறக்கணிப்பு போராட்டம்: ஆதி தமிழர் பேரவை அறிவிப்பு, நவம்பர்.2, 2015.06.50.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1378107
[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=504517&cat=504
[6] பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் படித்துப் பார்க்கவும். இன்றைய தமிழர்கள் அவற்றையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை.
[7] அதியமான், மதுவெறி, மதவெறி ஜாதி வெறியை எதிர்த்து தீபாவளியைப் புறக்கணிப்போம்!, விடுதலை, நவம்பர்.7, 2015, பக்கம்.3.
[8] நக்கீரன், மதவெறி, சாதிவெறியை எதிர்த்து தீபாவளி புறக்கணிப்பு: ஆதித்தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நாள் : 1, நவம்பர் 2015 (0:54 IST) ; மாற்றம் செய்த நாள் :2, நவம்பர் 2015 (8:39 IST).
[9] http://www.viduthalai.in/page3/111562.html
[10] மது உற்பத்தி, விநியோகம், விற்பனை, அவற்றிலிருந்து வரும் லாபக்கொள்ளை, இவற்றில் மிதப்பவர்கள் யார் என்று இப்போராளிகள் எடுத்துக் காட்டுவார்களா?
குறிச்சொற்கள்:அதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இறைச்சி, கஞ்சி, கமல் ஹாஸன், கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தீ, தீபவலி, தீபாவளி, பட்டாசு, பிராந்தி, போதை, மது, மாட்டிறைச்சி, மாமிசம், ரம்ஜான், வியாபாரம், விஸ்கி, வீரமணி, வெடி
அதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, எதிர்ப்பு, கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, தலித், தீபவலி, தீபாவளி, பிராந்தி, போதை, மதவெறி, மது, விஸ்கி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)?

No crackers campaign for Deepavali
தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

From left -hasin, Sankaranarayanan and Bhandari at Bhasins flat in Delhi- fathers of toddlers- Photo- Priyanka Parashar-Mint
குழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்!

தீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்
ஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6]. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

Diwali-ad- No crackers
வழக்கு பின்னணி[7]– உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled
[2] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour
[3] http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160
[4] http://www.thehindu.com/news/national/three-toddlers-move-sc-against-delhis-peaking-pollution-graph/article7703036.ece
[5] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.
http://www.livemint.com/Leisure/fwznyZ9bJVLnMwUFpL3KSO/Clean-air-for-our-children.html
[6] In its petition, the fringe group from Tamil Nadu’s Sivakasi said fireworks are a means of celebrations across the world. “Crackers are burnt during Diwali, Independence Day, New Year, Christmas, victories in games and elections, marriages etc. These celebrations cannot be thwarted by unfair restrictions,” it said. Pointing to the Rs. 1,000 crore turnover of the industry, the Cracker Manufacturers’ Association said it provides direct employment to over 3 lakh people and indirect employment to 10 lakh.”Any adverse direction against the use of crackers during Diwali will have a disastrous effect on the entire fireworks industry and on the livelihood of lakhs of people,” the petition read.
http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106
A fringe group and a cracker manufacturers’ association has moved the Supreme Court, opposing the ban on crackers during Diwali, contending that it would affect the Hindu tradition and hurt religious sentiments.
http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106
[7] தமிழ்.இந்து, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம், Published: October 28, 2015 14:11 ISTUpdated: October 28, 2015 14:45 IST.
[8] http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7710559.ece
[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7813725.ece
குறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டம், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, பண்டிகை, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, விழா, வெடி
அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், உரிமை, உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டன், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 7, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)!

Pothys Kamal Hassan ad
கமலும், தீபாவளியும், போத்தீஸ் விளம்பரமும் (அக்டோபர்-நவம்பர்.2015): “என்னத்தான் வருசா வருசம் வயசு ஏறிக்கிட்டே போனாலும், தீபாவளி அன்னிக்கு எனக்கு வயசு பத்து தாங்க. புது ரிலீஸ் படம் காட்டிலும் டமால் டுமீல்னு பட்டாசு எல்லாம் வெடிக்கிறாங்க. ஜாலியாக டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கலாம், ஆனா, ஸ்வீட் சாப்பிடனும். உம்…என்னத்தா வருசம் முழுவதும் நினச்சப்ப எல்லாம் புது டிரஸ் எடுத்தாலும், இந்த தீபாவளி டிரஸை யாரும் மறக்க முடியுமா சொல்லுங்க. அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய எங்கு எடுப்போம்? நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே?”, என்று சொல்லிக் கொண்டே ராக்கெட் விடுகிறார் கமல். “திபூஸ் போதிஸ், இது மக்கள் போத்தீஸ்”, என்று பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதாங்க கமலின் தீபாவளி புரமோஷன் அட் பிளிம்[1], அதாவது தீபாவளி வியாபாரத்தைப் பெருக்க எடுத்த ஒரு விளம்பரப்படம். இது எப்படி எடுத்தனர் என்பதை விளக்கும் விடியோவும் உள்ளது[2]. இப்பொழுது பட்டாசு வெடிக்காதே என்று பிரச்சாரம் நடக்கும் நிலையில், இந்த விளம்பரப்படமே தமாஷாகத்தான் இருக்கிறது. இருப்பினும், உலக மகா நாயகன் நடித்தது என்று கவனித்தில் கொள்ளவேண்டும். இதனால், தீபாவளியை அந்த நாத்திகன் ஏற்றுக் கொண்டதாக ஆகாது. இதனை விளம்பர விபச்சாரம், வர்த்த வேசித்தனம், வியாபாரப் பரத்தைத்தனம் என்பதா என்று நுகர்வோர் தான் தீர்மானிக்க வேண்டும்[3].

Pothys Kamal Hassan AD.2
வாங்கிய பணத்தை நல்ல காரியத்திற்குக் கொடுத்தார்: இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[4]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்.

No crackers campaign for Deepavali
தீபாவளியை வெறுக்கும் கமல் செய்யும் பரித்துரை மூலம் நுகர்வோர் பயன் பெறுவார்களா?: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா? தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா? “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா? சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா? கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள்? எதை வாங்கினாலும், அதன் தரத்தை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா? எதிர்விளைவுகளினால், பின் விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பதை பகுத்தறிவா தீர்மானிக்கும்.

Kamal pretending as a Hindu – asking permission to shoot
படபிடிப்பு எடுக்க அனுமதி கேட்க மடத்துள் நுழைந்த நாத்திகன் கமல் (செப்டம்பர். 2014): கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6] என்றது தினமலர். மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[7]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[8]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

Kamal pretending as a Hindu – frustrated on all accounts
ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்க விஜயம்: நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ? என்று பலர் கேள்வி எழுப்பினர். கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார். உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும் என்றார்[9]. இப்படியெல்லாம் மழுப்பினாலும், வியாபார ரீதியில் ஒப்புக்கொண்டார்கள் என்றாகிறது அவ்வளவுதான். சூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதெல்லாம் போலித்தனமானது.

I want beef, but no crackers
கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!: இதை விமர்சித்து, ஒரு பதிவு உள்ளது, “அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது[10]. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சரி… அது இருக்கட்டும்… இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன. ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்”, என்ற அப்பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.[11]. இவ்வாறான உள்ளூர் பழக்க-வழக்கக்கள் இருக்கின்றன என்றால், அவை பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மீறி இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்றால், அது இந்துக்களின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
07-11-2015
[1] https://www.youtube.com/watch?v=Wg4u0xcqQBU
[2] https://www.youtube.com/watch?v=jDdUDDY4lC8
[3] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.
[4] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html
[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/holy-books-say-brahmins-ate-beef-says-kamal-hassan-225248.html
[6] தினமலர், நெற்றியில் விபூதி பட்டையுடன் மடாதிபதியை சந்தித்தார் கமல்!, செப்டம்பர்.4, 2014.08.17. PM IST.
[7] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm
[8] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.
[9] http://cinema.maalaimalar.com/2014/09/03125909/kamal-change-to-aanmeegam.html
[10] தமிழ்.நியூௐ.டிவி, கமல்ஹாசனின் உண்மை முகம்..? கொந்தளிக்கும் மக்கள்..!, On 9/05/2014 10:05:00 AM by Abdul Farook in Break, Tirunelveli.
[11] http://tamilnadunewstv.blogspot.in/2014/09/blog-post_377.html
குறிச்சொற்கள்:ஆரியன், இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், திராவிடன், தீபாவளி, நான்குநேரி, பார்ப்பனன், பிராமணர், பிராமின், பீப், போத்தீஸ்
அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கமலகாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், தீபாவளி, பசு மாமிசம், பீப், போத்தீஸ், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 7, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)!

Diwali-ad- No crackers
தீபாவளி வந்தால், திராவிட நாத்திகர்களின் இந்து–தூஷணம்: தமிழகத்தைப் பொறித்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்த தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்க;ல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்.

போத்தீஸ், கமல், தீபாவளி
‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்[1] (நவம்பர். 2015): தினமலர் இவ்வாறு தலைப்பிட்டு சினிமா ரிலீஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்றாலும், தனது பிறந்த நாளில் ரிலீஸ் என்று தான் சொல்லிக் கொள்கிறார். ஆனால், தீபாவளி விளம்பரத்தில் மட்டும் நடித்துள்ளார்!. ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது! இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீபாவளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம்! அதனால் தான் “மாயா நரகாசுரனை” வேண்டும் என்றானாம் கமல் ஹஸன்!

கமலஹாஸன் – ஆத்திகரா, நாத்திகரா
ஷோபனா நல்ல சமையல்காரர் என்றால், ஹஸனும் அவ்வாறே மாறினார் போலும் (2009): 2009ல் நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்” நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார். முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில், “கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால், இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும். நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்[5].”

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்
நான் ராவணனின் பரம ரசிகன் – கமல் (2009): “ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது[6]. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது… நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும். இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை“யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்”, என்றார்[7]. மாயா நரகாசுரன் வெளிவந்தானோ இல்லையோ, அது கமல் ஹஸன் மூலம் வெளிப்பட்டுவிட்டது போலும்!

நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்-கமல்
மாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா?: அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[8].
“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்
தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .
பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது
விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது. |
கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்
எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்
மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது
கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!
|
ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?
எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா?
அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா?
கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா? |
ஆனால், “விஸ்வரூபம்” அனுபவித்தில் சாத்தானின் தொல்லையை அனுபவித்தது ஜாபகத்தில் இருக்கும். “சினிமாவில் நான் அரசியல் பண்ணியதில்லை……..[9] ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும்”, என்றார் ஒரு முறை நடிகர் கமல்ஹாஸன்[10]. ஆனால், மறைமுகமாக அரசியலை செய்து கொண்டுதான் வந்துள்ளார். திராவிடத் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அரசியல்வாதி நடித்துக் கொண்டிருப்பான், நடிகன் அரசியல் செய்து கொண்டிருப்பான். இவன் உலக மகா நாயக நடிகன் என்பதால், பெரிய அரசியல்வாதி என்றுதான் சொல்லவேண்டும்.

கமல் – நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்
கமலின் நாத்திக, இந்து-விரோத வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது: வர்த்த ரீதியில் கமல் ஹஸன் சினிமா போலம் லாபங்களை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது வியாபார விருப்பங்களைக் கச்சிதமாகக் கவனித்து வருகிறார். திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என நடிகர் கமல் தெரிவித்தார்[11]. விஸ்வரூபம் படம் மும்பையில் திரையிடப்பட்ட போது, நிருபர்களிடம் பேசிய கமல், “நான் பிரச்னையில் இருந்த போது, சினிமா உலகம் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு என்னை நெகிழச் செய்து விட்டது. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்னைப் போல் யாரும் பிரச்னையில் சிக்கக்கூடாது. எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறேன். ஏராளமான முஸ்லிம்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தைப் பார்க்காமலேயே படத்திற்கு எதிராக போராடுகின்றனர். சில தவறான வழி நடத்தல்கள் காரணமாகவே இந்த எதிர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னைகள் எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக என்று கூறுவது தவறு. நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல. அரசியல் ரீதியானது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன். பேச்சுவார்த்தைக்குப்பின் எனது படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி”, இவ்வாறு பேசினார்[12].
© வேதபிரகாஷ்
07-11-2015
[1] தினமலர், ‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள், நவம்பர்.7, 2015:05.03.
[2] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.
[3]http://www.dinamani.com/cinema/2015/10/12/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AF%80/article3076224.ece
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1381776
[5]http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D!+-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D&artid=107173&SectionID=143&MainSectionID=143&SectionName=TV&SEO=
[6] தமிள்.பிளிம்.பீட், நான் ராவணனின் பரம ரசிகன்–கமல், Published: Friday, August 28, 2009, 14:33 [IST].
[7] http://tamil.filmibeat.com/heroes/28-we-don-even-try-to-realize-our-pride-kamal.html
[8] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/
[9] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமா அரசியல் எனக்கும் தெரியும்! – கமல்ஹாஸன், Posted by: Shankar, Updated: Tuesday, September 2, 2014, 14:41 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-know-cinema-politics-says-kamal-210055.html
[11] தினமலர், இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி, ஜனவரி.31, 2013.18.13.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=637921&Print=1
குறிச்சொற்கள்:ஆடை, ஆரியன், இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துமதம், கடை, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சினிமா, திராவிடன், தீபவலி, தீபாவளி, துணி, நரகாசுரன், நாத்திகம், போத்தீஸ், போராட்டம், ராவணன், வியாபாரம்
அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, கனல் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹாஸன், தீபவலி, தீபாவளி, நரகாசுரன், போத்தீஸ், ராவணன், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »