Archive for the ‘திராவிட நாத்திகம்’ Category
நவம்பர் 20, 2019

திருமாவின் கிருத்துவ தொடர்புகள் ஆரம்ப காலங்களிலிருந்தே அலாதியானது.
மெத்தப் படித்த[1] திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன[2]:
- இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
- துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்க படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
- துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
- இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
- ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
- ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
- இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
- இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
- அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
- சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

திருமாவுக்கு துலுக்க வேடம் போடுவது, கஞ்சி குடிப்பது, முதலியவை அதிகமாக பிடிக்கும். துலுக்கக் கூட்டங்களில் இந்துக்களை வசைப் பாடுவது, இவரதுபிரத்யேக கலை ஆகும்.
தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்[3]: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!

இந்துவிரோத பேச்சுகளை இந்துக்கள் ஒப்புக் கொள்வதில்லை, எதிர்க்கிறார்கள்: திருமாவளவனுக்கு, இந்துவிரோதமாக பேசுவது என்பது வாடிக்கை ஆகிவிட்டது. சரித்திரத் தன்மை இல்லாமல், ஏதோ உளறிக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. இப்பொழுது எம்.பி ஆன பின்னர், இப்போக்கு அதிகமாகி விட்டது.
- திருமா, ஒரு கட்சித் தலைவர், எம்.பி முறையில் இந்து-விரோத பேச்சுகளுக்கு, உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை சட்டமீறல்கள் ஆகும்!
- தொடர்ந்து பேசிவருவது, தற்செயலானது அல்ல, ஆனால், முன்கூட்டியே தீயநோக்கம் கொண்ட விஷமத் தனமான திட்டமிட்ட பேச்சுகளே ஆகும்.
- செக்யூலரிஸ தோரணையில் கோவில்-கும்பாஷேகங்களுக்குச் சென்று, இவ்வாறு தூஷணங்களை செய்து வருவது ஔரங்கசீப்புத் தனம் தான் வெளிப்படுகிறது!
- ஆக்ரோஷமாக பேசுவது, தமது ரசிகர்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய காழ்ப்பை ஊட்டிவிடுவது முதலியன தீயதை வெளிப்படுத்துகிறது.
- தட்டிக் கேட்ட ஒருவரை அடித்து உதைத்திருப்பது, சகிப்புத் தன்மையற்ற, மனிதத் தன்மையற்ற, அரக்கத் தனத்தைத் தான் காட்டியுள்ளது.
- பிறகு பெண் என்று பாராமல், காயத்ரி ரகுராம் மீது பாய்வது, வீட்டைத் தாக்குவது, அசிங்கமாக மிரட்டுவது முதலியன என்னவென்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
- கருத்தியலுக்கு பதிலாக கருத்தியல் என்று வைப்பது சகிப்புத் தன்மை, அசிங்கத்தன்மை, ஆபாச-பேச்சுத்திறமை முதலிவற்றில் அடங்குமா?
- இந்துக்களைப் புண்படும் விதத்தில் தொடர்ந்து பேசி வருவது தூஷிப்பது, என்ன இவர்களுக்கு பேச்சு-தீவிரவாதம் சட்டமீறல் இல்லையா?
- அதிமுக-பாஜக எதிரான பேச்சு என்றால், அது அந்த அளவில் இருக்க வேண்டும், கோவில்-கோவிலாகச் சுற்றி இந்துக்களை வசைப் பாடக் கூடாது!
- அப்படி செய்து கொண்டிருந்தால் ஓட்டு போட்ட இந்துக்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம்!

போலீஸாருடன் வாக்குவாதம், காயத்ரியைத் திட்டுதல்……………………………..

செங்கொடி பாலகிருஷ்ணன், இன்னொரு பெண்மணி பேட்டி கொடுத்தல்………….
தொடர்ந்து இந்துக்களைத் தாக்கி பேசி வருவது: ஒவ்வொரு மேடையிலும் முஸ்லிம்கள் கிருத்துவர்களமுன்னிலையில், தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் – இவற்றுக்கு எதிராக பேசுவது வழக்கமாகி இருக்கிறது என்பதை அவரது பேச்சுகளில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. கோவில் இடிப்பு, ஐயப்பனின் பிறப்பு, இப்பொழுது கோவில் சிற்பங்கள் அமைப்பு என தொடர்ந்து இவ்வாறாக அதிலும் ஆக்ரோஷத்துடன் பேசி வருவது அவரது “பாடி லாங்குவேஜ்” என்று சொல்வார்களே, அதிலிருந்தும், அவருடைய முக பாவங்களில் இருந்தும், சொற்பிரயோகங்கள் இருந்தும் தெளிவாகவே வெளிப்பட்டு வருகின்றன. நான் ஏதோ ஒரு கருத்தியல் ரீதியாக அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு நிமிடம் தான் இவ்வாறு பேசினேன் என்று சொல்லி பிறகு வருத்தப்படுகிறேன் என்று அறிக்கை விடுவது போலித் தனமாக உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாகி விட்டது. ஒரு நிமிடத்திலேயே அத்தகைய ஆக்ரோஷமான காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் போன்ற கருத்தியல் வெளிப்படுகிறது என்றால் ஒரு மணி நேரம் இதைப் பற்றியே பேசினால், எந்த அளவுக்கு அவரது மனம், வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் என்பது நோக்கத்தக்கது. ஆகவே இவ்வாறு போலித்தனமான அறிக்கைகளை இனிமேலும் நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இந்துக்கள் நம்ப மாட்டார்கள் என்பது, இப்பொழுது அது வெளிப்பட்டு ஏமாற்ற முடியாது.
© வேதபிரகாஷ்
19-11-2019

விசிக மகளிர் அணி, காயத்ரி வீட்டின் முன் கலாட்டா செய்தது……

ஆபாசமாக, கெட்ட வார்த்தைகள் பேசி திட்டியது……………………….

போலீஸருடன் மோதியது………………………………….
[1] சமீபத்தில் தனது பிச்டியை முடித்து பட்டம் வாங்கியுள்ளார். ஆனால், சரித்திரம் என்று வ்ச்ரும் போது, தப்பு-தப்பாக பேசுகிறாரா, நடிக்கிறாரா என்று தெரியவில்லை.
[2] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2), 09-12-2019.
https://islamindia.wordpress.com/2017/12/09/thirumavalavan-wanted-all-temples-should-be-demolished-and-viharas-built/
[3] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3), 09-12-2019
https://islamindia.wordpress.com/2017/12/09/thirumavalavan-support-to-muslims-and-hate-speech-for-hindus/
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி, செங்கொடி, செங்கொடி பாலகிருட்டிணன், தலித், தலித் அரசியல், தலித்துவம், திருமாவளவன், விசிக மகளிர் இயக்கம்
அயோத்தி தீர்ப்பு, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சமூகத் தீவிரவாதம், தலித், திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், திருமாவளவன், துவேசப் பேச்சு, துவேசம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பேச்சாளர், பேச்சு, விசிக மகளிர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:
“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].
எண் |
சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் |
வயது |
ரிக் வேத மந்திரத்தின் பொருள் |
Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D |
1 |
குழந்தை |
0 முதல் 4 வரை |
சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
|
In charge of Pubarche, appearance of pubic hair |
2 |
பேதை.
|
5 முதல் 8 வயது |
3 |
பெதும்பை |
9 முதல் 10 வயது வரை |
விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.
|
In charge of Thelarche, appearance breasts. |
4 |
மங்கை.
|
11 முதல் 14 வயது வரை |
5 |
மடந்தை |
15 முதல் 18 வயது வரை |
அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.
|
In charge of Menarche, 1st periods |
6 |
அரிவை |
19 முதல் 24 வயது வரை |

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33
[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm
[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
குறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்
அக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் ! [3]

திகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].

பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்!,” என்று விடுதலை முடித்தது[3].

இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].

இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது சகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா?: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்றம் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.

2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர்! அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று! இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.

அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.

இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்துமத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] https://www.viduthalai.in/e-paper/179293.html
[2] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[3] https://www.viduthalai.in/e-paper/179293.html
[4] மாலைமலர், கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி, பதிவு: ஏப்ரல் 06, 2019 11:20
[5] நக்கீரன், கிருஷ்ண அவதாரம் குறித்த வீரமணியின் கருத்து, பதிலளித்த ஸ்டாலின்…, கமல்குமார், Published on 06/04/2019 (13:09) | Edited on 06/04/2019 (13:37)
[6] https://www.nakkheeran.in/special-articles/special-article/k-veeramani-about-krishna-dmk-president-stalin-reply
[7] https://www.maalaimalar.com/News/District/2019/04/06112014/1235907/if-veeramani-said-anything-wrong-about-krishna-must.vpf
ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், திருச்சி, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், தேர்தல், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மோடி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாசக்தி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [3]

இந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா? தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!”

ஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”

அதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].

2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.

இந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.

ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.
- “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]
https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-on-the-occasion-of-krishna-jayanti-dravidian-way/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [2]
https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-anti-hindu-atheist-and-mohammedan-way/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]
https://antihidnu.wordpress.com/2018/09/07/medieval-mohammedan-anti-krishna-blasphemy-continues-through-europeans-and-atheists/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]
https://antihidnu.wordpress.com/2018/09/07/anti-krishna-propaganda-continues-through-atheists-and-secularists/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]
https://antihidnu.wordpress.com/2018/09/26/dmk-not-anti-hindu-clarifying-stalin-though-atheist/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
https://antihidnu.wordpress.com/2018/09/26/proven-anti-hindus-like-dravidian-leaders-need-not-be-apologetic/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]
- https://antihidnu.wordpress.com/2018/09/27/anti-hindu-dravidian-gangs-cannot-compromise-with-hindus-but-continue-blasphemy/

இந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், குருட்டு கருணாநிதி, சந்தனம், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நெற்றியில் குங்குமம், ராஜாத்தி, விபூதி, ஸ்டாலின்
அதிமுக, அரசியல், அரவிந்தன் நீலகண்டன், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், குங்குமம், கோபி, கோபிகா, கோபிகை, சந்தனம், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, விபூதி, ஸ்டாலின், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [1]

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019
[2] https://www.viduthalai.in/page1/178638.html
[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html
[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814
[7] தினமலர், அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 23, 2019
“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [1]

“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” – புத்தக வெளியீடு (08-03-2019): 06-o3-2019 அன்று காஞ்சிபுரத்தில், மோடி என்.டி.ஏ தேர்தல் கூட்டத்தை ஆரம்பித்த அதே நாளில், அதிமுக அரசு “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” [‘Is Nadars’ history black or saffron?’] என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடத்த அனுமதி மறுத்தது என்ற பீடிகையுடன், TheMewsMinute பீடிகையுடன் விசயத்தை ஆரம்பித்தது[1]. வைகை லா பர்ம் [Vaigai Law Firm] என்ற கம்பெனி[2] நடத்தி வரும், லஜபதி ராய் அப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், அப்புத்தகம் ஜாதி மற்றும் மதம் சம்பந்தப் பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை சொல்பவர்களாகவும் இருப்பதால், அனுமதி மறுக்கப் படுகிறது என்று 06-03-2019 அன்று தெரிவித்தது[3]. மற்றபடி, “ஏ.ஆர்.மெய்யம்மை” என்பவர் எழுதிய அந்த செய்தி தொகுப்பு, இடதுசாரி மற்றும் திக-கம்யூனிஸ சித்தாந்திகளுக்கு வக்காலத்து வாங்கும் போக்கில் இருந்தது[4]. பிறகு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அந்நிகழ்ச்சி நடைபெற்றது என்ற செய்தி வந்தது[5]. அப்புத்தகத்தை இலக்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும், தேவையானால், மாற்றுக் கருத்தை அதே போல வெளியிடலாம் என்று நீதிபதி தெரிவித்தாராம்!

“I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.”: நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன் சொன்னது, “However, a division bench of justice granted permission citing that the book is an addition to the Tamil literature irrespective of its contents” – அப்புத்தகத்தில் என்ன இருந்தாலும், அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சேர்ப்பாக இருக்கும் என்று எடுத்துக் காட்டி அனுமதி கொடுத்தார் நீதிபதி[6].இத்தகைய புத்தகங்களை எல்லாம் இலக்கியத்தில் சேர்த்தால் இலக்கியத்தின் கதி என்னவாகும் என்று கவனிக்க வேண்டும். தீர்ப்பைப் படித்தால், கருத்துரிமை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்ற இயக்கங்கள் உபயோகம் பற்றி அலசியுள்ளது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசு பள்ளிகளில் சாகா செயல்படுவதை தடுக்க முடியாது என்ற தீர்ப்பின் ஆதாரமாக, இவர்களுக்கும், அந்த அரசு அரங்கத்தில் இடம் மறுக்கக் கூடாது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. முடிவாக அவர் பதிவு செய்தது[8], “I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.” “கடந்த காலம் கருப்பாக இருக்கட்டும், அல்லது காவியாக இருக்கட்டும், ரோஜாவைப் போன்று [நன்றாக, சிறப்பாக, மென்மையாக] இருக்கட்டும்.” இதை இந்த கம்யூனிஸ கூட்டத்தில் உருவர் கூட எடுத்துக் காட்டவில்லை, மாறாக, அந்த நீதிபதி ஒரு பிராமணர் என்று எடுத்துக் காட்டியது திகைப்பாக இருக்கிறது. கம்யூனிஸ-மோடி-எதிர்ப்புக் கூட்டத்தினரில் வழக்கறிஞர் பலர் இருந்தலும், நீதிபதி குறிப்பிட்ட அந்த கடைசி வரி ஏன் நினைவுக்கு வரவில்லை என்பது விசித்திரமாக உள்ளது.

விழாவிற்கு அனுமதி, மறுப்பு மறுபடியும் அனுமதி – பின்னணி என்ன?: “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற நூலை எழுதி நீதிமன்றப் வழக்கிற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய், என்று ஊடகங்கள் கூறியுள்ளன. ஒருவேளை புத்தக விளம்பரத்திற்காக இவர்களே செய்திருக்கலாம் என்று கூட சொல்லலாம். ஏனெனில், விழாவில் பலர் பெயர்களைப் போட்டு, யேஷ்யங்களைக் கிளப்பி விட்டு, பிறகு, அதில் குறிப்பிட்டவர்கள் வராமல் இருப்பது இன்றைய போக்கு. மெய்யம்மையும் இதனை அபாரமாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. மார்ச்-08, 2019 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா?” – தீக்கதிர் கொடுக்கும் விளக்கம்[10]: இதே தினம் 14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது. அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது. மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890) பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே ! சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்[11].
வேதபிரகாஷ்
23-03-2019

[1] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
[2] Vaigai Law Firm , Address: 593, Kurivikaran Road, KK Nagar, Madurai- 625001, Landmark: Near Wakf Board College, Phone: (0452) 4391785, Mobile: 9843251788.
[3] In a letter addressed to Vaigai Law Firm run by Lajapathi Roy, the World Tamil Sangam Director Dr P Chandra said, “With reference to Roy’s communication on February 18, 2019, permission was sought only for a function regarding the release of a book on Nadars’ history. But based on the subsequent letter dated March 6, 2019, we hereby inform that permission for the event is denied as those who hold contrary views on the government are participating as chief guests and also because it appears to be a caste and religious-oriented function.”
https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883
[4] AR Meyyammai is a journalist with two decades of experience, has worked for The Hindu, The New Indian Express and Deccan Chronicle, என்று அடியில் விவரத்தைக் கொடுத்தது – திநியூஸ்மினியூட்.
[5] The Times of India, Book on nadars released at World Tamil Sangam after court nod, TNN, March 9, 2019, 04:00 IST.
[6]https://timesofindia.indiatimes.com/city/madurai/book-on-nadars-released-at-world-tamil-sangam-after-court-nod/articleshow/68327107.cms
[7] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 07.03.2019, CORAM: THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN, WP (MD) Nos.5392 & 5477 of 2019 and WMP (MD) Nos.4284 & 4358 & 4359 of 2019
T.Lajapathi Roy … Petitioner in both cases
Vs.
1.The District Collector,
O/o. District Collectorate,
Madurai. |
2.The World Tamil Sangam,
Rep.by its Assistant Director,
Dr.Thangaraj Salai,
Madurai – 625 020. |
3.The World Tamil Sangam,
Rep.by its Director (Incharge),
Dr.Thangaraj Salai,
Nearby Government Law College,
Madurai – 625 020. … |
… Respondents in WP(MD)No.5392 of 2019
|
Respondentin WP(MD)No.5477 of 2019
|
[8] https://indiankanoon.org/doc/77832643/
[9] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.
https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883
[10] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா ? காவியா ??, [Lajapathy Roy, Kalai Arasu முகநூல் பதிவிலிருந்து.. ] kannan, POSTED ON MAY 14, 2018, 3:03 PM.
[11]https://theekkathir.in/2018/05/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/
குறிச்சொற்கள்:அ.மார்க்ஸ், இயக்குனர் அமீர், கரு.பழனியப்பன், கா.பிரபு ராஜதுரை, ச.ராஜசேகர், சம்பத் சீனிவாசன், சாணார், சுப.உதயகுமார், சுவாமிநாதன், தீர்ப்பு, நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பார்ப்பனன், பாஸ்கர சேதுபதி, பிராமணத் துவேஷம், பிராமணர், பூங்கோதை ஆலடி அருணா, மதுரை, வி.ஆர். சுவாமிநாதன், விவேகானந்தர்
அ.மார்க்ஸ், அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கரு.பழனியப்பன், காவி, காவி உடை, காவியுடை, சாணார், சுவாமிநாதன், செக்யூலரிஸம், ஜாதி, தடை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பாஸ்கர சேதுபதி, பூங்கோதை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மோடி, லஜபதி ராய், வி.ஆர். சுவாமிநாதன், விவேகானந்தர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 27, 2018
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா? [4]

அரசியல் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள் புறம்போக்கு நிலங்கள் பெறுவது முதலியன: தமிழகத்தில் கோவில் நிலங்களை அடுத்து, ஆக்கிரமிக்கப் படுவது, புறம்போக்கு நிலங்கள் தாம். ஓடை, ஏரி உள்வை மற்றும் குளம் [“water course poramboke i.e. Odai, Eri Ulvai and Kulam”] முதலிய இடங்களில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடலாம் போன்ற விதிமுறைகள் உருவாக்கியுள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு, அரசியல்வாதிகளின் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள், அத்தகைய நிலங்களைப் பெற்று வருகின்றன[1]:
எண் |
கல்லூரி / டிரஸ்ட் |
அரசாங்க ஆணை |
நில அளவு |
(a) |
Vellore Engineering College, Vellore District, presently VIT at Katpadi |
by G.O.Ms.No.112 (Revenue), dated 09.03.2001 |
98.80 Acres |
(b) |
Nagarathinam Angalammal Educational Trust, Valayakulam Village, Madurai District |
by G.O.Ms.No.77, Revenue, dated 20.02. 2001 |
10.10 Hectares |
(c) |
Melmaruvathur Adhiparasakthi Educational Institutions, Kesavarayan Pettai Village, Kancheepuram District |
by G.O.Ms.No.643 Revenue, dated 08.12.1999 |
34.65.5 Hectares |
(d) |
Periyar Mariyammai Educational & Charitable Trust, Vallam, Thanjavur District |
by G.O.Ms.No.142, Revenue, dated 26.03.2003 |
65.26 Acres |
(e) |
Thangachiammal Charitable Trust for constructing College buildings at Kengalathur Village, Sivagangai District, |
by G.O.Ms.No.286, Revenue, dated 28.08.2001 |
25 Acres |
(f) |
Management of Annai Mathammal Sheela Engineering College, Erumapatti Village, Namakkal District |
by G.O.No.285, Revenue, dated 28.08.2001 |
11.98 Acres |
இதில் ஆதிபராசக்தி கல்வி நிறுவங்களும் அடக்கம்[2]. இதற்கும் பக்தகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால், கோவில் எனும் போது, புனிதம் காக்கப்பட வேண்டும்.

இணைதளத்தில் பங்காரு அடிகளை கிருத்துவராக்கும் முறை: கோபால நாயக்கருக்கும், மீனாம்பாளுக்கும் மேரிக்கு கிருஸ்து பிறந்தது போல பங்காரு 03-03-1941ல் பிறந்ததாம்! “இப்பூமியில் கோடிக்கணக்கான பெண்கள் இருக்கும் போது கிருஸ்துவை பெற்றெடுக்க, ஏன் மேரி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அதே போல சாதாரண கிராமத்தில் வாழும் மீனாம்பாளுக்கு ஏன் பங்காரு குழந்தை பிறக்க வேண்டும்,” என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, பைபிள் வார்த்தைகளை உபயோகப் படுத்தி அதற்கு விளக்கமும் கொடுக்கப்படுகிறது[3]. “அவதாரம்” என்பதனை விளக்க ஏசுகிருஸ்து உதாரணமும் கொடுக்கப் படுகிறது[4]. 2000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் ஏசு கிருஸ்து இப்பூமியில் கட்டவுளின் மைந்தனாக அவதரித்தார். ஆனால், மக்கள் அவரை அவ்வாறு நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிலுவையில் அறையப் பட்டு கொடூரமாக இறக்க வேண்டியதாயிற்று, என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கப் பட்டது. ஆக, பங்காரு நாயக்கர் அம்மாவா, அப்பாவா, தேவகுமாரனா என்ற குழப்பத்தை உண்டாக்கியது!

குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா!: இனி அம்மா புகழ் பாடும் வீடியோக்கள் இணைதளங்களில் உலா வருகின்றன. அதில், குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், என்றுதான் பிரச்சாரம் செய்யப் படுகிறது. அங்கு வந்தால் எல்லா நோய்களும் தீர்ந்து, பிரச்சினைகளும் விடும், தீர்வுகள் கிடைக்கும் என்ற ரீதியில் அதிரடி பிரச்சாரம் செய்யப் படுகிறது. பிறகு, ஆதிபராசக்தி பெயரில் எதற்கு மருத்துவ கல்லூரி, அதில் ஊழல், சிபிஐ ரெயிட், கைது, என்றெல்லாம் எப்படி என்று தெரியவில்லை. அம்மா அவற்றையெல்லாம் “குறி” பார்த்து முதலிலேயே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை. ஏசுவின் அவதாரப் பிள்ளை என்ற ரீதியில், மேரியோ-கர்த்தரோ அறிவித்திருக்கலாமே, ஏன் அறிவிக்கவில்லை? எல்லாமே ஆன்மீகமாக, செக்ட்ய்ய்லரிஸமாக மாறிவிட்டதா? குறிமேடை இவருக்கு மட்டும் பொய்த்து விட்டதா?

ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி–பரா–சக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்: பங்காரு நாயக்கர் அம்மாவாகி, ஆதிபராசக்தியாகி, அவதாரமாகி, ஏசுகிருஸ்துவாகி வரும் நிலையில், ஆதிபராசக்தி விக்கிரகமே மேரியாகி வரும் அதிசயம், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அப்பொழுதெல்லாம், கோவிலுக்கு செல்பவர்களுக்குத் தான், இத்தகைய விவகாரங்கள் தெரியும். இப்பொழுது, டிசம்பர் 2018ல் ஊடகங்களில் வெளி வருவதால், இந்து அமைப்பினர் எதிர்த்துள்ளனர். சர்ச்சுகளில் உள்ள மேரிக்கு, ஆதிபராசக்தி போல அலங்காரம் செய்வார்களா என்றால், செய்வார்கள், அதனால் தான் முட்டாள் இந்துக்கள் வேளாங்கன்னி, பூண்டு மாதா போன்ற இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இனி அச்சரபாக்கம் திரிபுரங்களை எரித்த சிவன் கோவில் மறக்கப்படும், இந்த சர்ச் மற்றும் மேல்மருவத்தூர் புராணங்களை மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவர். இந்தியாவில், இதுபோலத்தான், சரித்திரம் மறைக்கப் பட்டு, அழிக்கப் படுகிறது. அதற்கு முட்டாள் இந்துக்கள் துணை போகின்றனர்.

ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது!: இதுவரை செக்யூலரிஸம் பேசி 40 வருடங்களாக இந்துக்களை ஏமாற்றி வந்தனர். திராவிட, நாத்திக, இந்துவிரோத கருணாநிதி, திக கோஷ்டியினர் சமத்துவம் போர்வையில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.இப்பொழுது “ஆன்மீகம்” என்று ஆரம்பித்துள்ளனர். சிலை திருட்டு, சிலை எதிர்ப்பு களவாணிகள் எல்லோரும், சிலை வைத்து பூஜை செய்து, கும்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்து தெய்வங்களை இவ்வாறு மாற்ற முயல்வது எப்படி? ஜனநாயக மதம் என்ற ரீதியில், அதனை கடைபிடிக்கிறார்களா? இவ்வாறு ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம், நாத்திகம் என்று எல்லாமே எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல் பட முடியும்? ஆகவே, இதில் ஒரு திட்டம் உள்ளது தான் தெரிகிறது, அது ஜனநாயகத்திற்கே ஒவ்வாதது, மக்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு ஆபத்து தான், இதனை இந்த ஏமாற்றுவாத சித்தாதிகள் கவனிக்க வேண்டும்.

இந்துக்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்: ஆதிபராசக்தி ஒயக்கம், நிறுவனம், டிரஸ்டுகளுக்கு வேறுவித பிரச்சினைகள் இருக்கலாம். அவை கோவிலைப் பற்றியதல்ல. இப்பொழுது பண்ருட்டி சமாசாரம் முடிந்து விட்டது. ஆனால், மேல்மருவத்தூரில் ஒன்றும் செய்யவில்லை:
- மேல்மருவத்தூரில் பல ஆண்டுகளாக இந்த கூத்து நடைபெறுகிறது, அப்பொழுது எடுத்துக் காட்டியபோது “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக டிரஸ்ட் கீழ், கிருஸ்துமஸ் கூத்து நடைபெறுகிறது! கேட்பதற்கு இந்துத்துவ வாதிகளுக்கும் திராணியில்லை.
- மேல்மருவத்தூர் கல்லூரி சேர்க்கைக்கு பணம் பிரச்சினையால் சிபிஐ ரெயிட் எல்லாம் நடந்தது, ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
- அடிகளாரிடம் விசாரணை, அவரது மகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை, அவரது வீட்டிலும் சோதனை என்றெல்லாம் செய்தி.
- அம்மா தான் அல்லா, அல்லா தான் அம்மா என்று அம்மா ஆணையிட்டதால், இந்த அம்மா வியாழக்கிழமை தோரும் குரானை படிக்க ஆணையிட்டாராம்.
- குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா.
- ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி-பரா-சக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்!இனி மைனாரிடி ஆனாலும் ஆச்சரியம் இல்லை.
- இன்னொருத்தர் தன்னை முருகனின் அவதாரம் என்கிறார், இவர் தன்னை அம்மா, மேரி, ஏசு என்கிறார், பிறகு உலகத்தில் என்ன பிரச்சினை.
- ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது! [10]
© வேதபிரகாஷ்
27-12-2018

[1] Madras High Court – Tmt.Kannammal Educational Trust vs The State Of Tamil Nadu on 27 February, 2017; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.02.2017 – CORAM:The Honourable Mr. Justice B.RAJENDRAN; Writ Petition No.2279 of 2017.
[2] https://indiankanoon.org/doc/113172194/
[3] March 3rd 1941, is a golden day in the history of the world. Yes, it was on this wonderful day, that at the simple home of Gopala Naicker family at Melmaruvathur, his wife Mrs. Meenaambaal gave birth to a boy baby. Among the millions of women on this earth, why was Mother Mary chosen to give birth to Christ? Why was Mrs. Meenaambaal, a simple lady from the small hamlet of Melmaruvathur chosen to beget this Son of Her, Shri Bangaaru Adigalaar? http://www.sakthiolhi.org/adigalar.html
[4] Incarnation: Common people fail to recognize incarnation. Therefore, like a fish being caught by baiting it with another fish or worm, so also, to impress and make the people realize incarnations, they are given the earthly benefits that they ask for, their incurable diseases are cured and their problems are solved. All the scientific and technological advancements have only increased the sophistication and standard of human living. The human nature remains the same with regard to spirituality and God consciousness. 2000 years back when Lord Jesus Christ came upon this earth as the Son of God, people never believed and finally He was crucified and set to a horrible and painful death.
குறிச்சொற்கள்:ஆதிபராசக்தி, ஆன்மீகம்., உமாதேவி, எம்ஜிஆர், சிலை, ஜெயில் சிங், ஜெய்கணேஷ், நெடுஞ்செழியன், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லட்சுமி, விசாலாக்ஷி, விசாலாட்சி, ஶ்ரீலேகா
அதிமுக, அல்லா, ஆதிபராசக்தி, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உரிமை, எம்ஜிஆர், கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சம உரிமை, சர்ச், சிலை, செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், நிலம், நிலம் வாங்குதல், பகுத்தறிவு, பக்தி, பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, பெயில், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாரி, மாரியாத்தா, மெரினா, லக்ஷ்மி, லட்சுமி, வழக்கு, ஶ்ரீலேகா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 27, 2018
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா? [3]

2009ல் திராவிட அமைச்சர் போற்றியது: திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்[1]. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது[2]: “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு. பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார். மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்”. அப்பொழுது, நான் எழுப்பிய முக்கியமான அம்சங்கள்[3]:
- கருப்புப் பரிவார் கூட்டங்களின் பொய்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.
- ராமசாமி நாயக்கரின் இந்து-விரோத நாத்திகத்தில் ஆன்மீகம் எங்கே வந்தது வெங்காயம்?
- “ஆதிபராசக்தி பக்தர்கள்” ஏமாளிகளாக இருந்தால், அத்தகைய “வெங்காயங்களை” நம்பலாம்.
- ராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்திருந்தால், ஒருவேளை இந்த இயக்கத்தையும் எதிர்த்திருப்பார்.
- “பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்“! இப்படியெல்லாம் சொன்னால் எப்படி? பெரியார் மணியம்மையை இரண்டாம் தாரமாக மணந்ததால்தான் “கண்ணீர் துளிகள்” தோன்றின. பிறகு கருணாநிதியோ அவரையும் மிஞ்சும் வகையில் மூன்று பெண்களை மணம் புரிந்து கொண்டுள்ளார். பிறகெப்படி பெண்களின் “சம உரிமை” வருகிறது, அளிக்கப் படுகிறது?
- “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு‘ என்று அவர்கள் சொல்லவேண்டும். பிறகு அதை நிரூபிக்கவேண்டுமானால், பெரியார்-அவர் மனைவியர், கருணாநிதி-அவர் மனைவியர் என்று வரிசையாக சன்னதிகள் திறந்து வைத்து “திராவிட ஆன்மீகத்தில்” ஐக்கியம் ஆகலாம்.
- “பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்“. பொன்முடி, மிகவும் கில்லாடி. ஏற்கெனவே, கலைஞரை “கடவுள்” ஆக்கிவிட்டதால், பெரியாரை பங்காருக்கு இணையாக வைக்கிறார்![ஞாபகம் இருக்கிறதா, பெரியார் படம் பலமுறை மாற்றி எடுக்கப்பட்டது]
- “அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது“. இதென்ன அங்கு “அர்ச்சனையா” நடக்கிறது? தெரியவில்லையே? பிறகு ஏன் ஆண்களில் பங்காரு மட்டும் அந்த உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்?
- அதுசரி. இந்த கோவில் “இந்து அறநிலை துறையில்” வருகிறதா இல்லையா?
- நெடுஞ்செழியன் மனைவி இங்கு வந்து சாமி கும்பிட்டார். ஏன் வீரமணியின் மனைவி மோஹனா, கருணாநிதி மனைவியர் முதலியோர் அங்கு வந்து சாமி கும்பிடுவதில்லை? இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை?[4]

டிவி–பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டது (ஜூலை 2010): இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்[5]. இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர்[6]. பிறகு நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது[7]. ஆனால், பிறகு மௌனிகளானது மர்மம் தான்!

சிபிஐ வழக்குப் பதிவு – வருமான வரித்துறை சோதனை (ஜூலை 2010): மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

2012-2017 தொரர்ந்த வழக்குகள் முதலியன: 2012ல் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் போலிப் பேராசிரியர்களாக பணியாற்றிய 25 மருத்துவர்களை 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை மருத்துவர்களாக பணியாற்றக் கூடாது என்று தடை விதித்துள்ளது. பிப்ரவரி 2013ல் ஆதிபராசக்தி பல்-மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தி ரூ.25 லட்சம் 07-01-2013 அன்று கைப்பற்றப்பட்டது[8]. எஸ். முருகேசன் [DCI member Dr S Murukesan] கைது செய்யப்ப் பட்டார்[9]. சிபிஐ கொடுத்த சம்மனை வாங்காமல், அன்பழகன் உயர்நீதி மன்றத்தில் பெயில்பெற்றார். மார்ச்.17, 2017ல் பல்-மருத்துவ கல்லூரி மாணவர் மிரட்டப் பட்ட வழக்கிலும் செந்தில்குமார் வந்தது. திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி குறித்து Facebook-ல் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்பட்டது[10]. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனை அடுத்து, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்[11]. உண்மையில் ஆன்மீகத்தில் திளைத்திருந்தால், நிச்சயமாக இவைரெல்லாம் நடந்திருக்காது.
© வேதபிரகாஷ்
27-12-2018

[1] தினமணி, திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி, First Published : 03 Nov 2009 01:53:17 AM IST
[2]http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=148853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
[3] வேதபிரகாஷ், திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்?, ஜூலை.10, 2010.
[4]https://dravidianatheism.wordpress.com/2010/07/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/
[5] தமிழ்.ஒன்.இந்தியா, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு, சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11 [IST].
[6] http://thatstamil.oneindia.in/news/2010/07/03/cbi-files-case-against-melmaruvathur-college.html
[7]http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81……………
[8] The Business Standard, DCI scam case: CBI opposes Bangaru’s wife, sons AB plea, Press Trust of India | Chennai, Last Updated at February 21, 2013 19:55 IST
[9] https://www.business-standard.com/article/pti-stories/dci-scam-case-cbi-opposes-bangaru-s-wife-sons-ab-plea-113022100701_1.html
[10] Deccan Chronicle, Chennai: Godman’s son booked for criminal intimidation, Published Mar 18, 2017, 1:41 am ISTUpdated Mar 18, 2017, 1:43 am IST
[11] https://www.deccanchronicle.com/nation/in-other-news/180317/chennai-godmans-son-booked-for-criminal-intimidation.html
குறிச்சொற்கள்:ஆதிபராசக்தி, உமாதேவி, ஊழல், கல்லூரி, கிருஸ்து, கிருஸ்துமஸ், சிபிஐ, சிலுவை, ஜெய்கணேஷ், நெடுஞ்செழியன், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லஞ்சம், லட்சுமி, விசாலாக்ஷி, விசாலாட்சி, ஶ்ரீலேகா
அதிமுக, அன்பழகன், ஆதிபராசக்தி, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உமாதேவி, எம்ஜிஆர், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சக்திதேவி, சர்ச், திக, திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திகம், நிருபர், நிலம், நிலம் வாங்குதல், பகுத்தறிவு, பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, புகார், பெண் அர்ச்சகர், பெயில், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லட்சுமி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 27, 2018
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்? [2]

திராவிடம் கோவிலில் புகுந்த கதை: பெரியார்-ஈவேரா 1973 வரை உயிரோடு இருந்திருக்கிறார். 1960-1973 காலகட்டத்தில் பங்காரு அடிகளின் குறி சொல்லுதல் போன்ற விவகாரங்கள், செய்திகள் எல்லாம் ஈவேரா நாயக்கருக்குத் தெரிந்திருக்கும். “சித்தர்காடு மாரியாத்தாளுக்கு உதை” என்று கட்டுரை எழுதிய ஈவேரா இந்த பங்காரு பூசாரியையும், ஆதிபராசக்தியையும் எப்படி விட்டு வைத்தார் என்பது அதிசயம் தான்[1]. பூசாரியின் போக்கிரித் தனத்தால் அவ்வாறு செய்தான் என்று எழுதிய நாயக்கர் அமைதியாக ரசித்தார் போலும்[2]. வீரமணியும் கண்டுகொள்ளவில்லை. இதை அலசி எழுதிய என்னுடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்[3]. பங்காருக்கு 32 வயது என்பதால், அவருக்கும் திராவிட அரசியல், நாத்திகம் மற்றும் சிலையுடைப்பு இந்துவிரோதம் முதலியன தெரிந்திருக்கும். அரசியலும் இக்கோவில் வளர்ச்சியுடன் சேர்ந்தே இருந்துள்ளது. விசாலாக்ஷி நெடுஞ்செழியன், இக்கோவிலில் அதிக ஈடுபாடு, அக்கரைக் கொண்டிருந்தார். நாத்திகம் பேசும் நெடுஞ்செழியனின் மனைவி எப்படி, கோவிலுடன் சம்பந்தப் பட்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்தன. ஒருவேளை, ஈவேரா நாயக்கர் நாத்திகராக இருந்தார்,ஐந்த பங்காரு நாயக்கார் ஆத்திராக இருந்தார் என்பதனால், விசாலாக்ஷிக்கு பக்தி வந்ததா அல்லது திராவிட நாத்திகர்கள் எப்பொழுதுமே தமது மனைவி, துணைவி, சகோதரி, மகள் போன்றோரை வைத்து சாமி கும்பிட வைத்து பலன் பெறுவர் என்ற “பிராக்ஷி” [proxy] யுக்தி முறையில் நடந்ததா என்பதனை ஆதிபராசக்தி அல்லது அம்மா தான் சொல்ல வேண்டும்!

விசாலாக்ஷி நெடுன்செழியன் பக்தை ஆனது, எம்ஜிஆரின் ஆதாவு: பங்காரு ஆரம்பகாலங்களில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார் என்று முன்னமே சொல்லப்பட்டது. கோவில் கட்டி உண்டியல் வைத்து சம்பாதிக்கலாம், என்று மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒருவிக்கிரகத்தை வைத்து, குறி சொல்ல ஆரம்பித்தார். வந்த பணத்தில் சிறு கோவில் போல அமைத்தார். பகல் நேர ஆசிரிய பணியோடு மாலை நேரம் பூஜைகளையும் நடத்தினார். ஒருநாள் காவல்துறை அந்த கோவிலுக்குள் நுழைந்து, பங்காருவை கைது செய்தது. கள்ள நோட்டு அடிப்பதாக புகார். இதனால் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது[4]. இந்த இடைப்பட்ட காலத்துக்குள், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பகுத்தறிவு நெடுஞ்சழியனின் மனைவி விசாலாட்சி பங்காருவின் தீவிர பக்தையாக இருந்ததால், பங்காரு அடிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்[5].

1966 முதல் 1977 வரை ஏற்பட்ட மாற்றங்கள்: பழைய கோவில் வேப்பமரத்தின் கீழ் இருந்தது, 1966 புயலில் அந்த வேப்ப மரம் விழுந்தது, அங்கிருந்து சுயம்பு விக்கிரகம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லப் பட்டது. அது மட்டுமல்லாது, அச்சரப்பாக்கத்திலிருந்து, ஒரு ஒளி வந்து, இங்கு மறைந்தது என்றும் சொல்லப் பட்டது. அங்கிருந்து ஒளி வந்த்தோ இல்லையோ, அம்மலையை ஆக்கிரமித்துக் கொண்டு, கிருத்துவர்கள், ஒரு பெரிய சர்ச்சைக் கட்டி விட்டனர். இருப்பினும், புற்று 1974ல் வைக்கப்பட்டது. அதே ஆண்டில் குறி சொல்லும் மேடை, மண்டபம் எல்லாம் கட்டப்பட்டன. நிதியுதவி, வரும்படி அதிகமானது. கூட்டம் அதிகமானதால், 1977 கோவில் விரிவாக்கப்பட்டது. 19-01-1977 அன்று கருவறை கட்டும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. 25-11-1997 அன்று புதிய விக்கிரகம் கர்ப்பகிருகத்தில் வைக்கப் பட்டது. கரிக்கோல் பவனி 01-05-1977 அன்று ஆரம்பித்து, 05-06-1977 அன்று முடிந்தது.

2007ல் துவக்கப் பட்ட ஆன்மீக இயக்கம்: செப்டம்பர் 9, 2007ல் “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்” [Melmaruvathur Adiparasakti Spiritual Movement (MASM)] ஆரம்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது, ஆனால், அது, டிசம்பர் 13, 2007ல் பதிவாகியுள்ளது. தரும மற்றும் மத டிரஸ்ட் [charitable and religious trust] என்ற நிலையில், பங்காரு நாயக்கர், அவரது மனைவி வி.லக்ஷ்மி, மகன்கள் ஜி.பி.அன்பழகன், ஜி.பி.செந்தில்குமார், ஏ.கே.வேன்கடசாமி, பி.ஶ்ரீதேவி. பி.உமாதேவி, எஸ்.கோபிநாத், எஸ்.மாரிமுத்து, மற்றும் நெருங்கியவர் என்று 9 டிரஸ்டிகள் கொண்ட அமைப்பாக பதிவு செய்யப் பட்டது. அதில் தைபூசம் என்றெல்லாம் கொண்டாடுவோம் என்றுள்ளது, கிருஸ்துமஸ் கொண்டாடுவோம் என்றெல்லாம் இல்லை. ஆகவே, அத்தகைய மாற்றம் எப்படி, ஏன், யாரால் அறிமுகப்படுத்தப் பட்டது என்பதனை ஆராய வேண்டியுள்ளது. வீடியோக்கள் செக்யூலரிஸ பாணியில் கிருத்துவர், முஸ்லிம்கள் எல்லோரும் மேல்மருவத்தூருக்கு செல்வது போல காட்டுகின்றன[6].

1985ல் நடந்த கோவில் விரிவாக்கம்: 1985ல் சித்தர் பீடத்தின் கட்டிட வளர்ச்சிப் பணிக்குழு தொடங்கப்பட்டது. ராஜகோபுரம், பெரிய மண்டபம், புற்று மண்டபம், அங்கப் பிரதக்ஷிண மண்டபம், எண்கோண மண்டபம், முதலியவை கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. சங்கர்-கணேஷ் குழுவினர் மூலம் இசைக்கச்சேரி பல இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு பணம் / நன்கொடை பெறப்பட்டது. இக்கால கட்டத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார், நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்தார். எம்ஜிஆரே விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனால், அரசியல் செல்வாக்கு அதிகமாகவே சேர்ந்து விட்டது என்றாகிறது. ஆனால், திராவிடத்தால் ஆன்மீகம் நீர்த்ததா, பணம், அதிகாரம்,மமதை இவற்றால் சீரழிந்ததா என்பதை அம்மாவின் பக்தர்கள் தான் சொல்ல வேண்டும்.

May 10, 1986 அன்று மெரினாவில் நடந்த விழா: மே மாதம் 10, 1986ல், மெரினா கடற்கரையில், ஆதிபராசக்தி டிரஸ்டின் சார்பாக முப்பெரும் விழா நடத்தப் பட்டது. உலக அமைதிற்காக மாநாடு [Conference for World Peace], உலக அமைதிற்காக ஆன்மீக வேள்வி [Spiritual Yagna for World Peace] மற்றும் புத்தகம் வெளியிடப் பட்டது. பாரத ஜனாதிபதி ஜெயில் சிங் யாகத்தை ஆரம்பித்து வைத்தார். எம்ஜிஆர் பங்காரு அடிகளுக்கு சால்வை போத்தி பாராட்டினார். புத்தகத்தை ஜனாதிபதி வெளியிட அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் பெற்றுக் கொண்டார். அவ்வாறு திராவிட கட்சி, திராவிட ஆன்மீக போர்வையில் இந்நிகழ்சி அரங்கேறியது. அடுத்த ஆண்டே- 1987, இவரது பதவி காலம் முடிந்தது, எம்ஜிஆருக்கும் சுகவீனம் ஏற்பட்டு 24-12-1987ல் காலமானார். கிருத்துவர்கள் அந்த ழாண்டு கிருஸ்துமஸ் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்ததும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். இதனாலேயே, பங்காரு அடிகள் கொண்டாட ஆரம்பித்தாரா? அல்லது கிருத்துவர்கள் வற்புருத்தினரா?

பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர் (ஜூலை 2010)[7]: மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார், அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2010ல் சிபிஐ ரெயிட் நடந்தது, அதிலிருந்து, கோவிலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. மேனாட்டு பக்தர்கள் என்று வர ஆரம்பித்தனர். இதனால், திடீரென்று, கிருஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டது. அதுதான், பிறகு, அம்மனையே மேரியாக அலங்கரித்து, கொண்டாடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. முன்பு, இதை சுட்டிக் காட்டியபோது, “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்! இங்கு விசயம் பக்தியைப் பற்றியதல்ல. மதம், நம்பிக்கை பெயரில், கிருத்துவத்தை நுழைக்கும் போக்கு தான் எடுத்துக் காட்டப் படுகிறது. அருகில், அச்சரபாக்க மலை கிருத்துவர்களால் வலைக்கப் பட்ட போது, பங்காரு அடிகள் தமது அதிகாரத்தால் தடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.
வேதபிரகாஷ்
26-12-2018

[1] உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வெலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது.
[2] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/priest-kicked-goddess-the-perverted-writing-of-evr-periyar-exposed/
[3] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/evr-periyar-perversion-and-characteristics-were-due-to-failures-in-his-personal-life/
[4] இதற்கான இணைதள பதிவுகள் மறை ஆரம்பித்து விட்டன.
[5] http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_38.html
[6] https://www.youtube.com/watch?v=EvJvdTZjg08
[7] தினமணி, மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை, First Published : 04 Jul 2010 02:28:15 AM IST
குறிச்சொற்கள்:ஆதிபராசக்தி, ஆன்மீகம்., இந்து விரோத நாத்திகம், எம்ஜிஆர், குறி, குறி சொல்லுதல், ஜெயில் சிங், ஜெய்கணேஷ், திராவிட நாத்திகம், திராவிடம், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பெரியார், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், யாகம், லக்ஷ்மி, லட்சுமி, விசாலாக்ஷி, விசாலாட்சி, ஶ்ரீலேகா
இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்துக்களுக்கு சம உரிமை, உரிமை, எம்ஜிஆர், ஏசு, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சக்திதேவி, சம உரிமை, செந்தில்குமார், ஜெயில் சிங், ஜெய்கணேஷ், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு, பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, பெண் அர்ச்சகர், பெரியாரிஸம், பெரியார், மாரி, மாரியாத்தா, மெரினா, லக்ஷ்மி, லட்சுமி, ஶ்ரீலேகா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 27, 2018
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]

முன்னுரை: இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது. அச்ச்ரப்பாக்க மலை மட்டும் ஆக்கிரமிக்கப் படவில்லை, பின்பக்கத்தில் உள்ள மலைப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. ஏற்கெனவே, செஞ்சி கோதண்டராம கோவில் கிருத்துவர்களுக்கு விற்கப் பட்டு மீட்கப்பட்டுள்ளது. ஞானனந்த கிரி ஆஸ்ரமம் போகும் வழியில், மலையில் ஒரு தர்கா கட்டப் பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாமே அரசு, அரசு ஊழியர் முதலியோர்களின் ஒத்துழைப்புடன் நடந்திருக்கின்றன. திராவிடத்துவம் பேசும் இவர்கள் இவர்களை விமர்சிப்பதில்லை. மேல்மருவத்தூர் குறிசொல்லும், நோய் தீர்க்கும் அதிசயங்களை குறைசொல்லவில்லை. ஆனால், மற்ற இந்துக்களின் நம்பிக்கைகளை மோசமாக, கேவலமாக, ஆபாசமாக, தூஷித்து வருகின்றன. ஈவேராவும் இதில் விதிவிலக்கல்ல. உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வேலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது. முன்பு http://www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட்தால், மறுபடியும் தொகுத்து, பதிவு செய்ய தீர்மானித்தேன்[1].

பண்ருட்டி கோவிலில் மாரி, மேரியானது (25-12-2018): கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது[2]. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 25-12-2018 அன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது[3]. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்[4]. உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[5]. கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்[6]. அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்[7]. அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

பழைய கோவில் பங்காருவின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது[8]: மேல்மருவத்தூர் கோவில் திடீரென்று வந்துவிடவில்லை. 1960-70களிலிருந்து பாண்டிச்சேரி-கடலூர்-திருவண்ணாமலை முதலிய இடங்களுக்குச் சென்று வந்ததால், இக்கோவில் ஒரு வேப்பமரத்தின் கீழ், முதலில் சிறியதாக இருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்திருக்கறார்கள். கீழ்மருவத்தூரில் முதலில் உண்மையான கோவில் இருந்தது என்றும், பிறகு அது மேல்மருவத்தூருக்கு மாற்றப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. பங்காரு பஸ்-கன்டெக்டராக வேலை பார்த்து வந்தார், என்றெல்லாம் சொல்லப் பட்டது[9]. பழைய கோவில் பூசாரியுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, ஒரு நிலையில், இவரே அக்கோவிலை பெற்று விட்டதாகவும் சொல்லப் பட்டது[10]. குறிப்பாக, அவ்விடத்தில், ஒரு கல் / பீடம் இருந்ததாகவும், அதன் மீது உட்கார்ந்து “குறி” சொன்னால், அது பலிக்கும் என்றும் நம்பப்பட்டது. பழைய பூசாரியை விலக்கி விட்டு, பங்காரு, இக்கோவிலை வைத்து குறி சொல்ல ஆரம்பித்தவுடன், கூட்டம் அதிகம் வந்தது, பணம் சேர்ந்தத்து. இதனால், பத்தாண்டுகளில் நிலைமை மாறி விட்டது. 1970லிருந்து இவரது குறிசொல்லும் அதிசயம் முதலியவை -சக்தி -வெளிபட்டன.

பங்காரு நாயக்கரின் குடும்பம்: 03-03-1941 அன்று பிறந்தார். 1960ல் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, ஆசிரியர் ஆனார். தனது 27 வயதில், செப்டம்பர் 1968ல் லக்ஷ்மி [வெங்கடாசல நாயக்கரின் புதல்வி] என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கோவில்-குறி சொல்லுதல் போன்றவற்றில் இறங்கினார். பங்காரு நாயக்கர் – லக்ஷ்மி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள், அவர்கள் பெயர், பொறுப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.
எண் |
மகன் / மகள் |
மனைவி / கணவன் |
பொறுப்பு |
1 |
அன்பழகன் |
ஆஷா |
கோவில் கல்லூரி |
2 |
செந்தில்குமார் |
ஶ்ரீலேகா |
கோவில், கல்லூரி |
3 |
சக்திதேவி |
டி. ரமேஷ் |
மருத்துவ கல்லூரி |
4 |
உமாதேவி |
பி.ஜெய்கணேஷ் |
நிர்வாகம், நிதி |
இவர்கள் எல்லோருமே இருக்கின்ற கோவில், பள்ளிகள், கல்லூரிகள், டிரஸ்டுகள் மற்ற நிருவனங்களில் உறுப்பினர், இயக்குனர், என்றெல்லாம் பதவி வகித்து வருகின்றனர். குடும்பம் நிறுவனங்களை நடத்துவதில் பிரச்சினை இல்லை, ஆனால், வழக்குகள் முதலிய வரும் போது, மதம், நம்பிக்கை, ஆன்மீகம் எல்லாமே கேள்விக்குள்ளாகி, குறியாகி விடுகிறது. குறியால், இக்குறியை மாற்ற முடியாது போனது, நமிக்கையை உடைக்கிறது.

வேதபிரகாஷ்
26-12-2018
[1] இப்பொழுதே பல அடிகுறிப்பு ஆதாரங்கள் இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்து விட்டன. குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு எடுத்து விடுகிறார்கள் போலிருக்கிறது.
[2] மாலைமலர், ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்–பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம், பதிவு: டிசம்பர் 25, 2018 15:46
[3] https://www.maalaimalar.com/News/District/2018/12/25154625/1219815/BJP-and-Hindu-munnani-protest-against-mary-madha-decoration.vpf
[4] ஏசியா.நெட்.நியூஸ், மேரி மாதாவாக மாறிய மாரியாத்தா… பண்ருட்டி அருகே பதற்றம்…!, By Vinoth KumarFirst Published 26, Dec 2018, 2:07 PM IST.
[5] https://tamil.asianetnews.com/tamilnadu/panrutti-mary-madha-decoration-pkc5ba
[6] நியூஸ்.டிஎம், மாரியம்மனை மேரியம்மனாக அலங்காரம்… பண்ருட்டியில் பரபரப்பு…!, Newstm Desk | Last Modified : 26 Dec, 2018 07:17 pm.
[7] https://www.newstm.in/news/tamilnadu/district/52313-panrutti-mary-amman-mari-amman.html
[8] இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது.
[9] “சொல்லப்பட்டது” என்று என்று ஏன் குறிப்பிடப் பட்டது என்றால், 1970-80களில் அப்பகுதிகளில், பஸ்களில், தெருக்களில், இவ்விசயங்கள் தாராளமாகப் பேசப் பட்டன. பிறகு, 1980-90களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கங்கள் முதலியவற்றால், அவை குறைக்கப் பட்டன. 1990-2000களில் மறைக்கப் பட்டு புதிய கதைகள் உண்டாக்கப் பட்டன.
[10] இதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன, ஆனால், இப்பொழுது காணமல் இருக்கின்றன. மேலும் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தவிர்க்கப் படுகிறது.
குறிச்சொற்கள்:அலங்காரம், ஆஷா, உமாதேவி, கிறுஸ்துமஸ், சித்தர், சித்த்ர் பீடம், சிலுவை, ஜெய்கணேஷ், நாயக்கர், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், ரமேஷ், லக்ஷ்மி, லட்சுமி, ஶ்ரீலேகா
அன்பழகன், அரசியல், அல்லா, ஆதிபராசக்தி, இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உமாதேவி, சக்திதேவி, சிலை, செக்யூலரிஸம், செந்தில்குமார், சொத்து, ஜெய்கணேஷ், திராவிட நாத்திகம், திராவிடம், நிலம், நிலம் வாங்குதல், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரியாத்தா, மேல்மருவத்தூர், ஶ்ரீலேகா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »