Archive for the ‘தாவல்’ Category

எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா?

ஒக்ரோபர் 11, 2013

எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா?

பிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

எஸ்.வி. சேகர் வரவு,  மூலதனமா,  செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.

அதிமுக வெளியே அனுப்பியது  (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.

திமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான்! “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார்! இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ?

காங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.

மற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].

© வேதபிரகாஷ்

11-10-2013


Advertisements

எஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா?

ஒக்ரோபர் 3, 2013

எஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா?

நடிப்பா, நாடகமா?: எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா? என்ற தலைப்பில், ஏற்கெனவே, ஒரு பதிவில் இப்பிரச்சினைப் பற்றி அலசியுள்ளேன்[1]. சுமார் ஒரு மாதத்திற்குள் மறுபடியும், இதனை எழுப்பியுள்ளார்கள். ஆனால், இம்முறை பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் எழுந்துள்ளது இவையெ பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் இவையெல்லாம் விளம்பரத்திற்காகவா அல்லது வேறெந்த நோக்கத்திற்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பெண்கள் சிலர் போன் செய்து மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டு, வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாக மிரட்டல்:  நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது[2]. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் பேசும் போது கூறினார். இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்துமகாசபா எஸ்.வி.சேகர் மீது புகார்: இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தி நாடகம் போட்டு வரும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மகா சபையினர் 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்[3]. இது குறித்து இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கூறியதாவது: “மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் எஸ்.சி.சேகர் நாடகம் அரங்கேற்றி வந்தார்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலாளர்டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். இதனால் அந்த நாடகத்தை வேறு இடங்களில் போடுவதை எஸ்.வி.சேகர் நிறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் மகாபாரதத்தில் மங்காத்தா என்ற நாடகத்தை மீண்டும் போட்டுள்ளார். மேலும் இந்து மகா சபா மகளிர் அணி மாநிலச் செயலாளர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சாந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். எங்கள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் நாடகம் போட்டு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி வரும் எஸ்.வி.சேகர் மீது கீழ்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், அண்ணா நகர், ஆவடி, விருகம்பாக்கம் உள்பட 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறினார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நகைச்சுவை நடிகரா, அரசியல்வாதியா?: பிராமணர் என்று சொல்லிக் கொண்டும், இந்து என்று அடையாளம் காட்டிக் கொண்டும், அதிமுக-திமுக அரசியல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த இவர், இந்துக்களுக்கு உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் போது, இந்துக்களுக்கு உதவாமல், நேரமில்லை என்று தப்பித்துக் கொண்டார். தொல்.திருமாவை விமர்சனம் செய்ததால் மட்டும், ஏதோ மாவீரன்ன் ஆகிவிட்டது போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முகவரி இல்லாத, தமிழகத்தில் ஆதரவு இல்லாத இந்து மகா சபையினர் இவரை மிரட்டுகிறார்கள், இவரும் பயப்படுகிறார் என்பதெல்லாம், சரியான ஜோக்காக இருக்கிறது. இவர்தாம், சிரிப்பு நடிகர் என்றால், இச்செயலைக் கண்டு உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது.

வேதபிரகாஷ்

© 03-10-2013