இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன? [1]
அறநிலையத் துறை ஊழலுக்குத் திரும்பியது: தமிழக அரசுத் துறைகள் 1970களிலிருந்து ஓருமித்த கொள்கையுடன் செயல் பட்டு வருகின்றன. திராவிட அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லோருமே ஒன்றுபட்டு வேலை செய்து வருகிறனர். “முகமது பின் துக்ளக்” நாடகத்தில் சோ வசனம் போல லஞ்சம் மேலிருந்து, கீழ்வரை பட்டுவாடா செய்யப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் கூட அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுருத்தப் பட்டனர். பிறகு, சர்க்காரியா கமிஷனே அசந்து விட்டது. எல்லாமே விஞ்ஞான ரீதியில் நடைப் பெற்று வருகிறது என்று சொல்லி விட்டது. இந்து அறநிலையைத் துறையினைப் பொறுத்த வரையில், அண்ணா இருந்த வரை, அப்படியும்-இப்படியுமாக ஊழலோடுத்தான் இயங்கி வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியிலிருந்து, அது நிலைநிறுத்தப் பட்டு, நிறுவனப்படுத்தப் பட்ட முறையானது. அமைதியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர்கள் நாத்திகர்களாக இருந்தது பிரச்சினை இல்லை, ஆனால், அந்த சித்தாந்தத்தினால் ஊக்குவித்து வளர்க்கப் பட்ட ஊழியர், அதிகாரிகள் தாம், இப்பொழுது, பெரிய குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.
கோவில்களில் வியபாரம் பெருக ஊழலோடு, மாற்றுமதத்தினர் நுழைந்தனர்: கோவில்களில், கோவில்களைச் சுற்றி கடைகள் அதிகமாகின. வியாபாரம் பெருக-பெருக போட்டி அதிகமாகியது. கட்சிக்காரர்கள் தக்கார் என்று எல்லாவற்றிலும் நுழைந்து ஊழலைப் பெருக்கினர். சொத்துக்களை குத்தகை விடும் நிலையில், அந்நிய மதத்தினரும் நுழைந்தனர். இப்படியாக 1970-2018 ஆண்டுகளில் பல வழக்குகளில் விவரங்கள் வெளியானாலும், மறைக்கப்பட்டன. பொங்கல் கண்காட்சியில், பக்தி கமழும் வகையில், பிரம்மாண்டமாக ஸ்டால் வைத்து, மக்களை மயக்கினர். அடடா, நாத்திக அரசின் கீழுள்ள அறத்துறை இப்படியா நடக்கிறது என்று “திராவிட மாயையில்” சிக்கி ஏமாந்தனர். ஆனால், அந்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு தான் கொள்ளையே அடிக்கப் பட்டு வருகிறது. ஸ்டால் அமைப்பதிலேயே கோடிகள் கணக்கில் கான்ட்ராக்ட் மற்றமதத்தினருக்குச் சென்றது. கும்பாபிஷேகம், கோவில் புனரமைப்பு, போன்ற விவகாரங்களில் லட்சங்கள் பெறப்படுகிறன. ஆக, இத்துறை “தெய்வீக ஊழல் துறையாக” திராவிட ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், சங்கங்கள் அமைக்கப் பட்டு, ஊழலே வியாபாரமாக்கப் பட்டது. இதனால் தான் இப்பொழுது சங்கங்கள் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவதூற்றைப் பூசப்பார்க்கின்றன.
கவிதா கைது, சங்கம் அறிக்கை, துறைகள்ஃ மோதும் பின்னணி: காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது[1]. ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார்[2]. சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்[3].
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் [the State president of the Federation of All HR&CE Associations N.L. Sridharan] செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது”.
ஐஜி பொன் மாணிக்கவேல் கேட்ட தகவல்களை அறநிலையத் துறை கொடுக்க மறுத்தது: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்”.
வெளிநாட்டு மியூசியங்கள் தாங்களாகவே திரும்பிக் கொடுத்ததை, மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறிக்கொண்டார்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார்[4]. இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார். இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது[5]. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்”.
முத்தையா ஸ்தபதி விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்[6]. அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார்[7]. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை”.
வேதபிரகாஷ்
08-08-2018
[1] தி.இந்து, மீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார், Published : 06 Aug 2018 18:22 IST; Updated : 06 Aug 2018 18:22 IST.
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article24616050.ece
[3] தினகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை, 2018-08-07@ 02:40:22
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426302
[4] தினமணி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங்கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th August 2018 01:29 AM |
[5]http://www.dinamani.com/tamilnadu/2018/aug/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A-2975648.html
[6] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம், Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).
[7] https://www.vikatan.com/news/tamilnadu/133239-ponmanikavel-is-directed-by-rss-charitable-associations.html